பேராண்மை (2009) | சொல்லப்படாத கதை

33
பேராண்மை

மிழில் அவ்வப்போது வித்யாசமான திரைப்படங்கள் வருவதுண்டு மாறுபட்ட திரைக்கதை கதைக்களம் என்று, அப்படிப்பட்ட படங்களில் ஒன்று தான் “பேராண்மை”. image Credit

ஒரு பெண்கள் கல்லூரியில் இருந்து ஒரு குழு NCC பயிற்சிக்காக வருகிறார்கள்.

அதில் உள்ள ஐந்து பெண்களுடன் பயிற்சிக்குச் செல்லும் இடத்தில் ஜெயம் ரவி அந்தப் பெண்களுடன் இணைந்து நமது நாட்டின் செயற்கைகோள் ஏவும் முயற்சியைத் தடுக்கும் நோக்கோடு வரும் அந்நிய சக்திகளை வெற்றி கொள்கிறாரா இல்லையா! என்பதே இந்தப் பேராண்மை கதை.

பேராண்மை

பழங்குடி இன வகுப்பைச் சேர்ந்த ஜெயம்ரவி அங்கு அதிகாரியாக உள்ளார் அவரே இந்தப் பெண்களுக்குப் பயிற்சியாளராகவும் நியமிக்கப்படுக்கிறார், இவரது உயர் அதிகாரி பொன்வண்ணன்.

வடிவேல் உள்ளார் ஆனால், அவருக்கு அதிக வேலை இல்லை.

அவரை வடிவேலாக நினைத்துப் பார்த்தால் இந்தப் படத்திற்கு அனாவசியமாகத் தோன்றும் கதாபாத்திரமாகக் கருதினால் சரியான தேர்வே!

ஜெயம் ரவி கலராக இருப்பதால் பழங்குடி மக்களில் ஒருவராக அவரை ஒப்பிட்டுப் பார்க்க முடியவில்லை ஆனால், அவர்களுடன் இணைந்து அதிகக் காட்சிகளில் இல்லாததால் அது ஒரு பெரிய விசயமாகத் தோன்றவில்லை.

கல்லூரி பெண்கள்

NCC பயிற்சிக்கு வரும் கல்லூரி பெண்கள் செய்யும் அட்டகாசம் சி(ப)ல இடங்களில் (இடைவேளை வரை) முகம் சுளிக்க வைக்கிறது.

இவை உண்மையில் நடப்பவை என்பதால் மனதை தேற்றிக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

குறிப்பாக ஜெயம் ரவி ஜாதியை வைத்து இவன் எப்படி நம்மைக் கேள்வி கேட்கலாம் என்று பொய் புகார் செய்து அவரைச் சிக்கலில் மாட்ட வைக்கிறார்கள்.

அதற்கு அவர்கள் செய்யும் “செயல்” கொஞ்சம் ஓவராகத்தான் இருக்கிறது, எரிச்சலையும் வரவைக்கிறது.

ஜெயம் ரவியை எத்தனை பாராட்டினாலும் தகும். காட்டிலாகா அதிகாரி உடையுடன் விரைப்பாகக் காட்டி அசத்தி விட்டார் இயக்குநர் ஜனநாதன்.

NCC பரேடிலும் சரி காடுகளில் இந்தப் பெண்களை அழைத்துசெல்லும் போதும் சரி ஒரு நேர்மையான திறமையான அதிகாரியின் விரைப்புடன் கலக்கி உள்ளார்.

பரேடில் அவர் தண்டனை கொடுப்பதும் அதைக் கேள்வி கேட்பவர்களுக்குப் பதில் கூறாமல் அதை அதிகரிப்பதும் கலக்கல்.

ஆனால், அவர் உடைகள் (அதிகாரி உடை அல்ல) வழக்கமான கதாநாயகனுக்குரிய உடைகளைப் போல இருப்பது நெருடலாக இருக்கிறது.

பெண்கள் ரவியைக் கிண்டலடிக்கும் போதும் பின் அவரைப் புரிந்து பாராட்டும் போதும் கோபத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படையாகக் காட்டாமல், அதைப் புறந்தள்ளிவிட்டு தன் வேலையில் கவனமாக இருப்பது ரசிக்கும்படி உள்ளது.

