சிங்கப்பூர் என்றால் அனைவருக்கும் நினைவிற்கு வருவது சுத்தம், இங்கே இருப்பவர்களுக்கு உடன் நினைவு வருவது இவர்களுடைய ஆங்கிலம். Image Credit
சிங்ளிஷ்
அந்த அளவிற்கு இவர்களுடைய ஆங்கிலத்தை வைத்து பாடாய் படுத்துவார்கள். இவர்கள் பேசுவது இங்கிலீஷ் அல்ல சிங்ளிஷ்
சிங்கை வந்த புதிதில் நான் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல, நான் இருந்த இடம் தமிழர்களும் குறைவாக இருந்தனர் நம்ம ஊர் உணவு விடுதியும் எதுவுமில்லை.
இங்கே புட் கோர்ட் (Food Court) எனப்படும் பல உணவு விடுதிகள் ஒருங்கிணைந்த இடம் அதிகம் இருக்கும், விலையும் இங்கே தான் குறைவாக இருக்கும்.
பெரிய உணவு விடுதியில் சாபிட்டவுடன் பில்லை பார்த்தால் அப்போதே சாப்பிட்டது ஜீரணம் ஆகி விடும், அந்த அளவிற்கு விலை இருக்கும்.
வந்த புதிதில் புட் கோர்ட் சென்று என்ன கேட்பது என்றே தெரியவில்லை.
அங்கே அவர்கள் வைத்து இருக்கும் உணவின் படம் வைத்து இருப்பார்கள், அதைப் பார்த்தால் ஒன்று கூட நான் சாப்பிடுகிற மாதிரி தெரியவில்லை.
பிறகு எதையோ கைகாட்டி! எதையோ சாப்பிட்டு வந்தேன். ஒரு சில இடங்களில் இந்தப் பிரச்சனைக்கு ஒவ்வொரு படத்திற்கும் ஒரு எண் கொடுத்து இருப்பார்கள்.
எனவே நமக்கு பிடித்த உணவின் எண் கூறினால் கொடுத்து விடுவார்கள், நமக்கும் எளிதாக இருக்கும்.
சாப்பாட்டு பிரியர்கள்
சிங்கப்பூர் மக்கள் சாப்பாட்டு பிரியர்கள் தங்கள் சொத்தை சாப்பிட்டே அழித்து விடுவார்கள் என்று நினைக்கிறேன், அந்த அளவிற்கு எந்த உணவு விடுதி சென்றாலும் கூட்டமாக இருக்கும் எப்போதும்.
ஒரு சில வீடுகளில் சமைப்பதே இல்லை எப்போதும் உணவு விடுதி தான்.
இன்னொரு காரணம், சமைத்து சாப்பிடுவதை விட, Food Court களில் வாங்கிச் சாப்பிடுவது செலவு குறைவு.
எனவே, குடும்பமாக சாப்பிட்டுக்கொண்டு இருப்பார்கள்.
மெக்டொனால்ட்
சிங்கையில் மெக்டொனால்ட் மற்றும் KFC ரொம்ப பிரபலம், இங்கே பர்கர் மாதிரியான வகையில் பல ஐட்டங்கள் இருக்கும், எப்போதும் திருவிழா கூட்டம் போல இருக்கும், இளசுகள் கூட்டம் அதிகம்.
பெரும்பாலான கடைகள் 24 மணி நேரமும் இயங்கும்!!!
சரி இங்கே சென்று சாப்பிடலாம் என்று முடிவு செய்தேன், அங்கே உள்ள படத்தில் ஒன்றை காட்டி அதை கொடுக்கக் கூறிய போது, அங்கே இருந்த பெண் என்னென்னவோ கேள்வி எல்லாம் கேட்க ஒன்றுமே விளங்கவில்லை.
அப்புறம் நம்ம (படிக்காதவன்) தலைவர் தான் கை கொடுத்தார் ..எல்லாவற்றுக்கும் எஸ் எஸ் எஸ் என்று மண்டை ஆட்டினேன்.
ஹேவிங்கா
இதை எல்லாவற்றையும் விட “ஹேவிங்கா” “ஹேவிங்கா” என்று கேட்டார்கள்.
எனக்கு ஒன்றுமே புரியலை..என்ன இழவுடா இது! ஒண்ணுமே புரியமாட்டேங்குது என்று அதற்கும் ஒரு குத்து மதிப்பா தலையாட்டினேன்.
பிறகு பார்த்தால் நான் கேட்காத காஃபி கொடுத்து விட்டார்கள்.
சரி இதை வேண்டாம் என்று கூறினால் அதற்கு வேறு விளக்கம் கொடுக்கணும், கேட்கணும். எனக்கு பொறுமை இல்லாததால் வாங்கி கொண்டு வந்து விட்டேன்.
எச்சரிக்கை வாசகம்
அந்த காஃபி கொடுத்த கப்பில் சூடு அதிகம் இருக்கும் என்று எச்சரிக்கை வாசகம் இருந்தது.
ஆனால், வெளிப்பகுதியில் அப்படி ஒன்றும் சூடு தெரியவில்லை என்பதால் சரி! சும்மா போட்டு இருக்கிறார்கள் என்று நினைத்து வாயில் வைத்து வேகமாக உறிஞ்சி விட்டேன்.
வாயே வெந்து போச்சு.. அந்த அளவிற்கு சூடு. காஃபிக்கு பதிலா இரும்பை காய்ச்சி ஊத்திட்டானுகளா! என்று கடுப்பாகி விட்டது.
இவ்வளோ சூடா யார் குடிக்கறாங்கன்னு தெரியல.
கடைசில அதை குடிக்காமலே கீழே ஊத்திட்டேன். அது ஆற வேண்டும் என்றால் அரை மணி நேரம் ஆகும் போல இருக்கு அந்த அளவிற்கு சூடாக உள்ளது.
சோளம்
ஒருமுறை சோளம் வாங்கலாம் என்று corn (ஒரு கப்பில் உதிர்த்து தருவார்கள், அதில் நாம் பெப்பர், உப்பு கலந்து சாப்பிடலாம்) என்று கேட்டால் cone ice cream கொடுக்கிறார்கள்!
