பயணக் குறிப்புகள் [பிப்ரவரி 2018]

1

கோபிக்கு அழகு சேர்ப்பது இரு (ஈரோடு – சத்தி) வழிகளிலும் இருக்கும் கோபி நகராட்சி அலங்கார வளைவு. ஆடம்பரம் இல்லாமல், மிக எளிமையாக அழகாக இருக்கும்.

சில மாதங்களுக்கு முன்பு ஒருவர் லாரியில் தூங்கிக்கொண்டே வந்து இதில் மோதி ஈரோடு வழி வளைவு நொறுங்கி விட்டது, ஓட்டுனரும் விபத்தில் மரணமடைந்து விட்டார்.

இதைச் சரி செய்வார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள், என்ன காரணமோ அப்படியே இருந்தது.

தற்போது எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவு என்று அமைச்சர் செங்கோட்டையன் 48 லட்சம்!!! செலவில் திரும்பக் கட்டப்போகிறார்.

VoLTE

ஊருக்குச் சென்ற போது ஈரோடு வந்ததும் ஏர்டெல் VoLTE இணைப்பு காட்டி வியப்படைய வைத்தது. அதை விட வியப்பு கோபியிலும் VoLTE வந்து விட்டது.

பல வருடங்களாக கோபியில் ஏர்டெல் பிரச்சனை இருந்தது, பேசினால் தெளிவாக இருக்காது.

தற்போது VoLTE வந்த பிறகு தரம் நன்றாக உள்ளது. இன்னும் ஒரு முறை ஊருக்கு சென்று பயன்படுத்திப் பார்த்துப் பிரச்சனை சரியாகி விட்டதா என்று உறுதி செய்ய வேண்டும்.

ரோமிங்கில் ( Chennai Circle –> TN Circle) இருக்கும் போது VoLTE வருவதில்லை. எவருக்கும் காரணம் தெரியுமா? ஏர்டெல்லை கேட்கனும்.

பேனர் கலாச்சாரம்

கோபியில் வழக்கமாகக் காணப்படாத பேனர் கலாச்சாரம் இந்த முறை அதிகம் இருந்தது. அமைச்சர் செங்கோட்டையன், தினகரன் பேனர்கள் அதிகம் காணப்பட்டன.

கல்வித்துறை அமைச்சர் ஆன பிறகு கல்வித்துறை குறித்த செய்திகள் அதிகம் விளம்பரப்படுத்தப்படுகின்றன.

இதுக்கெல்லாமா கல்வெட்டு?!

இரு இடங்களில் மின்சார உயர் விளக்குக் கம்பம் அமைத்து இருக்கிறார்கள் (கச்சேரி மேடு, சந்தை). இரண்டிலும் MP சத்யபாமா பெயர் பொறித்துக் கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது.

விளக்குக் கம்பம் அமைத்தற்கெல்லாமா கல்வெட்டு வைப்பாங்க?! என்னமோ போங்க.

விளைச்சல்

அம்மாவுடன் ஒரு நிகழ்வுக்குச் செல்ல வேண்டி இருந்தது, செல்லும் வழியில் நெல் அறுப்புக்கு தயாராக இருந்தது பார்க்க மகிழ்வாக இருந்தது. இந்த முறை விளைச்சல் நன்றாக உள்ளது ஆனால், விலையில்லை. பவானிசாகர் அணைத் தண்ணீராலே இந்தச் செழிப்பு.

Induslnd வங்கி

கோபியில் Induslnd வங்கி எப்போது வந்தது என்று தெரியவில்லை, நான் தற்போது தான் பார்க்கிறேன். ATM சென்றால் ஆங்கிலம், இந்தி மட்டுமே இருந்தது.

தமிழ் இல்லாததால் செம்ம கடுப்பாகி, சண்டை போடலாம் என்று நினைத்தேன் ஆனால், எனக்குக் கணக்கு இல்லையென்பதால் அமைதியாக வந்துவிட்டேன்.

இருப்பினும் அவர்களுக்குப் புகார் அனுப்பி விட்டேன். கோபியில் கிராமத்தினர் தான் பெரும்பான்மை இதில் இந்தி வேற!

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

1 COMMENT

  1. புகைப்படம் அருமையாக இருக்கிறது… பவானிசாகர் பெயரை கேட்டாலே பழைய நினைவுகள் மனதை கிள்ளுகிறது… பகிர்வுக்கு நன்றி கிரி..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here