இந்தப்படத்தில் ஜெயம் ரவி பேசுவது பெரும்பாலும் ஆங்கிலக் கலப்பு இல்லாத தமிழ் சொற்களே!

ரோலண்ட் கிக்கிங்கர்

இந்தப் படத்தில் வில்லனாக வரும் வெள்ளைக்காரர் ரோலண்ட் கிக்கிங்கர் சும்மா கும்முன்னு “கமாண்டோ” பட அர்னால்டு கணக்கா இருக்கார்.

அதுவும் அவர் சட்டை கழட்டி ஆர்ம்ஸ் காட்டுவார் பாருங்க!.. ஸ்ஸ்ஸ்ஸப்பா முடியல!

முன் வரிசையிலிருந்து இரு பெண்கள் இரகசியமாய்ப் பேசிக்கொண்டு வெட்கப்பட்டு சிரித்தார்கள் … என்ன பேசினார்களோ! 😉 .

பொன்வண்ணன்

பொன்வண்ணன் ஜெயம் ரவியைப் பற்றி நல்ல எண்ணம் கொண்டு இருந்தாலும் அவரது ஜாதியை வைத்து அவரை மட்டப்படுத்திக்கொண்டே இருப்பார்.

பழங்குடி மக்கள் என்பதால் அவர்களை மட்டமாக நடத்துவார்.

மாணவிகளின் பேச்சைக்கேட்டு இவரைப் படு கேவலமாக நடத்துவார். இவர் நல்லவரா கெட்டவரா என்பதே தெரியவில்லை!

படத்தில் இவர் செய்வது மிக மிகக் குறைவு நிஜத்தில் இதை விடக் கேவலமாகவே நடந்து கொள்கிறார்கள்.

காடுகளில் அதிகாரிகளால் எத்தனை பெண்கள் பாலியல் தொந்தரவிற்கு ஆளாகிறார்கள் என்பதைக் கணக்கெடுத்தால் நோட்டு பற்றாது.

எவ்வாறு அந்த மக்கள் நடத்தப்படுகிறார்கள் என்பது பலர் அறிந்தது.

இது பற்றி இன்னும் அழுத்தமான காட்சிகள் வைத்து இருக்கலாம் எனென்றால் படமே அதை மையப்படுத்தித் தானே!

ஆயுதங்கள்

படத்தில் அதி நவீன ஆயுதங்களைப் பயன்படுத்தும் படி காட்சிகள் வரும், அது பற்றி ஜெயம் ரவி விளக்கம் கொடுப்பது அருமை.

அது பற்றி அவர் தெரிந்து இருப்பதில் இருக்கும் உறுதியை அல்லது நம்பகத்தன்மையை அவர் பேச்சு கொடுக்கும்.

சண்டையின் போது வில்லன்கள் துப்பாக்கி வைத்து இருந்தும் இவர்களைச் சுடாமல் ஓடுவது ஏனோ!

ஜெயம் ரவியிடமிருந்து ஜீப்பை இந்தப் பெண்கள் எடுத்து (பிடுங்கி) செல்ல அது தாறுமாறாகச் சென்று மலையிலிருந்து கீழே விழுந்து விடும் .

ஆனால், ஜெயம் ரவி எந்த அதிர்ச்சியையும் காட்டாமல் இனி கவனமாக இருங்கள்! என்று கூறி விடுவார்.

நகரம் அதைச் சார்ந்த படங்களையே அனைத்து படங்களிலும் பார்த்து இருந்த அனைவருக்கும் ஒரு காட்டை அது பற்றிய செய்திகளைப் பார்த்தது ஒரு புது அனுபவம்.

இதில் காட்டைப் பற்றி விலங்குகளைப் பற்றிப் பல புதிய விசயங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

ஜெயம் ரவி

படத்திற்குப் பெரிய பலமே ஜெயம் ரவி தான் என்பது என் கருத்து.

அதிகாரி வேடத்திற்குத் தன்னைத் தேர்வு செய்ததை நியாயப்படுத்தும் விதமாக எந்தப் பெரிய குறையும் சொல்லிவிட வாய்ப்புக்கொடுக்காமல் சரவெடியாக நடித்துள்ளார்.

ஒரு சாதாரண நேர்மையான அதிகாரி தன் அதிகார எல்லை அறிந்து செய்வதை இதில் அப்படியே பிரதிபலித்துள்ளார் என்றால் மிகையில்லை.

