இந்த முறை ஊருக்குச் சென்ற போது வெய்யில் மண்டைய காய்ச்சினாலும் அவ்வப்போது மழையும் எட்டி பார்த்து அனைவருக்கும் ஆறுதல் அளித்தது.
எப்போது ஊருக்குச் சென்றாலும் செல்லும் கருங்கரடு முருகன் கோவிலுக்குச் செல்லும் வழியிலும் கோவிலிலும் எடுக்கப்பட்ட படங்களே இவை.
இயற்கையின் தீவிர ரசிகனான எனக்கு எங்கள் ஊரிலேயே இவை அனைத்தும் கிடைப்பது மனதிற்கு சந்தோசத்தையும் ஒருசேர பெருமையையும் அளிக்கிறது.
மழை பெய்ய தயாராக மேக மூட்டத்துடன் இருக்கும் வானம்.
வலது ஓரத்தில் தூரத்தில் மழை பெய்து கொண்டு இருக்கிறது. இதோ இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து விடுவேன் என்று கூறாமல் கூறுகிறது
வயல்களில் பொதுவாக மரங்கள் அதிகம் இருக்காது. நிழல் அதிகம் இருந்தால் நெற் பயிர் வளராது என்பதால் மரங்களை வளர்க்க மாட்டார்கள்.
இவை வயல்களும் அல்லாது தோட்டமும் அல்லாத வயலின் தொடக்க பகுதி. எனவே, மரங்கள் சூழ்ந்து பச்சை பசேல்னு ரம்மியமாகக் காட்சி அளிக்கிறது.
கோவில் அருகே செல்லும் போது மாலை நேரமாகி விட்டதால் கொஞ்சம் இருட்டி விட்டது மேக மூட்டத்தோடு சேர்ந்து
கோவிலுக்குச் சென்ற பிறகு மழை வந்து விட்டது, அன்று கோவிலின் ஆண்டு விழா என்பதால் கூட்டத்தோட உறவினர்களும் அதிகம் இருந்ததால் சரியாகப் படம் எடுக்க முடியவில்லை.
அழகு மிகுந்த இடங்களும் நம் அனைவருக்கும் சோறு போடும் இடங்களும் தொழிற்ச்சாலை கழிவுகளாலும், புதிதாகக் கட்டப்பட்டு வரும் வீடுகளாலும் அழிந்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது.
இன்னும் கொஞ்ச காலங்கள் சென்றால் இங்கே பச்சை பசேல்னு பயிர்களுக்குப் பதிலாகப் பிரம்மாண்ட வீடுகளும் தொழிற்சாலைகளும் இருக்கும் என்பது கசப்பான உண்மை.
இயற்கையை அழித்து முன்னேறும் எந்த நாடும் கடைசியில் பல பிரச்சனைகளைச் சந்திக்கும் என்பது இயற்கையின் நியதி. இதற்கு யாரும் விதிவிலக்கல்ல.
தொடர்புடைய கட்டுரை
சின்ன கோடம்பாக்கம் “கோபி” வயல்வெளி காட்சிகள்
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
புகைபடங்கள் மிகவும் அருமையாக இருக்கிறது…வாழ்த்துக்கள்
படங்கள் அருமையாக இருக்கிறது
அழகுப் படங்கள் கிரி. வானிலை அறிக்கை போல படங்களுக்கு கொடுத்திருக்கும் கமென்ட்களும் சுவாரஸ்யம்.
“பச்சை பசேல்” கிராமத்தில் படம் எடுக்கணும்னா சினிமாக்காரங்க தேடிப் போவாங்களே..அதே “கோபி”தானா இது:)?
வாங்க விஜய். உங்களை பதிவர் சந்திப்பில்(வந்தீர்கள் தானே!) சந்தித்து பேச முடியாமல் போய் விட்டது, நான் அவசரமாக கிளம்பியதால் அனைவருடனும் பேச முடியவில்லை, அது எனக்கு மிக வருத்தம் அளித்தது.
வாங்க திகழ்மிர் உங்கள் வருகைக்கு நன்றி தொடர்ந்து வாங்க.
// ராமலக்ஷ்மி said…
அழகுப் படங்கள் கிரி. வானிலை அறிக்கை போல படங்களுக்கு கொடுத்திருக்கும் கமென்ட்களும் சுவாரஸ்யம்//
வாங்க ராமலக்ஷ்மி எப்படி இருக்கீங்க? அடுத்த நச் பதிவு எப்போது? வானிலை அறிக்கை மாதிரின்னு சொல்லிட்டீங்க இதுல உள் குத்து எதுவும் இல்லையே 🙂
//”பச்சை பசேல்” கிராமத்தில் படம் எடுக்கணும்னா சினிமாக்காரங்க தேடிப் போவாங்களே..அதே “கோபி”தானா இது:)?//
சந்தேகமே வேண்டாம், அதே கோபி தான் :-). தற்போது சேரனின் பொக்கிஷம் படப்பிடிப்பு நடைபெற்று கொண்டு இருக்கிறது.
உங்கள் வருகைக்கு நன்றி.
படங்கள் அருமை.. உங்களுக்குள் ஒரு பி சி ஸ்ரீராம் ,உறங்கிக் கொண்டிருந்தாரோ ?
