BHIM செயலி பயன்படுத்துவது எப்படி?

5
BHIM செயலி

மின்னணு பணபரிவர்தனையை எளிதாக்கும் நோக்கோடு மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள சேவையே BHIM செயலி ஆகும். Image Credit

BHIM செயலி

பணத்தை மின்னணு முறையில் மற்றவர்களுக்கு அனுப்பும் முறையில் தற்போது NEFT, IMPS, RTGS வழக்கத்தில் உள்ளது. இவற்றுக்கு வங்கி கணக்கு எண் IFSC எண் ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும்.

ஆனால், இக்கட்டுப்பாடுகள் BHIM UPI முறையில் நீக்கப்பட்டுள்ளது.

BHIM செயலி UPI என்ற Unified Payment Interface என்ற தொழில்நுட்பத்தில் செயல்படுகிறது.

துவக்கத்தில் Android இயங்கு தளத்துக்கு மட்டுமே இந்தச் செயலி இருந்ததைத் தற்போது iOS இயங்கு தளத்துக்கும் விரிவுபடுத்தியுள்ளது.

எவ்வாறு பயன்படுத்துவது?

உங்கள் வங்கி கணக்கை இணைப்பது மிக மிக எளிமையான ஒன்று.

தற்போது BHIM செயலியில் ஒரு வங்கி கணக்கை மட்டுமே இணைக்க முடியும் ஆனால், வேறு வங்கி கணக்கை விருப்பப்பட்டால் பின்னர் மாற்றிக்கொள்ளலாம்.

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை இணைக்கும் வசதி பின்னாளில் வரலாம்.

உங்களுடைய ஏதாவது ஒரு வங்கி கணக்கை அதாவது வழக்கமாகப் பணப்பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தும் வங்கி கணக்கை (Primary), இதில் இணைக்க வேண்டும்.

இது உங்களுடைய வங்கியில் இணைக்கப்பட்டுள்ள Mobile எண்ணுக்கு OTP அனுப்பி உறுதிப்படுத்திக்கொள்ளும். பணத்தை அனுப்ப MPIN எனப்படும் ATM PIN போன்ற கடவுச்சொல்லை பதிய வேண்டும்.

இதை உங்களுடைய பற்று அட்டை (Debit Card) மூலமாகச் செய்து கொள்ளலாம்.

UPI முகவரி / VPA (Virtual Payment Address)

இதை முடித்த பிறகு UPI முகவரியை உருவாக்க வேண்டும். BHIM செயலி தானாகவே உங்களுடைய Mobile எண் 9999911111@upi என்று உருவாக்கி விடும்.

ஒருவேளை உங்கள் Mobile எண்ணை மற்றவர்களுக்குத் தெரிவிக்க விருப்பமில்லை என்றால், உங்கள் Virtual ID யை, எண்ணுக்குப் பதிலாகக் கொடுத்து மாற்று முகவரி உருவாக்கிக் கொள்ளலாம்.

எடுத்துக்காட்டுக்கு giriblog@upi

இது போல முகவரியை உருவாக்கி நன்கொடைக்குக் கொடுத்து விடலாம்.

பணம் அனுப்ப விருப்பமுள்ளவர்கள் தங்களுடைய BHIM செயலியிலோ அல்லது அவர்களுடைய வங்கி செயலியின் UPI செயலி மூலமாகவே பணம் அனுப்பலாம்.

எடுத்துக்காட்டுக்கு giriblog@icici giriblog@hdfcbank என்று எதையும் பயன்படுத்தலாம்.

UPI முறையில் VPA முறையல்லாது வங்கிக்கணக்கு மூலமாகவும் அனுப்ப முடியும்.

பணம் அனுப்ப அதிகபட்சம் 5 நொடிகளே ஆகும்.

இம்முறையில் பணத்தை Wallet ல் வைத்து இருக்க வேண்டிய அவசியமில்லை. இப்பணம் நேரடியாக உங்கள் இணைக்கப்பட்ட வங்கி கணக்கிலிருந்து எடுத்து அனுப்பப்படும்.