அட! ஆண்டவா என்ன இது சோதனை என்று மறுபடியும் விளங்க வைக்க எனக்கு திராணி இல்லாததால் சரி என்று வாங்கி வந்து விட்டேன்.
பல நேரங்களில் அவர்களுக்கு விளங்க வைக்க முடியாததால் என் விருப்பம் சென்று, அவர்கள் கொடுப்பதை சாப்பிட வேண்டிய நிலைமைக்கு வந்து விட்டேன்.
Take away
ஒரு நாள் வீட்டிற்கு எடுத்துச்செல்லலாம் என்று பார்சல் என்று கூறினால் முழிக்கிறார்கள். என்னடா இது! நாம கேட்கக் கூடாதது எதையாவது கேட்டு விட்டோமா! என்று சந்தேகம் வந்து விட்டது.
பிறகு அந்தப் பெண்ணே ஹேவிங்கா (ஆஹா மறுபடியுமா!) டேக் அவே வா என்று கேட்கச் சரி பார்சலை தான் இவங்க டேக் அவே (Take away) என்று கூறுகிறார்கள் என்று புரிந்து டேக் அவே கூறி ஒரு வழியாக வாங்கி வந்தேன்.
ஆனாலும் இந்த “ஹேவிங்கா” என்று கேட்பதற்கு மட்டும் எனக்கு அர்த்தம் புரியவில்லை.
பின்னர் ஒருநாள் நண்பன் ஒருவனிடம் பேசும் போது கூறினான் அது Having here என்று அர்த்தமாம்.
அட வெண்ணை வெட்டிகளா! இதைத்தான் இத்தனை நாளா கேட்டீங்களா! என்று வெறுத்து விட்டது.
போங்கடா! நீங்களும் உங்கள் இத்து போன ஆங்கிலமும் என்று கடுப்பாகி விட்டது.
இன்றும் கூட மெக்டொனால்ட் சென்றால் ஒரு பெரிய போராட்டமே நடக்கும், போகும் போதே பல ஒத்திகை!! எல்லாம் பார்த்துட்டு தான் போவேன்.
சிறு நஷ்டம்
இவர்களுக்கு புரியாததாலே எனக்கு அடிக்கடி சிறு நஷ்டம் ஏற்படும், தேவையில்லாததை எல்லாம் வாங்கி.
எனக்கு பல நேரங்களில் மெக்டொனால்ட் தான் கை கொடுத்தது என்பதை மறுப்பதற்கில்லை, நான் இதன் தீவிர ரசிகன். இங்கு விலை அதிகம் என்றாலும் இதன் சுவை எனக்கு ரொம்ப பிடிக்கும்.
இங்கே உள்ள MC Wings மற்றும் Happy Meal என்னோட விருப்பத்தேர்வு.
இங்கே மாணவர்கள் பகல் இரவு என்று எந்நேரமும் படித்துக்கொண்டு இருப்பார்கள் (கடையில்) அவர்கள் எதுவும் கூறுவதில்லை, இது எனக்கு வியப்பான ஒரு விஷயம்.
சிங்கை மக்கள் முழுதாகவே பேசமாட்டார்கள் பாதியை அப்படியே விழுங்கி விடுவார்கள்.
நாமே ஒரு குத்து மதிப்பாக இது தான் கூறி இருப்பார்கள் என்று முடிவு செய்து கொள்ள வேண்டும்.
கொஞ்ச மாதம் சென்ற பிறகு அனுபவம் கிடைத்து விடும், இவர்களுடைய பேச்சு ஸ்டைல் நமக்கு பிடிபடும்!!!
Short English
இவர்களிடம் எதையும் சுருக்கமாக கூறினால் தான் புரிந்து கொள்வார்கள். எடுத்துக்காட்டாக I don’t want coffee என்று கூறக்கூடாது, No coffee என்று கூறவேண்டும்.
without drink என்று இல்லாமல் no drink என்றால் தான் புரிந்து கொள்வார்கள், இதை எல்லாம் நான் விளங்குவதற்குள் எனக்கு தெரிந்த ஆங்கிலமும் மறக்கடித்து விடுவார்கள் போல இருந்தது.
ஆனா கடைகளில் (எந்தக் கடையாக இருந்தாலும்) இவர்களின் சுறுசுறுப்பு நம்மைப் பிரம்மிக்க வைக்கும் அதே போல அவர்கள் நடந்து கொள்ளும் முறையும் மிகவும் நாகரீகமாக இருக்கும்.
எப்போதும் சிரித்த முகமாக இருப்பார்கள். ஏதேனும் தவறு நேர்ந்தால் உடனடியாக மன்னிப்பு கேட்டு விடுவார்கள்.
நாம் அதிக பணம் கொடுத்தாலும் முகம் சுளிக்காமல் மறு பேச்சு இல்லாமல் மீதி சில்லறை கொடுப்பார்கள், சரியான சில்லறை கேட்டு இம்சிக்க மாட்டார்கள்.
கிளி
ஒரு இடத்தில் ஒரு பெண் என் பெயரை கேட்க நான் கிரி என்று கூற, அந்தப்பெண் “கிளி”யா என்று கேட்க ..
என்னடா இது! இருக்கிறதே இரண்டு எழுத்து உச்சரிப்பு இதில் என்ன குழப்பம்! என்று கிரி கிரி ரி ரி ரி என்று அழுத்த்த்த்தி “ஏக் காவ் மே ஏக் கிசான் ரகு தாத்தா ” ரேஞ்சுக்கு கூற…
ம்ம்ம் கிளி… என்று மறுபடியும் கஷ்டப்பட்டு! கூறி அந்தப் பெண் என் முகத்தைப் பார்க்க!…. எனக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது.
பஞ்சாயத்துல யார் என்ன சொன்னாலும் வடிவேல் அதையே திருப்பிக் கூறுவார் அங்கு இருக்கிற நாட்டாமை சங்கிலி முருகன்..
ஏன்யா! நான் சரியா தானே பேசுறேன்.. என்று கேட்டு மறுபடியும் நீ கையப் பிடிச்சு இழுத்தியா! என்று கேட்பார்.
அதற்கு வடிவேலும் என்ன கையப் பிடிச்சு இழுத்தியா! என்று அவரையே திருப்பிக் கேட்க, சங்கிலி முருகன் வெறி ஆகி விடுவார் அது மாதிரி ஆகி விட்டேன்.