//ஜீவன் said…
படங்கள் அருமை.. உங்களுக்குள் ஒரு பி சி ஸ்ரீராம் ,உறங்கிக் கொண்டிருந்தாரோ ?//
என்னை ஏதாவது திட்டுறதுன்னா பதிவர் சந்திப்புல பார்த்துக்கலாம் அதுக்காக… பாவம் பி சி ஸ்ரீராம் மேல உங்களுக்கு என்ன கோபம்? 🙂
உங்கள் வருகைக்கு நன்றி
பச்சமலை முருகன் கோவிலுக்கா போயிருந்தீங்க. அப்படியே ஊருக்குப்போகும் போது ஈரோடு பிஸ்கட் பேக்கரிலே பிஸ்கட் வாங்கிட்டுப் போங்க நல்லாருக்கும். நம்ம கடைதாங்க.அன்புடன்சந்துரு
எங்கே நம்ம நண்பர் கிரியை ரொம்ப நாளாக் காணோம்னு தேடிட்டிருந்தேன்..இப்பத்தான் புரியுது..சுத்தக் காற்றைச் சுவாசிக்கப் போயிருக்கீங்க..கொடுத்துவச்சவர்பா.. 🙂
படங்கள் கொள்ளை அழகு..அந்த வீதி..அடடா..சூப்பர்..
தண்ணீர் சதுரம் ஒன்று காணப்படுதே..அது என்னங்க?
படங்களெல்லாம் ரொம்ப நல்லாருக்க்க்குதுங்கோஓஓஓ!கோவை பதிவர் சந்திப்புல பாத்தோம். நினைவிருக்கா? 🙂
// கூடுதுறை said…
என்ன தலைவா!
ஊருக்கு வந்துவிட்டு சத்தமே இல்லாமல் சென்றுவிட்டிர்களே… இது நியாயமா?
ஒரு im அனுப்பியிருந்தால் போனில் ஆவது பேசியிருக்கலமே?//
உண்மையிலே மறந்து விட்டேன்..உங்களை நான் ஊருக்கு கிளம்பும் நாள் முன்பாக im ல் பார்க்க முடியவில்லை. அடுத்த முறை மறக்காமல் அழைக்கிறேன்
பெரும்பாலானவர்களை சந்தித்தேன் உங்களை எப்படியோ தவறவிட்டுட்டேன், என் தவறு தான்,மன்னியுங்கள்.
உங்கள் வருகைக்கு நன்றி.
// பெத்தராயுடு said…
Do you think rapid industrialization would stretch that far?
Farming may sustain for the following reasons.
1. The economy of Gobi and its surrounding region is closely tied to agriculture. I feel agriculture pays comfortably, if not make people rich.
2. ONly it becomes economically unviable due to lack of laborers.
3. Some other non-agriculture industry should consolidate and provide livelihood for the farming workforce of the region.
4. The price of real estate offsetting the gains from farming.
Without these factors, the fear of abandoning farming are unfounded.//
நீங்கள் கூறும் கருத்துக்கள் ஏற்று கொள்ள கூடியவையே. ஆட்கள் பிரச்சனை பெரும் பிரச்சனை அனைவரும் இப்போது திருப்பூர் மில் தொழிற்சாலைகளுக்கு சென்று விடுகிறார்கள். கோபியிலும் சாய தொழிற்சாலை வந்த போது கடும் எதிர்ப்பு விவசாயிகளிடம் இருந்து கிளம்பியதால் கை விடப்பட்டது. திருப்பூர் நகரம் முழுவதும் மாசடைந்து விட்டது. சுத்திகரித்து வெளியேற்றினால் இவ்வளவு பாதிப்பு இருக்காது, ஆனால் அது செலவு பிடிப்பதால் அனைவரும் அதை தவிர்க்கின்றனர். அதனால் அடையும் அந்த ஊர் மக்கள் படும் துன்பம் சொல்லி மாளாது. ரியல் எஸ்டேட் பிரச்சனை …ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை 🙁
//Did you apply and photoshop touch-ups in the first pic? Never seen sky in such a color.//
புகைபடத்தை ப்ரைட் செய்தது உண்மை, ஆனால் டச் அப் எதுவும் செய்யவில்லை, அது எனக்கு பிடிக்கவும் பிடிக்காது. மேகமே அப்படி தான் இருந்தது….திடீரென்று உருவாகி மழை பெய்த சிறிது நேரத்திற்க்கெல்லாம் கரைந்து போனது. இதை போல மேகத்தை அடிக்கடி நான் எங்கள் ஊரில் பார்த்ததுண்டு.
பெத்தராயுடு உங்கள் தொடர் வருகைக்கு மிக்க நன்றி. நீங்கள் தொடர்ந்து கலந்து கொள்ளும் ஆரோக்யமான விவாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்.
// புதுகை.எம்.எம்.அப்துல்லா said…
கிரி! உங்கள நேற்று மாலை சென்னையில பார்த்தப்போ ஊருக்கு போனவுடன சொந்த ஊர்ல எடுத்த போட்டால்லாம் போடுறேன்னு சொன்னீங்க.ஆனா இவ்வளவு வேகமா பதிவேத்துவீங்கன்னு நினைக்கல.//
வாங்க அப்துல்லா நீங்க அனுப்பிய நபர் என்னை பத்திரமாக கொண்டு சேர்த்து விட்டார் நன்றி.
