மற்றவரின் ATM அட்டையைப் பயன்படுத்துகிறீர்களா?

6
மற்றவரின் ATM

ற்றவரின் ATM அட்டையை ஏதோ ஒரு காரணத்துக்காகப் பயன்படுத்தாதவர்கள் இருக்க முடியாது. குடும்பத்தில் ஒருவருக்காக அவரச தேவைக்காக நாம் எடுத்துக்கொடுத்து இருப்போம். Image Credit

தற்போது இதில் நடந்த சிக்கலே பரபரப்பாகப் பேசப்படுகிறது.

2013 ம் ஆண்டு பெங்களுருவில் ஒருவரின் மனைவி பிள்ளைப்பேறு நிலையில் இருந்ததால், அவரால் வெளியே சென்று பணம் எடுக்க முடியாததால் கணவனிடம் தன் SBI ATM அட்டையைக் கொடுத்து ₹25,000 எடுக்கக் கூறி இருக்கிறார்.

கணவர் பணம் எடுக்கும் போது பணம் எடுக்கப்பட்டதாகச் சீட்டு மட்டும் வந்துள்ளது ஆனால், பணம் வரவில்லை.

இவரும் வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளிக்க, அவர்கள் தொழில்நுட்ப கோளாறாகி இருக்கும், இரு நாட்களில் வந்து விடும் என்று கூறி இருக்கிறார்கள்.

ஆனால் பணம் வராததால் வங்கியில் சென்று கேட்டதும், பணம் வழங்கப்பட்டது என்று கூற, இவர்கள் இருவரும் அதிர்ச்சியாகி இருக்கிறார்கள்.

நுகர்வோர் நீதிமன்றம்

பின் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து CCTV யில் கணவர் பணம் எடுக்கும் போது பணம் வெளியே வராததையும், தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அந்த நாளில் ₹25,000 அதிகம் இருப்பு ஆகி உள்ளது என்பதை நிரூபித்தும் SBI ஒத்துக்கொள்ளவில்லை.

கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக நடந்த வழக்கில்,

பணம் வழங்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்களை (Log) SBI சமர்பித்து, சட்டப்படி ஒருவருடைய ATM அட்டையையும் PIN யையும் இன்னொருவரிடம் கொடுப்பது தவறு எனவே, எங்கள் வங்கி தவறுசெய்யவில்லை” என்று வாதிட்டது.

தன்னால் வெளியே செல்ல முடியவில்லை என்றால் “Self Cheque” அல்லது அனுமதிக் கடிதம் கொடுத்து மட்டுமே பணம் எடுக்க முடியும் என்று கூறி விட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ATM அட்டையைச் சம்பந்தப்பட்டவர் தவிர வேறு யாரும் பயன்படுத்துவது சட்டப்படி தவறு எனவே, SBI வங்கி பணத்தைத் தரவேண்டியதில்லை என்று கூறி விட்டது 😮 .

₹25,000 கண் முன்னாடி இருந்தும் சட்ட சிக்கலால் எடுக்க முடியாமல் போனது.

அனுபவங்கள்

இது போல நம் குடும்பத்தில் ஒருவருக்காவது பணம் எடுத்துக் கொடுத்து இருப்போம். எதுவுமே பிரச்சனை வராதவரை சரியாகப் போகும், பிரச்சனை வந்தால் இது போல நிலைதடுமாற வைக்கும்.

தற்போது இது சரியா தவறா என்று விவாதிப்பதை விட, அவர்கள் கூறும் சட்ட வழியிலேயே சென்று மற்றவரின் ATM அட்டையைப் பயன்படுத்தாமல் இருப்பதே நமக்கு நல்லது.

சரி இது போலச் சூழ்நிலை அமைந்தால் என்ன வழி?

காசோலை பயன்படுத்துவது நல்ல யோசனை தான் என்றாலும், ஒருவேளை அப்போது வங்கி திறந்து இருக்கவில்லை என்றால் பிரச்சனை.

எனவே, UPI பரிமாற்றமே சிறந்தது.

