சில்லுனு ஒரு பயணம் :-)

25
சில்லுனு ஒரு பயணம்

னிப்பட்ட காரணத்திற்காகவும் என் மனைவி மற்றும் பையனை அழைத்து வரவும் இந்தியாவிற்குக் குறுகிய பயணமாகச் சென்று வந்தேன். Image Credit

அங்கு இருந்த ஒரு வாரமும் செம மழை! எங்க ஊர் கோபிலையும் நல்ல மழை.

நான் நட்டு வைத்து இருந்த செடிகள் நன்கு தழைத்து வருகிறது, மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது.

எங்க பக்கம் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் மழை வழக்கத்தை விட அதிகமாகப் பெய்து இருக்கிறது.. என்னை மாதிரி நல்லவங்க ஊருக்கு வந்தா மழை வருவது சகஜம் தானே! 🙂 .

மண் சரிவு

நீலகிரில மண் சரிந்து கிட்டத்தட்ட 60 பேர் இறந்தது ரொம்பக் கொடுமையாக இருந்தது.

இயற்கையை அழித்தால் அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை இயற்கை ஆக்ரோசமாகத் தெரிவித்து விட்டது.

இதில் வருத்தப்படக்கூடிய விஷயம் இத்தனை நடந்தாலும் மறுபடியும் நம்மவர்கள் இதைப் போலவே தொடர்வார்கள் திருந்தமாட்டார்கள் என்பது கவலையளிக்கிறது.

மரத்தை வெட்டிக் கட்டிடமாகக் கட்டி நீலகிரியின் அழகையே கெடுத்து விட்டார்கள்.

இப்போது பார்க்கவே மொட்டையாகக் கண்றாவியாக உள்ளது. இங்கு வழக்கத்தை விட 170% அதிக மழை பெய்ததாகத் தட்ஸ்தமிழில் வந்து இருந்தது.

சென்னையில் நன்றாக மழை பெய்து இருந்தும் பெரும்பாலான நீர் வழக்கம் போலக் கடலில் கலந்தது எரிச்சலடைய வைத்தது.

இதை விடக் கொடுமை ஏரிகளில் வீட்டைக் கட்டியுள்ளவர்கள் தங்கள் வீடுகளில் நீர் வருகிறது என்று ஏரியை உடைத்து விடும் கொடுமையும் நடக்கிறது.

இவர்களைக் கூறி குற்றமில்லை இதை அனுமதிக்கும் அரசையும் பணத்தைத் திங்கும் பேயாகியாக அதிகாரிகளையும் தான் கூற வேண்டும்.

என்னத்தைக் கூறி புலம்பி என்ன ஆகப்போகிறது….இந்தக் கொடுமைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

நாமும் இப்படியே புலம்பிட்டுக் காலத்தை ஓட்டுவோம். பெட்ரோல் விலை உயரும் போதெல்லாம் இரண்டு நாள் புலம்பி விட்டு பிறகு வழக்கம் போல வேலையைப் பார்ப்போமே…. அதைப்போல! 😉 .

பச்சை நிறமே

ன்னோட அக்கா கணவருடன் வயலுக்குச் சென்று இருந்தேன், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை தான் (என்ன பதினெட்டு பட்டி வசனம் மாதிரி இருக்கா 😀 ).

கருத்த மேகத்துடன் சிறு சாரலுடன் அங்கு நடந்த போது… என்ன தான் சொல்லுங்க இதற்கு இணை எதுவுமில்லை.

படம் (ஷூட்டிங்) எடுக்க எல்லோரும் ஏன் எங்க ஊருக்கு வராங்க என்ற கேள்விக்குப் பதில் மனதில் வந்து சென்றது 🙂 .

அவருடன் பேசிக்கொண்டு இருந்த போது (நான் எங்குச் சென்றாலும் அது (இடம்) பற்றிய விவரங்களைக் கேட்டுக்கொண்டே இருப்பேன்) அவர் தற்போது பலர் நேரடியாக வயலை நடத்துவதில்லை குத்தகைக்கு விட்டு விடுகிறார்கள்.

ஒரு சிலர் (அதிக நிலங்கள் வைத்து இருப்பவர்கள்) மட்டும் தாங்களே நேரடியாக விவசாயம் செய்கிறார்கள்.

ஆண்கள் கூலி தினமும் 200 ருபாய் பெண்களுக்கு 100 ருபாய், காலை 8.30 மணிக்கு வந்து மதியம் இரண்டு அல்லது அதிகபட்சம் மூன்று மணிக்குச் சென்று விடுவார்கள்.

