சிங்கப்பூரை அதிரவைத்த தைப்பூசம்

60
சிங்கப்பூரை அதிரவைத்த தைப்பூசம் Singapore thaipoosam

மிழகத்தில் கொண்டாடப்படும் தைப்பூசத்திற்குச் சற்றும் குறைவில்லாத கொண்டாட்டங்கள் பல வெளிநாடுகளில் கொண்டாடப்படுகிறது.

அதுவும் தமிழர்கள் அதிகம் நிறைந்த சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் கேட்கவே வேண்டாம்.

சிங்கப்பூரை அதிரவைத்த தைப்பூசம்

சிங்கப்பூர் குட்டி இந்தியாவில் உள்ள பெருமாள் கோவிலில் இருந்து காவடி புறப்பட்டு டோபி காட் என்ற இடத்தில் உள்ள தண்டாயுதபாணி முருகன் கோவிலை அடைகிறது.

தோராயமாக மூன்று கிலோ மீட்டர் தூரம் இருக்கும்.

வழி நெடுக காவடி ஊர்வலம் செல்லப் பாதை ஒதுக்கிக் கொடுத்திருந்தார்கள், நம்மவர்கள் மேள சத்தத்துடன் நொறுக்கி தள்ளிட்டு போயிட்டு இருக்காங்க. வேடிக்கை பார்க்காதவர்களே கிடையாது.

வெளிநாட்டினர் காத்திருந்து பார்க்கிறார்கள், வழி நெடுக ஊர்வலத்தைப் பார்வையிட பார்வையாளர்களுக்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது, தண்ணீர் பந்தலும் உண்டு.

காலை 7.30 மணிக்குச் சென்றேன், அதற்கு முன்பு இருந்தே காவடி வந்து கொண்டு இருந்தது மாலை வரை வந்து கொண்டு இருந்தார்கள், அப்படியொரு கூட்டம்.

போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைக்காகப் பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. படத்தில் உள்ளவர்கள் இதற்காக வந்தவர்களே.

வெளிநாட்டினர் காலையில் இருந்த படம் எடுக்கக் குவிந்து விட்டனர், அதில் ஒருவர் ஸ்டேன்ட் எல்லாம் வைத்துப் படமாகச் சுட்டு தள்ளிக்கொண்டிருந்தார்.

தண்ணீர்பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது, இங்கு வருபவர்கள் அனைவருக்கும் உணவு தண்ணீர் இலவசமாக வழங்கப்பட்டன.

கோவிலினுள் சென்று பார்க்க முடியாதவர்கள் கடவுளைத் தரிசிக்க வெளியே பெரிய திரை அமைக்கப்பட்டு இருந்தது.

ஏகப்பட்ட வெளிநாட்டினர் காவடி மற்றும் அலகு குத்துதல் பார்க்க வந்து இருந்தனர். அதில் ஒரு குடும்பம் இவர்கள். இதில் இரண்டு பொடிசுகள் காவடிக்கு வந்தவர்கள் அடித்த ட்ரம்ஸ் சத்தத்திற்குச் செம ஆட்டம் போட்டார்கள் 🙂 .

மிரளவைத்த பக்தர்.

தமிழர்கள் மட்டுமல்ல சீனர்களும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற அலகு குத்தி காவடி எடுத்து வந்தார்கள். அதில் இவர் செம ஆட்டம் போட்டார்.

பாவம்! என்ன இவருக்கு ட்ரம்ஸ் அடிக்க ஆள் இல்ல. இருந்தாலும் பக்கத்து குழு அடித்த சத்தத்துக்கு இவர் சுத்து சுத்துன்னு சுத்திட்டார் 🙂 .

மற்றொரு சீனர் குழு பால்குடம் எடுத்து வந்தார்கள், இவர்கள் ஸ்டைலில் ட்ரம்ஸ் அடித்தார்கள், செம அடி. சும்மா கிர்ர்ர் னு இருந்தது.

பட்டய கிளப்பிட்டாங்க. அதுவும் வித்யாசமா ஒலி எழுப்பினாங்க…. உடம்பெல்லாம் மின்சாரம் பாய்ந்த மாதிரி இருந்தது.

இந்த அம்மாவிற்குக் கோவில் அருகே வந்தவுடன் அருள் வந்து விட்டது. அனைவரையும் மிரட்டி விட்டார் 🙂 .

அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு

பால் குடம் எடுத்து வந்த பக்தர் இவர், கோவில் அருகே வர வர இவரைப் பிடிக்கவே முடியவில்லை, அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு மாதிரி திமிறிட்டு இருக்கிறார்.

நான்கு பேர் போட்டு இவரை அமுக்கியும் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை, ஆனால், எப்படி இருந்தும் தலையில் இருந்த பால் குடத்தை மட்டும் விடவில்லை.

இவர் ஜிம் க்கு போவாரு போல! 🙂 வழி நெடுக முறுக்கிக் கிட்டே ஜெய் ஜாண்டிக்கா நடந்து வந்தாரு. நிற்கும் போது கூட இரண்டு கையையும் இடுப்புக்கு கொடுத்துக் கம்பீரமா தான் நின்னாரு.

இவர் ஒரு வெளிநாட்டவர், சும்மா அர்னால்ட் கணக்கா இருக்காரு ஆனால், அமைதியா தான் இருந்தாரு.

ஆணி செருப்பு அணிந்து வந்தவர்.

சுருட்டு சாமியார் மாதிரி இவர் சுருட்டு பக்தர் :-). சுருட்டோட தான் வந்தாரு, அதோட ஒரு ஆட்டம் வேற போட்டாரு.. ஒண்ணும் சொல்றதுக்கில்ல 🙂 .

இவர் ஒரு சீனர் குடும்பத்துடன் வந்து இருந்தார்.

இவங்க ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர் போல.. அவங்க பாட்டைப் பாடிட்டு கலக்கி எடுத்தாங்க.

ஒலி பெருக்கி, வாத்தியம் வைத்து அசத்திட்டாங்க. இவங்களைப் பார்க்கக் கூட்டம். இவங்க அலகெல்லாம் குத்தவில்லை.

கோவில் கோபுரத்தைப் பார்த்த படியே வரும் ஒரு பெண் பக்தர்.

டாக் ஆஃப் த ஆட்டம்

இவர் தாங்க டாக் ஆஃப் த ஆட்டம்.

இவர் தண்ணீர் பந்தல் அருகே வந்தவுடன் அங்கே உள்ள ஒலி பெருக்கியில் “குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்” பாட்டைப் போட்டாங்க பாருங்க.. மவனே.. என்னா ஆட்டம்ங்றீங்க!

சும்மா வெளு வெளுன்னு வெளுத்துட்டாரு, எனக்குக் கை கால் எல்லாம் பரபரன்னு ஆகி விட்டது. செமையா ஆடுனாரு.. மிரண்டு போயிட்டேன்.

அவரது நண்பர்கள் அவர்கள் ட்ரம்ஸில் கலக்கு கலக்குன்னு கலக்கிட்டாங்க.

அதனால் செம குஷி ஆகிட்டாரு..அனைவரும் உற்சாகப்படுத்தியவுடன் பட்டய கிளப்பிட்டாரு. நான் போகும் போது பாதி முடிந்து விட்டது.

எனக்கு அது பெரிய ஏமாற்றம் ஆகி விட்டது 🙁 .கடைசி வரை சோர்வடையாமல் உற்சாகமாக இருந்தார்.

இவர் சும்மா கர கர கரன்னு சுத்துறாரு. பக்கத்துல எவரும் வர முடியாது போலப் பின்னிப் பெடலெடுத்துட்டாரு ..படத்தைப் பார்த்தாலே உங்களுக்குப் புரியும்.

இவர் பால் குடம் எடுத்து வந்த பக்தர், இவரையும் அடக்க முடியல, ஆனால் பால் குடத்தை உடன் வந்தவர் தான் பிடித்து வந்தார்.

என்ன நடக்குதுன்னே அவருக்குத் தெரிந்து இருக்காது என்று நினைக்கிறேன்.

குறையாத கூட்டம்

நானும் கூட்டம் இதோட முடிந்து விடும், காவடி நின்று விடும் என்று நினைத்துட்டே இருக்கிறேன்..அது குறைந்த மாதிரியே தெரியல.. வராங்க வராங்க வராங்க வராங்க சரமாரியா வந்துட்டே இருக்காங்க.

எனக்குக் கண்ணைக் கட்டி விட்டது.

ஆறு மணி நேரமா நின்று இடுப்பு கழண்டு விட்டது, அதனால் இனி வேலைக்காகாது என்று உள்ளே சென்று சாமி கும்பிட்டு விட்டு, கிளம்பிட்டேன்.

