முகவரியில் “HTTPS” இல்லையா..! தெறிச்சு ஓடிடுங்க :-)

0
முகவரியில்

ணைய தள முகவரிக்கு முன்பு http (Hypertext Transfer Protocol) என்று இருக்கும். தற்போது “S” (secure / Encrypt ) சேர்த்து பாதுகாப்பை பலப்படுத்தி இருக்கிறார்கள்.

பற்று / கடனட்டை (Debit and Credit Card)

பற்று / கடனட்டை & பயனர் விவரங்களைக் கேட்கும் தளங்கள் பல Encrypt ஆக இல்லாததால், தகவல்கள் திருடப்படலாம் என்று இது போல கட்டுப்பாட்டை கூகுள் கொண்டு வந்துள்ளது.

உலவிகளில் பெரும்பங்கை கூகுள் வைத்துள்ளது. எனவே எந்தெந்த தளம் https இல்லையோ அவை எல்லாம் பாதுகாப்பாற்றவை என்று கடந்த 2017 ஆண்டு எச்சரிக்கை கொடுத்தது.

உடனே இதுவரை https (Encryption) குறித்து முக்கியத்துவம் கொடுக்காத இணையத் தளங்கள் அனைத்தும் அலறியடித்து https வசதியை செயல்படுத்த துவங்கின.

கூகுள் நடவடிக்கையால் https தளங்களின் எண்ணிக்கை அதிரடியாக உயர்ந்துள்ளது. Images Credit

இதுவரை கடனட்டை, பயனர் விவரங்களை கேட்காத தளங்களுக்கு இது போல எச்சரிக்கை இல்லாமல் இருந்தது, இனி ஜூலை 2018, க்ரோம் 68 பதிப்பில் அனைத்து http தளங்களுக்கும் இது பொருந்தும் என்று கூகுள் கூறி விட்டது.

எனவே, உங்கள் பற்று / கடனட்டை விவரங்களைக் கொடுக்கும் முன்பு முகவரியில் https தளமாக இருக்கிறதா! என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

https இல்லையென்றால் பெரிய கும்பிடு போட்டு ஓடி விடுங்கள் 🙂 .

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here