இதில் அவர்கள் வேலை செய்யாமல் இருந்தாலும் நமக்கு அவ்வளவாகத் தெரியாது, இதனால் பெரும்பாலனவர்களுக்குக் கட்டுப்படியாவதில்லை இதனால் ஒரு சிலர் இயந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்று கூறினார்.

மஞ்சள் விலை

ற்போது மஞ்சளின் விலை உயர்ந்து இருப்பதால் (15000 Rs) விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

கரும்பு பயிர் செய்தால் அதை விற்க பணத்தைப் பெற ரொம்ப அலைய வேண்டி இருப்பதால் நெல் பயிரிடுவதற்கே முன்னுரிமை தருவதாகக் கூறினார்.

இரவெல்லாம் கண்விழித்துத் தண்ணீர் கட்டி பூச்சி பாம்புகளுடன் நடந்து நாம் கரும்பு பயிரிடுகிறோம் ஆனால் அதை வாங்குபவர்கள் அதற்குண்டான மரியாதையையும் பணத்தையும் தருவதில்லை எனவே தற்போது கரும்பு பக்கமே போவதில்லை என்றார்.

விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்பது பலகாலமாகக் கூறப்படுவது ஆனால் கஷ்டப்படும் விவசாயி எப்போதும் கஷ்டப்பட்டுக்கொண்டே இருக்கிறார்.

அவர் தரும் பொருளை வைத்து அனைவரும் லாபம் சம்பாதித்துக்கொண்டே இருக்கிறார்கள் 🙁 .

பேராண்மை

திவர்கள் கண்டுகொள்ளாமல் விட்ட “பேராண்மை” பட்டய கிளப்பிக்கொண்டு ஓடுகிறது எங்க ஊர்ல 25 நாள் ஒடுனாலே அந்தப் படம் ஹிட் தான்.

தற்போது 30 நாளைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

வசூலும் சிறப்பாக உள்ளது என்று பாக்ஸ் ஆஃபிஸ் கூறுகிறது, ஒரு வழியா தயாரிப்பாளர்கள் ஐங்கரன் நிம்மதி பெருமூச்சு விட்டு இருப்பார்கள்.

இவர்கள் தயாரிப்பில் “நந்தலாலா” மற்றும் “அங்காடித்தெரு” வரவுள்ளது.

ஆதவன்

அதே போலப் பதிவர்கள் கொத்துப் பரோட்டா போட்ட “ஆதவன்” படமும் நன்றாகப் போகிறது, தயாரிப்பாளருக்குக் கண்டிப்பாக இலாபம் தான்.

செய்திதாள்ல “ஆதவன்” விளம்பரம் தினமும் அப்படி இப்படி என்று செய்து கொண்டு இருக்கிறார்கள், கூடவே தலைவர் சிவாஜி பட வசூலையும் மிஞ்சி விட்டதாக!

யோவ்! உங்க லொள்ளுக்கு அளவே இல்லையா!

இன்னும் எத்தனை பேருயா கிளம்பி இருக்கீங்க! வருகிற எல்லாப் படத்துக்கும் இதையே சொல்லிட்டு இருக்கீங்க…..அப்படின்னா சொன்ன படத்தைப் பெஞ்ச் மார்க் வைக்க வேண்டியது தானே!

எதுக்குயா சிவாஜிய சொல்றீங்க!

சிவாஜி வசூலை யாருமே மிஞ்ச முடியாதுன்னு சொல்ல வரலை ஆனால், அளந்து விடுறதுக்கும் ஒரு அளவு வேண்டாமா!

ஆதவன் படத் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக இயக்குனர் தரணி இயக்கத்தில் நடிப்பதாகச் செய்திகளில் வந்தது.

அந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றாலும்! அப்போதும் அவர்கள் ஆதவன் படத்தைக் கூறாமல் சிவாஜிய தான் கூறுவாங்க.

ஆனா ஒண்ணு அதுக்குள்ளே “எந்திரன்” வந்துடும் பிறகு எல்லா விளம்பரமும் டைவர்டட்டு எந்திரன் 🙂 .

சென்ற வாரம் பாக்ஸ் ஆஃபிஸ்ல ஆதவனை, “கண்டேன் காதலை” மிஞ்சி விட்டதாம் அப்ப இன்னும் இரண்டு வாரம் சென்றால் கண்டேன் காதலை படமும் சிவாஜிய மிஞ்சி விடுமா!