அட என்னங்க! போட்டோ தாங்க போட்டேன்..அதுக்கு எவ்வளோ நேரம் ஆக போகுது…
// ஜெகதீசன் said…
படங்கள் அருமை..//
ஜெகதீசன் இந்த முறையும் என்னை சரியா! பதிவர் சந்திப்புக்கு கூட்டிட்டு போய்டுங்க 🙂 உங்களை தான் நம்ம்ம்ம்ம்ம்ம்பி இருக்கேன் ;–)
இந்த Global warming நாட்களில் பச்சையாக ஒரு ஊரை பார்க்கவே ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.Superb photos!
// தாமோதர் சந்துரு said…
பச்சமலை முருகன் கோவிலுக்கா போயிருந்தீங்க. .//
சந்துரு பச்சை மலை முருகன் இல்லைங்க, கருங்கரடு முருகன் கோவில்.
//அப்படியே ஊருக்குப்போகும் போது ஈரோடு பிஸ்கட் பேக்கரிலே பிஸ்கட் வாங்கிட்டுப் போங்க நல்லாருக்கும்//
ஈரோடு பிஸ்கட் பேக்கரி கடை (அபிராமி மருந்து கடை எதிரில்) உங்களுடையதா? ஏங்க இதை நீங்க சொல்லி தான் தெரியனுமா? கோபியில் இருக்குற எல்லோருக்கும் உங்க கடைய தெரியாம இருக்க வாய்ப்பே இல்லையே .. இது என்ன நேத்து ஆரம்பித்த கடையா? எனக்கு தெரிந்து என்னோட அக்கா பழனியம்மாள் பள்ளியில் ஹாஸ்டலில் இருந்த போது உங்க கடையில் நான் சிறுவனாக இருந்த போது இருந்து வாங்கி செல்கிறேன். குறைந்தது எனக்கு தெரிந்து 20 வருடம், அதற்க்கு முன்பு இருந்தே இருக்கிறது. என்ன இப்ப விலையை தான் கூட்டி விட்டீங்க..உங்க கடை ரொட்டி மிக பிரபலம் ஆச்சே ..நான் வைரவிழா பள்ளியில் படித்த போது வெள்ளாளர் ஹாஸ்டலில் இருந்தேன், அங்கே புதன் காலை உணவு உங்க கடை ரொட்டி தான். இப்ப எப்படின்னு தெரியல. அரசியல்வாதி கணக்கா சும்மா வெள்ளை வேஷ்டி சட்டையோட எப்போதும் பளபளன்னு இருப்பார்..அவர் யாருங்க? கடை முதலாளின்னு தெரியும் ..உங்க கடை என்பதால் உங்க அப்பாவா? இந்த முறை கூட உங்க கடைக்கு போய் இருந்தேன்.
//நம்ம கடைதாங்க//
நான் வேறு ஏதாவது கடை பற்றி கூறி இருந்தால் மன்னிக்கவும், எனக்கு ஈரோடு பிஸ்கட் பேக்கரின்னா இது தான் தெரியும். வேற கடைனா சொல்லுங்க அங்கேயும் நம்ம ஆதரவு கரத்தை நீட்டிடுவோம் (பணம் கொடுத்து தாங்க பயப்பாடாதீங்க :D)
// எம்.ரிஷான் ஷெரீப் said…
எங்கே நம்ம நண்பர் கிரியை ரொம்ப நாளாக் காணோம்னு தேடிட்டிருந்தேன்..இப்பத்தான் புரியுது..சுத்தக் காற்றைச் சுவாசிக்கப் போயிருக்கீங்க..கொடுத்துவச்சவர்பா.. :)//
ரிஷான் தேடிட்டு இருந்தது அடிக்கறதுக்கு இல்லைன்னு நம்புறேன் :-))
சிங்கப்பூர் அவ்வளவாக அசுத்தமான காற்று இல்லை, சுத்தமான காற்று தான், இருந்தாலும் பரந்து விரிந்த வயல் வெளி காற்றை இங்கே பெற முடியாதது தான் 🙁
//படங்கள் கொள்ளை அழகு..அந்த வீதி..அடடா..சூப்பர்..//
இயற்கையை எந்த மொக்கை பிடித்து போட்டாலும் அழகு தான். சின்ன திருத்தம் அது வீதி இல்லை சாலை.. பேருந்துகள் செல்லும் சாலை, கிராமம் என்பதால் சிறியதாக உள்ளது. இருந்தாலும் நீங்கள் போடும் படங்களுக்கு ஈடாகாது. பட்டய கிளப்புற ஆளு நீங்க 🙂
//தண்ணீர் சதுரம் ஒன்று காணப்படுதே..அது என்னங்க?//
இது கோவிலின் வெளிப்பகுதி (வாசல்) இந்த முருகன் கோவில் சிறு குன்றின் மேல் அமைந்து இருப்பதால் இப்படி உள்ளது, நான் மழை தண்ணீர் படாத இடத்தில் நின்று எடுத்ததால் இந்த இடம் சிறு தொட்டி போல் தெரிகிறது. மழை இல்லை என்றால் இதன் விளிம்பில் இருந்து புகைப்படம் எடுப்பேன். எனக்கு மிக பிடித்தது இந்த கோவிலின் படிக்கட்டில் அமர்ந்து இந்த வயலை பார்ப்பது தான்.