சரியா தான் பேசுகிறேனா! என்று எனக்கு என் மேலேயே சந்தேகம் வந்து விட்டது.
அந்தப் பெண்ணுக்குச் சுட்டுபோட்டாலும் “ரி” வரலை பிறகு அந்தப்பெண்ணை… How do you pronounce “Richie”? என்று கேட்க
அதற்கு அது “ழிச்சி”!! என்று கூற ம்ஹீம்! இது தேறுகிற ஆளு இல்லை என்று நடைய கட்டிவிட்டேன், பேசியது ஒரு சூப்பர் ஃபிகர் என்ற திருப்தியோடு 😉.
கொசுறு 1
சிங்கையில் அனைவரும் நினைப்பதை போலக் குப்பையே போட மாட்டார்கள் என்று நினைக்க வேண்டாம்.
இங்கேயும் குப்பை போடுவார்கள் ஒரு சில இடங்களில், ஆனால் குப்பை போட்டாலும் தொடர்ந்து சுத்தம் செய்து கொண்டே இருப்பார்கள்.
நமக்கே.. யோவ்! உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா! என்று நினைக்க தோன்றும்.
இங்கே நகரை சுத்தமாக வைத்துக்கொள்ளும் பழக்கத்தை மக்களிடையே இன்னும்! பிரபலப்படுத்த ATM இயந்திரம் மாதிரி ஒன்று வைக்க போகிறார்கள்.
இதில் நமது காலி டின்கள் பிளாஸ்டிக் பாட்டில்கள் இவற்றை இதில் போட்டால் அதில் இருந்து நமக்கு ஒரு சீட்டு கிடைக்கும் அதில் குலுக்கல் முறையில் S$30000 பரிசு தர முடிவு செய்து இருக்கிறார்கள்.
எப்படி எல்லாம் ஊக்குவிக்கிறார்கள் பாருங்கள்.
இந்த முறை ஏற்கனவே அமெரிக்காவில் இருக்கிறதாம் அதை இங்கே தற்போது செயல்படுத்த போகிறார்கள்.
இவர்கள் பல விசயங்களை அமெரிக்காவை பார்த்து தான் எடுத்துக்கொள்கிறார்கள் ஆனால் அதை திறம்பட செய்கிறார்கள்.
இவை அனைத்திற்கும் மூல காரணம் தலைமை சரியாக உள்ளது. தலைவன் சரியாக இருந்தால் அனைத்தும் சரியாக இருக்கும்.
கொசுறு 2
சிங்கப்பூர்ல வருடாவருடம் ஒரு போட்டி நடக்கும் அது என்னன்னா!
விலை உயர்ந்த கார் ஒன்றை நிறுத்தி அதில் போட்டியில் பங்கு கொள்பவர்கள் கையை வைக்க வேண்டும்.
யார் அதிக நேரம் எடுக்காமல் வைத்து இருக்கிறார்களோ அவர்களுக்கு அந்த கார் சொந்தம், இந்த முறை காரின் மதிப்பு S$ 81,000 (*33 INR).

கடந்த முறை போட்டி கடுமையாக இருந்தது 81 மணி நேரம் மற்றும் 32 நிமிடங்கள் நின்று முதல் முறையாக ஒரு பெண் வெற்றி பெற்றார். சும்மா அதிருதில்ல!
இந்த முறை 77 மணி நேரம் 43 நிமிடங்கள் நின்று சிங்கப்பூரை சேர்ந்த Mohd Anuar என்பவர் வெற்றி பெற்றார்.
இதில் ஒரு சோகமான விஷயம் இவருடன் கடைசியில் போட்டியில் இருந்த Santozkumar என்பவர் கொஞ்சம் கையை நகர்த்தி விட்டார் என்று அவரை தோற்றதாக அறிவித்து விட்டார்கள்.
அவர் அதெல்லாம் முடியாது….நான் போக மாட்டேன் என்று கூறியும்.. தம்பி! நாங்க வேலைய முடிக்கணும் உனக்கு வேற வழி இல்ல என்று கூறி விட்டார்கள்.
மழை வெயில் எதா இருந்தாலும் நகரக்கூடாது, அப்படியே நிற்கனும். இதில் இயற்கை உபாதைகளுக்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்படும்.
இந்த போட்டியில் கலந்து கொள்ள இந்தோனேசியா சீனா, தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளில் இருந்தெல்லாம் வருகிறார்கள்.
பின்ன பரிசு பணம் கொஞ்ச நஞ்சமா என்ன!
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
மெய்ன் மேட்டர், கொசுறு மேட்டர்ஸ் எல்லாம் சூப்பர்! 🙂
எம்.சி-யோட உணவு அப்படி பிடிக்குமா உங்களுக்கு??? இருங்க.. இருங்க.. உங்களுக்காகவே ஒரு படம் இருக்கு!
அதை.. கூடிய சீக்கிரம்.. (நவம்பர் முடியட்டும்) போட்டுடுறேன்.! 🙂
அது Having hereஆ? நானும் முதல்முறை சிங்கையில் கேட்டபோது புரியவில்லை. ஆனால் அந்தப் பெண்ணை விடாமல் நோண்டி "வாட் டூ யூ மீன்?" என்று வடிவேல் இங்கிலீஷில் அவளை ஒரு பேப்பரில் எழுத வைத்து விட்டேன்..
ஆஹா ஆஹா கிரி ஆப்பு வாங்கின விசயமெல்லாம் இங்கிட்டுதான் இருக்கு.
🙂
சுவையான விஷயங்கள். நானும் உங்களைப் போல பட்டு அனுபவித்து விட்டு, கடைசியாக விலை மெனு பட்டியல் நம்பரை சொல்லுவேன். வடிவேலு ஸ்டைலில் "why blood?… same blooD.."….இங்குள்ள ( Aussie & NZ ")மக்கள் வட்டார வழக்கு ஆங்கிலம் பேசுகிறார்கள்.UK வை பொறுத்தவரை 4 விதமான வட்டார வழக்கு ஆங்கிலம் பேசுகிறார்கள். No way to escape!!!
