பிடித்த பதிவர்களும் டெர்ரர் பதிவர்களும்!

42
பிடித்த பதிவர்களும் டெர்ரர் பதிவர்களும்!

விதிமுறைகள்

1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும்.
2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்.
3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.
4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.

1. பிடித்த பாடகர்கள்

எனக்கு SPB குரல் ரொம்பப் பிடிக்கும், இவ்வளோ வயசாகியும் அவரோட குரல் பெரிய பாதிப்படையாதது வியப்பளிக்கிறது. Image Credit

அவரோட சென்னை 600028 ல் வரும் “யாரோ!” பாடலைக் கேட்டு அட! சின்னப் பசங்களுக்குப் போட்டியா பாடி இருக்காரே என்று வியப்படைந்தேன்.

சித்ரா குரல் பிடிக்கும். ஜேசுதாஸ் குரலும் பிடிக்கும் ஆனால் தற்போது அவர் குரலில் அவர் வயது தெரிகிறது.

புதிய இளமையான பாடகர்கள் பல பாட்டுப் பிடிக்கிறது ஆனால், எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் யாரையும் நினைவு வைக்க முடியவில்லை.

அதையும் மீறி இந்தப் பாடலைப் பாடியவர்கள் யார் என்று தேடிப்பார்க்க தூண்டியவர்கள்………

அழகிய தமிழ் மகனில் மர்லின் மன்றோ பாடலில் வரும் பெண் குரல் உஜ்ஜயினி ரொம்ப அருமை, செம க்யூட்டான குரல்.

உன்னாலே உன்னாலே படத்தில் பல பாடல்களைப் பாடிய க்ரிஷ், வாரணம் ஆயிரம் படத்தில் அடியே கொல்லுதே! பாடல் பாடிய க்ரிஷ், பென்னி டயல், ஸ்ருதி ஹாசன்

பிடிக்காத பாடகர்கள்

மோசமாக வரிகளைக் கொலை செய்யும் அனைவரும்

2. பிடித்த நடிகர்கள்

ரங்காராவ், நாகேஷ், அசோகன், பாலைய்யா, ரஜினி, ரகுவரன், ராஜன் P தேவ், பிரகாஷ் ராஜ், கவுண்டமணி, வடிவேல்.

பிடிக்காத நடிகர்கள்

இப்போதைக்கு யாருமில்லை

பிடித்த நடிகைகள்

சரோஜா தேவி, தேவிகா, பண்டரிபாய், கண்ணாம்பா, ராதிகா, குஷ்பூ, சிம்ரன், மாளவிகா, ப்ரியாமணி, சினேகா, ஸ்ரேயா, குத்து ரம்யா

பிடிக்காத நடிகை

(இப்போதைய) குயிலி ..யப்பா! சாமி எந்தச் சீரியல் ல வந்தாலும் அழுகை அழுகை அழுகை …சத்தியமா தாங்க முடியலை.

3. பிடித்த அரசியல்வாதிகள்

கர்மவீரர் காமராஜர் மட்டுமே. இவரையும் தோற்கடித்த தமிழக மக்களை என்னாலே என்ன சமாதானம் கூறியும் மன்னிக்கமுடியலை. காமராஜர் படத்துல அவர் தோற்று விட்டார் என்றதும், அதை வானொலியில் கேட்டுக்கொண்டு இருந்த ஒருவர் கடுப்பாகி வானொலியை தூக்கி போட்டு உடைப்பார் ….அந்த கோபம் தான் எனக்கும் வந்தது.

பிடிக்காத அரசியல்வாதிகள்

மீதி உள்ள அனைவருமே! (கக்கன், நல்லக்கண்ணு போன்ற ஒரு சிலர் தவிர்த்து )

4. பிடித்த எழுத்தாளர்கள்

சுஜாதா ஆர்னிகா நாசர் பாலகுமாரன்

பிடிக்காத எழுத்தாளர்கள்

நான் புத்தகம் அதிகம் படிப்பதில்லை (பதிவருக்கான முக்கியமான தகுதியை இழந்து விட்டேன் 😀 ) எனவே, அதிகம் தெரிய வாய்ப்பில்லை.

5. பிடித்த பதிவர்கள்

ராமலக்ஷ்மி பதிவுகளை விட இவரை ரொம்பப் பிடிக்கும், யார் மனதையும் புண் படுத்த நினைக்க மாட்டார்.

என்னோட பதிவுலக நண்பர்களுள் குறிப்பிடத்தக்கவர் அல்லது முதன்மையானவர்.

இவரோட பதிவை விட இவரைப் பிடிக்கும் என்றதற்குக் காரணம் இவர் அதிகம் கவிதைகளை எழுதுவார்.

எனக்கும் கவிதைக்கும் வெகு தூரம், அதென்னவோ எனக்குக் கவிதைகள் அவ்வளவா பிடிப்பதில்லை அல்லது புரிவதில்லை.

அதனாலையே என் பின்னூட்டங்கள் கவிதை சமபந்தமாக உள்ள இடுகைகளில் காணப்படாது.

இவர் கவிதைகள் ஓரளவு எளிமையா இருக்கும், எனக்கும் புரியும்! விதத்தில் இருக்கும் 🙂 .

இதையும் மீறி அவர் எனக்கு நண்பராக இருக்கக் காரணம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை.