பணம் அனுப்பக் கட்டுப்பாடு

BHIM செயலியில் ஒரு கட்டுப்பாடு, ஒரு முறை 10,000 ரூபாயும், அதிகபட்சம் ஒரு நாளைக்கு 20,000 மட்டுமே அனுப்ப முடியும். எதிர்காலத்தில் இத்தொகை அதிகரிக்கப்படலாம், பட வேண்டும்.

மற்ற வங்கிகளில் இவ்வளவு குறைந்த கட்டுப்பாடில்லை.

உதவி வேண்டும் என்பவர்கள் வங்கி கணக்கு, IFSC எண் போன்ற விவரங்களோடு அடுத்த வசதியாக UPI முகவரியையும் சேர்த்தே கொடுங்கள்.

நாம் UPI முகவரியை உள்ளீடு செய்து Verify கொடுத்தால், அந்த முகவரி கணக்கின் உரிமையாளரின் பெயரைக் காட்டும் எனவே, மாற்றி அனுப்பி விடுவோமோ என்று அஞ்சத் தேவையில்லை.

மிக மிக எளிமையான வசதி.

BHIM செயலி அவசியமான ஒன்று

இதைப் படிக்கும் அனைவரையும் BHIM செயலியைத் தங்கள் திறன்பேசியில் நிறுவி உங்கள் UPI கணக்கைத் துவங்க வேண்டுகிறேன்.

நண்பர்களிடையே அவசர பணப்பரிமாற்றம், செலவு கணக்குகளைப் பகிர்தல் போன்றவற்றுக்கு மிகப் பயனுள்ளதாக இருக்கும்.

என் நண்பர்களிடையே இதை அறிமுகப்படுத்திச் செயல்படுத்தி வருகிறேன்.

அனைவரும் இதன் எளிமை காரணமாக,

எப்படி… தேடல் செய்யக் கூகுள் பண்ணி பாரு, குறுந்தகவல் அனுப்ப WhatsApp பண்ணிடு.. என்று கூறுகிறோமோ! அது போல, இனி பணம் அனுப்ப “BHIM பண்ணிடு” என்று சொல்லும் காலம் வரும்.

இது குறித்து சந்தேகம் இருந்தால் கேட்கலாம்.

தொடர்புடைய கட்டுரைகள்

“மின்னணு” பரிவர்த்தனை வெற்றியா தோல்வியா?! FAQ

அசத்தலான செயலி “Splitwise”

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

5 COMMENTS

  1. ரொம்ப தெளிவா, அழகா, நேர்தியா, புரியும்விதத்தில் சொல்லி இருக்கீங்க!!!. எதிர்காலத்தில் கண்டிப்பாக நிறைய நண்பர்களுக்கு பயன் அளிக்கும் என நம்புகிறேன்.. சில நாட்களாக திரைப்பட குறிப்புகள் ஒன்றும் தென்படவில்லையே!!! பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. இணையத்தில் கிடைக்கப்பெற்ற நாளிலிருந்து BHIM செயலியை பயன்படுத்தி வருகின்றேன், அருமையாக உள்ளது.

    சிறு சிறு குறைகள் உள்ளது, அவற்றையும் நிவர்த்தி செய்தால் பயன்பாட்டிற்கு இன்னும் எளிமையாக இருக்கும்.

  3. தெளிவான பதிவு.நன்றி. MMID பற்றிய விளக்க கட்டுரையை எதிர்பார்க்கிறேன்.

  4. அனைவரின் வருகைக்கும் நன்றி

    @யாசின் உங்களுக்காக மாநகரம் 🙂

    @தேவராஜன் நீங்கெல்லாம் இன்னும் என்னுடைய தளத்தை படித்துட்டு இருக்கீங்களா? 🙂 மகிழ்ச்சி.

    MMID யை விட BHIM மற்றும் UPI வசதி எளிதானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here