அதாவது உங்களுடைய கணக்குக்குச் சம்பந்தப்பட்டவரின் கணக்கிலிருந்து பணத்தை UPI (BHIM, PhonePe, Google Tez, WhatsApp) செயலிகள் மூலம் அனுப்பி உங்கள் சொந்த ATM அட்டையின் மூலமாகப் பணம் எடுத்துக் கொடுத்து விடலாம்.

இது போல அவசரத்துக்கு எடுக்கப்படும் பணம் அதிகபட்சம் 25,000 க்கு மேல் இருக்காது. எனவே, பிரச்சனைகள் இல்லை. UPI பரிவர்த்தனைக்குக் கட்டணமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

என்னுடைய மனைவி அவருடைய கணக்கிலிருந்து பணம் எடுத்துவரக்கூறினால், முன்பு அவரது ATM அட்டையைப் பயன்படுத்தி எடுத்துத் தருவேன்.

தற்போது UPI மூலமாக அனுப்பக்கூறி என்னுடைய கணக்கிலிருந்து எடுத்துக்கொடுத்து விடுகிறேன்.

உங்கள் நண்பர்களுக்கு இது குறித்து தெரியப்படுத்துங்கள், அவர்களையும்  எச்சரிக்கைப்படுத்துங்கள்.

தொடர்புடைய கட்டுரைகள்

WhatsApp UPI யை செயல்படுத்துவது எப்படி?

கூகுள் “Tez” செயலி பயன்படுத்துவது எப்படி?

BHIM செயலி பயன்படுத்துவது எப்படி?

கொசுறு

SBI வங்கி ஆரம்பத்தில் இருந்தே வாடிக்கையாளர் விருப்ப வங்கியாக இல்லை.

என் பரிந்துரை, SBI வங்கி பயன்படுத்துபவர்கள் வேறொரு நல்ல வங்கிக்கு உங்கள் முதன்மை கணக்கை மாற்றிக்கொள்வது நல்லது.

இதில் குறைந்தபட்ச இருப்பை மட்டும் வைத்துக்கொண்டு தேவைப்படும் நேரத்தில் மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

6 COMMENTS

  1. நேற்றுத்தான் புலம்பினீர்கள், கூகிள் எல்லாவற்றையும் வட அமெரிக்காவில்தான் அறிமுகப்படுத்துகிறது என்று. இன்று whatsapp Payment பற்றி சொல்லியுள்ளிர்கள். எனக்கு தெரிந்தவரையில் அது இந்தியாவில் மட்டுமே உள்ளது என்று நினைக்கிறேன். இந்தியாவில் பயன்படுத்து அளவிற்கு வட அமெரிக்காவில் வட்ஸ் அப் பயன்படுத்துவதில்லை. அங்கே அறிமுகப்ப்டுத்தியும் பெரிய அளவில பயனில்லை . அத்துடன் மின்னஞ்சல் பண‌பரிமாற்றம் ஏற்கனவே அங்குள்ளது.
    இங்கே நீங்கள் சொல்லிய சம்பவம் போல சில ஆண்டுகளுக்கு முன்னர் எனக்கு நடந்தது. அம்மாவின் அட்டையை கொண்டு பணமெடுத்தபோது அட்டை சிக்கிக்கொண்டது. வங்கியில் கேட்டபொழுது வந்து எடுத்துகொடுத்தார்கள். அப்போது எனக்கு 17 வயதும் கூட. ஒரு கேள்வியில்லை. ஆனால் அது இந்தியாவுமில்லை. 🙂

  2. I read your blog almost daily, but very rarely I comment here.. I also know this case. Think a situation like this.

    You forget to lock your house main door and went out, somebody came steal your house. Police investigated and found the thief and got the money also. Will the police say that you didn’t lock the house so we don’t give you the money ? This is some thing like this.

    I do understand the the husband made a mistake.That doesn’t give rights to the bank that they can keep the money of they didn’t own. At the same time I am not supporting husband also. But Bank can charge some hefty fine up to 50 % of the withdrawal amount to the wife and return the remaining 50 % of the money to the wife. We need to change the rule here… Whats your opinion on this?