கோவி கண்ணன் பதிவுகளில் எனக்குப் பல கருத்து வேறுபாடுகள் உண்டு மற்றும் ரஜினி பற்றி இவருக்கு எதிரான கருத்துக்கள் என்னுடையது.

கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒரு நல்ல நண்பராகப் பிடிக்கும்.

வெயிலான் குறைந்த பதிவுகளே எழுதுகிறார் இருந்தாலும் பதிவு என்ற விஷயத்தைத் தாண்டிப் பிடிக்கும்

அப்துல்லா பல உயரங்களைத் தொட்டாலும் பல பிரபல!! பதிவர்களை நண்பர்களாகக் கொண்டு இருந்தாலும் :-), என்னிடம் அப்போது போலவே இன்றும் பழகுபவர் அதிகம் தொடர்பு இல்லை என்றாலும்.

உண்மைத்தமிழன் பதிவுகள் ரொம்ப இயல்பான எழுத்து நடையில் இருக்கும், படிக்கவும் சுவாராசியமாகவும் இருக்கும்.

ரொம்பப் பெரிய பதிவாக நீளமாக எழுதுவார் திரை விமர்சனத்தில் அனைத்தையும் கூறி விடுவார், இது தான் பிரச்சனை 🙂

அருண் பதிவரல்ல ஆனால் என் பதிவுகளை ரொம்ப ஆர்வமாகப் படிப்பார், நீண்ட மாதங்களாக எனக்கு உற்சாகமூட்டி வருபவர்.

என்னைப்போலவே இவரும் ரஜினி ரசிகர். இவரின் போலித்தனம் இல்லாத அன்பிற்காக இவரை ரொம்பப் பிடிக்கும்.

பிடிக்காத பதிவர்கள்

டெம்ப்ளேட் பின்னூட்டம் போடுபவர்கள், கும்மி அடிப்பதையே தொழிலாக வைத்து இருப்பவர்கள்.

குழு வைத்து மற்றவர்களை அழிப்பவர்கள், நமது அரசியல்வாதிகளுக்குச் சற்றும் குறையாமல் பதிவுலகில் அரசியல் செய்யும் பதிவர்கள்.

எனக்குப் பதிவு எழுத ரொம்பப் பிடித்துள்ளது, மாற்றுக்கருத்துகளை எதிர்பார்க்கிறேன் ஆனால் பதிவுலகம் பிடிக்கவில்லை அதை விட்டு விலகி இருக்கவே விரும்புகிறேன்.

காரணம், எனக்கு இது முழு நேர தொழில் இல்லை என் எண்ணங்களுக்கு வடிகாலாக மட்டுமே கருதுகிறேன்.

இதே வேலையாக எப்போதும் பதிவு, அரசியல், குழு, சண்டை, Hits, போட்டி, பொறாமை என்ற உலகத்திலிருந்து விலகி இருக்கவே மனம் விரும்புகிறது, சில விதிவிலக்கு.

சாதாரண நேரங்களில் அதைப் பற்றிப் பேசவே எனக்கு விருப்பம் இருப்பதில்லை.

அதே போல மற்றவர்கள் பேசினாலும் சரி என்று கேட்டுக்கொள்வதோடு நிறுத்திக்கொள்கிறேன் மேலும் நான் தொடர்வதில்லை.

இரண்டு வருடங்கள் ஆகியும் நான் எந்த “குழுவிலும்” இல்லாததே இதற்க்கு சாட்சி 🙂 .

6. பிடித்த தொலைக்காட்சி தொகுப்பாளர்கள்

பெப்சி உமா, அப்துல் ஹமீது

பிடிக்காத தொலைக்காட்சி தொகுப்பாளர்கள்

இசை சேனல்களில் வரும் அனைவரும், எதிரில் இருப்பவர் கண்ணைக் குத்தி விடுவதைப் போலக் கையைக் காட்டி காட்டி பேசுபவர்கள்.

7. பிடித்த இயக்குனர்கள்

பாலா, மணிரத்னம், ஷங்கர், அமீர், ஜனநாதன், செல்வராகவன், கெளதம்மேனன், முருகதாஸ் அப்போதைய பாக்யராஜ், பாலச்சந்தர், டி ராஜேந்தர், முத்துராமன், மகேந்திரன்

பிடிக்காத இயக்குனர்கள்

பேரரசு (ஆனால் இவருடைய திருப்பாச்சி பிடிக்கும்), விக்ரமன் படத்துல எப்போதும் வரும் டொய்ங் டொய்ங் இசையை மட்டும் சகிக்கவே முடியலை..இதை யாராவது அவர் கிட்ட சொல்லுங்களேன் ப்ளீஸ்!

8. பிடித்த பாடலாசிரியர்கள்

கண்ணதாசன், வைரமுத்து, தாமரை

பிடிக்காத பாடலாசிரியர்கள்

மற்றவர்கள் ஏனோ அவ்வளவாக என்னைக் கவரவில்லை முத்துக்குமார் தவிர்த்து

9. பிடித்த படங்கள்

ரஜினி படங்கள் மற்றும் திரைக்கதைஸ் சரியாக உள்ள எவ்வகைப்படங்களும்.

பிடிக்காத படங்கள்

அது என்ன மொக்கை படமாக இருந்தாலும் பார்த்து விடுவேன் கடைசியில் என்ன தான் ஆகிறது என்று பார்க்க [ரொம்ப நல்லவன்னு சொல்றீங்களா! 😉 ] .