ரசிச்சி படிக்க முடிந்தது. அருமையா எழுதுறீங்க.!
சிங்கப்பூர் இங்கிலீஷ் இவ்வளவு டெர்ரரா கிரி=))
சிங்கப்பூர் ஆக்கிலம் உங்களுக்கு நிறைய பல்பு கொடுத்திருக்கும் போல!
//பெரிய உணவு விடுதியில் சாபிட்டவுடன் பில்லை பார்த்தால் அப்போதே சாப்பிட்டது ஜீரணம் ஆகி விடும், அந்த அளவிற்கு விலை இருக்கும்.
//
ஒரு திருத்தம்,
பெரிய உணவு விடுதியில் சாபிட்டவுடன் பில்லை பார்த்தால் அப்போதே சாப்பிட்டது அஜீரணம் ஆகி விடும், அந்த அளவிற்கு விலை இருக்கும்.
//ஹேவிங்கா//
நல்லாயிருக்கிறது உங்கள் அனுபவங்கள்:)))!
// தலைவன் சரியாக இருந்தால் அனைத்தும் சரியாக இருக்கும்.//
மிகச் சரி!
//ஈ ரா said…
என்னாதலைவா, ஒரு கிளி தான கிளின்னு கூப்டுச்சு என்ஜாய் பண்ணுங்க….(விஷயம் தெரிஞ்சா உங்க வீட்ல உங்களுக்கு கிலி பிடிச்சுடும் ஜாக்கிரதை )//
ஒரு கிளிக்கே மண்டை காய்ந்து விட்டது… எங்க வீட்டுல அந்த பிரச்சனை இல்லை 😉
//அது "என்ன கையப் பிடிச்சு இழுத்தியா?" என்று நினைக்கிறேன்..//
சரி தான் ..மாற்றி விடுகிறேன் 🙂
//உங்களுக்கு எப்பமாச்சும் கிடைச்சு இருக்கா?//
இனி தான் ஆரம்பிக்க போறாங்க..
============================================================
// ஹாலிவுட் பாலா said…
மெய்ன் மேட்டர், கொசுறு மேட்டர்ஸ் எல்லாம் சூப்பர்! :)//
நன்றி பாலா
//எம்.சி-யோட உணவு அப்படி பிடிக்குமா உங்களுக்கு??? இருங்க.. இருங்க.. உங்களுக்காகவே ஒரு படம் இருக்கு!//
அப்படியா! எழுதுங்க எழுதுங்க!
cast away FedEx மாதிரியா! 😉
============================================================
// நாகா said…
அது Having hereஆ? நானும் முதல்முறை சிங்கையில் கேட்டபோது புரியவில்லை. ஆனால் அந்தப் பெண்ணை விடாமல் நோண்டி "வாட் டூ யூ மீன்?" என்று வடிவேல் இங்கிலீஷில் அவளை ஒரு பேப்பரில் எழுத வைத்து விட்டேன்..//
அவங்க எழுதறது ஒரு வெங்காயமும் புரியாதே! கோழி கிறுக்குன மாதிரி இருக்கும்..அதற்க்கு அவங்க பேசுவதே பரவாயில்ல! :-)))
===========================================================
// கோவி.கண்ணன் said…
ஆஹா ஆஹா கிரி ஆப்பு வாங்கின விசயமெல்லாம் இங்கிட்டுதான் இருக்கு.//
ஹி ஹி ஹி ஒரு சிலதை வெளியே சொல்ல முடியலை! 😉
//அப்போதே சாப்பிட்டது அஜீரணம் ஆகி விடும்//
ஹா ஹா ஹா
============================================================
// எம்.எம்.அப்துல்லா said…
ஷேக்ஸ்பியரே வந்தாலும் அவ என்ன பதில் சொன்னாங்குறத கண்டே புடிக்கமுடியாது :))//
இங்கே இருக்கிற எங்களுக்கு ததிங்கனத்தோம் போடுது! :-)))) உங்களுக்கு சத்தியமா புரியாது! 🙂
=============================================================
// மானஸ்தன் said…
சுவையான விஷயங்கள். நானும் உங்களைப் போல பட்டு அனுபவித்து விட்டு, கடைசியாக விலை மெனு பட்டியல் நம்பரை சொல்லுவேன். வடிவேலு ஸ்டைலில் "why blood?… same blooD.."….இங்குள்ள ( Aussie & NZ ")மக்கள் வட்டார வழக்கு ஆங்கிலம் பேசுகிறார்கள்.UK வை பொறுத்தவரை 4 விதமான வட்டார வழக்கு ஆங்கிலம் பேசுகிறார்கள். No way to escape!!!//
அப்ப எனக்கு கம்பெனி நிறைய இருக்குன்னு சொல்லுங்க :-)))
==============================================================
// ஜெகதீசன் said…
திருத்தம்:
பெரும்பாலான வீடுகளில் சமைப்பதே இல்லை எப்போதும் உணவு விடுதி தான்.
:)))//
ஹி ஹி ஹி ஒரு சில வீட்டுல வாடகைக்கு போனா சமைக்க கூடாதாம்! என்னையா! விசயம்னு கேட்டால் சமையல் அறை அழுக்காகி விடுமாம்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
===============================================================
// ஜோ/Joe said…
// பெரிய உணவு விடுதியில் சாபிட்டவுடன் பில்லை பார்த்தால் அப்போதே சாப்பிட்டது ஜீரணம் ஆகி விடும்//
உடம்புக்கு நல்லது தானே!//
:-))))
//சீன பசங்க கூட படிப்பதால் என் பையனே 'ர' -வை 'ல' -ன்னு தான் சொல்லுறான் //
அப்ப உங்க வீட்டுக்கு வந்தா என் பெயரை உங்க பையன் ஒரு வழி ஆக்க போறான்னு சொல்லுங்க! :-)))
// ஷண்முகப்ரியன் said…
சிஙப்பூரின் நேரடி ஒளிபரப்பைப் போல இருந்தது பதிவு.
