HDFC கடனட்டை | பாதுகாப்பான பரிவர்த்தனை

2
HDFC Credit Card

ணைய பயன்பாட்டில் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதையும் மீறி நடப்பதற்கு ஒன்றும் செய்ய முடியாது. Image Credit

தலைக்கவசம் அணிந்து சென்றால் நல்லது. மற்ற இடங்களில் அடிபட்டால் என்ன செய்வது? என்று தலைக்கவசம் அணியாமல் இருக்க முடியுமா? அது போலத்தான்.

கடனட்டை பணப்பரிமாற்றம்

இணையத்தில் ஒரு பொருளை வாங்கும் போதோ, ஒரு சேவையைப் பெறும்போதோ கடனட்டை வழியாகப் பணப்பரிமாற்றம் செய்கிறோம்.

https தளமாக இருந்தாலும், நம்முடைய கடனட்டை விவரங்களைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புண்டு, குறிப்பாக நம்பகம் இல்லாத தளங்கள்.

Readமுகவரியில் “HTTPS” இல்லையா..! தெறிச்சு ஓடிடுங்க 🙂

இதற்கு என்ன செய்வது?

HDFC கடனட்டையில் Netsafe என்ற சேவையின் மூலமாகப் பாதுகாப்பாக பரிவர்த்தனை செய்யலாம். உங்கள் கடனட்டை விவரங்களைக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

எப்படிப் பெறுவது?

https://netsafe.hdfcbank.com தளம் சென்று உங்கள் கடனட்டை எண்ணை உள்ளீடு செய்து கணக்கு துவங்கிக் கொள்ளுங்கள்.

இதன் பிறகு இணையப் பரிவர்த்தனை செய்யும் போது இந்தக் கணக்கின் மூலம் தற்காலிக Credit Card Number, CVV Number, Expiry Date விவரங்களை உருவாக்குங்கள்.

இந்த (Virtual Credit Card) விவரங்கள் 24 மணி நேரத்துக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

இந்த விவரங்கள் மூலம் எவ்வளவு அதிகபட்ச ருபாய் (Maximum Limit) பரிவர்த்தனை செய்யலாம் என்பதையும் குறிப்பிடலாம்.

இந்தச் சேவையின் மூலம் உங்கள் உண்மையான கடனட்டை விவரங்களை இணையப் பரிவர்த்தனையில் கொடுக்க வேண்டியதில்லை.

இந்தச் சேவைக்குக் கட்டணமில்லை.

பற்று அட்டைக்கும் (Debit Card) இந்த வசதியைப் பயன்படுத்தலாம்.

நான் HDFC கடனட்டை / பற்று அட்டை பயன்படுத்துவதால் இதைக் கூறி இருக்கிறேன். மற்ற வங்கிகளும் இது போல / இதையொட்டிய சேவையை வழங்கி வருகின்றன.

கொசுறு 1

தற்காலிக எண்ணை கொடுத்தாலும் OTP உங்கள் மொபைல் எண்ணுக்குத் தான் வரும். அதோடு பரிவர்த்தனை விவரங்களும் உங்கள் கடனட்டை விவரத்தில் வழக்கம் போலவே வரும்.

கொசுறு 2

விமானப் பயணச்சீட்டு போன்றவற்றுக்கு இச்சேவையைப் பயன்படுத்த முடியாது. காரணம். அவர்கள் கேட்கும் போது உறுதிப்படுத்த உங்கள் கடனட்டையைக் காண்பிக்க வேண்டும்.

தற்காலிக எண்ணில் முன் பதிவு செய்தால், நீங்கள் கொடுக்கும் உண்மையான கடனட்டை விவரங்கள் வேறு இருக்கும் என்பதால், இது போலப் பரிவர்த்தனைகளைச் செய்ய முடியாது.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here