கதாநாயகி இல்லாமல் வித்யாசமான கதை களத்துடன் படத்தைக் கொடுத்த ஜனநாதன் அவர்களுக்குப் பாராட்டுகள்.

படத்தில் குறைகள் லாஜிக் மீறல்கள் இருந்தாலும் அதை எல்லாம் பெரிது படுத்தாமல் படத்தை நாம் பாராட்டவில்லை என்றால் இனியும் இதைப் போலப் படங்களை எடுக்க முயற்சி செய்ய மாட்டார்கள்.

பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது, குறைகூறும் அளவில் எனக்கு எதுவும் தோன்றவில்லை.

கடைசியில் கஷ்டப்படுறவன் ஒருத்தன் பெயர் வாங்குபவன் இன்னொருத்தன் என்பதைக் காணும் போது கண்கலங்கியது.

“பேராண்மை” என் பார்வையில் சிறந்த படமே!

நடிப்பு: ஜெயம் ரவி, பொன்வண்ணன், வடிவேலு, ரோலண்ட் கிக்கிங்கர், ஊர்வசி
இசை: வித்யாசாகர்
ஒளிப்பதிவு: சதீஷ் குமார்
இயக்கம்: எஸ்பி ஜனநாதன்
தயாரிப்பு: ஐங்கரன் இன்டர்நேஷனல்

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

33 COMMENTS

  1. அருண் அதுக்குள்ளே பின்னூட்டம் போட்டுட்டீங்களா! அதிசயமா இருக்கு. நீங்க இணையத்தில் இருந்த நேரம் நான் பதிவிட்டு விட்டேனோ! 😉

  2. நிறை குறைகளை நுணுக்கமாகக் கவனித்து எழுதப் பட்டிருக்கும் விமர்சனம். படம் சுவாரஸ்யமாய் இருக்குமோ இருக்காதோ, நிச்சயமாய் உங்கள் விமர்சனம் எப்போதும் போலவே வாசிக்க சுவாரஸ்யம்:)!

  3. நல்லா இருக்குது விமர்சனம்

    //தயாரிப்பு: ஐங்கரன் இன்டர்நேஷனல்//

    ஐயய்யோ!

  4. டத்தில் குறைகள் லாஜிக் மீறல்கள் இருந்தாலும் அதை எல்லாம் பெரிது படுத்தாமல் படத்தை நாம் பாராட்டவில்லை என்றால் இனியும் இதை போல படங்களை எடுக்க முயற்சி செய்ய மாட்டார்கள் (நம்மாளுக தான் ஒரு படத்தையும் விட மாட்டேங்கறாங்களே மொக்கை சொத்தைனு கிண்டல் விமர்சனம் போட்டுடறாங்களே)

    சரியான 'நச்'

  5. நல்ல விமர்சனம். இது போன்ற படங்களில் logic பார்க்காமல் பாராட்டுவது நல்லது.

  6. சாரே.. படம் நன்னாயிட்டு உண்டு!!! (சில இடங்களில் தமிழில் DORA CARTOON பார்த்த ஞாபகம்)

  7. பேராண்மை பற்றி பல விமர்சனங்கள் படித்தாயிற்று, நம்ம கிரி என்னதான் சொல்லப் போறாப்லன்னு படிச்சேன், நல்லருக்கு கிரி.

    பிரபாகர்.

  8. //அவர் சட்டை கழட்டி ஆர்ம்ஸ் காட்டுவார் பாருங்க!.. ஸ்ஸ்ஸ்ஸப்பா முடியல! எனக்கு முன் வரிசையில் இருந்து இரு பெண்கள் இரகசியமாய் பேசிக்கொண்டு வெட்க்கப்பட்டு சிரித்தார்கள் … என்ன பேசினார்களோ! 😉 பெண்களுக்கே வெளிச்சம் நமக்கு அரைகுறை வெளிச்சம் ;-)//

    இது ஒன்னு தான் மற்றவர்கள் விமர்சனத்துக்கும் உங்களுக்கும் உள்ள விமர்சனம்!
    மற்றபடி பதிவில் ஒரு கணக்கு ஏறியுள்ளது!

  9. இரண்டாவது விமர்சனம் என்ற வார்த்தையை வித்தியாசம் என படிக்கவும்!