நகைச்சுவையோடு கலந்த தகவல்கள்.//
உங்களின் மனம் திறந்த பாராட்டிற்கு நன்றி சார் 🙂
=======================================================
// லெமூரியன் said…
ரசிச்சி படிக்க முடிந்தது. அருமையா எழுதுறீங்க.!//
நன்றி லெமூரியன் 🙂
========================================================
// வானம்பாடிகள் said…
சிங்கப்பூர் இங்கிலீஷ் இவ்வளவு டெர்ரரா கிரி=))//
சார் இதெல்லாம் சும்மா சாம்பிள் தான்.. ரொம்ப கொடுமை சார் இங்கே!
========================================================
// வால்பையன் said…
சிங்கப்பூர் ஆக்கிலம் உங்களுக்கு நிறைய பல்பு கொடுத்திருக்கும் போல!//
ஏகப்பட்டது! பட்ட பாடு கொஞ்சநஞ்சமல்ல!
========================================================
// ராமலக்ஷ்மி said…
நல்லாயிருக்கிறது உங்கள் அனுபவங்கள்:)))!//
நன்றி ராமலக்ஷ்மி
என்னாதலைவா, ஒரு கிளி தான கிளின்னு கூப்டுச்சு என்ஜாய் பண்ணுங்க….(விஷயம் தெரிஞ்சா உங்க வீட்ல உங்களுக்கு கிலி பிடிச்சுடும் ஜாக்கிரதை )
//ஏன்யா! நான் சரியா தானே பேசுறேன்.. என்று கேட்டு மறுபடியும் நீ அதை திருடுனியா என்று கேட்பார் அதற்க்கு வடிவேலும் என்ன நீ திருடுனியா! என்று அவரையே திருப்பி கேட்க.. சங்கிலி முருகன் வெறி ஆகி விடுவார்//
அது "என்ன கையப் பிடிச்சு இழுத்தியா?" என்று நினைக்கிறேன்…
//இதில் நமது காலி டின்கள் பிளாஸ்டிக் பாட்டில்கள் இவற்றை இதில் போட்டால் அதில் இருந்து நமக்கு ஒரு சீட்டு கிடைக்கும்//
உங்களுக்கு எப்பமாச்சும் கிடைச்சு இருக்கா?
நல்ல பதிவு கிரி…
நான் சீட்டை கேட்கலை – பரிசைக் கேட்டேன்..
சிங்கை வந்திருந்தப்போ ஹிப்டாப் வண்டியில ஏறி ஒரு ரவுண்டடிக்கலாம்னு முடிவு பண்ணினேன். எங்க வீட்டுக்கிட்ட அந்த பஸ்சுக்கு எங்க ஸ்டாப் இருக்குன்னு கேக்குறதுக்காக நம்ப மகேஷ் அண்ணன் குடுத்த நம்பர்ல போன் பண்ணுனேன். ங்கொய்யால…ஷேக்ஸ்பியரே வந்தாலும் அவ என்ன பதில் சொன்னாங்குறத கண்டே புடிக்கமுடியாது :))
//
ஒரு சில வீடுகளில் சமைப்பதே இல்லை எப்போதும் உணவு விடுதி தான்.
//
திருத்தம்:
பெரும்பாலான வீடுகளில் சமைப்பதே இல்லை எப்போதும் உணவு விடுதி தான்.
:)))
// பெரிய உணவு விடுதியில் சாபிட்டவுடன் பில்லை பார்த்தால் அப்போதே சாப்பிட்டது ஜீரணம் ஆகி விடும்//
உடம்புக்கு நல்லது தானே!
//அங்கே உள்ள படத்தில் ஒன்றை காட்டி அதை கொடுக்க கூறிய போது..அங்கே இருந்த பெண் என்னென்னவோ கேள்வி எல்லாம் கேட்க ஒன்றுமே விளங்கவில்லை. அப்புறம் நம்ம (படிக்காதவன்) தலைவர் தான் கை கொடுத்தார் ..எல்லாவற்றுக்கும் எஸ் எஸ் எஸ் என்று மண்டை ஆட்டினேன்.//
:)))))))))))))
//ஆனாலும் இந்த "ஹேவிங்கா" என்று கேட்பதற்கு மட்டும் எனக்கு அர்த்தம் புரியவில்லை.//
:)) 'Having here' ..அதாவது 'இங்கேயே சாப்பிடுவதற்கா' -ன்னு கேக்குறாங்களாம்.
//கிரி ரிரி//
🙂 சீன மொழியில் ர,ரி -ல்லாம் இல்லை போலிருக்கு ..அவங்களுக்கு இது வராது ..சீன பசங்க கூட படிப்பதால் என் பையனே 'ர' -வை 'ல' -ன்னு தான் சொல்லுறான் ..என்ன கொடுமை இது 🙂
சிஙப்பூரின் நேரடி ஒளிபரப்பைப் போல இருந்தது பதிவு.
நகைச்சுவையோடு கலந்த தகவல்கள்.
நன்றி,கிரி.
நீங்கள் சொன்னது ஒன்று கூட பொய் இல்லை. அத்தனையும் உண்மை. ஆனால் அங்குள்ள பங்களாதேசிகளின் பரதேசித்தனமான ஆங்கிலத்தை கேட்கும் வாய்ப்பு உங்களுக்கு கிட்ட வில்லை என்று நிணைக்கின்றேன். இவர்கள் பராவாயில்லை.
nice post sir
தங்கள் அனுபவம் வாசிக்க சுவையாக இருந்தது. ஆனாலும் நீங்கள் அதிகம் இந்த மக்டொனால்ட் வகைசாப்பாடுகள் சாப்பிடிவதைத் தவிர்ப்பது நலம் தரும்.
//அப்ப உங்க வீட்டுக்கு வந்தா என் பெயரை உங்க பையன் ஒரு வழி ஆக்க போறான்னு சொல்லுங்க! :-)))//அப்பா ! கிலி மாமா வந்திலுக்காலு.
கிரி கலக்கல் பதிவு. சரியான காமெடி. நானும் வந்த புதிதில் ஆடு திருடின கள்ளன் மாதிரி முழித்தேன்.கடைசி சில கேரக்டேர்களை முழுங்கி விடுவார்கள். என் காதில் எதுவும் பிரச்சனையோ எனக்கூட நினைக்க தோன்றியது. போக போக ஓரளவிற்கு பழகிவிட்டது. – பயபுள்ள.
