உலகுக்கு மருந்து கொடுப்பதில் முக்கிய நாடுகளில் பெரும்பான்மை பங்கை வகித்ததில் அமெரிக்காவுக்கு முக்கிய இடமுண்டு.
அமெரிக்காவில் துப்பாக்கி உற்பத்தியாளர்களை அரசால் முறைத்துக்கொள்ள முடியாது. Image Credit
எனவே தான், அமெரிக்காவில் துப்பாக்கி சூடு நடந்து பல நூறு மக்கள் கொல்லப்பட்டாலும் அதற்கு தடை விதிக்க முடியவில்லை.
இதே போல இன்னொரு கும்பல் உண்டு அது தான் US Drug Mafia.
Drug Mafia
அமெரிக்க மருந்து நிறுவனங்கள் உலக மருந்து தேவையின் கட்டுப்பாட்டைத் தாங்களே வைத்து இருக்க நினைப்பவர்கள்.
தங்களை மீறி இன்னொருவர் வந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பவர்கள். அமெரிக்காவும் இதையே நினைக்கிறது. மருந்து அரசியல் உலக பிரசித்தமானது.
கொரோனா வந்த பிறகு இதை வைத்து சம்பாதிக்க மருந்து உற்பத்தியில் பல நாடுகளும் கடுமையாக முயன்றன.
இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, சீனா ஆகிய வல்லரசு நாடுகளுடன் இந்தியாவும் களத்தில் இறங்கியது
கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிப்பது எளிதல்ல, பத்து வருடங்கள் கூட ஆகலாம் ஆனால், ஒரு வருடத்தில் கண்டறிந்துள்ளார்கள்.
இது சேவலை முட்டை போட்டே ஆக வேண்டும் என்று நிர்பந்திப்பது போல.
மருந்தும் நாடுகளும்
- Pfizer & Moderna – அமெரிக்கா
- Covishield (The Oxford-AstraZeneca) – இங்கிலாந்து
- Sputnik V – ரஷ்யா
- Sinovac – சீனா
- Covaxin – இந்தியா
இவையல்லாமல் இன்னும் Johnson & Johnson உட்பட சில தடுப்பு மருந்துகள் உள்ளன.
சீனாவின் Sinovac பல நாடுகளில் பரிந்துரைக்கப்படவில்லை.
தடுப்பு மருந்தை வைத்து மிகப்பெரிய வியாபாரத்தை முன்னெடுக்க / கட்டுப்படுத்த அமெரிக்கா நினைத்த சமயத்தில், இந்தியா குறைந்த விலையில் பல நாடுகளுக்கும் அனுப்பி வைத்தது.
அதில் ஏழ்மையான நாடுகளுக்கு இலவசமாகவும், மற்ற நாடுகளுக்குக் குறைந்த விலையிலும் கொடுத்தது.
மற்ற நாடுகளின் மருந்தை ஒப்பிடும் போது இந்தியாவில் இருந்து பெறப்படும் மருந்தின் விலை மிகக் குறைவு.
இது Pfizer நிறுவனத்தைக் (அமெரிக்காவை) கடுப்படித்து விட்டது.
சிவாஜி படத்தில் ரஜினியிடம் சுமன் சொல்வாரே, ‘இப்படி குறைந்த கட்டணத்தில் கொடுத்தால், என் பிசினஸ் படுத்துடும்‘ ன்னு, அது தான் இது.
இந்திய நிறுவனங்கள்
இந்தியாவால் கொரோனாக்கு மருந்து தயாரிக்க முடியும் என்று எவரும் நினைத்து இருப்பார்களா?! ஆனால், இந்திய நிறுவனம் சாதித்தது.
இந்தியாவில் Serum Institute of India & Bharath Biotech என்ற நிறுவனங்கள் உள்ளன.
இந்தியர்கள் பலரும் நினைப்பது போல Bharath Biotech (Covaxin) அரசு நிறுவனம் அல்ல. இதுவும் ஒரு ஒரு தனியார் நிறுவனமே!
பெயரைப் பார்த்து இந்திய அரசு உற்பத்தி செய்ததாக பலர் நினைத்துக்கொண்டுள்ளனர்.