அப்படியும் தாங்க முடியாமல் பாதியில் எழுந்து வந்து விடலாம் என்று நினைத்த இரு படங்கள் ஜெய் (பிரசாந்த் நடித்தது) திருப்பதி (அஜித் நடித்தது) இதில் திருப்பதி முதல் அரை மணி நேரம் கொடுமையிலும் கொடுமை அதன் பிறகு பரவாயில்லை, அப்படியும் இரண்டையும் முழுதாகப் பார்த்து விட்டுத் தான் வந்தேன் 🙂 .

10. பிடித்த இசையமைப்பாளர்கள்

ரகுமான், யுவன், ஹாரிஸ் அப்போதைய இளையராஜா

பிடிக்காத இசையமைப்பாளர்கள்

எல்லோரும் ஏதாவது ஒரு படத்துல சரி கட்டி விடுவதால் யாரையும் குறிப்பிட்டு கூற முடியவில்லை.

பேரரசு இசையமைப்பாளராக அவதாரம் எடுக்கப் போவதாகச் செய்திகளில் வந்தது அப்படி வந்தால் இப்பவே அவருக்கு இடம் பிடித்து வைத்து விடுகிறேன் 🙂

மேற்கூறியவைகளில் பெரும்பாலும் திரைத்துறையைச் சேர்ந்தவையாகவே இருக்கிறது, இதைத் தவிர்க்க நினைத்தேன் ஆனால், விதிமுறையில் அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று உள்ளது.

எனவே மற்ற துறையில் குறிப்பிட வாய்ப்பு கிடைக்கவில்லை, அதாவது எனக்குப் பிடித்தவர்கள் இங்கு இல்லை. வேறு எதுவும் காரணமில்லை.

இந்தப் பதிவை எழுத அழைத்த தேவாவிற்கு நன்றி

42 COMMENTS

  1. செம்ம கலெக்சன் வாத்தியாரே :

    இது நான் போடும் கமெண்டு. ஆனால் இது கும்மியா? டெம்ப்ளேட்டான்னு தெரியலையே…

    //கும்மி பின்னூட்டங்களையும் டெம்ப்ளேட் பாராட்டுக்களையும் தவிர்க்கவும்!

  2. //இப்போதைய) குயிலி ..யப்பா! சாமி எந்த சீரியல் ல வந்தாலும் அழுகை அழுகை அழுகை …சத்தியமா தாங்க முடியலை.//

    ஐய்யய்யோ சீரியல் எல்லாம் பாக்கறீங்களா 🙂

  3. //பேரரசு இசையமைப்பாளராக அவதாரம் எடுக்க போவதாக செய்திகளில் வந்தது அப்படி வந்தால் இப்பவே அவருக்கு இடம் பிடித்து வைத்து விடுகிறேன் :-)//

    இப்பவே எனக்கு கிலி பிடிக்குது !
    🙂

  4. பிடித்த நடிகையரில் கண்ணாம்பா அம்மா படம் போட்டதுக்கு நன்றி.

    அச்சு அசலா எங்கம்மா இவுங்களைப் போலவே இருப்பாங்க. என் அம்மாவின் புகைப்படம் ஒன்னுமே இல்லாததால் இவுங்களைப் பார்த்தாலே அம்மா நினைவு வந்துரும். அதுக்காகவே இவுங்க படங்களின் டிவிடிகளை சேகரிச்சுக்கிட்டு இருக்கேன்.

  5. மிக்க நன்றி கிரி:)!

    //எனக்கு இது முழு நேர தொழில் இல்லை என் எண்ணங்களுக்கு வடிகாலாக மட்டுமே கருதுகிறேன்//

    ரைட்:)! இதிலே எனக்கும் சில ஒத்த கருத்துக்கள் உண்டு. என் எழுத்துக்களும் என் சிந்தனைகளின் வெளிப்பாடுகள் மட்டுமே, என் விருப்பத்துக்கு அவற்றை நான் வகைப்படுத்தி வந்தாலும் கூட.

    //எனக்கு பதிவு எழுத ரொம்ப பிடித்துள்ளது,//

    எனக்கும் எழுதப் பிடித்துள்ளது:)! இணையத்தில் எழுதலாம் எனும் வசதி வந்த புதிதில் முரசு ஃபாண்ட் மூலம் திண்ணை இணைய இதழில் தொடர்ந்து சிலகாலம் எழுதிவிட்டு ஃபாண்டில் ஏற்பட்ட ஒரு பிரச்சனையால் அனுப்புவதை நிறுத்தியபோது எழுதுவதும் முழுதாக நின்று போனது. வருடங்கள் பல கடந்து வலைப்பூ மறுபடி எழுத வைத்திருக்கிறது:)! அதிக எண்ணிக்கையில் இல்லாவிட்டாலும் கூட தொடர்ந்து எழுத முடிவது உற்சாகம் தருகிறது. அதைத் தொடர்வேன்!

    வாத்தியார் சுப்பையா அவர்கள் நான் வலையுலகம் வந்த புதிதில் என் பதிவொன்றில் ‘எழுத்து என்பது ஒரு தவம் போல. அதைத் தொடர்ந்து செய்து வாருங்கள் சகோதரி’ என அழகாகக் கூறியிருந்தார். அடிக்கடி அவர் வார்த்தைகளை நினைத்தபடி என் எண்ணங்களை எழுத்தில் கொண்டு வந்தபடி உள்ளேன்.

