கிரெடிட் கார்டில் வாடகை செலுத்துவது இலாபமா?

3
கிரெடிட் கார்டில் வாடகை

கிரெடிட் கார்டு (கடனட்டை) மூலமாக வாடகை பணத்தைச் செலுத்தும் முறை தற்போது பிரபலம் ஆகி வருகிறது.

தற்போது பல நிறுவனங்கள் இச்சேவையை வழங்கி வருகின்றன. Image Credit

CRED Rent Pay

CRED, Paytm, Nobroker.com உட்படப் பல்வேறு தளங்கள் வாடகை பணத்தைச் செலுத்தும் வசதியைத் தருகின்றன.

Nobroker.com வீட்டு முதலாளியின் மொபைல் எண்ணைக் கேட்டதால், பயன்படுத்தவில்லை. அனுமதி இல்லாமல் எப்படிக் கொடுப்பது, அதோடு இன்னொருவர் எண்ணை ஸ்பாம் செய்யவும் வாய்ப்பு.

அவர்கள் வாடிக்கையாளர் சேவை மையத்தினரிடம் இதுகுறித்துக் கேட்ட போது மொபைல் எண் கட்டாயம் என்று கூறி விட்டார்கள்.

CRED நிறுவனத்தின் சேவையைக் கடந்த சில மாதங்களாகப் பயன்படுத்தி வருகிறேன்.

பலர் UPI அல்லது NEFT மூலமாக வாடகை செலுத்துகிறார்கள், சிலர் வாடகைதாரரை பணமாகக் கொடுக்கக் கட்டாயப் படுத்துவார்கள்.

UPI / NEFT வழியாகக் கட்டணம் செலுத்தினால், கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை ஆனால், கிரெடிட் கார்டு என்றால் கூடுதல் கட்டணம் உண்டு.

பின்னர் எதனால் கிரெடிட் கார்டு வழியாகச் செலுத்துகிறார்கள் என்பதற்குக் காரணங்கள் உண்டு.

என்னென்ன காரணங்கள்?

  • கிரெடிட் கார்டு வழியாகப் பணம் செலுத்தினால், Rewards Points கிடைக்கும். இதன் மூலமாகக் கூடுதல் கட்டணத்தைச் சரி செய்து விடலாம்.
  • சம்பளம் வரத் தாமதம் என்றாலும், கவலைப்படாமல் கிரெடிட் கார்டு வழியாக வாடகையைச் செலுத்த முடியும்.
  • குறிப்பிட்ட மாதம் பணநெருக்கடி என்றால், அம்மாத வாடகையை CRED வழியாக செலுத்தி விட்டு அடுத்த மாதத்தில் சரி செய்து கொள்ளலாம்.
  • சில கிரெடிட் கார்டு நிறுவனங்கள் ஒரு வருடத்துக்கு ₹1,00,000 செலவு செய்தால், சலுகையாக ₹2000 Voucher கொடுப்பார்கள்.
  • மாதம் ₹10,000 கொடுத்தாலே ஒரு வருடத்தில் ₹1,20,000 வந்து விடும். எனவே, உறுதியாகக் கூடுதல் ₹2000 இலாபம்.
  • தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதால், CIBIL Score நல்ல முறையில் பராமரிக்கப்படும்.

CRED ல் என்ன சிறப்பு?

  • வாடகைப்பணம் உடனடியாகச் செலுத்தப்படும்.
  • CRED நிறுவனத்தில் வாடகை செலுத்த பல்வேறு சலுகைகள் / தள்ளுபடிகள் கொடுக்கப்படுகின்றன.
  • எடுத்துக்காட்டுக்கு வாடகை ₹15,500 அதற்குக் கட்டணம் ₹250 என்றால், ₹15,750 வரும்.
  • பல்வேறு சலுகைகள் குறிப்பிட்ட நிறுவன கிரெடிட் கார்டு நிறுவனங்கள் கொடுக்கும். அதில் முழுக்கட்டணமே தள்ளுபடியில் நீக்கப்படும் ஆனால், இதற்கான வாய்ப்புக்குறைவு, குறைந்தபட்சம் நான் கேள்விப்பட்டதில்லை.
  • வாடகை பணத்தைச் செலுத்திய நாளிலிருந்து ஒரு மாதத்துக்கு ₹1,00,000 காப்பீடு கிடைக்கும்.
  • ப்ரிட்ஜ், டிவி, AC, வாஷிங் மெஷின், கெய்சர் போன்றவை பழுது ஏற்பட்டால், அதிகபட்சம் ₹10,000 வரை ஆவணத்தைக் (Bill) கொடுத்துப் பெறலாம் (Claim).
  • 7 நாட்களில் பணம் கொடுக்கப்படுவதாகக் கூறுகிறார்கள். பொருளின் வயது 5 வருடங்களுக்குள் இருக்க வேண்டும் என்பது உட்படச் சில கட்டுப்பாடுகள் உள்ளன.
  • திருட்டு ஏற்பட்டால் FIR ஆவணங்களைக் கொடுத்து ₹1,00,000 வரை பெறலாம்.
  • இவற்றை இதுவரை பயன்படுத்தும் சூழ்நிலை அமைந்ததில்லை, பிரச்சனை இருக்காது என்று கருதுகிறேன்.
  • வீட்டு வாடகை மட்டுமல்லாது, நிறுவன வாடகை, பள்ளி கட்டணங்கள் உட்படப் பல்வேறு கட்டணங்களைச் செலுத்த முடியும்.

பிற்சேர்க்கை

பலர் கிரெடிட் கார்டு வாடகை கொடுப்பது என்ற பெயரில் மற்ற பணப்பரிமாற்றத்துக்கு இச்சேவையை தவறாகப் பயன்படுத்துவதால், சில வங்கிகள் கூடுதல் கட்டணம் (1%) விதிக்கின்றன.

இதோடு CRED நிறுவனம் கட்டண சலுகையை 35% ல் இருந்து 5% ஆக குறைத்து விட்டது. எனவே, குறைந்த பட்சம் ₹200 அதிகம் செலுத்துவது போல வருகிறது.

எனவே, இவற்றையும் தாண்டி இலாபம் கிடைக்கிறது என்றால் பயன்படுத்துங்கள்.

சரியான திட்டமிடல் வேண்டும்

CRED மட்டுமல்ல CRED போலப் பல நிறுவனங்கள் சலுகைகள் தருகின்றன. இதில் எந்த நிறுவனம் தரும் சலுகை நமக்கு இலாபமோ அதையே பயன்படுத்தலாம்.

பலரும் கிரெடிட் கார்டு பயன்பாட்டைத் தவறாகப் புரிந்துகொண்டுள்ளார்கள்.

ஆனால், சரியான முறையில் திட்டமிட்டுப் பயன்படுத்தினால், கிரெடிட் கார்டால் 100% இலாபம் மட்டுமே.

தொடர்புடைய கட்டுரைகள்

CRED | Credit Card Management App

HDFC Credit Card Vs ICICI Credit Card Vs SBI Credit Card எது சிறந்தது?

கிரெடிட் கார்டு பயன்கள் என்ன?

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

3 COMMENTS

  1. அருமையான தகவல். கடனட்டை இருபக்கமும் கூர்மையான கத்தி போன்றது கவனத்துடன் கையாள்வது நலம்

  2. @விஜயகுமார் சரியான திட்டமிடல் இருந்தால் போதுமானது.

    இதுவரை 5 பைசா கூட எனக்கு நட்டமானதில்லை. 15+ வருடங்களுக்கும் மேலாக பயன்படுத்துகிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!