  10. கிரி

    விம‌ர்ச‌ன‌ம் ந‌ல்லா எழுதி இருக்கீங்க‌…

    படம் இன்னும் துபாய்ல‌ வ‌ர‌ல‌ன்னு நினைக்கிறேன்….

    ப‌ட‌ம் ஓகேவா… பார்க்க‌லாமா? ஏன்னா, இந்த‌ ப‌ட‌த்த பார்க்காம விட்டா அடுத்து "குருவி பார்ட்-2" தான் வ‌ரும் போல‌ இருக்கு… அந்த‌ டெர்ர‌ர்ல‌ இருந்து த‌ப்பிக்க‌த்தான் கேட்டேன்…

  11. பழங்குடி மக்கள் கருப்பான தோற்றம் உடையவர்கள் என்று உங்களிடம் யார் சொன்னது…அல்லது ஏதும் ஆராய்ச்சி முடிவுகளை வைத்து முடிவு செய்தீர்களா என்று தெரியவில்லை….தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் வாழும் காணி மக்களும்…..பள்ளத்தில் பயிர் செய்து விவசாயம் பார்த்ததால் பள்ளர் என்றழைக்கப் பெற்ற பள்ளர் இனத்திலும் வெண்மை நிறமுடைய மலைவாழ் மக்கள் ஏராளம் உள்ளனர்….மேலும் தென்கிழக்கில் அஸ்ஸாம் மேகாலயம் மற்றும் கேரளத்திலும் பழங்குடியினர் மக்களிடையே வெண்மை நிறமுடைய மக்கள் ஏராளம் உண்டு என்பதை தெரியப் படுத்துகிறேன்.

  12. நல்ல படத்தை நம்ம கிரி எப்போதுமே பாராட்ட தவறுவதில்லை

  13. அருமை…பரீட்சை முடிந்தவுடன் பார்க்கிறேன்…:-)

  14. நான் இன்னும் படம் பார்க்கவில்லை.ஆனால் உங்கள் விமர்சனத்தில் காணப்படும் அக்கறையும்,பொறுப்பும் என்னை மிகவும் கவர்ந்தன,கிரி.

    லாஜிக்கை ஆங்கிலப் படங்கள் மட்டுமே உடைக்கலாம் என்ற நம்மவர்களின் லாஜிக்கைத் தாண்டி எழுதி இருக்கிறீர்கள்.

    நன்றியும்,மகிழ்ச்சியும் கிரி.

  15. முக்கியமா ஒன்னு சொல்ல மறந்துவிட்டிர், இதே படத்தில் விஜயகாந்த் (இவன் பெயர சொல்றதுக்கே வெக்கமா இருக்கு) அல்லது அர்ஜுன் நடித்து இருந்தா அங்க காட்ட படுகிற அந்நிய சக்தி ஜிப்பா போட்டுக்கிட்டு நம்பில்கு நிம்பில்கு என்று பேசிக்கொண்டு தாடி வைத்துக்கொண்டு, ஒரு இஸ்லாமியர்கள தீவிர வாத்திய காட்டி இருப்பானுங்க பொறம்போக்குங்க. நல்ல வேல அங்க காமிச்ச தீவிர வாதிங்க வெல்ல காரண மட்டுமே காமிச்சி இருந்தாங்க அவங்கள எதோ கிறித்துவ தீவிர வாதியா காட்டல அதுவர ரூம்ப சந்தோசம்.

  16. முடிவுதான் ரொம்ப கேவலமா இருக்கு… பொன்வண்ணன் பழங்குடியனரை மட்டப்படுத்தியும் துன்புறுத்தியும் சாதனை செய்தாருன்னு நடுவன் அரசு விருது கொடுத்ததுதான் படத்தோட ஹைலைட்..சாதனை செய்தது யாரோ ஆனா விருது??

  17. பிரபாகர், ராமலக்ஷ்மி, ஈரா, உடன்பிறப்பு, சரவணகுமரன், பாலா, ஓவியா, ஹாட்வி, ரவிசங்கர், மானஸ்தன், வெயிலான், அருண்,கோபி, லெமுர்யா, டொன் லீ, ஷன்முகப்ரியன், ரோஸ்விக், கலாட்டா பையன் மற்றும் புனிதா வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

    @ஈரா மற்றும் கோபி

    கண்டிப்பா பாருங்க..யோசிக்கவே வேண்டாம்.