குசேலன்

ப்ளாப் செய்யப்பட்ட குசேலன் வசூல் 32 கோடி, குசேலன் ஃப்ளாப் என்றாலும் அதன் பிறகு வரும் எந்திரனுக்கு 150 கோடிக்கு மேல் நம்பி முதலீடு செய்ய ஒரு தயாரிப்பாளர்.

இது போதாதா ரஜினியின் பலம் என்னவென்று காட்ட.

உங்க லெவெலுக்கு ஒரு படத்த பிடிங்கப்பா! சின்னப்புள்ளதனமா பேசிட்டு! 🙂 சிவாஜி வசூலை மிஞ்ச இப்போதைக்கு எந்திரன் படத்தால் மட்டுமே முடியும்!

சூர்யா விஜய்

அக்கா பையன் விஜய் ரசிகனாக இருந்து தற்போது சூர்யாவிற்கு இடம் பெயர்ந்து விட்டான்.

கேட்டால் சூர்யா வித்யாசமாக நடிக்கிறார் மற்றும் வித விதமாக ஹேர் ஸ்டைல் செய்கிறார். எனவே, எங்கள் கல்லூரியில் தற்போது சூர்யா தான் ஹாட் என்றான்.

ஆனால், என்னோட இன்னொரு அக்காவோட குட்டி பொண்ணு தீவிர விஜய் ரசிகை 🙂 விஜய் எவ்வளோ பிடிக்கும் என்றால் இவ்வ்வ்வவளோ பிடிக்கும்னு கையை விரித்துக் காட்டுகிறாள் 🙂 .

தொலைக்காட்சில வழக்கம் போல விளம்பரம் பார்க்க பொறுமை இல்லாமல் ஒரு சேனலும் உருப்படியாகப் பார்க்கவில்லை,

விளம்பரம் குறைவாக இருக்கும் Jaya Max மட்டுமே பார்த்தேன்.

என்ன இதில புதுப் பாடல்கள் அவ்வளவா வரதில்லை இருந்தாலும் ஜெயாவுக்கே என் ஒட்டு 🙂 உள்ளூர் சேனல்களையும் சேர்த்து 25 தமிழ் சேனல்கள் வருகிறது.

இத்தனையையும் பார்க்கிறதெல்லாம் நடக்கிற (பார்க்கிற) காரியமா! டிஸ்கவரி சேனல் தமிழ்ல வருது ரொம்ப அருமையா இருக்கிறது, பலருக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

மாளவிகா

ருக்கு வரும் போது கண்ணில் பட்ட போஸ்டரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து! பிறகு கிளுகிளுப்பாகி விட்டேன்.

ஹி ஹி அந்தப் போஸ்டர் மாளவிகா படத்துடன் “மயக்கும் மாளவிகா” திரைப்படம்.

என்னடா இது! போஸ்டர் எதோ “அஞ்சரைக்குள்ள வண்டி” படம் போஸ்டர் கணக்கா இருக்கே இதை நம்ம்ம்பி போலாமா! அங்கே சென்று கடைசியில் மாளவிகாவை காட்டாம வேற யாரையாவது காட்டி கடுப்படிச்சுட்டா என்ன பண்ணுவது என்று யோசனை செய்து..

சரி! என்ன ஆனாலும் மாளுவா இல்லையா என்று பார்த்துட வேண்டியது தான் என்று முடிவு செய்தேன்.

கடைசியில் மழை தொடர்ந்து பெய்து போக வழி இல்லாமல் செய்து விட்டது.

மாளுவோட கொடுமையான புகைப்படத்தின் லின்க்கை யாராவது பின்னூட்டத்தில் கொடுத்து என்னை டென்ஷன் செய்தால் அவர்களுக்குக் கடுமையான சாபம் உண்டு.

Bubble

சென்னையில் ஒரு மருத்துவமனையில் உடல்நிலை சரி இல்லாமல் வந்த ஒரு பையனுக்கோ அல்லது பெண்ணுக்கோ (நினைவில் இல்லை) ஊசி போட்ட பிறகு வலிப்பு வந்து விட்டது.

பிறகு வேறு பெரிய மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல அவர்கள் கூறிய பிறகு இவர்கள் கொண்டு சென்று இருக்கிறார்கள் ஆனால் அந்தப் பையன் இறந்து விட்டான்.

ஆராய்ந்து பார்த்ததில் ஊசி போடும் போது பப்பிள் (Bubble) இருந்ததால் அடைப்பு ஏற்பட்டு இறந்து இருக்கிறான் என்று கண்டறியப்பட்டுக் கூறப்பட்டது, இந்த ஊசியைப் போட்டவர் ஒரு நர்ஸ்.