// வெயிலான் said…
படங்களெல்லாம் ரொம்ப நல்லாருக்க்க்குதுங்கோஓஓஓ!//
நன்றிங்க வெயிலான். அடுத்த முறை வரும் போது வாங்க கூட்டிட்டு போறேன். டிசம்பர் ஜனவரி மாதம் அருமையாக இருக்கும்.
//கோவை பதிவர் சந்திப்புல பாத்தோம். நினைவிருக்கா? :)//
கேட்க மாட்டீங்க? ரொம்ப லொள்ளு தான். பரிசல்காரரோடு அதிகம் பேசி நீங்களும் இப்படி ஆகிட்டீங்களே! அவ்வ்வ்வ்
நான் அன்றைக்கு வீட்டிற்கு போகும் போது இரவு 8.30 ஆகி விட்டது, அத்தனை சீக்கிரமாக கிளம்பியும்.
// Karthik said…
இந்த Global warming நாட்களில் பச்சையாக ஒரு ஊரை பார்க்கவே ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது//
இதை விட பல ஊர் இருக்கும், அனைவரும் அதை படம் பிடித்து போட்டா நல்லா இருக்கும்.
நல்ல படியா கல்லூரி போய் சேர்ந்தீங்களா? நண்பர்கள் கிட்ட போய் பதிவர் சந்திப்பை பற்றி என்ன சொன்னீங்க உண்மைய சொல்லுங்க :-)))
கல்லூரி கதையோட நிக்காம மற்ற செய்திகளையும் பதிவா போடுங்க. உங்க வருகைக்கு நன்றி.
// ARUVAI BASKAR said…
ம்ம்ம்ம் அங்கெ வாழ்பவர்கள் எல்லாம் கொடுத்து வச்சவர்கள் !//
இக்கரைக்கு அக்கறை “பச்சை” :-)) வருகைக்கு நன்றி பாஸ்கர்.
—————————————————-
// பிரேம்ஜி said…
கிரி,அருமையான படங்கள்.இப்ப எல்லாம் ஊர் ஞாபகம் வந்தா உங்க வலைப்பூவை திறந்து பார்க்கறதுண்டு//
நன்றி பிரேம்ஜி.(டமாசுக்கு தானே சொன்னீங்க 😉 )
நீங்க அறிவியல் சந்மந்தப்பட்ட படங்களா போடுறீங்க..நான் இந்த மாதிரி படங்களாக போடுறேன் :-))))
என்ன தலைவா!
ஊருக்கு வந்துவிட்டு சத்தமே இல்லாமல் சென்றுவிட்டிர்களே… இது நியாயமா?
ஒரு im அனுப்பியிருந்தால் போனில் ஆவது பேசியிருக்கலமே?
படங்கள் சூப்பர்…
// பரிசல்காரன் said…
ஏன்யா.. நான் என்ன பண்ணினேன்?//
நீங்க தான் விவகாரமா பேசுவீங்க :-))
//“அந்த”ப்படங்களையும் எடுத்து பதிவேத்திருக்கலாமே?//
ஐய்யயோ..தெளிவா சொல்லுங்க..படிக்கிறவங்க ஏதாவது தப்பா நினைத்துக்க போறாங்க….இதை படிக்கும் மக்களே பரிசல்காரர் சொல்வதற்கும் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை.
Do you think rapid industrialization would stretch that far?
Farming may sustain for the following reasons.
1. The economy of Gobi and its surrounding region is closely tied to agriculture. I feel agriculture pays comfortably, if not make people rich.
2. ONly it becomes economically unviable due to lack of laborers.
3. Some other non-agriculture industry should consolidate and provide livelihood for the farming workforce of the region.
4. The price of real estate offsetting the gains from farming.
Without these factors, the fear of abandoning farming are unfounded.
Would like to hear from others on these points.
The pics are kool, literally!
Did you apply and photoshop touch-ups in the first pic? Never seen sky in such a color.
கிரி! உங்கள நேற்று மாலை சென்னையில பார்த்தப்போ ஊருக்கு போனவுடன சொந்த ஊர்ல எடுத்த போட்டால்லாம் போடுறேன்னு சொன்னீங்க.ஆனா இவ்வளவு வேகமா பதிவேத்துவீங்கன்னு நினைக்கல.
படங்கள் அருமை..
ம்ம்ம்ம் அங்கெ வாழ்பவர்கள் எல்லாம் கொடுத்து வச்சவர்கள் !
படங்கள் அனைத்தும் சூப்பர் !
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்
கிரி,அருமையான படங்கள்.இப்ப எல்லாம் ஊர் ஞாபகம் வந்தா உங்க வலைப்பூவை திறந்து பார்க்கறதுண்டு.நன்றி.
//பரிசல்காரரோடு அதிகம் பேசி நீங்களும் இப்படி ஆகிட்டீங்களே! அவ்வ்வ்வ் //
ஏன்யா.. நான் என்ன பண்ணினேன்?
ஆமா, கோவை வந்திருந்தப்போ வெறுங்கையோட வந்தீங்க. இந்தப் படங்களை எடுத்துட்டு வந்த கேமரா கொண்டுவந்திருந்தா “அந்த”ப்படங்களையும் எடுத்து பதிவேத்திருக்கலாமே?
