அறிமுக இயக்குநர் Nahas Hidayath இயக்கத்தில் வெளியாகி அதிரடியாக வெற்றி பெற்ற படம் RDX: Robert Dony Xavier. Image Credit
RDX: Robert Dony Xavier
Robert Dony அண்ணன் தம்பிகள், Xavier இவர்களுடைய நண்பன். Xavier அப்பா பாபு ஆண்டனி. இவரும், Robert & Dony தந்தை லால் இருவரும் நண்பர்கள்.
மூவருமே பாபு ஆண்டனி நடத்தும் கராத்தே பள்ளியில் பயின்றவர்கள். இதில் Xavier நிஞ்சாக் கலையில் திறமைசாலி.
ஒரு திருவிழாவில் தனது தந்தை லாலிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டவர்களை Robert தாக்கியதால், அவர்கள் கும்பலாக வந்து பழிவாங்குகிறார்கள்.
பதிலடியாக Robert உடன் Dony Xavier இணைகிறார்கள் ஆனால், அடித்தவர்களில் ஒருவன் கேங்ஸ்டர் குழுவில் இருப்பதால், பிரச்சனை சிக்கலாகி விடுகிறது.
இறுதியில் என்ன ஆனது என்பதே RDX: Robert Dony Xavier.
குடும்பம்
படம் என்னவோ சண்டையை மையப்படுத்தி உள்ளது ஆனால், அந்தச் சண்டையும் குடும்பத்தைக் காக்கவே என்கிற ரீதியில் செல்கிறது.
நடுத்தர குடும்பங்களுக்குள்ள பிரச்சனை, அடிதடி விஷயங்களில் இறங்க முடியாது காரணம், பாதிக்கப்படுவது குடும்பம், எதிர்காலம்.
மிகவும் அடித்தட்டு மக்களுக்கு இழக்க ஒன்றுமில்லை என்பது போலத் தைரியமாக இறங்குவார்கள். ஆள், பண பலம் இருப்பதால் பணக்காரர்கள் இறங்குவார்கள்.
ஆனால், நடுத்தர மக்கள் ஒதுங்கிச் செல்பவர்களே! காரணம், இதனால் ஏற்படும் இழப்புகளைச் சமாளிக்க முடியாது. பாதிக்கப்பட்டால் மீள்வது கடினம்.
இளம் வேகத்தில் Robert Dony Xavier நடந்தாலும், இறுதியில் குடும்பமே சிக்கலில் மாட்டும் போது பயப்படுவார்கள்.
Xavier கூறும் போது, ‘அவர்களுக்கு (கேங்ஸ்டர்) இழக்க ஒன்றுமில்லை ஆனால், நமக்கு குடும்பம் உள்ளது‘ என்று கூறுவார்.
சண்டை
சண்டையை மையப்படுத்தி உள்ளதால், ஏராளமான சண்டைக்காட்சிகள் உள்ளது.
தமிழகத்தின் அன்பறிவு தான் இப்படத்துக்குச் சண்டைக்காட்சிகளை அமைத்துள்ளார்கள். மிகைப்படுத்தல் இல்லாமல் ஓரளவு இயல்பாக எடுத்துள்ளார்கள். இதுவே வெற்றிக்குக் காரணம் என்று நினைக்கிறேன்.
ஒரு கேங்ஸ்டர் கும்பலுடன் சண்டையிட முடியுமா? என்ற லாஜிக்கல் கேள்விகளைத் தவிர்த்துப் பார்த்தால், சுவாரசியமான திரைக்கதையே!
Xavier நிஞ்சாக் பயன்படுத்திச் சண்டையிடுவது செம. இதற்காகப் பயிற்சி மேற்கொண்டாரா? அல்லது ஏற்கனவே அவருக்குத் தெரியுமா? என்று தெரியவில்லை.
சும்மா பேருக்கு இரண்டு சுற்றுச் சுற்றி ஏமாற்றாமல், உண்மையாகவே நிஞ்சாக் வைத்து வித்தை காட்டுகிறார். Robert உடல் மொழி, சண்டையில் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கலாம்.
Ishq ல் இறுதியில் மிரட்டிய Shane Nigam இதிலும் சிறப்பாக நடித்துள்ளார். இந்த உடம்பை வைத்துக்கொண்டு அனைவரையும் அடிப்பது தான் நெருடலாக உள்ளது 🙂 .
கராத்தே என்பதால் சமாதானமாகிக்கொள்ள வேண்டியதாக உள்ளது.
வரும் ரவுடிகள் அனைவருமே சிறப்பான தேர்வு. KGF ல் வரும் வில்லன்கள் போல, ஏகப்பட்ட பேர்.