  6. பெப்சி உமாவின் இதே படத்தை இன்னும் எத்தனை பதிவுகளில் போடுவீர்கள் என்பதாகக் கலாய்க்கிறாரோ உங்கள் நண்பர்:)? என்னிடம் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் ‘மங்கை’ மாத இதழில் அட்டைப்படமாக வந்த அவரது படம் உள்ளதே:)! உபயோகமான குறிப்புகள் பல அடங்கியிருந்ததால் பத்திரப் படுத்தியது. அதில் இப்போதைவிடவும் குழந்தைத்தனமான முகத்துடன் காட்சியளிக்கிறார்.

  7. மிக நல்ல தேர்வுகள் கிரி. குறிப்பாக ரங்கராவ், தேவிகா, எஸ்.பி.பி.,சுஜாதா,வடிவேல், கோவி, அப்துல்லா, உண்மைத் தமிழன்..ஆஃபீஸ்கு டைம் ஆச்சு. :)). இதும் டெம்ப்ளேட் இல்லை.=))

  8. கும்மியடித்து வாழ்வாரே வாழ்வார் மற்றோரெல்லாம்
    பின்னூட்டம் எதிர்பார்த்தே நோவார்!

    கும்மிகுறள்
    அதிகாரம் 4
    குறள் 8

  9. //தமிழ்நெஞ்சம் said…
    செம்ம கலெக்சன் வாத்தியாரே //

    நன்றி தமிழ்நெஞ்சம்

    //இது நான் போடும் கமெண்டு. ஆனால் இது கும்மியா? டெம்ப்ளேட்டான்னு தெரியலையே..//

    :-))) அப்படி நினைத்து போடாமல் இருந்தால் சரி!

    ==========================================================

    // சின்ன அம்மிணி said…

    ஐய்யய்யோ சீரியல் எல்லாம் பாக்கறீங்களா :)//

    அந்த கொடுமையை தான் இங்கே கூறி உள்ளேனே! :-)))

    ==========================================================

    // கோவி.கண்ணன் said…

    இப்பவே எனக்கு கிலி பிடிக்குது !
    :)//

    கதை திரைக்கதை வசனம் பாடல்கள் ஒளிப்பதிவு இசை ..இதை பார்த்தால் உங்களுக்கு அடுத்த வாரிசா தோன்றுதா ஹா ஹா ஹா

    =========================================================

    // துளசி கோபால் said…

    அச்சு அசலா எங்கம்மா இவுங்களைப் போலவே இருப்பாங்க. என் அம்மாவின் புகைப்படம் ஒன்னுமே இல்லாததால் இவுங்களைப் பார்த்தாலே அம்மா நினைவு வந்துரும். //

    அடடா! ரொம்ப பாவமா இருக்கே! ஒரு படம் கூடவா இல்லை..எனக்கு பண்டரிபாய் கண்ணாம்பா (என் செல்லமே! :-D) போன்றோரை பார்த்தால் நம் அம்மாவை போலவே இருப்பார்கள்.. அதனால் எனக்கு இருவரையும் ரொம்ப பிடிக்கும்.

    =========================================================

    // Mahesh said…

    எப்பிடியாவது பெப்ஸி உமா படத்தைப் போடற்துக்கு ஒரு சாக்கு :))))//

    எப்படியாவது கண்டுபிடிச்சுடுறாங்கப்பா! :-))))

    ========================================================

    // எம்.எம்.அப்துல்லா said…

    ஒரு உண்மை தெரியுமா??//

    சொன்னால்தாண்ணே தெரியும் :-)))

    //அவர்தான் என் மானசீக குருநாதர்//

    இதை மைண்ட்ல வைத்துக்கறேன் 😉

    //நீ தொண்டைய அறுத்துக் குடுத்தீன்னா என்னய்யா ஆகுறது?” அப்படின்னார். :))//

    நல்லாத்தான் கேட்டு இருக்காரு! 😉

    //கிரி அண்ணே, கொஞ்ச நாளா ஃபோன்ல பேசலன்னவுடனே டக்குன்னு இப்படி ஒரு பிட்டை போட்டீங்களே!//

    உங்க கலைஞரை கூட தொடர்பு கொண்டுவிடலாம் போல உங்களை பிடிக்க முடியாது போல இருக்கு!

    //இன்னும் 22 நாள்ல உங்களைப் பார்க்க நேரில் வர்றேன் //

    வாங்க! வாங்க!

  10. // ராமலக்ஷ்மி said…

    //வாத்தியார் சுப்பையா அவர்கள் நான் வலையுலகம் வந்த புதிதில் என் பதிவொன்றில் ‘எழுத்து என்பது ஒரு தவம் போல. அதைத் தொடர்ந்து செய்து வாருங்கள் சகோதரி’ என அழகாகக் கூறியிருந்தார். அடிக்கடி அவர் வார்த்தைகளை நினைத்தபடி என் எண்ணங்களை எழுத்தில் கொண்டு வந்தபடி உள்ளேன்.//

    எனக்கு யாரும் இப்படி சொல்லவில்லை ஆனால் பின்பற்றி வருகிறேன் :-)))

    //பெப்சி உமாவின் இதே படத்தை இன்னும் எத்தனை பதிவுகளில் போடுவீர்கள் என்பதாகக் கலாய்க்கிறாரோ //

    ஹா ஹா ஹா இருக்கும்..படத்தை மாத்திட வேண்டியது தான்..

