100 கோடியில் பெரியாருக்குச் சிலை அமைக்கப்படுவதாகக் கூறிய பிறகு சர்ச்சை ஏற்பட்டது. அதுவும் பகுத்தறிவு பேசுபவர்கள் இதைச் செய்ததாலே! Image Credit
100 கோடி பகுத்தறிவு
100 கோடியில் பெரியாருக்குத் திருச்சியில் 135 அடி உயரத்தில் (சிலை 95 அடி, பீடம் 40 அடி) அமைப்பதாக வீரமணி அறிவித்தார்.
150 ம் ஆண்டுப் பெரியார் பிறந்தநாள் வருவதற்குள் சிலை அமைக்கத் திட்டமிட்டுள்ளார்கள். இச்சிலை அமைக்க 100 கோடி ஆகும் என்ற அறிவிப்பு பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியது.
ஏற்கனவே சிலைகள், மணி / நினைவு மண்டபங்களைத் தமிழக அரசு அமைத்து வருவதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் சிலைக்காக 100 கோடி மக்கள் பணமா? என்று கோபமானார்கள்.
இதைத் தமிழக அரசு அமைக்கவில்லை, பெரியார் அறக்கட்டளை தான் அமைக்கிறது என்று தெளிவுபடுத்தினார்கள்.
100 கோடி பணத்தில் மக்களுக்கு என்னவெல்லாமோ உதவி செய்யலாமே! சிலைக்கு ஏன் இவ்வளவு பணம் செலவு செய்ய வேண்டும் என்பதே பலர் கேள்வி.
ஏற்கனவே, தமிழகம் முழுக்கப் பெரியார் சிலைகள் உள்ளன. தெரு, சாலைகள் என்று அனைத்து இடங்களிலும் பெரியார் சிலை உள்ளது.
ஓசிச்சோறு வீரமணி
அழகிரியை வீரமணி விமர்சித்ததுக்குக் கோபமான அழகிரி மகன் தயாநிதி, ஓசிச்சோறு என்று வீரமணியை விமர்சிக்க, பின்னர் அதுவே வீரமணி பட்டப்பெயர் ஆகி விட்டது.
சமூக வலைத்தளங்களில் இப்பெயராலே வீரமணி விமர்சிக்கப்படுகிறார்.
ஆனால், ஓசிச்சோறு வீரமணி என்று கிண்டலடிக்கப்படும் வீரமணியால் எப்படி 100 கோடி செலவில் சிலை அமைக்க முடிகிறது?! என்று பலரும் வியப்பானர்கள்.
சிலை மட்டுமல்ல 27 ஏக்கர் பரப்பளவில் பெரியார் புகழ் பரப்பும் நூலகங்கள், அருங்காட்சியகம், கோளரங்கம், ஆகியவையும் அமைக்கப்படுகிறது.
பலருக்கு இன்னமும் தெரியாதது பெரியார் பெயரில் கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள் என்று பல்வேறு நிறுவனங்கள் உள்ளன என்பது.
இந்நிறுவனங்களின் மதிப்பு பல ஆயிரம் கோடிகள்.
பெரியார் தன் சொத்தை யாருக்கும் எழுதி வைக்கவில்லை. எனவே, பெரியார் சொத்துக்கள் நாட்டுடைமையாக்கப்பட வேண்டும் என்ற வழக்கில் வீரமணி தடை வாங்கியுள்ளார்.
இப்பிரச்சனையில் வீரமணியுடன் சண்டையிட்டு பிரிந்து தனி அமைப்புகளை அமைத்துக்கொண்டனர் சிலர்.
தற்போது வீரமணி குடும்பம் மட்டுமே பல்லாராயிரக்கணக்கான கோடி சொத்துக்களை அனுபவித்து வருகிறது.
பல ஆயிரம் கோடிகளில், 100 கோடி அவர்களுக்குப் பெரிய விஷயமில்லை.
பகுத்தறிவு
உலகம் முழுக்கப் பகுத்தறிவுக்கு ஒரு விளக்கம் இருந்தால், தமிழகத்தில் பகுத்தறிவு பேசுபவர்களுக்குத் தனி விளக்கம் உள்ளது.
பகுத்தறிவு என்ற பெயரில் பார்ப்பனர்களை மட்டும் திட்டுவது, இந்து மதத்தை மட்டும் விமர்சிப்பது, கிண்டலடிப்பது. இது தான் இவர்கள் பகுத்தறிவு.
இதைத் தாண்டி இவர்கள் வேறு பேசிப் பார்த்துள்ளீர்களா?!
பார்ப்பனர்களைத் திட்டவில்லை, பார்ப்பனியத்தை எதிர்க்கிறோம் என்பார்கள்.