சுவாரஸ்யமா இருந்தது அண்ணே.//S$ 81,000 (*33 INR)//என்னன்னு தெரியல… இதப் பாத்ததுமே டக்குன்னு புரியவே இல்ல… கடைசில கண்டுபிடிச்சிட்டோம்ல…
விலை உயர்ந்த கார் ஒன்றை நிறுத்தி அதில் போட்டியில் பங்கு கொள்பவர்கள் கையை வைக்க வேண்டும் யார் அதிக நேரம் எடுக்காமல் வைத்து இருக்கிறார்களோ அவர்களுக்கு அந்த கார் சொந்தம்
—— சூப்பர் போட்டி கிரி. அடுத்த வருடம் நீங்களும் முயற்சி செய்யலாமே
கொல காமெடி ….அட்டகாசம் ..நீங்கள் ஏன் படம் எடுக்க கூடாது….
மொக்க ஆக்டர் நடிச்சா கூட படம் பிச்சிட்டு போகும் ..( நோ உள்குத்து ..மெய்யாலுமே தான் சொல்றேன்…நம்மளோட ஹார்ட் ப்யூர் கோல்ட் )
// பேசியது ஒரு சூப்பர் ஃபிகர் என்ற திருப்தியோடு 😉
//
போட்டோ போட்டா நல்லா இருக்கும் 🙂
//இங்கேயும் குப்பை போடுவார்கள் ஒரு சில இடங்களில்//
குப்பை தொட்டியில் தானே…நம்மூரில் அதை தவிர மற்ற இடங்களில் சரியாக போடுவார்கள் குப்பையை
//கடந்த முறை போட்டி கடுமையாக இருந்தது 81 மணி நேரம் மற்றும் 32 நிமிடங்கள் நின்று முதல் முறையாக ஒரு பெண் வெற்றி பெற்றார். சும்மா அதிருதில்ல!//
முதலில் படிக்கும் போது 81 மணி நேரம் கண்ணுக்கு தெரியவில்லை…வெறும் 32 நிமிடம் தான என்று நினைத்து ,…கொய்யால போட்றா சிங்கப்பூருக்கு டிக்கெட் என்று முடிவு செய்தால் ….அப்பதான் 81 மணிநேரம் கண்ணுக்கு தெரியுது …சரி காசு குடுத்து வாங்கிக்கலாம்னு விட்டுட்டேன் 🙂
தலைவர் படத்த ipod ல பாத்துட்டே நிக்கலாமா…அப்டின்னா நான் தயார்…கேட்டு சொல்லுங்க…அடுத்த முறை வருகிறேன்…
//சூப்பர் போட்டி கிரி. அடுத்த வருடம் நீங்களும் முயற்சி செய்யலாமே//
எந்திரன் பாக்க நம்ம ஊருக்கு கிரி விமானத்தில் வர மாட்டார்…தான் பரிசாக வாங்கிய காரில் தான் வருவார். 🙂
ஹி ஹி… கிரி இங்க இருக்குற சைனீஸ் கம்பெனிகள்ல மீட்டிங் போகும் போது அவங்க பேசுற இங்கிலீசும் இப்படி தான் ஒரு எழவும் புரியாது. ஆனா அவங்க நம்மல மாதிரி கவலைபடுறது கிடையாது. எப்பவும் போல சுறுசுறுப்பா தான் இருக்காங்க 🙂
நல்ல பதிவு கிரி. என்னால அந்த புட் கேர்ட் உள்ளகூட போக முடியவில்லை. வாசம் குடலைப் புரட்டியது. நான் எப்பவும் லிட்டில் இந்தியாவில் சாந்திவிலாஸ் சைவ உணவகம் தான். நன்றி.
//Happy Meal // இது சிறுவர்கள் சாப்பாட்டு அண்ணாச்சி… :-))
Migavum Arumaiyana Valaippoo
// ஜோதிஜி. தேவியர் இல்லம். said…
அங்குள்ள பங்களாதேசிகளின் பரதேசித்தனமான ஆங்கிலத்தை கேட்கும் வாய்ப்பு உங்களுக்கு கிட்ட வில்லை என்று நிணைக்கின்றேன். //
ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கீங்க போல 😉 நானும் கேட்டு இருக்கிறேன்.. ரொம்ப கொடுமை தான்.
===========================================================
மகா வருகைக்கு நன்றி
===========================================================
// Senthilkumar Manavalan said…
சூப்பர் போட்டி கிரி. அடுத்த வருடம் நீங்களும் முயற்சி செய்யலாமே//
எனக்கு இதுல பொறுமை இல்லை. அதுவுமில்லாம இது ரொம்ப குஷ்டமப்பா! 🙂
============================================================
// யோகன் பாரிஸ்(Johan-Paris) said…
தங்கள் அனுபவம் வாசிக்க சுவையாக இருந்தது. //
நன்றி யோகன்.
//நீங்கள் அதிகம் இந்த மக்டொனால்ட் வகை
சாப்பாடுகள் சாப்பிடிவதைத் தவிர்ப்பது நலம் தரும்.//
உங்கள் அறிவுரைக்கு நன்றி..தற்போது எங்கள் வீட்டில் யாரும் இல்லாததால் இங்கே சென்று கொண்டுள்ளேன்..இல்லை என்றால் அங்கே போக மாட்டேன் 🙂
============================================================
// Srinivas said…
கொல காமெடி ….அட்டகாசம் ..நீங்கள் ஏன் படம் எடுக்க கூடாது….
மொக்க ஆக்டர் நடிச்சா கூட படம் பிச்சிட்டு போகும் //
திரை அரங்கை விட்டா! 🙂
//போட்டோ போட்டா நல்லா இருக்கும் :)//
அதுக்கு என்னங்க எந்த சங்கி மங்கி போட்டோ பார்த்தாலும் ஒரே மாதிரி தான் இருப்பாங்க.. என்ன! நான் பார்த்த ஃபிகர் கொஞ்சமா புஷ்டியா இருந்தது ஹி ஹி 😉
//முதலில் படிக்கும் போது 81 மணி நேரம் கண்ணுக்கு தெரியவில்லை…வெறும் 32 நிமிடம் தான என்று நினைத்து ,..//
ம்ம்ம் உஷாரா தான் இருக்கீங்க!