    //இப்போதைவிடவும் குழந்தைத்தனமான முகத்துடன் காட்சியளிக்கிறார்.//

    ஆஹா! ராமலக்ஷ்மி அதை அப்படியே கொஞ்சம் (பாதிய அனுப்பிடாதீங்க) அனுப்பினால் நன்றியுடையவனாக இருப்பேன்! 😉

    ====================================================

    // நிஜமா நல்லவன் said…

    இந்த பின்னூட்டத்துக்கு ரிப்பீட்டு போடலாம்னு தோணுது….ஆனா உங்க பதிவுல உள்ள ''டெம்ப்ளேட் பின்னூட்டம் போடுபவர்கள்''வந்து தடுக்குது:))//

    ஹா ஹா ஹா டெம்ப்ளேட் பாராட்டை தான் சொன்னேன் :-))

    ===================================================

    //வானம்பாடிகள் said…

    மிக நல்ல தேர்வுகள் கிரி. குறிப்பாக ரங்கராவ், தேவிகா, எஸ்.பி.பி.,சுஜாதா,வடிவேல், கோவி, அப்துல்லா, உண்மைத் தமிழன்.//

    நன்றி பாலா சார் 🙂

  11. //அனுஜன்யா said…

    //உங்களுக்குப் பிடித்த பதிவர்களைப் பற்றி எனக்கும் ஏறக்குறைய அதே கருத்துதான். Ramalakshmi is a wonderful human being. Thats the most important thing.//

    நான் இதை விட அவரை உயர்த்தி கூறி இருப்பேன், அது அவரை சங்கடத்தில் ஆழ்த்தி விடுமே என்று கூறவில்லை. நீங்கள் கூறுவதற்கு முற்றிலும் தகுதியானவர்.

    //வெளியுலகம் போலவே தான் வலையுலகும் – நல்லது, கெட்டது எல்லாமும் இருக்கும். ஆனால் சமயங்களில் ஆயாசம் வரத்தான் செய்கிறது கிரி. //

    ஆமாங்க எனக்கு வெறுப்பாக உள்ளது..அதனால் சமீபமாக எதிலும் தலையிடுவதில்லை. பதிவுலகத்திற்கு இவ்வளோ பொறாமை போட்டி சண்டைகள் ரொம்ப அதிகம்.. என்னமோ போங்க!

    //வாசிப்பது நிச்சயம் நல்ல விஷயம். எப்போது வேண்டுமானாலும் துவங்கலாம். அப்புறம் அதன் இன்பத்தை உணர்வீர்கள். Its only a request. //

    நன்றி அனுஜன்யா, சிறு வயதில் அதிகம் படித்தேன், தற்போது படிக்க ஆர்வம் குறைந்து விட்டது. நீங்கள் கூறியது போல முயற்சித்து பார்க்கிறேன்.

    ===================================================

    //☀நான் ஆதவன்☀ said…

    பதிவுலகம் ஜஸ்ட் ஒரு வடிகால்தான்கிறதுல தெளிவா இருக்கீங்க கிரி. //

    உண்மை தான் ஆதவன்..அதனால தான் நிம்மதியா இருக்கேன் 🙂

    //நிஜமா நல்லவன் பின்னூட்டம் கலக்கல் :-)//

    :-)))

    ====================================================

    //Mohan Kumar said…

    Good and detailed collection.//

    நன்றி மோகன்

    ====================================================

    //வால்பையன் said…

    கும்மியடித்து வாழ்வாரே வாழ்வார் மற்றோரெல்லாம்
    பின்னூட்டம் எதிர்பார்த்தே நோவார்!//

    :-))) தற்போது ஆரோக்கியமான விவாதங்களையே எதிர்பார்க்கிறேன்.

    ===================================================

    // மணிகண்டன் said…

    அய், இப்ப கிரிக்கு என்னையை பிடிக்காது :)//

    :-)))))

    //கிரி, உங்க சாய்ஸ் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு //

    நன்றி மணிகண்டன்

  12. பிடித்த, பிடிக்காத பதிவுகளில் இந்தப் பதிவு எனக்குப் பிடித்தது 🙂

  13. அடடா.. என் பதிவையும் ஒருத்தர் பிடிச்சிருக்குன்னு வெளிப்படையா சொல்லியிருக்காரு..!

    எம்மாம் தகுரியம் வேணும் இதுக்கு..?

    கிரியாரே.. நெசம்மாவே என்னை அழுக வைச்சுட்டீங்க..!

    நன்றிங்கோ சாமி..!

  14. எப்பிடியாவது பெப்ஸி உமா படத்தைப் போடற்துக்கு ஒரு சாக்கு :)))))))))))

  15. //அவரோட குரல் பெரிய பாதிப்படையாதது ஆச்சர்யமளிக்கிறது //

    என்னாது பெரிய பாதிப்பா??? அறவே பாதிப்பு இல்லை என்பதுதான் உண்மை.