    @லெமுர்யா
    "பழங்குடி மக்கள் கருப்பான தோற்றம் உடையவர்கள் என்று உங்களிடம் யார் சொன்னது…அல்லது ஏதும் ஆராய்ச்சி முடிவுகளை வைத்து முடிவு செய்தீர்களா என்று தெரியவில்லை"

    :-)) ஆராய்ச்சி முடிவு எல்லாம் எதுவுமில்லைங்க லெமுர்யா.

    நான் கூறியதை திரும்ப ஒருமுறை படித்து பாருங்க நான் அந்த படத்தில் வருபவர்களை வைத்தே கூறினேன், ஒட்டு மொத்தமாக உள்ள பழங்குடி இன மக்களை கூறவில்லை. நீங்கள் படம் பார்க்கவில்லை என்றால் பார்க்கும் போது பாருங்கள் அவர்களில் ரவி மட்டுமே கலராக இருப்பார். அவர்களில் ஒருவேளை ரவியை போல ஒரு சிலர் இருந்திருந்தால் ஒருவேளை இப்படி தோன்றி இருக்காதோ என்னவோ!

    "தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் வாழும் காணி மக்களும்…..பள்ளத்தில் பயிர் செய்து விவசாயம் பார்த்ததால் பள்ளர் என்றழைக்கப் பெற்ற பள்ளர் இனத்திலும் வெண்மை நிறமுடைய மலைவாழ் மக்கள் ஏராளம் உள்ளனர்….மேலும் தென்கிழக்கில் அஸ்ஸாம் மேகாலயம் மற்றும் கேரளத்திலும் பழங்குடியினர் மக்களிடையே வெண்மை நிறமுடைய மக்கள் ஏராளம் உண்டு என்பதை தெரியப் படுத்துகிறேன்"

    தகவுலுக்கு நன்றி

    @ ஷண்முகப்ரியன்

    ஆமாம் சார் அதென்னமோ நம்மாளுங்க ஆங்கில படத்துல வருகிற டகால்ட்டி வேலைக்கெல்லாம் லாஜிக் பார்க்க மாட்டேங்குறாங்க..இதுல விழுந்து விழுந்து கவனிக்கறாங்க.

    @ கலாட்டாப்பையன்

    :-))

    @புனிதா

    "சாதனை செய்தது யாரோ ஆனா விருது??"

    அவர் படத்துல சொல்ல வந்ததே அது தான், அதாவது ரவியை போன்றவர்களின் உழைப்பு வீணடிக்கப்படுகிறது, புறக்கணிக்கப்படுகிறது என்பதை தான்..

    என்ன! அதை இன்னும் கொஞ்சம் லாஜிக்காக கூறி இருந்தால் சிறப்பாக இருந்து இருக்கும்.

  18. கிரி உங்களுக்கு மின் அஞ்சல் அனுப்பியாச்சு 🙂

  19. Hi Giri,
    It was a very good review..and your perspective was both thecnical and keen…i am definately going to watch it soon…

  20. அப்போ பேராண்மை பெரும்பான்மை மக்களுக்கு பிடிக்கும் போல!!!

  21. // சிங்கக்குட்டி said…
    கிரி உங்களுக்கு மின் அஞ்சல் அனுப்பியாச்சு :-)//

    எனக்கு வரவில்லை. contact@giriblog.com க்கு அனுப்புங்க.

    =======================================================

    //Abirami said…
    Hi Giri,
    i am definately going to watch it soon..//

    கண்டிப்பா பாருங்க.. இப்படி சொல்லிட்டு பார்க்காம விட்டுடாதீங்க!

    =======================================================

    // குறை ஒன்றும் இல்லை !!! said…
    அப்போ பேராண்மை பெரும்பான்மை மக்களுக்கு பிடிக்கும் போல!!!//

    🙂 இப்ப கொஞ்சம் எடிட் செய்து இருக்காங்க போல..படமும் பிக்கப் ஆகி விட்டது.

  22. ரெம்ப நாள் விட்டு ஒரு நல்ல படம் கொடுத்த பேராண்மை பட kuluvirrukku என பாராட்டுக்கள் … நல்லா இருக்குது விமர்சனம்….