//வானிலை அறிக்கை மாதிரின்னு சொல்லிட்டீங்க இதுல உள் குத்து எதுவும் இல்லையே :-)//
அடடா அப்படி ஏதுமில்லை. வானிலை அறிக்கை மாதிரி என்றது வானத்தின் ஒவ்வொரு நிமிட மாற்றங்களையும் கமென்ட்ரி மாதிரி சொல்லி படங்களோடு காட்டியிருக்கிறீர்கள் எனும் பாராட்டுதான். இயற்கையை நீங்கள் கவிதையாய் வடித்திருக்கும் விதங்களைத்தான் உங்கள் ஃபிளிக்கர் தளம் காட்டுகிறதே!
அதுனால தான கோபிக்கு பேரு மினி கோடம்பாக்கம் 🙂
மாக்கிணாங்கோம்பை வந்திருக்கேனுங்க கிரி, அந்தப்பக்கமெல்லாம் வந்தாலே பச்சப்பசேலுன்னு கண்ணுக்கு குளிர்ச்சிதான்
கிரி, போட்டோக்கள் அருமை.
// ராமலக்ஷ்மி said…
இயற்கையை நீங்கள் கவிதையாய் வடித்திருக்கும் விதங்களைத்தான் உங்கள் ஃபிளிக்கர் தளம் காட்டுகிறதே//
பல இடங்களில் இருந்து சுட்டு போட்டேன் ஹி ஹி ஹி
———————————-
// Syam said…
அதுனால தான கோபிக்கு பேரு மினி கோடம்பாக்கம் :-)//
வாங்க ஷ்யாம் நீங்க சொல்வது சரி தான்.
உங்கள் முதல் வருகைக்கு நன்றி.
// சின்ன அம்மிணி said…
மாக்கிணாங்கோம்பை வந்திருக்கேனுங்க கிரி, அந்தப்பக்கமெல்லாம் வந்தாலே பச்சப்பசேலுன்னு கண்ணுக்கு குளிர்ச்சிதான்//
எனக்கு மாக்கிணாங்கோம்பை அவ்வளவா தெரியாது….இயற்கையின் அழகிற்கு ஈடு எதுவும் இல்லை.
உங்கள் முதல் வருகைக்கு நன்று சின்ன அம்மணி
———————————————————————-
// சரவணகுமரன் said…
கிரி, போட்டோக்கள் அருமை//
நன்றி சரவணகுமரன். உங்கள் வருகைக்கு நன்றி
வணக்கம்.பின்னூட்டங்களப் படிச்சிட்டு ஏதாவது சொல்லலாமுன்னு பார்த்தா பின்னூட்டங்கள் படத்தில இருக்குற சாலை மாதிரி போகுது….போகுது….போய்க்கிட்டே இருக்குது.அதனால அனைத்தும் படிக்க முடியல.
உங்க மனசாட்சி உங்க ஊரு மாதிரியே பசுமையா இருக்குறதுல மகிழ்ச்சி.
படங்களுக்குப் பிரேம் போட்டிருக்கலாம்.தேவைன்னா முகப்பூச்சும் கொஞ்சம்.அல்லது இல்லாதவதான் சவுரி வச்சுக்குவா எனக்கெதுக்குங்கிற மாதிரி அசலே அழகா இருக்கும்போது முகப்பூச்சு எதுக்குவா?
பெரிசுராயுடு கேட்டமாதிரி சமூகம் சார்ந்த ஒரு கேள்வி.தற்போது கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு குடிபோகும் மனோபாவம் அதிகரித்துள்ளது.உதாரணம் திருப்பூர்.வயல்களில் நாத்து நட ஆட்கள் இல்லாமல் டிராக்டர் மாதிரி வாகனம் நாத்து நடுவதை நேற்று மக்கள் திரையில் பார்த்தேன்.இந்த மாற்றத்துக்கான காரணம் என்ன?
அப்புறம் உங்க ஊருப்பக்கம் சினிமாக்காரங்க வந்தா எங்கே சாப்பிடறாங்க?பொள்ளாச்சிப் பக்கம் போனா பொள்ளாச்சி சாப்பாட்ட அடிச்சிக்கிறதுக்கு தமிழ்நாட்டுல இடமில்லையின்னு ஒரு சினிமா சம்பந்தப்பட்ட அக்கா சொல்லிச்சு.
இனி உங்க பதில்:)
//ராஜ நடராஜன் said…
உங்க மனசாட்சி உங்க ஊரு மாதிரியே பசுமையா இருக்குறதுல மகிழ்ச்சி//
நன்றி ராஜ நடராஜன்.
//தற்போது கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு குடிபோகும் மனோபாவம் அதிகரித்துள்ளது.உதாரணம் திருப்பூர்.வயல்களில் நாத்து நட ஆட்கள் இல்லாமல் டிராக்டர் மாதிரி வாகனம் நாத்து நடுவதை நேற்று மக்கள் திரையில் பார்த்தேன்.இந்த மாற்றத்துக்கான காரணம் என்ன?//
உங்கள் கேள்வியிலேயே பதில் உள்ளது, இருந்தாலும் என் பங்குக்கு எனக்கு தெரிந்ததை கூறுகிறேன். தற்போது விவாசாய வேலைகளுக்கு நல்ல கூலி கிடைக்கிறது இருந்தாலும் மக்கள் திருப்பூர் செல்லவே விரும்புகிறார்கள் காரணங்கள் கீழே
வீட்டுக்கே வந்து பேருந்தில் கூட்டி சென்று திரும்ப கொண்டு வந்து விட்டு செல்கிறார்கள்.