    ஒரு உண்மை தெரியுமா?? அவர்தான் என் மானசீக குருநாதர். அவரை நேரில் சந்தித்தபோது உங்களுக்கு குரு தட்சணையாக நான் என்ன தரவேண்டும் என்று கேட்டேன். அதற்கு அவர் “ யோவ், ஏகலைவன் கட்டை விரல் போனாலும் உயிரோட இருக்க முடிஞ்சுச்சு. நீ தொண்டைய அறுத்துக் குடுத்தீன்னா என்னய்யா ஆகுறது?” அப்படின்னார். :))

  16. /சின்ன அம்மிணி said…
    //இப்போதைய) குயிலி ..யப்பா! சாமி எந்த சீரியல் ல வந்தாலும் அழுகை அழுகை அழுகை …சத்தியமா தாங்க முடியலை.//

    ஐய்யய்யோ சீரியல் எல்லாம் பாக்கறீங்களா :)/

    இந்த பின்னூட்டத்துக்கு ரிப்பீட்டு போடலாம்னு தோணுது….ஆனா உங்க பதிவுல உள்ள ''டெம்ப்ளேட் பின்னூட்டம் போடுபவர்கள்''வந்து தடுக்குது:))

  17. //அதிகம் தொடர்பு இல்லை என்றாலும்.

    //

    கிரி அண்ணே, கொஞ்ச நாளா ஃபோன்ல பேசலன்னவுடனே டக்குன்னு இப்படி ஒரு பிட்டை போட்டீங்களே!!

    விடுங்கண்ணே..இன்னும் 22 நாள்ல உங்களைப் பார்க்க நேரில் வர்றேன் 🙂

  18. நேர்மையான எண்ணங்கள். உங்களுக்குப் பிடித்த பதிவர்களைப் பற்றி எனக்கும் ஏறக்குறைய அதே கருத்துதான். Ramalakshmi is a wonderful human being. Thats the most important thing. அந்த லிஸ்டில் நான் இல்லாவிட்டாலும், பிடிக்காதவர்கள் பட்டியலில் இல்லாமல் இருந்தால் போதும். வெளியுலகம் போலவே தான் வலையுலகும் – நல்லது, கெட்டது எல்லாமும் இருக்கும். ஆனால் சமயங்களில் ஆயாசம் வரத்தான் செய்கிறது கிரி.

    மீதி எல்லாம் ஓகே. ஆனால், வாசிப்பது நிச்சயம் நல்ல விஷயம். எப்போது வேண்டுமானாலும் துவங்கலாம். அப்புறம் அதன் இன்பத்தை உணர்வீர்கள். Its only a request.

    அனுஜன்யா

  19. பெரும்பாலும் எல்லா படமும் இதுல ப்ளாக் & ஒயிட் -ல இருக்கே என்ன தல?? 🙂
    பதிவர்கள் குழுக்களாக மட்டும் செயல்படுவது வருத்தம் தரக்கூடியது தான். நானும் எந்த குழுவிலும் துண்டு போட்டு உட்காரக்கூடாது என்றே உறுதியாக இருக்கிறேன்.

  20. //விக்ரமன் படத்துல எப்போதும் வரும் டொய்ங் டொய்ங் இசையை மட்டும் சகிக்கவே முடியலை..இதை யாராவது அவர் கிட்ட சொல்லுங்களேன் ப்ளீஸ்!//

    வழி மொழிகிறேன்.

    இம்சை தாங்க முடியாது. நினைச்சாலே பீபீ எகுருது.

  21. //விக்ரமன் படத்துல எப்போதும் வரும் டொய்ங் டொய்ங் இசையை மட்டும் சகிக்கவே முடியலை..இதை யாராவது அவர் கிட்ட சொல்லுங்களேன் ப்ளீஸ்!

    டொய்ங் டொய்ங் வார்த்தை அற்புதம், சபாஷ், கீப்பிட்டப்புங்க..

  22. எனக்குப் பிடித்த நடிகர் ரங்காராவ் படத்தை இத்தனை அழகா போட்டதுக்கு ரொம்பத் தாங்க்ஸ்ங்ணா! அது சரி, கும்மி பின்னூட்டம், டெம்ப்ளேட் பாராட்டுக்கள்னா என்ன? பிளாகுக்கு நான் புதுசுங்கிறதால எனக்குத் தெரியலை!

  23. //விக்ரமன் படத்துல எப்போதும் வரும் டொய்ங் டொய்ங் இசையை மட்டும் சகிக்கவே முடியலை..இதை யாராவது அவர் கிட்ட சொல்லுங்களேன் ப்ளீஸ்!//

    ஹஹஹ.. அது என்னங்க டொய்ங், டொய்ங், அவருல்லா இனிமே படம் எடுக்கப்போறதில்ல…அதனால கவலைப்படாதீங்க…

    //இப்போதைய) குயிலி ..யப்பா! சாமி எந்த சீரியல் ல வந்தாலும் அழுகை அழுகை அழுகை …சத்தியமா தாங்க முடியலை.//

    அது ஏங்க குயிலை மட்டும் சொல்றீங்க… மெகா சீரியல் தாய்மார்கள்னு பொதுவா சொல்லியிருக்கலாம் எல்லாமே அழுகாச்சிதான்…

    ஆமா…அதென்ன இப்போதைய குயிலி… அப்ப அப்போதைய குயிலின்னா யாரு…… நிலா அதுவானத்துமேல… அதானே…
    ரொம்ப குறும்பு சார் உங்களுக்கு…

  24. ராமலக்ஷ்மி மேடம் பத்தி நீங்களும் அனுஜன்யா சார்(இவரும் ரொம்ப நல்லவர்னு நினைக்கறேன்) சொன்னதும் பிடிச்சிருக்கு.

