வேலைக்கு ஆப்பு வைக்கும் “Amazon Go”

2
Amazon Go

Online Shop ல் இருந்து பல துறைகளில் கால் பதித்து வரும் “அமேசான்” நிறுவனத்தின் அடுத்தப் பார்வை சில்லறை விற்பனை கடைக்குத் திரும்பி இருக்கிறது. Image Credit

இதில் முழுக்க முழுக்கப் பணியாளர்களே இல்லாமல் தானியங்கி முறையில் பொருட்களை விற்பனை செய்கிறது.

அப்படின்னா?

அப்புடித்த்த்தான் 🙂 .

நீங்க உள்ளே சென்று தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு சென்று விடலாம். பணம் உட்படத் தானியங்கியாக எடுத்துக்கொள்ளப்படும்.

எப்படிச் செயல்படுகிறது?

Amazon Go என்ற செயலியை நிறுவி அதில் உள்ள QR எண்ணை காண்பித்து கடை உள்ளே சென்று விட வேண்டும்.

அதன் பிறகு என்ன பொருட்களை எடுத்து / வைத்தாலும் அங்கே உள்ள செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம் உணர்ந்து, தானியங்கியாகக் கணக்கு எடுத்துக்கொள்ளும்.

நீங்கள் வெளியே செல்லும் போதும் அதுவே Sensor மூலமாகக் கணக்கு எடுத்து நீங்கள் வாங்கிய பொருட்களுக்கான கட்டணத்தை எடுத்துக்கொள்ளும்.

கடும் விமர்சனங்கள்

இதற்கான தொழில்நுட்பத்தைக் கண்டு பல காலமாகச் சில்லறை விற்பனை செய்யும் நிறுவனங்களே திகைப்பில் ஆழ்ந்து இருக்கின்றன.

அமேசானின் இந்த முயற்சிக்கு “வேலை வாய்ப்பைப் பறிக்கிறது” என்று எதிர்ப்புகள் பலமாக உள்ளன. எனவே,

இது சோதனை முயற்சி, அதனால் “Seattle” ல் மட்டும் தான் செயல்படுத்தி இருக்கிறோம். சரியான இடத்தில் எடுத்து வைக்க, தொழில்நுட்ப கோளாறுகளைச் சரி செய்ய, வாடிக்கையாளர்களுக்கு உதவ பணியாளர்கள் இருப்பார்கள்

என்று அமேசான் சமாதானப்படுத்தி இருக்கிறது.

புதிய தொழில்நுட்பத்தையும் தடுக்க முடியாது, இது போலத் தானியங்கி சேவைகள் மூலமாகப் பலரின் வேலைவாய்ப்பு பறிபோவதையும் தடுக்க முடியாது.

YouTube காணொளியில் கருத்துரைப் பகுதியை அமேசான் பூட்டி வைத்துள்ளது. எல்லோரும் இந்த வேலை விசயத்தையே போட்டுக் காய்ச்சி எடுப்பதால் 🙂 .

தொடர்புடைய கட்டுரைகள்

“Automation / Cloud” ஏற்படுத்தும் “ஐடி” அதிர்ச்சிகள்!

மின்னணு பரிவர்த்தனையால் சரியும் வங்கிப்பணிகள்!

ஐடி துறை : 35 – 40 வயதுக்கான எச்சரிக்கை!

2 COMMENTS

  1. கிரி, ஒரு பக்கம் ஆச்சரியமாகவும், ஒரு பக்கம் பயமாகவும் இருக்கிறது.. ஆனால் கண்டிப்பாக எதிர்காலத்தில் இந்த முயற்சி வெற்றி பெறும் என்பதில் துளிகூட ஐயமில்லை.. 2010 ஆம் ஆண்டில் எங்கள் நிறுவன விற்பனையை ஆன்லைன்லில் கொன்டு வரலாம் என்று நான் கூறிய யோசனையை கேட்டு, என் சக பணியாளர்களும், நிறுவன அதிகாரிகளும் சிரித்தனர்.. ஆனால் 8 ஆண்டுகளுக்கு பின் தற்போது ஆன்லைன் விற்பனையை எங்கள் நிறுவனம் கொண்டு வர முயற்சி செய்து, பணியை துவக்கியுள்ளது… யாருக்கும் நேரம் என்பது இல்லை..

    ரேஷனில் மண்ணெண்ணெய் வாங்க ஒரு நாள் முழுவதும் பள்ளிக்கு விடுமுறை எடுத்த நாட்கள் மலை ஏறி விட்டது.. இன்று யாருக்கும் நேரம் இல்லை என்பதை விட, யாரும் காத்திருக்க தயாராக இல்லை என்பது தான் யதார்த்தமான உண்மை… பகிர்வுக்கு நன்றி கிரி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here