சரி இவர்கள் வழிக்கே வருவோம்.
பார்ப்பனர்களைச் சாதியை வைத்து அவர்கள் அப்படிச் செய்கிறார்கள் இப்படிச் செய்கிறார்கள் என்று விமர்சிக்கிறீர்களே…
ஆதிக்கச் சாதியினரை, மற்ற மதத்தினரை எதுவும் கூறுவதில்லையே ஏன்? என்றால் வாயை மூடிக்கொள்வார்கள்.
பகுத்தறிவாளர்களுக்குத் தெரியும் ஆதிக்கச் சாதியினரை, மற்ற மதத்தினரை ஏதாவது கூறினால் வாயை உடைத்து விடுவார்கள் என்று.
எனவே, என்ன சொன்னாலும் அமைதியாக இருப்பவர்கள் பார்ப்பனர்கள் தானே, இவங்க தான் சண்டைக்கு வர மாட்டார்கள்.
எவ்வளவு அடி வாங்கினாலும், அசிங்கப்பட்டாலும் திட்டுனவன் வீட்டுக்கே போய்ப் பூசை செய்கிறார்கள். முதல் மரியாதை கொடுத்துக் கோவிலில் கும்பலாக வரவேற்கிறார்கள்.
இவர்கள் ரொம்ம்ம்ப நல்லவர்கள் அதனால் இவர்களையே நொக்கி எடுப்போம் என்று பகுத்தறிவு சேவை செய்கிறார்கள்.
தமிழகப் பகுத்தறிவு
தாலி கட்டுவது அடிமைத்தனம் என்று முழங்குவார்கள். குடும்பத்தினர் கோவிலுக்குச் செல்வார்கள்.
உங்கள் வீட்டில் ஏன் பின்பற்றவில்லை? என்றால், அது அவங்க தனிப்பட்ட சுதந்திரம் என்பார்கள்.
பகுத்தறிவு என்று ஊருல இருப்பவனை எல்லாம் இவர்கள் புத்திசாலி போல நக்கலடித்து விட்டுப் பெரியார் சிலைக்குப் பால் ஊற்றுவார்கள்!
சமூகத்தளத்தில் வண்டை வண்டையா பேசிட்டு இருப்பதைக் கேள்வி கேட்டால், பெரியார் பேத்திடா! என்பார்கள்.
இது தான் இவர்கள் பகுத்தறிவு.
இந்தப் பகுத்தறிவு விளக்கத்துக்கு அவ்வப்போது காங்கிரசும் கம்யூனிஸ்ட்டும் ஆதரவு கொடுப்பார்கள். இவர்கள் இருவரையும் பெரியார் காறி துப்பி இருக்கிறார்.
அது எதுவுமே தெரியாமல் அல்லது தெரிந்தும் சொரணை இல்லாமல் முட்டுக்கொடுத்துக்கொண்டு இருக்கும் விசித்திர பிறவிகள்.
பகுத்தறிவு என்பது தமிழகத்தில் அரசியல் செய்ய மட்டுமே!
அசிங்கமாகப் பேசுவது, மற்றவர்களின் நம்பிக்கைகளைக் கேவலப்படுத்துவது, இவ்வாறு பேசுவதைக் கெத்தாக நினைப்பதே பகுத்தறிவு பேசப்படுவதுக்குக் காரணம்.
சுருக்கமாக, இவ்வாறு பேசினால் தாங்கள் புத்திசாலி, கெத்து என்று நினைப்பது. மற்றவர்களிலிருந்து வித்யாசமாக இருக்கிறோம் என்ற எண்ணம்.
தமிழகத்தில் 2% உள்ள பார்ப்பனர்களை வைத்துத் தான் இவர்கள் பிழைப்பே ஓடிக்கொண்டுள்ளது.
பகுத்தறிவு பேசுபவர்கள் ஆதிக்கச் சாதியினரை, மற்ற மதங்களைக் கேள்வி கேட்டுட்டு பேசுங்க.
அப்புறம் உங்களுக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை, வீரம், பகுத்தறிவு! எல்லாமே உள்ளது என்று ஒத்துக்குறோம்.
இது எதுவுமே இல்லாத இவர்கள் பெரியாருக்கு 100 கோடியில் சிலை வைக்கிறார்கள்! காலக்கொடுமை.
பெரியார் மட்டும் உயிரோடு இருந்தால், அவர் வைத்துள்ள தடியிலேயே இவர்கள் அனைவரையும் விளாசித்தள்ளியிருப்பார்.
தொடர்புடைய கட்டுரைகள்
அசுரன் | வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்
திராவிட அரசியல் தமிழகத்தைச் சீரழித்ததா?