நீங்கள் படங்களில் பார்த்து இருக்கலாம் நோயாளிக்கு ஊசி போடும் போது கொஞ்சம் மருந்தை வெளியே விடுவார்கள் அது காற்று எதுவும் இருந்தால் வெளியேற்ற என்று கூறப்படுகிறது (மருத்துவப் பதிவர்கள் விளக்கலாம்).

இவ்வளவு பாதிப்பா?!

இந்த நர்ஸ் அதைப் போலச் செய்யாமல் போட்டதில் (அனைத்து நேரங்களிலும் இப்படி நேர்வதில்லை) உள்ளே இருந்த காற்று உடலில் நரம்பில் சென்றதால் இறப்பு ஏற்பட்டுள்ளது.

கோபமடைந்த பெற்றோர் மருத்துவமனைக்கு வந்து கோர்டுக்குப் போகப்போவதாகச் சண்டை போட இரண்டு நாள் கழித்து அந்த மருத்துவமனை தலைமை மருத்துவர் (உரிமையாளர்) இறந்து விட்டார்.

மன உளைச்சலால் அல்லது வேறு எதோ காரணத்தால்.

ஒரு காற்று பப்பிள் இந்தளவிற்குப் பாதிப்பை ஏற்படுத்துமா! என்பது வியப்பாக உள்ளது. ஒரு வேளை முக்கியமான நரம்பில் அடைப்பு ஏற்பட்டு விட்டதோ என்னவோ!

இதில் மருத்துவர் இறந்தது உண்மை ஆனால் மேற்கூறியது அனைத்தும் நான் மற்றவர் கூறக்கேட்டது எனவே 100% உறுதி என்று தெரியாததால் இடம் பற்றிய தகவல்களைக் கூறவில்லை.

நாம் கேள்வி பட்டதை வைத்துக் கூற நடந்தது வேறு என்றால் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தானே சிரமம்.

கொசுறு

சிங்கையில் உள்ள தண்டாயுதபாணி திருக்கோவில் கும்பாபிஷேகம் வரும் வெள்ளிக்கிழமை (27-11-2009) நடக்கிறது.

இது குறித்த விவரங்களை நண்பர் ராஜா அவர்கள் நான் தைப்பூசத்தின் போது எழுதிய “சிங்கப்பூரை அதிர வைத்த தைப்பூசம்” பதிவில் கூறி இருந்தார்.

ஆனால், அந்தப் பதிவு எழுதிப் பல மாதங்கள் ஆவதால் அதை மற்றவர்கள் பார்க்க வாய்ப்பு இல்லை எனவே அதை இங்கே கூறுகிறேன்.

கும்பாபிஷேகத்தை நேரலை செய்வதாகவும் கூறி இருக்கிறார்கள்.

கும்பாபிஷேகம் மற்றும் அதன் பிறகு 48 நாட்களுக்குச் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது, அது பற்றிய விவரங்கள் இங்கே.

ஆர்வமாகத் தகவல்கள் கொடுத்த ராஜா அவர்களுக்கு நன்றி.

பதிவு பெரிதாகத்தான் போய்டுச்சு! பொறுத்தருள்க! பொறுமையா படித்த பொறுமைசாலிகளுக்கும், ஸ்க்ரால் செய்து நேரா கடைசிக்கு வந்த உயர்ந்த உள்ளங்களுக்கும் நன்றி 😉 .

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

25 COMMENTS

  1. நரம்புகளுக்கும் ரத்ததிற்கும் சம்பந்தமில்லை!

    காற்று குமிழ்கள் ரத்த குழாய்களை அடைக்கலாம், அதற்கும் வாய்ப்பு குறைவே, ர்தத்ததில் உள்ள சிவப்பணுக்கள் காற்று குமிழை இல்லாதாக்கிவிடும் என்று ஒரு டாக்டர் சொல்கிறார்!

  2. //அங்கு இருந்த ஒரு வாரமும் செம மழைங்க!//

    இதுதான் நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழையா ?

  3. //நீலகிரில மண் சரிந்து கிட்டத்தட்ட 60 பேர் இறந்தது ரொம்ப கொடுமையாக இருந்தது//

    இல்லே அதுக்கும் மேலேன்னு என் நீலகிரி நண்பன் சொன்னான் 🙁

  4. கோபியிலிருந்து சிங்கை வரை பதிவுகள் பயணித்தது 🙂

  5. நீலகிரி நிலச்சரிவு வருத்தமானது. இயற்கையின் சீற்றத்துக்கான காரணமாக நீங்கள் சொல்லியிருப்பது சிந்திக்க வேண்டிய ஒன்று.