பேருந்தில் வரும்போது ஒரு படம் போகும் போது ஒரு திரைப்படம், இல்லை என்றால் பண்பலை பாட்டுடன் சவுகரியமாக உட்கார்ந்து செல்லலாம்.
ஒரே இடத்தில் வேலை, செய்யும் வேலையில் விவசாய வேலையை விட கெளரவம்.
சம்பளம் அதிகம்
தற்போது விவசாய வேலைகளில் ஈடுபடுவது ஒரு சிலரால் கேவலமாக பார்க்கப்படுகிறது.
இவையே அவர்கள் திருப்பூர் செல்ல இருக்கும் காரணங்கள்.
இவர்கள் அதிக பணம் சம்பாதித்தாலும் அங்கே வேலை செய்வதால் பஞ்சு மூக்கில் ஏறி சுவாச பிரச்சனை, வெப்பம் அதிகம் இருப்பதால் உடல் பல வியாதிகளை கொடுக்கிறது, சாய வேலைகளில் ஈடுபடுவதால் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் போன்றவை வருகின்றன. இவை உடனடியாக தெரியாவிட்டாலும் சில வருடங்கள் கழித்து பெரும் பிரச்சனை ஆகும். அவர்கள் சம்பாதித்த பணத்தை இதற்கே இழக்க நேரிடும். இதை அங்கே வேலை செய்யும் யாரிடம் கேட்டாலும் கூறுவார்கள்.
நீங்கள் கேட்டதுக்கு வருகிறேன். இவர்கள் பற்றாகுறையை சமாளிக்க விவசாயிகள் இயந்திரங்களை பயன்படுத்துகிறார்கள். இந்த முறை சென்ற போது விசாரித்த போது கூலி கொடுப்பதால் 3000 ருபாய் ஒரு ஏக்கருக்கு ஆகிறது இயந்திரம் மூலம் 1000 மட்டுமே ஆகிறது, வேலையும் விரைவில் முடிகிறது. இயந்திரம் டீ போன்றவற்றை கேட்காது முக்கியமாக எப்போதும் ஒரே மாதிரி வேலை செய்யும். கொடுத்த காசுக்கு வஞ்சனை இல்லாமல் தன் வேலையை முடித்து கொடுத்து விடும்.
//அப்புறம் உங்க ஊருப்பக்கம் சினிமாக்காரங்க வந்தா எங்கே சாப்பிடறாங்க//
கோபியில் உள்ள உணவகத்தில் சாப்பிடுகிறார்கள், பிரபலமானவர்கள் என்றால் யாராவது பெரிய தலை வீட்டில் இருந்து உணவு தருவித்து விடுவார்கள். சேரன் பொக்கிஷம் படத்திற்கு கடந்த வாரம் வந்து போது இரவு உணவை ஒரு சாதாரண உணவகத்தில் தான் சாப்பிட்டதாக என் அண்ணன் கூறினார்.
திரைப்பட படபிடிப்புகளால் கோபியில் பலரின் வாழ்க்கை நன்றாக போவது உண்மை. குறிப்பாக ட்ராவல்ஸ் வைத்து இருப்பவர்கள். நட்சத்திரங்கள் பலரை பார்த்து இருக்கிறேன் நான் ஒரு முறை குஷ்பூவை நேரில் பார்த்து அசந்து போயிட்டேன் ஹி ஹி ஹி என்னமோ போங்க நம்ம மனசு நம்ம கிட்ட இல்ல.
உங்கள் வருகைக்கு நன்றி.
கிரி,
படம் நல்ல கிளாரிட்டிய்டன் உள்ளது.
வெயிலும் மழையும் படமும், கடைசிப் படமும் எனக்கு ஒரு காப்பி அடுத்த முறை வரும் போது தரவும்.
விட்ட இடத்திலிருந்து அடிச்சு ஆடத் தொடங்கீட்டீங்க. வாழ்த்துக்கள்.
வீட்டம்மா சுகமா இருக்காவளா? கேட்டம்னு சொல்லுதியளா?
//வடகரை வேலன் said…
கிரி,
படம் நல்ல கிளாரிட்டிய்டன் உள்ளது.//
நன்றி வடகரை வேலன்.
//வெயிலும் மழையும் படமும், கடைசிப் படமும் எனக்கு ஒரு காப்பி அடுத்த முறை வரும் போது தரவும்.//
கண்டிப்பாக தருகிறேன்..உண்மையை சொன்னால் நானே இன்னும் பிரிண்ட் போடவில்லை. அடுத்த முறை வரும் போது அனைத்து படங்களையும் பிரிண்ட் போட வேண்டும்.
//விட்ட இடத்திலிருந்து அடிச்சு ஆடத் தொடங்கீட்டீங்க. வாழ்த்துக்கள்.//
ராஜா நடராஜன் அவர்களுக்கு கூறிய பதிலை கூறுகிறீர்களா? அது எப்படியோ என் பதிவில் மட்டும் எந்த பதிவு போட்டாலும் ஒரு விவாதத்தில் வந்து விடுகிறது, அது பெரும்பாலும் ஆரோக்யமாகவே இருக்கிறது, அதுவே மனநிறைவை அளிக்கிறது.