உலகிலேயே மிகப்பெரிய உற்பத்தி நிறுவனமாக இருப்பது Serum Institute of India. Covishield மருந்தை உற்பத்தி செய்து தருகிறது.
இவர்கள் உற்பத்தி திறன் அளவுக்கு Bharath Bio Tech நிறுவனத்தின் உற்பத்தி திறன் கிடையாது.
எனவே தான் இந்தியாவில் 1 : 10 என்ற அளவில் Covaxin / Covishield தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அதே போல Serum Institute of India நிறுவனத்துக்கு இவ்வளவு ‘%‘ மருந்தை இங்கிலாந்துக்கு கொடுக்க வேண்டும் என்ற ஒப்பந்தம் இருக்கும்.
எனவே, உற்பத்தி செய்யும் அனைத்தையும் இந்தியாக்கே கொடுத்து விட முடியாது.
Pfizer நெருக்கடி
ஒருவேளை இந்தியா மருந்து கண்டுபிடிக்கவில்லை, Covishield போன்ற மருந்துகளை உற்பத்தி செய்ய முடியவில்லை என்றால், அமெரிக்கா நிர்ணயிப்பதே விலை, கட்டுப்பாடாகி இருக்கும்.
இரண்டு தவணையல்ல, நான்கு தவணை போடவேண்டும் என்று கூறினாலும் நமக்கு வேறு வழியில்லை. Pfizer மருந்தின் விலை, உறை நிலை அதிகம்.
அதோடு நாளைக்கு இதன் தொடர்ச்சியாக வேறு மருந்துகளையும் போட நெருக்கடி கொடுத்தாலும், நம்மால் எதுவும் செய்ய முடியாது.
வளர்ந்து வரும் நாடான இந்தியாக்கு தோராயமாக 100 கோடி மக்களுக்குப் பல தவணை மருந்து கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டால், என்ன ஆவது?
100 கோடி மக்களுக்குக் குறைந்தது ₹1000 என்று வைத்தால் 1 ட்ரில்லியன் (ஒரு லட்சம் கோடி) பணம் தேவைப்படுகிறது.
Pfizer விலை இதைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்குறிப்பிட்டது ஒரு தவணைக்கு மட்டுமே!
Pfizer அதிக விலை, மருந்தைப் பாதுகாக்க (உறை நிலை -60℃ to -90℃) உள்ள சிரமங்கள் மற்றும் சில காரணங்களுக்காக இந்தியா இன்னும் (மே முதல் வாரம் 2021) ஒப்புதல் வழங்கவில்லை.
இதனால், எப்படியாவது இந்தியாவில் நுழைய இந்திய ஊடகங்கள் வழியாக முயற்சித்து வருகிறது.
Drug Mafia நிறுவனங்கள் இந்திய ஊடகங்கள் மூலமாக, Covaxin பற்றித் தவறான கருத்துகளைப் பரப்ப முயற்சித்தும் எடுபடவில்லை.
அமெரிக்கா
இந்தியா தயாரித்த Covaxin சரியில்லை என்ற பெயர் வந்தால், மருந்து விற்பனையை நம் கட்டுப்பாட்டில் எடுக்கலாம் என்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது.
இந்தியா அனுப்பிய இலவச மற்றும் குறைந்த விலையிலான மருந்துகளை பெற்ற நாடுகள், Covaxin சிறப்பாக செயல்படுகிறது என்று அறிவித்ததால் அமெரிக்காவுக்கு நெருக்கடியானது.
Covaxin உருமாறிய கொரோனாவையும் அழிக்கிறது என்று ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
இதனால் இந்தியாவுக்கு மருந்து தேவைக்கான மூலப்பொருளை கொடுக்க மாட்டோம், மருந்தாக வாங்கிக்கொள்ளலாம் என்று கூறியது.
அமெரிக்காவுக்கு நெருக்கடி கொடுக்க ரஷ்யாவின் Sputnik V மருந்தைக் கொள்முதல் செய்வதாக இந்தியா அறிவித்தது.
பிறகு என்ன நடந்ததோ அமெரிக்கா மூலப்பொருளைக் கொடுப்பதாக இறங்கி வந்தது.