    //விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்பது பலகாலமாக கூறப்படுவது ஆனால் கஷ்டப்படும் விவசாயி எப்போதும் கஷ்டப்பட்டுக்கொண்டே இருக்கிறார். அவர் தரும் பொருளை வைத்து அனைவரும் லாபம் சம்பாதித்துக்கொண்டே இருக்கிறார்கள் :-(//

    உண்மை. போக்குவரத்து செலவு டீசல் உயர்வு என்றெல்லாம் ஏற்றப்படும் விலைகளால் உடல் உழைப்பைத் தந்த விவசாயிக்கு எந்த லாபமும் இருப்பதில்லைதான்.

    வயலும் வாழ்வும் நன்றாகவே இருக்கிறது. களத்தில் நின்று தந்திருக்கும் தகவல்களல்லவா?

    முதலில் உயர்ந்த உள்ளமாகி பிறகுதான் ஆரம்பித்தேன் வாசிக்க:))![நம்புங்க, வழக்கமாய் சிறப்பா முடிக்கும் அந்த நச் தேடித்தான் போனேன், இந்த நச்-ம் ஏமாற்றவில்லை:))!]

  6. கரும்பு திண்ண கைக்கூலியாங்கிரதை ….கரும்பு விவசாயாத்துக்கும் பயன்படுத்தீட்டாங்க நம்ம ஊர்ல…. பேசாம மஞ்சள் பயிரடச் சொல்லுங்க….தங்கத்தை விட அதன் விலை உயர்வு சதவீதம் இருக்காம்….:-)
    உங்க பையன்கிட்ட கணினியை குடுத்து அவன ஒரு பதிவு போடா சொல்லிடுங்க….பின்னூட்டங்களப் பார்த்து டரியல் ஆகி கிட்ட வரமாட்டான்…:-))

  7. அச்சச்சோ,
    நீங்க வந்தத மறந்தே போயிட்டேன்.
    சரி விடுங்க. (வழக்கம் போல) அடுத்த தடவ பாத்துக்கலாம்.

    சிவாஜி மேட்டர்ல நீங்க சொன்ன மேட்டர் நல்லா இருந்துச்சு. அதான, சிவாஜிய ஏற்கனவே வில்லு பிரேக் பண்ணியிருந்தா, இப்போ ’ஆதவன் வில்லு வசூலை முயறிடித்தது’ன்னுதானே சொல்லனும்?

    //கைப்படத்தின் லின்க்கை யாராவது பின்னூட்டத்தில் கொடுத்து..//
    நானும் ஆச ஆசயா ஓடி வந்து பாத்தேன்… இன்னும் ஒரு பயபுள்லயும் கொடுக்கலையா?
    ஓக்கே.. ஃபாலோ…

  8. வாங்க…. சல்லுனு ஒரு பயணம் போல….. பையன் நல்லா விளையாடறானா?

    சும்மாவா பாக்யராஜ் உங்கூர்லயெ படம் புடிச்சுக்கிட்டு இருந்தாரு?

  9. அப்ப இந்தமுறை நான் சிங்கை வரும்போது உங்களோட அண்ணனையும் பார்க்கலாம்னு சொல்லுங்க 🙂

  10. // வானம்பாடிகள் said…

    நீளமா இருந்தா என்ன? நல்லா இருந்தது. :)//

    நன்றி பாலா சார்

    =====================================================================================

    // வால்பையன் said…

    நரம்புகளுக்கும் ரத்ததிற்கும் சம்பந்தமில்லை!//

    எனக்கு இது பற்றி உறுதியாக தெரியவில்லை அருண்.

    அப்புறம் நீங்க கேட்ட படம் நினைவிற்கு வந்து விட்டது அது are you scared?

    ======================================================================================

    // ☼ வெயிலான் said…

    கோபியிலிருந்து சிங்கை வரை பதிவுகள் பயணித்தது :)//

    🙂

    =======================================================================================

    // அதி பிரதாபன் said…

    அச்சச்சோ,
    நீங்க வந்தத மறந்தே போயிட்டேன்.
    சரி விடுங்க. (வழக்கம் போல) அடுத்த தடவ பாத்துக்கலாம்.

    அது சரி!