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
எப்பா!!! முடியல கிரி.. ஒரு சிலைக்காக 100 கோடி செலவு செய்ய தயாராக இருக்கும் போது இவர்களின் மொத்த வருமான மதிப்பு எவ்வளவு இருக்கும் என யோசிக்க முடியவில்லை கிரி.. ஒரு மாசம் முழுசா வேலை பார்த்து சம்பள பணத்தை வாங்குறதுக்குள்ள நாக்கு தள்ளி போகுது.. பல ஆயிர கணக்கான கோடி சொத்துக்கள் உள்ளது என்றால் கற்பனை கூட செய்ய முடியவில்லை..
பெரியார் தன் சொத்தை யாருக்கும் எழுதி வைக்கவில்லை. எனவே, பெரியார் சொத்துக்கள் நாட்டுடைமையாக்கப்பட வேண்டும் என்ற வழக்கில் வீரமணி தடை வாங்கியுள்ளார். மக்களுக்கு உண்மையில் நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால் தடை வாங்காமல் பெரியாரின் சொத்துக்களை நாட்டுடைமையாக்கம் செய்து இருக்கலாமே!!! அவ்வாறு செய்தால் எத்தனை குடும்பம் இவர்களால் பிழைக்கும்.. பெரியாரின் பெயர் காலத்திற்கும் சரித்திரத்தில் நிலைத்து இருந்து இருக்கும்..
பினிஷிங் செம்ம!!! (பெரியார் மட்டும் உயிரோடு இருந்தால், அவர் வைத்துள்ள தடியிலேயே இவர்கள் அனைவரையும் விளாசித்தள்ளியிருப்பார்…
@யாசின்
“பல ஆயிர கணக்கான கோடி சொத்துக்கள் உள்ளது என்றால் கற்பனை கூட செய்ய முடியவில்லை..”
பலருக்கும் இந்தச் செய்தி தெரியாது. அந்த அளவுக்குக் கமுக்கமாக நடத்தி வருகிறார்கள்.
“மக்களுக்கு உண்மையில் நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால் தடை வாங்காமல் பெரியாரின் சொத்துக்களை நாட்டுடைமையாக்கம் செய்து இருக்கலாமே!”
செய்ய மாட்டார்கள். காரணம், இவர்களுக்கு மக்கள் நலன் மீது அக்கறையில்லை, இச்சொத்துகள் மீது தான் கவனம்.
இதைப் பராமரிக்கத் தான் அரசியல் பின்னணி.
“பெரியாரின் பெயர் காலத்திற்கும் சரித்திரத்தில் நிலைத்து இருந்து இருக்கும்..”
பெரியார் பெயர் எக்காலத்துக்கும் நிலைத்து நிற்கும். அவர் பெயரைக் கெடுப்பதே இவர்கள் தான்.
“பினிஷிங் செம்ம!”
பெரியார் உயிரோட இருந்தால், முதல் அடி வீரமணிக்கு தான் விழுந்து இருக்கும் 🙂 🙂 .
அடுத்தது மற்ற கட்சிகளுக்குத் திட்டு விழும்.
என் பெயரை வைத்து என்னடா பண்ணிட்டு இருக்கீங்கன்னு கடுப்பாகி விடுவார் 🙂 .
சமூகநீதி என்ற பெயரில் இவர்கள் செய்து கொண்டு இருப்பதை பார்த்தால் செம்ம காண்டாகி விடுவார்.
அந்த 100 கோடிக்கு சிலை வைக்கிறதுக்கு பதிலா, 100 கோடிக்கு பெரியார் பத்தின புத்தகங்களை இலவசமா கொடுக்கலாம். இன்னும் அதிகளவில் பெரியாரின் கொள்கைகள் வளரும் மக்களிடையே பரவும். பெண் ஏன் அடிமையானால்? புத்தகத்தை 1 லட்சம் பிரதி இலவசமா கொடுக்க பலர்கிட்ட உதவிகேட்டுகிட்டு இருக்காங்க சில தன்னார்வலர்கள்.
ஆனா பெரியார் சொத்த அனுபவிக்கிரன் தண்டத்துக்கு சில வைக்கிறான். என்னத்த சொல்ல.
@@கார்த்திக்
சிலை வைப்பதை பெரியாருக்குக் கொடுக்கும் மரியாதையாக செய்யலாம் என்றாலும், பகுத்தறிவு பேசிட்டு, ஊருல இருப்பவனை எல்லாம் திட்டிட்டு இவர்களே இது போலச் செய்ததே பலரை கடுப்படித்து விட்டது.
சிலைக்கான மதிப்பில் எவ்வளவு பேருக்கு உதவியிருக்கலாம்!