  25. // ☼ வெயிலான் said…

    பிடித்த, பிடிக்காத பதிவுகளில் இந்தப் பதிவு எனக்குப் பிடித்தது :)//

    நன்றி வெயிலான் 🙂

    =====================================================

    // உண்மைத் தமிழன்(15270788164745573644) said…

    அடடா.. என் பதிவையும் ஒருத்தர் பிடிச்சிருக்குன்னு வெளிப்படையா சொல்லியிருக்காரு..!//

    அட! இதில் என்னங்க ஆச்சர்யம்.. 🙂

    =====================================================

    // ரோஸ்விக் said…

    பெரும்பாலும் எல்லா படமும் இதுல ப்ளாக் & ஒயிட் -ல இருக்கே என்ன தல?? :-)//

    கருப்பு வெள்ளை படத்தில் உள்ள அழகே தனிங்க! எனக்கு ரொம்ப பிடிக்கும் அதனாலே அந்த படங்களை வைத்தேன்

    //பதிவர்கள் குழுக்களாக மட்டும் செயல்படுவது வருத்தம் தரக்கூடியது தான். நானும் எந்த குழுவிலும் துண்டு போட்டு உட்காரக்கூடாது என்றே உறுதியாக இருக்கிறேன்//

    :-)) பார்ப்போம்!

    ======================================================

    // அஹோரி said…

    இம்சை தாங்க முடியாது. நினைச்சாலே பீபீ எகுருது//

    ஹா ஹா ஹா ஆமாம் ரொம்ப கொடுமை

    =====================================================

    முஹம்மத் சஜீர் வருகைக்கு நன்றி

    =====================================================

    //malar said…

    அப்போதைய இளையராஜா எனக்கும் பிடிக்கும்.//

    அந்த சமயத்தில் அவரை பிடிக்காதவர்களே இல்லை எனலாம்

    =====================================================

    //கிருபாநந்தினி said…

    எனக்குப் பிடித்த நடிகர் ரங்காராவ் படத்தை இத்தனை அழகா போட்டதுக்கு ரொம்பத் தாங்க்ஸ்ங்ணா! அது சரி, கும்மி பின்னூட்டம் டெம்ப்ளேட் பாராட்டுக்கள்னா என்ன?//

    கும்மி பற்றி நீங்களே விரைவில் தெரிந்து கொள்வீர்கள்..டெம்ப்ளேட் பாராட்டு என்றால் ..நீங்க எந்த மாதிரி இடுகை எழுதி இருந்தாலும் கலக்கல் சூப்பர் அருமை என்று உங்களுக்கே உங்க இடுகை மேல சந்தேகம் வர அளவிற்கு புகழ்ந்து தள்ளுவாங்க.. நீங்களே குழம்பிடுவீங்க.

  26. // அத்திவெட்டி ஜோதிபாரதி said…

    நாயகன் கிரியின் உள்குத்தை ரசித்தேன்!//

    ஹி ஹி கண்டுப்பிடிச்சுடுறாங்கப்பா! 😉

    =====================================================

    // நாஞ்சில் பிரதாப் said…

    ஹஹஹ.. அது என்னங்க டொய்ங், டொய்ங், அவருல்லா இனிமே படம் எடுக்கப்போறதில்ல…அதனால கவலைப்படாதீங்க..//

    என்னங்க அந்த பிரபலமான சகிக்க முடியாத சத்தத்தை இப்படி கேட்டுட்டீங்க….அப்படியா! இனி படம் எடுக்க போறதில்லையா! நல்ல இயக்குனர் தான் ரொம்ப எல்லோரும் நல்லவங்களா காட்டுவாரு!

    //அது ஏங்க குயிலை மட்டும் சொல்றீங்க… மெகா சீரியல் தாய்மார்கள்னு பொதுவா சொல்லியிருக்கலாம் எல்லாமே அழுகாச்சிதான்//

    இவங்க தான் அழுகைக்கே தலைவி! :-))

    //.அதென்ன இப்போதைய குயிலி… அப்ப அப்போதைய குயிலின்னா யாரு…… நிலா அதுவானத்துமேல… அதானே… //

    ஹி ஹி ஹி

    =========================================================

    // கபீஷ் said…

    ராமலக்ஷ்மி மேடம் பத்தி நீங்களும் அனுஜன்யா சார்(இவரும் ரொம்ப நல்லவர்னு நினைக்கறேன்) சொன்னதும் பிடிச்சிருக்கு//

    நன்றி கபீஷ் (ரொம்ப நாளா ஆளை காணோம்)

    ============================================================

    // jackiesekar said…

    ரொம்ப அழகா எழுதி இருக்கிங்க… கிரி..//

    நன்றி ஜாக்கி சேகர் 🙂

  27. கிரி அண்ணே! உங்களுக்குப் பிடிக்காத இயக்குனர் பேரரசு தான்னு முன்னமே நெனச்சேன். ஏற்கனவே உங்க ஜோக்கிரியில் இயக்குனர்கள் சந்திப்பு பற்றி காமெடியா ஒரு இடுகை படிச்சதா ஞாபகம். ஆனால் நடிகைகள் பட்டியல்ல சரோஜா தேவி முதல் குத்துரம்யா வரை….., எப்படிங்க இது சாத்தியம்???