    //நானும் ஆச ஆசயா ஓடி வந்து பாத்தேன்… இன்னும் ஒரு பயபுள்லயும் கொடுக்கலையா?//

    ரொம்ப நல்ல எண்ணம்

    =======================================================================================

    // ராமலக்ஷ்மி said…

    முதலில் உயர்ந்த உள்ளமாகி பிறகுதான் ஆரம்பித்தேன் வாசிக்க:))![நம்புங்க, வழக்கமாய் சிறப்பா முடிக் கும் அந்த நச் தேடித்தான் போனேன், இந்த நச்-ம் ஏமாற்றவில்லை:))!//

    ஹா ஹா ஹா

    ======================================================================================

    // Mahesh said…

    வாங்க…. சல்லுனு ஒரு பயணம் போல….. பையன் நல்லா விளையாடறானா? //

    இன்னும் கொஞ்ச நாள் போனா லேப்டாப் எடுத்து உள்ள தான் வைக்கணும் போல இருக்கு

  11. // ரோஸ்விக் said…

    தங்கத்தை விட அதன் விலை உயர்வு சதவீதம் இருக்காம்….:-)//

    எல்லோரும் அப்படி தான் நினைத்து இருக்காங்க!

    //உங்க பையன்கிட்ட கணினியை குடுத்து அவன ஒரு பதிவு போடா சொல்லிடுங்க….பின்னூட்டங்களப் பார்த்து டரியல் ஆகி கிட்ட வரமாட்டான்…:-))//

    நான் பல பதிவுகளை பார்த்தது டர்ர்ர்ரர் ஆகிட்டு இருக்கேன் இதுல இவன் வேறயா!
    =======================================================================================================

    //cdhurai said…

    இந்த பதிவுலகிற்கு புதியவன் ஒரு காதல் கதை எழுதியுள்ளேன்..தங்களது ஆதரவை விரும்பி, தங்களே எனது வலைக்கு அழைக்கிறேன்//

    வாழ்த்துக்கள் துரை

    =========================================================================================

    // MALARVIZHI said…

    நீளமாய் இருந்தது. ஆனால் நன்றாக இருந்தது.//

    நன்றி மலர்விழி

  12. // எம்.எம்.அப்துல்லா said…

    அப்ப இந்தமுறை நான் சிங்கை வரும்போது உங்களோட அண்ணனையும் பார்க்கலாம்னு சொல்லுங்க :)//

    அப்படியா! எப்போ வரீங்க அப்துல்லா! இந்த முறை வந்த போது உங்களை தொலைபேசியில் அழைத்தேன் ஆனால் ரிங் போய்கொண்டே இருந்தது.

    ==================================================================================================================

    // பேனாமுனை said…

    eid mubarak//

    நன்றி பேனாமுனை //

    ================================================================================================

    // குறை ஒன்றும் இல்லை !!! said…

    hello what is this? very first comments kellam no resoponsea ?//

    என்ன கொடுமை சார் இது! ராஜ் உங்க கமெண்ட் மட்டும் ஹைட் ஆகிடுச்சு! நம்புங்க நிஜமா கமெண்ட் போட்டேன்.. இரண்டு நாள் ப்ளாக்கர் கமெண்ட் பிரச்சனை செய்து கொண்டு உள்ளது…ஒவ்வொரு முறையும் ஒரு பிரச்சனை வருது ..anyway இந்தாங்க உங்க கமெண்ட்

    //!!!!!!!!!!!!//

    ?????

    //இதுதான் நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழையா ?//

    இதுல முக்கால்வாசி சரி கால்வாசி தவறு 😉

    //இல்லே அதுக்கும் மேலேன்னு என் நீலகிரி நண்பன் சொன்னான் :(//

    இருக்கலாம்..நான் செய்திகளில் வந்ததை வைத்து கூறினேன்.. அங்கே இருப்பவர்களுக்கு தான் உண்மை தெரியும்.. அரசு இறப்பை மறைத்து இருக்கலாம்.

  13. கிரிசரளமான பதிவு… அப்படி ஒன்றும் ஸ்க்ரோல் பண்ணி கடைசியில் போக வைப்பது போல் இல்லை…மழை வேண்டும், வாடும் பயிர்களுக்கு… வேண்டாம் இது போல் வீணாக கடலில் கலக்க…சிவாஜி கலெக்‌ஷன் பற்றி இன்னுமா டிஸ்கஷன்… ஆதவன் முந்தியது… கண்டேன் காதல் அடுத்த வாரம் முந்தும்… என்ன கொடுமை சார் இது…சிவாஜியின் வசூல் சாதனையை “எந்திரன்” மட்டுமே முறியடிக்க வாய்ப்புள்ளது… “எந்திரன்” கூட ஜூன் தான் ரிலீஸ் ஆகும் போல் இருக்கிறது… இன்னும் 2 பாடல்கள் ஷூட் பாக்கி… பின், சி.ஜி. என்னும் கம்ப்யூட்டர் க்ராஃபிக்ஸ் வேலை, ரீ-ரிகார்டிங், பின் படத்திற்கான வியாபாரம், ஆயிரக்கணக்கில் பிரிண்ட் …. யப்பா தல சுத்துதே… கூடவே ஏப்ரலின் போது ஐ.பி.எல். போட்டி வேறு…ஜெயாவில் பழைய பாடல்கள் கேட்கலாம்… நன்றாக இருக்கும்…பதிவு படிப்பதற்கு மொத்தத்தில் நிறைவாக இருந்தது.பின் குறிப்பு : செல்லதுரை எழுதிய “முதல் காதல்” கதை எப்படி?? படிச்சுட்டு சொல்லுங்க…

