மொபைல் எண்ணை ஸ்பாம் செய்த SBI வங்கி

2
SBI மொபைல் SBI வங்கி

SBI கடனட்டை (Credit Card) வாங்க, என்னுடைய மொபைல் எண்ணைக் கொடுத்தது பெரிய தலைவலியாகி விட்டது.

கிட்டத்தட்ட 16 வருடங்களாக HDFC கடனட்டை மட்டுமே பயன்படுத்தி வந்தேன். HDFC சேவை சிறப்பாக இருந்ததால், வேறு கடனட்டை செல்ல வேண்டிய தேவை இருக்கவில்லை.

SBI கடனட்டை

அமேசான் ப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் SBI கடனட்டைகளுக்குத் தள்ளுபடி தருவதாலும், தற்போதைய HDFC கடனட்டை வேலை செய்யவில்லை என்றால், பாதுகாப்புக்காக (Backup) SBI கடனட்டைக்கு இணையத்தில் பதிவு செய்தேன்.

SBI அழைப்பு, followup என்று எல்லாமே சிறப்பாக இருந்தது ஆனால், முகவரி, பெயர் சான்றிதழ் கொடுத்த அடுத்த நாளில் இருந்து ஸ்பாம் அழைப்புகள் வர ஆரம்பித்து விட்டது.

என்னிடம் சான்றிதழ் சரி பார்க்க வந்த முகவர், என்னுடைய எண்ணை மற்றவர்களுக்குப் பகிர்ந்து இருக்க வேண்டும் என்று உறுதியாகச் சந்தேகிக்கிறேன்.

அடுத்த நாளில் இருந்து சொல்லி வைத்த மாதிரி RBL, ICICI, Indusind சார்பாகக் ‘கடனட்டை வேண்டுமா..?‘ என்று தொடர்ந்து அழைப்புகள்.

சரி.. ஓரிரு நாட்களில் நின்று விடும் என்று நினைத்தால், ஒரு மாதமாக இம்சையைக் கூட்டிக்கொண்டுள்ளார்கள்.

கடைகள், உணவகம் உட்பட எங்குமே என்னுடைய எண்ணை கொடுக்க மாட்டேன்.

சார் ஆஃபர் இருக்கு‘ன்னு சொல்லுவாங்க.. மறுத்து விடுவேன். ஏனென்றால், இவர்கள் எண்ணை விற்று விடுவார்கள். இதனால் தான் நமக்கு ஸ்பாம் அழைப்புகள் அதிகம் வருகின்றன.

INOX திரையரங்கில் பாப்கார்ன் வாங்கினால், ‘சார் மொபைல் நம்பர் சொல்லுங்க!‘ என்றார், காண்டாகி விட்டது. பாப்கார்னுக்கும் மொபைல் எண்ணுக்கும் என்ன சம்பந்தம்?!

கேட்டால், ‘சார் ஆஃபர் வந்தால் சொல்லுவோம்‘ என்றார். தேவையில்லை என்று கூறி விட்டேன்.

DND (Do Not Disturb)

DND யில் பதிவு செய்து இருந்தால், மார்க்கெட்டிங் அழைப்புகள் வரக் கூடாது ஆனாலும், அழைக்கிறார்கள். TRAI கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதில்லை.

ஏற்கனவே, ACT Fibernet ல் எவனோ வாடிக்கையாளர் விவரங்களைத் திருடி அவர்களது போட்டியாளர் Hathway க்கு விற்று விட்டான் என்று நினைக்கிறேன்.

சொல்லி வைத்த மாதிரி Hathway கிட்ட இருந்து மட்டும் எனக்கு Marketing அழைப்பு வரும்.

நான் ACT வாடிக்கையாளர்.

தற்போது SBI பிரச்சனைக்குப் பிறகு யார் யாரோ அழைக்கிறார்கள். ஒரு நாளைக்குக் குறைந்தது 5 அழைப்புகள் வருகிறது.

TRAI புகார்

நானும் அனைத்து எண்களையும் TRAI யில் புகார் அளித்து வருகிறேன். சில எண்களை முடக்கி உள்ளார்கள், இன்னும் சில வேலை செய்கிறது, இன்னும் நாட்கள் எடுக்குமோ என்னவோ.

DND செயலி வழியாக எளிதாகப் புகார் அளிக்கலாம் என்பதால், உடனே செய்து விடுகிறேன்.

17 வருடங்களாக ஸ்பாம் அழைப்புகள் இல்லாமல் இருந்தேன், SBI யில் கொடுத்துத் தலைவலியாகி விட்டது. மன உளைச்சலை ஏற்படுத்தி விட்டது.

வாடிக்கையாளர் தனிப்பட்ட விவரங்களுக்கு வங்கிகள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், திருட அனுமதிக்காத படி வழிமுறைகளை மாற்ற வேண்டும்.

முகவர்கள் ஒரு நாள் SBI யில் இருப்பார்கள், இன்னொரு நாள் ICICI யில் இருப்பார்கள் அதனால், இது போலக் கிடைத்தவுடன் முகவர்களுக்கென்று இருக்கும் WhatsApp குழுவில் பகிர்ந்து விடுகிறார்கள் என்று நினைக்கிறேன்.

கடுப்பா இருக்கு. கடனட்டை வாங்குபவர்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள், இல்லையென்றால் எனக்கு ஏற்பட்ட நிலை உங்களுக்கும் வரலாம்.

தொடர்புடைய கட்டுரைகள்

தேவையற்ற அழைப்புகளைத் தவிர்ப்பது எப்படி?

SBI வங்கி கொடுத்த அதிர்ச்சி!

கொசுறு

SBI கடனட்டை கடந்த ஒரு மாதமாகப் பயன்படுத்தி வருகிறேன். அவர்களுடைய சேவை சிறப்பாக உள்ளது. இது குறித்துப் பின்னர் விரிவாக எழுதுகிறேன்.

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

2 COMMENTS

  1. SBI கடனட்டை பயன்படுத்த ஆரம்பித்து விட்டீர்களா? சரி. உங்கள் கட்டுரைக்காக வெயிட்டிங்

  2. இன்னும் கொஞ்சம் நாள் பயன்படுத்திப் பார்த்த பிறகு எழுதுகிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!