  28. இந்த பின்னூட்டத்துடன் அண்ணன் தமிழ்நெஞ்சம் அவர்கள் மேலே கேட்ட கேள்வியையும் ஒருக்கா கேட்டுக்கிறேன்.

  29. // இப்படிக்கு நிஜாம்.., said…
    கிரி அண்ணே! உங்களுக்குப் பிடிக்காத இயக்குனர் பேரரசு தான்னு முன்னமே நெனச்சேன். ஏற்கனவே உங்க ஜோக்கிரியில் இயக்குனர்கள் சந்திப்பு பற்றி காமெடியா ஒரு இடுகை படிச்சதா ஞாபகம். //

    ஐயையோ! அது நான் இல்ல..ஜோக்கிரி உரிமையாளர் நம் நண்பர் R.கோபி 🙂 கிரி என்கிற என் பெயர் மட்டுமே அதில் இருக்கு..அதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. அவரு கஷ்டப்பட்டு எழுதிட்டு இருக்காரு இதை படித்து டென்ஷன் ஆகிடபோறாரு! 🙂

    //நடிகைகள் பட்டியல்ல சரோஜா தேவி முதல் குத்துரம்யா வரை….., எப்படிங்க இது சாத்தியம்???//

    ஹி ஹி ஹி அதெல்லாம் இப்படி பொதுவில கேட்கக்கூடாது! 😉

    //இந்த பின்னூட்டத்துடன் அண்ணன் தமிழ்நெஞ்சம் அவர்கள் மேலே கேட்ட கேள்வியையும் ஒருக்கா கேட்டுக்கிறேன்.//

    அதற்க்குண்டான பதிலையும் திரும்ப சொல்லிக்கிறேன் 🙂

  30. //டெம்ப்ளேட் பின்னூட்டம் போடுபவர்கள், கும்மி அடிப்பதையே தொழிலாக வைத்து இருப்பவர்கள். //

    நான் இந்த விளையாட்டுக்கு வரலை

  31. நல்ல பகிர்வு கிரி.

    டெம்ப்ளேட் பின்னூட்டம் வர ஓட்டு போடும் முறை வந்தது கூட ஒரு காரணமாக இருக்ககூடும் என்று நான் சில சமயம் சிந்தித்தது உண்டு.

    ஆனால் சில சமயம், பதிவை படிக்கும் இடம் கூட ஒரு காரணமாகலாம்.

    நான் கூட மதிய உணவு இடைவேளையில் இலவச இணையதள பகுதியில் இருந்து பதிவுகளை படிக்கும் சமயம், சில டெம்ப்ளேட் பின்னூட்டம் போடுவேன் பின் மறந்து விட கூடாது என்ற காரணத்தில்.

  32. nandri giri, yennoda peraiyum sonnathuku

    romba nalla pathivu ungala pathi, ungaluku pudichathu, pudikathathu pathi therinjuka useful la irukum in tha pathivu. ungaluku kalyanam innum agama iruntha nichayam unga wife fa padika solli irukalam (ponnu pathu mudinchathum).. still unga kuzhanthai periyavanga anathum kattalam appa va pathi innum nalla therinchuka:)

  33. நசரேயன் said…
    நான் இந்த விளையாட்டுக்கு வரலை//

    அதெல்லாம் முடியாது வந்து தஹன் ஆகணும் 🙂

    ======================================================================

    // சிங்கக்குட்டி said…

    சில சமயம், பதிவை படிக்கும் இடம் கூட ஒரு காரணமாகலாம்.

    நான் கூட மதிய உணவு இடைவேளையில் இலவச இணையதள பகுதியில் இருந்து பதிவுகளை படிக்கும் சமயம், சில டெம்ப்ளேட் பின்னூட்டம் போடுவேன் பின் மறந்து விட கூடாது என்ற காரணத்தில்.//

    ஏங்க சிங்கக்குட்டி! மறந்து விடக்கூடாது என்பதற்காக டெம்ப்ளேட் பின்னூட்டம் தான் போடணுமா! அதற்க்கு நீங்கள் அவற்றை ரீடரில் வைத்துக்கொண்டு நேரம் கிடைக்கும் போது நியாயமான கருத்தை கூறலாமே! விருப்பம் இல்லை என்றால் கூறாமலே இருக்கலாமே! யாரும் நம்மை கட்டுப்படுத்த முடியாத போது.

    ======================================================================

    // Arun said…

    ungaluku kalyanam innum agama iruntha nichayam unga wife fa padika solli irukalam (ponnu pathu mudinchathum)//

    அது ரொம்ப கஷ்டம் ..ஒரு சில விசயங்களில் கிரி என்றால் இப்படித்தான் என்று தெளிவாக தெரிந்து கொள்ளலாம் அது எப்போதுமே மாறாது…ஆனால் ஒரு சில விசயங்களில் தலைவர் மாதிரி தான் என்றுமே புரிந்து கொள்ள முடியாது.

    //still unga kuzhanthai periyavanga anathum kattalam appa va pathi innum nalla therinchuka:)//

    அதற்குள்ள ஒரு சில விசயங்களில் கருத்து மாற்றங்கள் வந்து விடும் என்று நினைக்கிறேன் 🙂

  34. உங்களைப்பற்றி மேலும் தெரிந்துக்கொண்டதில் மகிழ்ச்சி

  35. r.v.saravanan says

    கிரி சார் பிடித்த பிடிக்காத விசயங்களை தெளிவாக
    எழுதியுள்ளிர்கள் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here