  23. //ஜெயம் ரவி கலராக இருப்பதால் பழங்குடி மக்களில் ஒருவராக அவரை ஒப்பிட்டு பார்க்க முடியவில்லை ஆனால் அவர்களுடன் இணைந்து அதிக காட்சிகளில் இல்லாததால் அது ஒரு பெரிய விசயமாக தோன்றவில்லை.
    //

    🙂

    கலராக இருக்கிறவர்களெல்லாம் ஒருகாலத்தில் ஆடுமாடு மேய்த்த கூட்டம் தான். பழங்குடியினரில் ஆப்ரிக்கர், இந்தியர் தவிர்த்து வெள்ளையாக இருப்பவர்களும் உண்டு

  24. நல்ல விமர்சனம்….படத்தில் வருவது போன்று ஆங்கங்கே உங்களது "touching" அருமை…

    ஜெயம் ரவி கலராக இருப்பதால் பழங்குடி மக்களில் ஒருவராக அவரை ஒப்பிட்டு பார்க்க முடியவில்லை ஆனால் அவர்களுடன் இணைந்து அதிக காட்சிகளில் இல்லாததால் அது ஒரு பெரிய விசயமாக தோன்றவில்லை.

    இந்தப்படத்தில் ஜெயம் ரவி பேசுவது பெரும்பாலும் ஆங்கில கலப்பு இல்லாத தமிழ் சொற்களே! (நம்ம நிலைமைய பார்த்தீங்களா!).

    எந்த அதிர்ச்சியையும் காட்டாமல் எதோ! டிபன் பாக்ஸ் கீழே விழுந்தது போல சரி! இனி கவனமாக இருங்கள்! என்று கூறி விடுவார், நம்பும்படி இல்லை.

    (ஜெயம் ரவி என்ன சொன்னாலும் அந்த பெண்கள் என்னவோ டிபன் பாக்ஸ் கீழ விழுந்த மாதிரிதான் நடுந்து கொள்வார்கள் என்பது என் கருத்து)

  25. 0ct 25th nan partha padam, rasithu parthen nengal sonna mathiri padathil kattapattathu kurive(ponvanan character) nija vazhkayil migaum mosamagave nadanthu kolgirargal nam makkal.

  26. u told The color Ravi is not matched for ST, who told that In my college(Govt engg college) when i studied all the other state students are ST Came from Mizoram and Imashal they were in wheat color.

  27. //adhasivam said…
    நல்ல விமர்சனம்….படத்தில் வருவது போன்று ஆங்கங்கே உங்களது "touching" அருமை//

    நன்றி சதா! 🙂

    //ஜெயம் ரவி என்ன சொன்னாலும் அந்த பெண்கள் என்னவோ டிபன் பாக்ஸ் கீழ விழுந்த மாதிரிதான் நடுந்து கொள்வார்கள் என்பது என் கருத்து//

    ஹா ஹா ஹா

    ===============================================================

    // நாகராஜன் said…
    ரெம்ப நாள் விட்டு ஒரு நல்ல படம் கொடுத்த பேராண்மை பட kuluvirrukku என பாராட்டுக்கள், நல்லா இருக்குது விமர்சனம்..//

    நன்றி நாகராஜன்

    ===============================================================

    // கோவி.கண்ணன் said…
    கலராக இருக்கிறவர்களெல்லாம் ஒருகாலத்தில் ஆடுமாடு மேய்த்த கூட்டம் தான். பழங்குடியினரில் ஆப்ரிக்கர், இந்தியர் தவிர்த்து வெள்ளையாக இருப்பவர்களும் உண்டு//

    இந்தியாவிலேயே வெள்ளையாக இருப்பவர்கள் உண்டு தான்.

    ===============================================================

    // Mathar said…
    0ct 25th nan partha padam, rasithu parthen nengal sonna mathiri padathil kattapattathu kurive(ponvanan character) nija vazhkayil migaum mosamagave nadanthu kolgirargal nam makkal.//

    ரொம்ப பாவங்க அவர்கள்.

    //u told The color Ravi is not matched for ST, who told that In my college(Govt engg college) when i studied all the other state students are ST Came from Mizoram and Imashal they were in wheat color./

    ஆஹா! ஏங்க நான் அந்த காட்சியில் வருபவர்களை மட்டுமே கூறி உள்ளேன் 🙂 அனைவரையும் அல்ல.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!