//வீட்டம்மா சுகமா இருக்காவளா? கேட்டம்னு சொல்லுதியளா?//
வீட்டில் அனைவரும் நலம். நேரம் கிடைத்தால் அடுத்த முறை நீங்க, கே கே, வெயிலான் ரமேஷ்(லதானந்த சார் பிஸி)அனைவரும் ஒரு முறை வாங்க என் வீட்டிற்கு.
கிரி, மீண்டும் கண்ணுக்கு குளிர்ச்சியூட்டும் படங்களுடன் பதிவு அசத்தலா இருக்கு. டெம்ப்ளேட்டும் அதற்கு நல்லாவே கை கொடுக்குது.நீங்க பயப்பிடற மாதிரி தொழிற்சாலைகளின் பெருக்கமும், ரியல் எஸ்டேட்டின் அடாவடித்தனங்களாலும் விவசாய நிலங்கள் கைகளை விட்டுப் போக வாய்ப்புகள் அதிகமே, எதிர்காலத்தில். வாய்ப்புகள் குறையலாம் மக்களும், அரசாங்கமும் விவசாயத்தின் அவசியமுணர்ந்து மீண்டும் தன்னிலையடைந்தால்.ஆனால், இன்று இருக்கும் ட்ரெண்ட் உங்க கோபி மாதிரியான குலு, குலு ஏரியாக்கள் பக்கம் மக்கள் ஒதுங்க ஆரம்பிப்பார்கள் நகர வாழ்க்கையில் மறை கழண்டு போன பிறகு. எனவே, ரியல் எஸ்டேட் பிச்சிக்கிட்டுப் போகும் :-(.சிறுவாணி பக்கமெல்லாம் எல்லா இடத்தையும் ப்ளாட் போட்டு விக்க ஆரம்பிச்சாச்சு. நானும் இத்தனுண்டு இடத்தை துண்டு போட்டு பிடிச்சி வைச்சிருக்கேன் :-(.
//Thekkikattan|தெகா said…
கிரி, மீண்டும் கண்ணுக்கு குளிர்ச்சியூட்டும் படங்களுடன் பதிவு அசத்தலா இருக்கு. டெம்ப்ளேட்டும் அதற்கு நல்லாவே கை கொடுக்குது//
நன்றி தெகா.
//அரசாங்கமும் விவசாயத்தின் அவசியமுணர்ந்து மீண்டும் தன்னிலையடைந்தால்.//
அவசியம் உணர்ந்து ஆக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும். எனென்றால் நம் சாப்பாட்டிற்கே அரிசி இருக்காது..அப்புறம் எங்கே ஏற்றுமதி எல்லாம்! இப்படி வரை முறை இல்லாமல் நிலம் அழிப்பு தொடர்ந்தால் மற்றும் காடுகள் அழிக்கப்பட்டால் இவை மிக பெரிய பிரச்சனையில் நம்மை கொண்டு சென்று விடும். இது பற்றி யாருமே கவலை பட்டதாக தெரியவில்லை. அரசியல்வாதிகள் அனைவரும் கொள்ளை அடிப்பதிலேயே குறியாக இருப்பதால் மற்றும் இவை பற்றி பலருக்கு ஒரு மண்ணும் தெரியாததால் நாடு குட்டி சுவராக போய் கொண்டு இருக்கிறது இவர்களுக்கு ஆட்சியை தக்க வைப்பதிலேயே பெரும் நேரம் செலவாகிறது..
//இன்று இருக்கும் ட்ரெண்ட் உங்க கோபி மாதிரியான குலு, குலு ஏரியாக்கள் பக்கம் மக்கள் ஒதுங்க ஆரம்பிப்பார்கள் நகர வாழ்க்கையில் மறை கழண்டு போன பிறகு. எனவே, ரியல் எஸ்டேட் பிச்சிக்கிட்டுப் போகும் :-(.//
கோபி குளு குளு இடம் கிடையாது வெய்யில் காச்சும் தான், ஆனால் பசுமையான இடம் எந்த ஒரு இயற்க்கை பதிப்பும் அதிகம் தாக்காத இடம் முக்கியமாக அமைதியான ஊர். இதுவே அதற்க்கு பெரும் பிர்ச்சனை ஆகி விட்டது. இங்கே மாற்றல் ஆகி வரும் அரசு ஊழியர்கள் இங்கேயே இடம் வாங்கி இருந்து விடுகிறார்கள், வேறு இடத்திற்கு போக மாட்டேன் என்கிறார்கள், இவர்களை போல பலர் இடம் வாங்குவதால் கோபியில் ஒரு சென்ட் இடம் 2 லட்சம் ஆகி விட்டது, என்னுடைய கடனை முடித்து விட்டு நான் எப்படி இங்கே இடம் வாங்குவது என்று மண்டை காய்ந்து போய் உள்ளேன், இடமே இல்லை..அனைத்து இடங்களும் விற்று விட்டது. நான் இன்னும் ஒரு வருடம் கழித்து வாங்கினால் இடம் 1 சென்ட் 3 லட்சத்தில் நிற்கும். எனவே ரியல் எஸ்டேட் ஏற்கனவே தாறுமாறாகத்தான் கோபியில் உள்ளது.