//தலைவர் படத்த ipod ல பாத்துட்டே நிக்கலாமா…அப்டின்னா நான் தயார்…கேட்டு சொல்லுங்க…அடுத்த முறை வருகிறேன்//
ஹா ஹா ஹா அது தெரியல! 😉
//எந்திரன் பாக்க நம்ம ஊருக்கு கிரி விமானத்தில் வர மாட்டார்…தான் பரிசாக வாங்கிய காரில் தான் வருவார். :)//
அவ்வவ் இது உங்களுக்கு நெம்ப ஓவரா தெரியல 😉 ஆனா எப்படியாவது தலைவர் படம் பார்க்க வந்துடுவேன் 🙂
=============================================================
// ☀நான் ஆதவன்☀ said…
அவங்க நம்மல மாதிரி கவலைபடுறது கிடையாது. எப்பவும் போல சுறுசுறுப்பா தான் இருக்காங்க :)//
எறும்பு மாதிரிங்க அவங்க..இவனுக மாதிரி வேலை பண்ண முடியாதுடா சாமி!
=============================================================
// ஜோ/Joe said…
அப்பா ! கிலி மாமா வந்திலுக்காலு//
ஹா ஹா அடி தூளு!
=============================================================
// paya said…
கிரி கலக்கல் பதிவு. சரியான காமெடி.//
🙂 நன்றி பயபுள்ள
//என் காதில் எதுவும் பிரச்சனையோ எனக்கூட நினைக்க தோன்றியது. போக போக ஓரளவிற்கு பழகிவிட்டது. //
ஆமாங்க இவங்க பண்ணுறது நம்மை நம் மீதே சந்தேகப்பட வைக்கும் :-)))
ஆமா! நீங்க சிங்கை ல தான் இருக்கீங்களா!
==============================================================
// எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன் said…
இதப் பாத்ததுமே டக்குன்னு புரியவே இல்ல… கடைசில கண்டுபிடிச்சிட்டோம்ல…//
அவ்வளோ கஷ்டமாவா இருக்கு! 🙂 (என்னத்த கண்ணையா ஸ்டைல் ல் படிக்கவும் :-D)
===============================================================
// பித்தனின் வாக்கு said…
என்னால அந்த புட் கேர்ட் உள்ளகூட போக முடியவில்லை. வாசம் குடலைப் புரட்டியது. நான் எப்பவும் லிட்டில் இந்தியாவில் சாந்திவிலாஸ் சைவ உணவகம் தான்.//
லிட்டில் இந்தியா என் வீட்டில் இருந்து தொலைவில் இருப்பதால் வார இறுதியில் மட்டுமே செல்ல முடியும் 🙁
===============================================================
// புனிதா||Punitha said…
//Happy Meal // இது சிறுவர்கள் சாப்பாட்டு அண்ணாச்சி… :-))//
ஆஹா! கில்லாடி புனிதாவா இருக்கீங்களே!
நீங்க சொல்வது சரி தான் நான் இதனுடன் MC Wings அல்லது Spicy snack wrap வாங்கி கொள்வேன், இதனுடன் வரும் Cherry Yoghurt எனக்கு ரொம்ப பிடிக்கும்.
இதனுடன் ஒரு பொம்மை இலவசமாக கொடுப்பார்கள், அது வேற ஏகப்பட்டது சேர்ந்து விட்டது, ஊருக்கு போகும் போது எடுத்துச்செல்ல வேண்டும் 🙂
=========================================================
இசக்கி உங்க பாராட்டிற்கு நன்றி
ஆமாங்க கிரி, நான் சிங்கை-ல் தான் வேலை நிமித்தமாக தங்கி உள்ளேன். உங்களுடைய தளம் தான் எனக்கு முதலில் அறிமுகம். இங்கிருந்து அப்படியே தமிலிஷ் மற்றும் தமிழ்மணம் அறிமுகமாகி பலரது வலைத்தளங்களை படித்துக்கொண்டு வருகிறேன். நன்றி. – பயபுள்ள.
கிலி-க்கு கிலி ஏற்படுத்திவிட்டார்கள் அன்பு சிங்கப்பூரர்கள் 🙂
கிரி, நகைச்சுவையோடு அழகா விளக்கியிருக்கிங்க. ரசிச்சு சிரிக்க முடிஞ்சுது. பல தளங்களில் உங்களின் பின்னுட்டத்தை ரசித்திருக்கிறேன். (நீங்கள் எனக்கு நெருக்கமானவர்தான் – நம் இருவருக்கும் தலைவர் ஒருவர்தானே?).
// paya said…
ஆமாங்க கிரி, நான் சிங்கை-ல் தான் வேலை நிமித்தமாக தங்கி உள்ளேன்.//
அப்படியா! முடிந்தால் என்னோட தளத்தில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி விடுங்க.. நான் தற்போது விடுமுறையில் ஊருக்கு செல்கிறேன், திரும்ப வந்து உங்களுக்கு பதில் போடுகிறேன்.
================================================================
// ரோஸ்விக் said…
கிலி-க்கு கிலி ஏற்படுத்திவிட்டார்கள் அன்பு சிங்கப்பூரர்கள் :-)//
டரியல் ஆக்கி விட்டார்கள்.
=================================================================
// நசரேயன் said…
மெக்கி இல்லைனா நான் எல்லாம் மக்கிப் போய் இருப்பேன்//
நான் கூட.. இங்க மட்டும் தான் சாப்பிடுற மாதிரி இருக்கும்.