  14. நம்ம ஊரு கோபி பத்தி படிச்சது ரொம்ப சந்தோசம். இன்னும் கொஞ்சம் எழுதுங்க. அமெரிக்க கோடை விடுமுறையில் குடும்பத்துடன் சென்று பெற்றோருடன் இருந்த நினைவு திரும்பப் பெற்றேன். நன்றி. கோபி சென்னை மாதிரி இல்லாமல் நல்லபடி வளருது போல இருக்கு. திரும்பின பக்கம் எல்லாம் மெயின் ரோட்டில் ATM. சரவணா கொட்டகையை இடிச்சிட்டு இப்போ வீடுகள். ஆடிப் பெருக்கில் கொடிவேரி போயிருந்தேன். அருமை.. அருமை.

  15. //R.Gopi said…
    கிரி

    சரளமான பதிவு… அப்படி ஒன்றும் ஸ்க்ரோல் பண்ணி கடைசியில் போக வைப்பது போல் இல்லை//

    🙂 அப்படியா! ஓகே

    //சிவாஜி கலெக்‌ஷன் பற்றி இன்னுமா டிஸ்கஷன்… ஆதவன் முந்தியது… கண்டேன் காதல் அடுத்த வாரம் முந்தும்… என்ன கொடுமை சார் இது//

    ஹி ஹி ஹி இவங்க ரவுசு தாங்கல

    //கூடவே ஏப்ரலின் போது ஐ.பி.எல். போட்டி வேறு//

    இது தான் நந்தி மாதிரி இருக்கு!

    //பதிவு படிப்பதற்கு மொத்தத்தில் நிறைவாக இருந்தது.//

    நன்றி கோபி

    //செல்லதுரை எழுதிய “முதல் காதல்” கதை எப்படி?? படிச்சுட்டு சொல்லுங்க//

    சொல்லிட்டேன் அங்கே!

    ==================================================================================================

    // tamil boy said…

    நம்ம ஊரு கோபி பத்தி படிச்சது ரொம்ப சந்தோசம்//

    நீங்க நம்ம ஊர் என்பது அதை விட எனக்கு சந்தோசம் 🙂

    //இன்னும் கொஞ்சம் எழுதுங்க. //

    எழுதி இருக்கிறேன் முன்பே

    //கோபி சென்னை மாதிரி இல்லாமல் நல்லபடி வளருது போல இருக்கு. திரும்பின பக்கம் எல்லாம் மெயின் ரோட்டில் ATM.//

    இல்லைங்க இப்ப ரொம்ப போக்குவரத்து நெரிசல் அதிகமாகி விட்டது. மாற்றல் ஆகி வரும் பலரும் கோபியிலே வீடு கட்டுவதால் பெரிய இம்சையாக உள்ளது முன்பு இருந்த குளிர்ச்சி குறைந்து விட்டது கூட்ட நெருக்கடியால், கோபி மிக வேகமாக வரந்து வருவது உண்மை தான்.

    அதிமுக திமுக சண்டையால் கோபிக்கு வரவேண்டிய பாதாள சாக்கடை வராமல் போய் விட்டது, நல்ல திட்டம் இவர்கள் ஈகோ பிரச்சனையால் கை நழுவி விட்டது.

    கோபி பற்றிய என் இடுகை

    சின்ன கோடம்பாக்கம் "கோபி" வயல்வெளி காட்சிகள்

    "பச்சை பசேல்னு" ஊரு அதுக்கு "கோபி"ன்னு பேரு

  16. giri,
    "இனி பதிவு எழுதுவதை குறைத்துக்கொள்ளப்போகிறேன் " – yennaku vantha sothaniya ithellam yenna thalaiva ithu.