//சிறுவாணி பக்கமெல்லாம் எல்லா இடத்தையும் ப்ளாட் போட்டு விக்க ஆரம்பிச்சாச்சு. நானும் இத்தனுண்டு இடத்தை துண்டு போட்டு பிடிச்சி வைச்சிருக்கேன் :-(.//
கேள்விபட்டேன், இவை தவிர்க்க முடியாதவை தான். நடைமுறை படுத்தினால் சரி வரும்..அப்படி எல்லாம் நடக்கும் என்று நினைத்தால் நாம் அதிசய பிறவிகள் ஆகி விடுவோம். விதி வலியது.
உங்கள் கருத்திற்கு நன்றி தெகா. தொடர்ந்து வாருங்கள்.
கிரி…
இந்த பதிவை முதல் நீங்கள் பதிவிட்ட முதல் நாளே நான் பார்த்து ரசித்து விட்டேன். வேலை காரணமாக உடனடியாக பின்னூட்டமிடவில்லை. இந்த ஸ்டில்களையெல்லாம் பார்த்தபோது என்னுள் தோன்றிய ஒரு கேள்வி.
அடுத்து எப்போ ஊருக்கு வருவீங்க?
(உங்களை வந்து பார்த்து, மொக்கை போட்டு கொடுமைபடுத்த மாட்டேன். இதே மாதிரி பச்சை பசேல்னு படங்களை எடுத்து வெளியிடுவீங்கள்ல… அதுக்குத்தான் கேட்டேன்.)
இந்தியாவுக்குத் திரும்பிப்போக முடிவு செஞ்சால் எந்த ஊரில் செட்டில் ஆகலாமுன்னு இருக்கும் குழப்பம் உங்க பதிவால் தீர்ந்துருக்கு.
ஆமாம். வீடு கிடைக்குமா?
சூப்பர் படங்கள் கிரி.
//சினிமா நிருபர் said…
கிரி…
அடுத்து எப்போ ஊருக்கு வருவீங்க?
(உங்களை வந்து பார்த்து, மொக்கை போட்டு கொடுமைபடுத்த மாட்டேன். இதே மாதிரி பச்சை பசேல்னு படங்களை எடுத்து வெளியிடுவீங்கள்ல… அதுக்குத்தான் கேட்டேன்.)//
செப்டம்பர் மாத கடைசியில் வருவேன். நிருபர் இந்த முறை வந்த பொது உங்களை பார்த்து இருக்கலாம் குறைந்தது தொலைபேசியிலாவது பேசி இருக்கலாம். இரண்டு வாய்ப்பையும் தவற விட்டுட்டேன். அடுத்த முறை கண்டிப்பாக உங்களை தொடர்பு கொள்கிறேன். வலைப்பதிவு எழுதுவதால் என்ன பயனோ இல்லையோ பல நண்பர்கள் கிடைத்து இருக்கிறார்கள்.
நீங்கள் இன்று சன் தொலைகாட்சியில் பரம்பரை (பிரபு) படம் பார்த்தீர்கள் என்றால் அதில் எங்கள் ஊர் வரும், குறிப்பாக முதல் பாடல் நான் கடந்த முறை வந்து போது எடுத்த படங்களில் இருக்கும் இடங்கள் (அசோக மரங்கள் இடையே)
உங்கள் வருகைக்கு நன்றி
// துளசி கோபால் said…
இந்தியாவுக்குத் திரும்பிப்போக முடிவு செஞ்சால் எந்த ஊரில் செட்டில் ஆகலாமுன்னு இருக்கும் குழப்பம் உங்க பதிவால் தீர்ந்துருக்கு.//
🙂
//ஆமாம். வீடு கிடைக்குமா?//
வீடு கண்டிப்பாக கிடக்கும், ஆனால் டவுன்குள்ளே கிடைக்குமா என்பது சந்தேகம் தான். ஆனால் நீங்கள் நியூசிலாந்து ல் இருந்து “வெயிட்”(உங்க வெயிட் ஐ சொல்லவில்லை) ஆக வருவீர்கள் என்பதால் உங்களுக்கு இடம் வாங்க பிரச்சனை இருக்காது 😉
அமைதியான மற்றும் நிம்மதியான வாழ்விற்கு “கோபி” உங்களை அன்புடன் வரவேற்கிறது.
//சூப்பர் படங்கள் கிரி.//
நன்றி மேடம். இந்த பாராட்டுக்கள் அனைத்தும் எங்கள் ஊர் விவசாயிகளை சென்றடைகிறது.
Photos are fine, sorry for typing in english
//Logan said…
Photos are fine, sorry for typing in english//
நன்றி லோகன். அடிக்கடி வாங்க..முடிந்த வரை தமிழில் எழுத முயற்சி செய்யுங்க 🙂
///இந்த பாராட்டுக்கள் அனைத்தும் எங்கள் ஊர் விவசாயிகளை சென்றடைகிறது.//
இதுதான் கிரி!
கிரிஉங்க படங்கள் எல்லாம் நன்றாக உள்ளன.தொடரந்து எழுதுங்கள்.வாழ்த்துக்கள்.வஞ்சிமகள்
//Pachai said…
கிரி
உங்க படங்கள் எல்லாம் நன்றாக உள்ளன.தொடரந்து எழுதுங்கள்.வாழ்த்துக்கள்.
வஞ்சிமகள்//
நன்றி வஞ்சிமகள். உங்கள் பெயர் அழகாக உள்ளது.
Giri,It is great to see such a lush green field. I am not sure whether I will get to go back to Gobi anytime soon. Very nice pictures. Thanks for sharing.I studied in Gobi Arts. Some of our relatives still live there.