2021 ஜனவரி 1 முதல் ‘8’ புதிய மாற்றங்கள்

2
2021 ஜனவரி 1 முதல் '6' புதிய மாற்றங்கள்

2021 ஜனவரி 1 முதல் ‘8’ புதிய மாற்றங்கள், திருத்தங்கள் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Image Credit

2021 ஜனவரி 1 முதல் ‘8’ புதிய மாற்றங்கள்

  1. அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் FasTag கட்டாயம்.
  2. Contactless Payment க்கு உச்ச வரம்பு ₹5000.
  3. இரண்டு & நான்கு சக்கர வாகனங்களின் விலை உயர்கிறது.
  4. தரைவழி அலைபேசியில் இருந்து கைபேசிக்கு அழைக்க ‘0’ சேர்க்க வேண்டும்.
  5. Rule 86B – Input Tax Credit (ITC)
  6. ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், எல்இடி டிவி விலை உயர்வு
  7. ஜிஎஸ்டியைக் காலாண்டுக்கு ஒரு முறை செலுத்தினால் போதும்.
  8. காசோலைக்குப் ‘பாசிட்டிவ் பே’ முறை கட்டாயமாகிறது.

FasTag

2019 ம் ஆண்டு டிசம்பர், FasTag என்ற சுங்கச்சாவடி தானியங்கி மின்னணு கட்டண முறை கொண்டு வரப்பட்டது.

படிப்படியாகச் செயல்படுத்தப்பட்ட இம்முறை நேரடியாகப் பணத்தைச் செலுத்தியும் பயணிக்கும்படி இருந்த வசதி, டிசம்பர் 31 2020 முடிவுக்கு வருகிறது.

இனி அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் FasTag கட்டாயமாகிறது.

Contactless Payment

தற்போது கொடுக்கப்படும் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளில் (கடனட்டை & பற்று அட்டை) Contactless Payment வசதி வருகிறது.

அட்டையைச் சாதனத்தில் தேய்த்து PIN அழுத்த வேண்டியதில்லை.

இதன் பயன் என்ன?

குறைவான கட்டணங்களுக்கு இதன் மூலம் எளிதாகப் பணம் செலுத்தலாம். PIN TYPE செய்ய வேண்டும் என்ற தேவையில்லை.

ஒரு நாளைக்கு அதிகபட்சம் 5 முறை இவசதியைப் பயன்படுத்தலாம், ₹2000 என்ற என்ற உச்ச வரம்பு ₹5000 என்று மாற்றப்பட்டுள்ளது.

மின்னணு பரிவர்த்தனையை எளிதாக்கஉயர்த்தப்பட்டுள்ளது.

இவ்வசதி தேவையில்லையென்றால், செயலி (App), வங்கி இணைய தளத்தில் Disable செய்து கொள்ளலாம். இவ்வசதி முழுக்கப் பயனாளர் விருப்பமே!

இரண்டு & நான்கு சக்கர வாகனங்கள் விலை உயர்வு

தயாரிப்பு பொருட்களின் விலை உயர்வு காரணமாக, வாகனங்களின் விலையை உயர்த்த வாகன உற்பத்தி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

வாகன விலை உயர்வால் தள்ளுபடியில் வாகனங்கள் விற்கப்பட்டு வருகிறது.

‘0’ கட்டாயம்

தரைவழி அலைபேசியில் (Land Line) இருந்து கைபேசிக்கு (மொபைல்) அழைக்க ‘0‘ சேர்க்க வேண்டும்.

Rule 86B Input Tax Credit (ITC)

₹50,00,000 க்கு மேல் மாத வியாபாரம் செய்பவர்கள் குறைந்த பட்சம் 1% Input Tax Credit (ITC) பணமாகக் கட்ட வேண்டும் (மின்னணு முறையில் அல்லாமல்).

போலி ரசீதை மின்னணு முறையில் தரவேற்றம் (Upload) செய்து வரி ஏய்ப்பு நடைபெறுகிறது.

1% ITC நேரடியாகப் பணமாகச் செலுத்தும் போது, விளக்கத்தை அதிகாரி கேட்டால் கொடுக்க வேண்டும், இதன் மூலம் மோசடி குறையும் என்கிறார்கள்.

கடந்த இரு நிதியாண்டுகளில் ஒரு லட்சம் வரி கட்டியவர் அல்லது ஒரு லட்சம் Refund பெற்றவருக்கு இக்கட்டுப்பாடுகள் பொருந்தாது.

ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், எல்இடி டிவி விலை உயர்வு

உள்ளீட்டுப் பொருட்களான காப்பர், அலுமினியம், இரும்பு போன்றவற்றின் விலை அதிகரிப்பாலும், போக்குவரத்து கட்டண செலவுகளாலும் Fridge, Washing Machine, LED TV போன்ற பொருட்களின் விலை உயர்கிறது.

ஜனவரி மாதத்தில் 6% – 7%, மார்ச் மாதத்துக்குள் 10% விலை உயர்வு இருக்கலாம் என்று உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர்.

‘பாசிட்டிவ் பே’ (Positive Pay)

காசோலைகளில் நடைபெறும் போலி காசோலைகள், நிதி மோசடி, முறைகேடுகள், தவறுகளைத் தடுக்கப் ‘பாசிடிவ் பே‘ முறை கொண்டு வரப்படுகிறது.

காசோலை பரிவர்த்தனை செய்பவர்கள் காசோலை எண், தொகை, யாருக்கு வழங்கப்பட்டுள்ளது உள்ளிட்ட விபரங்களை, வங்கிக்குக் தெரிவிக்க வேண்டும்.

குறுந்தகவல் (SMS), செயலி (App), Internet Banking, ATM போன்ற வசதிகள் மூலம் தெரிவிக்கலாம்.

இதில் உள்ள விவரங்கள் சரியாக இருந்தால் மட்டுமே, காசோலை பரிவர்த்தனை (Cheque Transaction) நடக்கும்.

₹50,000 – ₹5,00,000 இடைப்பட்ட தொகை விவரங்களை வங்கி விருப்பப்பட்டால் கட்டாயமாக்கலாம் ஆனால், ₹5,00,000 மேல் கட்டாயம்.

காலாண்டுக்கு ஒரு முறை ஜிஎஸ்டி வசூல் 

சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டியை மாதந்தோறும் தற்போது செலுத்தி வருவதை, இனி காலாண்டுக்கு ஒருமுறை செலுத்தினால் போதும்.

ஐந்து கோடி வரை வியாபாரம் செய்பவர்களுக்கு இம்மாற்றம் பொருந்தும்.

மேற்கூறிய மாற்றங்கள் 2021 ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது.

தொடர்புடைய கட்டுரைகள்

சரக்கு மற்றும் சேவை வரி (GST)

UPI பரிவர்த்தனைக்கு NPCI கட்டுப்பாடு

FasTag கட்டாயம் | 2019 டிசம்பர் 1 முதல் [FAQ]

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. மாற்றங்கள் குறித்து முன்னரே மிகவும் எளிமையாக எல்லோருக்கும் புரியும் படி தெளிவாக எழுதியுள்ளீர்கள்.. நன்றி கிரி.. ஆனால் இந்த மாற்றங்களை குறித்து ஆழமாக சிந்திக்கும் போது, நிறைய எண்ணங்கள் மனதில் வந்து வந்து போகிறது.. பகிர்வுக்கு நன்றி கிரி..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!