  3. பாரத ஸ்டேட் வங்கி தான் கிராமங்களில் அதிகளவு கிளைகளை திறந்து வைத்துள்ளது. அரசிடமிருந்து வரும் அனைத்து நிதிகளும் இப்போது வங்கிகணக்கில் செலுத்தப்படுவதால் கிராமத்தில் இருக்கும் வயதானவர்களை படிக்காதவர்களையும்இந்த வங்கி ஊழியர்கள் மிகவும் அலட்ச்சியப்படுத்துகிறார்கள்…என் அப்பாவிற்கு இந்த வங்கியிலும் ஒரு கணக்கு இருப்பதால் அது சம்மந்தமாக நான் செல்லும் போது அவர்களைபார்க்க மிக பரிதாபமாக இருக்கும்..ஒரு நாள் முழுவதும் அவர்களை காக்க வைத்து 3 மணிக்கு மேல் தான் பணத்தை கொடுப்பார்கள்..

    எல்லா வங்கியிலும் இந்த நிலையில் தான் அவர்களை நடத்துகிறார்கள்….அதன் பிறகு நான் கட்டாயப்படுத்தியதால் என் அப்பா இந்த வங்கியில் இருந்த கணக்கை முடித்து கொண்டார்….இந்நாள் வரை என் அப்பாவின் ATM அட்டையை நான் தான் பயன்படுத்துகிறேன்….

    இந்தியன் ஒவ்ரசீஸ் வங்கியில் ஒருமுறை பணம் வரவில்லை…ஒரு வெள்ளைத்தாளில் நடந்ததை விவரித்து பயன்படுத்திய அடம் குறித்த முழு விவரத்தையும் தெரிவித்து மேனேஜருக்கு ஒரு மனு கொடுத்தேன்..2 நாட்களில் பணம் திரும்ப கணக்கில் வந்துவிட்டது..அன்றும் நான் தான் என் அப்பாவின் ATM அட்டையை பயன்படுத்தினேன்…அவர்களை அதைப்பற்றி எந்த கேள்வியும் கேட்க வில்லை….(அன்று நான் பயன்படுத்தியது sbi வங்கியினுடையது )

    • *ATM (அடம்)

      :: SBI ATM ல் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ATM கார்டை பயன்படுத்தினேன் பணம் வரவில்லை…இந்த பிரச்னை எங்கள் ஊரில் இருக்கும் அந்த atm ல் அடிக்கடி நடந்து கொண்டுதான் இருக்கிறது…

  4. @ப்ரியா “whatsapp Payment பற்றி சொல்லியுள்ளிர்கள். எனக்கு தெரிந்தவரையில் அது இந்தியாவில் மட்டுமே உள்ளது என்று நினைக்கிறேன்”

    காரணம் UPI Payment என்ற வசதி இந்தியாவில் மட்டுமே உள்ளது. எனவே, இந்தியாவில் மட்டுமே இந்த அறிமுகம் உள்ளது.

    பிரச்சனை எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. வந்தால், மண்டை காய்ந்து விடும். எனவே, எச்சரிக்கையாக இருந்து கொள்வது நல்லது.

    @மனோஜ் நீங்கள் கூறியது போல, அத்தம்பதிகள் செய்தது சட்ட ரீதியாக தவறு தான் இருப்பினும் அதற்கு அபராதம் எதுவும் விதித்து இருக்கலாம். அதற்காக மொத்த பணத்தையும் ஆட்டைய போட்டது எனக்கும் வருத்தமே.

    இதற்கு தான் என்னுடைய பரிந்துரை SBI கணக்கு பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள். இவர்கள் சேவை மிக மோசம். கருணையே இல்லாமல் நடந்து கொள்வார்கள்.

    பெயர் தான் அரசு வங்கி ஆனால், தனியார் வங்கியே பரவாயில்லை என்பது போல நடந்து கொள்வார்கள்.

    @கார்த்தி SBI வாடிக்கையாளர் விருப்ப வங்கியல்ல. இவ்வங்கி மீது எனக்கு நல்ல மதிப்பு இல்லை.

    ப்ரியா க்கு சொன்னதே உனக்கும்.. பிரச்னை ஆகாதவரை நமக்கு நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here