நாடகத்தன்மை இல்லாத, இயல்பான நடிப்பு. அதிலும் இவர்கள் மூவரும் கேங்ஸ்டர்கள் பகுதியில் சென்று சிக்கிக்கொள்வது செம. பரபரப்பாக எடுத்துள்ளார்கள்.
சண்டைக்காட்சிகளுக்கு ஒளிப்பதிவும், பின்னணி இசையும் உதவியுள்ளன. பாடல்களும் நன்றாக உள்ளன. இசையும் நம்ம ஊர் Sam C. S.
யார் பார்க்கலாம்?
₹8 கோடியில் தயாரிக்கப்பட்டு ₹100 கோடி வசூலித்துள்ளது. கேரளாவில் ₹50 கோடியைத் தாண்டி வசூல் செய்து சாதனை புரிந்துள்ளது.
வசூல் செய்தாலும் சிலருக்கு ‘என்னப்பா இது! ஒரே சண்டையா இருக்கு! அப்படியொன்றும் படம் நன்றாக இல்லையே!‘ என்ற விமர்சனங்களும் உள்ளது.
படத்தின் மையமாக குடும்ப பாசம், சண்டை, நட்பு மூன்றுமே கலந்து இருப்பதால், பலரைக் கவர்ந்துள்ளது என்று கருதுகிறேன். அதோடு இதில் வரும் இயல்பான கதாபாத்திரங்கள், குறிப்பாக புற்றீசல் போல வரும் ரவுடிகள் 🙂 .
ஊகிக்கக்கூடிய கதையாக இருப்பது, ஏற்கனவே பார்த்த பல படங்களின் சாயல் இருப்பது மட்டுமே இதன் பலவீனம் ஆனால், திரைக்கதை சுவாரசியமாக இருப்பதால், கடந்து செல்லலாம்.
மேற்கூறியவை ஏற்புடையது என்றால், தாராளமாகப் பார்க்கலாம்.
NETFLIX ல் காணலாம்.
Directed by Nahas Hidayath
Screenplay by Adarsh Sukumaran, Shabas Rasheed (dialogues)
Story by Nahas Hidayath
Produced by Sophia Paul
Starring Shane Nigam, Antony Varghese, Neeraj Madhav
Cinematography Alex J. Pulickal
Edited by Chaman Chakko
Music by Sam C. S.
Release date 25 August 2023
Running time 151 minutes
Country India
Language Malayalam
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி, சமீபத்தில் எந்த மொழி படமும் பார்க்கவில்லை. சில படங்களை பார்க்க வேண்டும் என்று குறிப்பு மட்டும் எழுதி வைத்து இருக்கிறேன். சில வேற்று மொழி படங்களை 3/4 மாதங்களுக்கு முன்பு பார்த்தேன். அந்த FEELING சில நாட்கள் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. முரளிதரன் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுத்த 800 படத்தை பார்க்க எண்ணி இருந்தேன். ஆனால் இங்கு ஹிந்தி மொழியில் மட்டும் வெளி வந்ததால் படத்துக்கு போகவில்லை.
கடந்த சில வருடங்களாக நீங்கள் மலையாள சினிமாவை உற்று நோக்கினால் அறிமுக பட இயக்குனர்களின் படங்கள் எல்லாம் தருமாறு.. கதையோட கருவை எப்படியா? புடிக்கிறீங்க!!! என்பது உண்மையில் ஆச்சரியமாக இருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பு பார்த்த Kappela படத்தின் கதையோட்டம் என் நினைவில் இன்னும் பசுமையாக இருக்கிறது. தமிழில் வெகு சில அறிமுக இயக்குனர்களின் படங்கள் மட்டுமே கவனிக்கத்தக்க வகையில் இருக்கிறது. நீங்கள் குறிப்பிட்ட படத்தை பார்க்க முயல்கிறேன். நன்றி கிரி.
@யாசின்
“முரளிதரன் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுத்த 800 படத்தை பார்க்க எண்ணி இருந்தேன்.”
வெளியாகி விட்டதா?! கவனிக்கவில்லை.
அறிமுக இயக்குநர்கள் அதே போலத் தொடர்ந்தால் சிறப்பு ஆனால், சிலர் சரக்கு தீர்ந்து வெற்றிப்படங்களை கொடுக்க முடிவதில்லை.
கிரி. கடந்த மாதம் 800 திரைப்படம் திரையரங்கில் வெளியானது. நானும் இதுவரை பார்க்கவில்லை கிரி. பெரிய திரையில் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். இயக்குனருக்கு சரக்கு தீர்ந்த கூட பரவாயில்லை. முதல் படத்துக்கும், இரண்டாம் படத்துக்கும் சம்பந்தமே இல்லாமல் படமெடுத்து நம்மல test பண்ணும் போது.. யப்பா முடியலடா சாமி னு தோணும்..