அதிகரித்த இந்தியாவின் தேவை
தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமாக இருப்பதால், தடுப்பூசி இந்தியாவுக்கே அதிகம் தேவைப்படுகிறது.
இதனால், மற்ற நாடுகளுக்கு அனுப்ப முடியாத சூழலால் பற்றாக்குறை ஏற்படுகிறது.
உலகின் 30% தேவையை இந்தியா நிறைவேற்றுவதால், மற்ற நாடுகளுக்குச் சிக்கலைக் கொடுக்கும்.
கொரோனா தடுப்பு மருந்து விற்பனையில் உலகளவில் பல அரசியல்கள் உள்ளன. அதில் ஒரு துளி விவரம் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.
தயவு செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள், மற்றவர்களின் புரளியை நம்ப வேண்டாம்.
முகக்கவசம் அணியுங்கள், சமூக இடைவெளியைப் பின்பற்றுங்கள், தொலைக்காட்சி செய்திகளைப் பார்க்காதீர்கள்.
தொடர்புடைய கட்டுரைகள்
தடுப்பூசி போடுவது கட்டாயமா? | COVID-19
SICK Mind ஊடகங்களும் அரசியல்வாதிகளும் | COVID-19
கொசுறு 1
இந்தியாவின் பெயரை உலகரங்கில் நாறடிக்க வேண்டும் என்று New York Times, BBC, The Guardian (UK) உட்பட பல உலக ஊடகங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
இதைப் பற்றி எழுதத் தற்போது சரியான நேரமில்லை என்பதோடு, படிப்பவர்கள் புரிந்து கொள்ளும் மனநிலையில் இருக்க மாட்டார்கள் என்பதால், நெருக்கடியான நிலை குறைந்த பிறகு எழுதுகிறேன்.
கொசுறு 2
45+ வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவித்த போதே அந்த வயதினர் போட்டு இருந்தால், தற்போது இவ்வளவு நெருக்கடியாகி இருக்காது.
ஆனால், ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் தவறான பரப்புரையால் மக்கள் முதலில் தயங்கி போட்டுக்கொள்ளவில்லை.
தற்போது கொரோனா அதிகரிப்பால், அனைவரும் ஒரே சமயத்தில் போட்டுக்கொள்ள துவங்கியதால் கூட்டம் அதிகரித்து விட்டது.
மத்திய அரசு 18+ வயதுகுண்டோருக்கான தேதியைத் தாமதப்படுத்தியிருக்க வேண்டும் அல்லது 45+ என்பதை 35+ என்றாவது மாற்றி இருக்கலாம்.
முன்பதிவு அவசியம் என்றாலும் பற்றாக்குறை காரணமாக, அரசுக்கு அனைவரிடமும் இருந்தும் அழுத்தத்தையே தரும்.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
மற்ற நாடுகளை ஒப்பிடும் போது மக்களிடம் விழிப்புணர்வு இந்தியாவில் குறைவாக இருப்பதாக எண்ணுகிறேன்.. அரசாங்கம் மக்களிடம் விழிப்புணர்வை நிச்சயம் கொண்டு செல்ல வேண்டும்.. பகிர்வுக்கு நன்றி கிரி.
யாசின் சொல்வது போல் இந்தியாவில் விழிப்புணர்வு இல்லை. வெந்த புன்னில் வேல் பாய்ச்சுவது போல விழிப்புணர்வு சரியில்லாத இந்த நிலையில் சீமான் போன்ற சனியன் கள் தடுப்பூசிக்கு எதிராக பேசுவது பல பேரின் உயிருக்கு உலை வைத்து உள்ளது.
@யாசின் & கார்த்திக்
தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு இல்லை என்பது உண்மையே!
ஊடகங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் செய்த தவறான பரப்புரைகளால் மக்கள் தடுப்பூசி போட மறுக்கிறார்கள்.
எங்கள் அலுவலக பாதுகாப்பு பணியில் இருப்பவர், துப்புரவு பணியில் இருப்பவர்கள், தடுப்பூசி போட்டுக்கொண்டால் பாதிப்படைவோம் என்று கூறுகிறார்கள், முழுமையாக நம்புகிறார்கள்.
இவர்களாக மாறினால் தான் உண்டு.