    Atleast yennai mathiri rasigarkal kaga atleast once in two weeks oru pathivu podunga Giri. Arambathula neraiya pathivu pottu unga yeluthuku rasigan aanathum ippadi vidurathu nyayam illai thaliva. please consider this as my request, atleast once in 10-15 days oru pathivu podunga thala (if possible)

    intha pathivu super oru thalaivar rasigana supero super

    Thanks,
    Arun

  17. மழை நீர் பெருமளவு கடலில் கலப்பதை கண்டும் மற்றும் வீணாகி போவதை கண்டும் பல முறை மனம் வருந்தி இருக்கிறேன் கிரி. சிங்கை வந்த பிறகு இங்கு எவ்வளவு அழகாக மழை நீர் வடிகால் மற்றும் சேமிப்பு செய்கிறார்கள் என கண்டு வியப்பு அடைந்திருக்கிறேன். 1980 களில் சிங்கைலும் இந்த பிரச்சனைகள் இருந்திருகிறது. ஆனால் அவர்கள் விரைவாக கட்டமைப்பை மேம்படுத்தி இருக்கிறார்கள். நம் நாடும் விரைவில் மேம்படவேண்டும் என்பதே பலரின் ஆசை. – பயபுள்ள.

  18. சாமி கட்டுரை ரொம்ப நல்ல இருந்தது… ஆயிரமிருந்தாலும் சொந்த நிலத்தில் விவசாயம் பண்ணுறதில இருக்கிற‌ சந்தோஷம் வேற ஏதும் இல்ல… நாங்களும் விவசாயக் குடும்பம் தான் (கம்பம் சொந்த ஊர்) …

  19. //Arun said…
    Atleast yennai mathiri rasigarkal kaga atleast once in two weeks oru pathivu podunga Giri. //

    ஒரு பதிவு இட அவ்வளோ நாள் எல்லாம் எடுக்க மாட்டேங்க… அவ்வப்போது இடுகை போடுவேன்.

    //Arambathula neraiya pathivu pottu unga yeluthuku rasigan aanathum ippadi vidurathu nyayam illai thaliva. //

    இடுகைகளுக்கு அடிமை ஆகி விடக்கூடாது என்ற காரணத்திற்க்காகவே குறைத்துக்கொண்டேன், மற்றபடி வேறு எந்த காரணமும் இல்லை.

    //please consider this as my request, atleast once in 10-15 days oru pathivu podunga thala (if possible)//

    கண்டிப்பா அவ்வளோ நாள் எல்லாம் ஆகுதுங்க அருண்..வாரம் ஒன்றாவது சில சமயங்களில் இரண்டு பதிவாவது இட்டு விடுவேன். உங்கள் அன்பிற்கு நன்றி

    //intha pathivu super oru thalaivar rasigana supero super//

    நன்றி அருண் 🙂

    =======================================================================

    //paya said…

    மழை நீர் பெருமளவு கடலில் கலப்பதை கண்டும் மற்றும் வீணாகி போவதை கண்டும் பல முறை மனம் வருந்தி இருக்கிறேன் கிரி//

    ஆமாங்க நானும் தான்.

    //அவர்கள் விரைவாக கட்டமைப்பை மேம்படுத்தி இருக்கிறார்கள். நம் நாடும் விரைவில் மேம்படவேண்டும் என்பதே பலரின் ஆசை//

    உண்மை தான்.. ஆனால் நம்மவர்கள் அதிகமாக கொள்ளை அடிப்பதிலே குறியாக இருப்பதால் இதெல்லாம் நடக்ககூடிய சாத்திய கூறுகள் ரொம்ப குறைவு

    =======================================================================

    // மானஸ்தன் said…

    ஆயிரமிருந்தாலும் சொந்த நிலத்தில் விவசாயம் பண்ணுறதில இருக்கிற‌ சந்தோஷம் வேற ஏதும் இல்ல.//

    உண்மை தான்.. 🙂

    //நாங்களும் விவசாயக் குடும்பம் தான்//

    அப்ப ஒண்ணுக்குள்ள ஒண்ணு 😉 எனக்கு இன்னும் இதன் மீதான காதல் போகாமல் இருப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

  20. //ஸ்க்ரால் செய்து நேரா கடைசிக்கு வந்த உயர்ந்த உள்ளங்களுக்கும் நன்றி ;-)//எப்டி தான் கண்டுபிடிக்கிறாங்களோ :))ஊரைப் பற்றியும் விவசாயம் பற்றியும் எழுதறதுன்னாலே குஷி ஆய்டுது இல்ல.. ஜூனியர் நலமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!