==================================================================
// Samuthran said…
கிரி, நகைச்சுவையோடு அழகா விளக்கியிருக்கிங்க. ரசிச்சு சிரிக்க முடிஞ்சுது//
நன்றிங்க சமுத்திரன் ..நான் கோவைக்காரன் என்பதால் அது இயல்பாகவே வந்து விடுகிறது 🙂
//நீங்கள் எனக்கு நெருக்கமானவர்தான் – நம் இருவருக்கும் தலைவர் ஒருவர்தானே?//
தலைவர் ரசிகர் அனைவரும் எனக்கும் நண்பர்கள் தான் 🙂
கிளி…ஓக்கேலா நல்லத்தான் மெக்டியா பாவித்து இருக்கீங்க… காப்பி தண்ணி சூடா இருந்தா ஓரஞ்சு குடிக்கலாம்லலா… என்னலா நீங்க பேபி மீல் சாப்பிடுர சின்ன பிள்ளையாலா?… நெவெர்மைண்டலா… 🙂
மெக்கி இல்லைனா நான் எல்லாம் மக்கிப் போய் இருப்பேன்
informative and commercial writing nice
சூப்பர் "topic" giri…நல்லா தலைப்பை தேர்வு செய்கிறீர்கள்…
நானும் McDonald-இன் தீவிர ரசிகன்….நம்ம ஊரே விட்டு வெளிநாட்ல சாப்பிடனும் னா "McD" தான் சரியான தேர்வு…
நல்லா வேள இங்கே (in taipei) Having ஆக்கு பதிலா "Here or take away"
ஏதோ இந்த அளவாது பேசரனுகலே….ஒரு விஷயம் நோட் பண்ணினீர்களா இவனுக மாதிரி "native english speakers" கூட Bye Bye சொல்ல முடியாது..
Sorry mistyped "Bye Bye" instead of Buh bye
nalla pathivu giri.. vazhakapadi unga style la super ra iruku……
"தலைவர் ரசிகர் அனைவரும் எனக்கும் நண்பர்கள் தான் :-)" – ithu supero superrrrrrr
//எனக்கு பல நேரங்களில் மெக்டொனால்ட் தான் கை கொடுத்தது\\
அட அங்கேயுமா
உண்மை கிரி, அங்க மட்டும்மில்ல இங்கையும்தான்,
இன்னும் என் தங்கமணி கார்ன் (சாலட்) கேட்டு கோன் (ஐஸ்கிரீம்) வாங்கிவிட்டு வருவாங்க.
நல்ல அனுபவம் தான் போங்க…
அன்புள்ள திரு. கிரி அவர்களுக்கு, பயணங்களை குறித்த செய்திகள் மிக அருமை, உங்கள் பதிவை இன்று தான் கண்டேன், மேலும் சிங்கப்பூர் பொது தேர்தல் ஒரு முறை முப்பதே நிமிடத்தில் முடித்துவிட்டு, புதிய GOVERNMENT அறிவித்து விட்டு வேலையை பார்க்க போய் விட்டார்கள் என்று படித்திருக்கிறேன் அதை பற்றி ஏதேனும் தகவல் இருந்தால் தெரிவிக்கவும். நன்றி!!
// ஹாலிவுட் பாலா said…எம்.சி-யோட உணவு அப்படி பிடிக்குமா உங்களுக்கு??? இருங்க.. இருங்க.. உங்களுக்காகவே ஒரு படம் இருக்கு! //எனக்கு அது எந்த படம்னு தெரியுமே (http://www.imdb.com/title/tt0390521/) ….. இந்த படம் பாத்து 5 மாசம் ஆச்சு ……. பாத்ததுக்கு அப்புறம் நான் ஒரு தடவை கூட பாஸ்ட் புட் சாப்பிடல 🙂 …..
thalavia,,
Adutha pathivu yepppoooo
Waiting eagerly
Thanks,
Arun
// அரசூரான் said…
கிளி…ஓக்கேலா நல்லத்தான் மெக்டியா பாவித்து இருக்கீங்க//
:-)) நன்றி அரசூரான்
//என்னலா நீங்க பேபி மீல் சாப்பிடுர சின்ன பிள்ளையாலா?//
ஆனா எனக்கு ஒரு சின்ன பையன் இருக்கான் 😉
//நெவெர்மைண்டலா… :)//
சூப்பர்லா 🙂
==============================================================================
// Sadhasivam said…
சூப்பர் "topic" giri…நல்லா தலைப்பை தேர்வு செய்கிறீர்கள்…//
நன்றி சதா 🙂
//நானும் McDonald-இன் தீவிர ரசிகன்….நம்ம ஊரே விட்டு வெளிநாட்ல சாப்பிடனும் னா "McD" தான் சரியான தேர்வு//
அதே! அதே! இங்க ஒண்ணு தான் சாப்பிடுற மாதிரி இருக்கும்
==============================================================================
// vaishnavi devi said…
informative and commercial writing nice//
நன்றி வைஷ்ணவி தேவி
===============================================================================
// கிறுக்கல் கிறுக்கன் said…
//எனக்கு பல நேரங்களில் மெக்டொனால்ட் தான் கை கொடுத்தது\
அட அங்கேயுமா//
ஆஹா! நமக்கு கம்பெனி நிறையா இருக்கும் போல இருக்கே 😉
===============================================================================
// Arun said…
nalla pathivu giri.. vazhakapadi unga style la super ra iruku……//
நன்றி அருண் 🙂
===============================================================================
// சிங்கக்குட்டி said…
உண்மை கிரி, அங்க மட்டும்மில்ல இங்கையும்தான்,
இன்னும் என் தங்கமணி கார்ன் (சாலட்) கேட்டு கோன் (ஐஸ்கிரீம்) வாங்கிவிட்டு வருவாங்க.//
அட! நான் கூட எனக்கு தான் இந்த பிரச்சனை என்று நினைத்தேன்
================================================================================
// மதிபாலா said…
நல்ல அனுபவம் தான் போங்க..//
நொந்த அனுபவம் 🙂
=================================================================================
// மர தமிழன் said…
அன்புள்ள திரு. கிரி அவர்களுக்கு, பயணங்களை குறித்த செய்திகள் மிக அருமை, உங்கள் பதிவை இன்று தான் கண்டேன்//
நன்றி மர தமிழன்
//சிங்கப்பூர் பொது தேர்தல் ஒரு முறை முப்பதே நிமிடத்தில் முடித்துவிட்டு, புதிய GOVERNMENT அறிவித்து விட்டு வேலையை பார்க்க போய் விட்டார்கள் என்று படித்திருக்கிறேன் அதை பற்றி ஏதேனும் தகவல் இருந்தால் தெரிவிக்கவும்.//
இது பற்றி எனக்கு த�
"வேற யாரோ எடுத்தார்கள் என்று நினைக்கிறேன் :-)"
Ippa than ketten yeduthathu yenga appaa thalaiva