குட்டி இந்தியாவில் காவடி எடுத்துச் செல்பவர்கள் செல்ல வழி தடுப்பு வைத்து அமைத்து இருந்தார்கள்.

ட்ரம்ஸ் எல்லாம் வைத்து வழி முழுவதும் அசத்து அசத்துனு அசத்திட்டாங்க நம்ம மக்கள்.

வேடிக்கை பார்க்காதவர்களே கிடையாது, ஒரு சில வேன் பேருந்து ஓட்டுனர்கள் அவர்கள் அருகே நிறுத்தி வணங்கிச் சென்றனர்.

எனக்கு அங்கே அடிக்கிற அடிக்கு ஆட்டம் போட்டே ஆக வேண்டும் போல ஆகி விட்டது, சூப்ப்ப்ப்ப்ப்பரா இருந்தது.

அசத்திய கோவில் நிர்வாகமும் அரசாங்கமும்

மொத்தத்துல தைப்பூசம் சிங்கப்பூரை என்ன சங்கதி என்று கேட்டு விட்டது 🙂 . அரசாங்கம் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்து இருந்தது.

கோவில் பகுதியில் ஒரு பக்கம் போக்குவரத்தையே வேறு பக்கம் திருப்பி விட்டார்கள். காவலர்களும் ஏகப்பட்ட பேர் பணியில் அமர்த்தப்பட்டு இருந்தனர்.

தைப்பூசம் சிறப்பாக நடந்ததற்குக் கோவில் நிர்வாகம் செய்து இருந்த ஏற்பாடுகளும், அதற்குத் துணையாக இருந்த அரசாங்கமும் முக்கியக் காரணம்.

இவ்வளவு கூட்டத்தை வைத்துச் சிறப்பாக ஒரு திருவிழாவை நடத்துவது என்பது சாதாரண விசயமாகப் படவில்லை.

சிங்கப்பூரை அதிரவைத்த தைப்பூசம் என்றால் மிகையல்ல.

Read : சிங்கப்பூர் தைப்பூசம் | குவிந்த வெளிநாட்டினர்!

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

60 COMMENTS

 1. //வேண்டுகோள்

  கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் மற்றும் அலகு குத்துவதில் உடன்பாடு இல்லாதவர்கள், நம்பிக்கையுள்ளவர்கள் மனம் புண்படும் படியான கருத்துக்கள் தெரிவிப்பதை தவிர்க்கவும் //

  மருந்து குடிக்கும் போது….

  அரோகரா அரோகரா…

 2. சரி சரி நீ மொட்டை போட்டு இருக்கியா சொல்லு.

 3. தைப்பூசத் திருநாளை உங்கள் பதிவென்ற தேரிலே ஏற்றி
  எங்கள் பார்வைக்குத் தந்தமைக்கு நன்றி கிரி.

 4. சிறந்த படங்கள் மற்றும் கருத்துக்கள்/கமண்டுகள்

  //ஆறு மணி நேரமா நின்று இடுப்பு கழண்டு விட்டது, அதனால் இனி வேலைக்காகாது என்று உள்ளே சென்று சாமி கும்பிட்டு விட்டு, கிளம்பிட்டேன்//
  இறுதியாக நண்பர் ஒருவர் லிட்டில் இந்தியாவில் இரவு 9:30கு பார்த்த போதும் காவடி சென்று கொண்டிருந்ததாக சொன்னார்.

  சனி இரவு ஒஉற்றம் பார்க் கோவிலில் இருந்து வெள்ளி தேர் முருகன் உடன் நகரத்தார்கள் காவடி எடுத்து செல்வதும் தனி அழகு, ஆனால் நீங்கள் பார்த்து போல் அலகு எல்லாம் இருக்காது 🙂 ( “நான் கடவுள்” அன்று மிஸ் ஆனதில் ஒரு திருப்தி. )
  http://www.sttemple.com/

  அடுத்த ஆண்டு இருவரும் பார்க்கலாம் 🙂

 5. படமும் கட்டுரையும் அருமை… பார்த்த அனுபவத்தை கொடுத்து விட்டீர்கள்…

 6. பதிவுக்கும் முக்கியமாக படங்களுக்கும் நன்றி.புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களும் குறிப்பாக ஈழ மண்ணிலே வாழ்பவர்களும் தேருடன் அந்தரத்தில் தொங்கிக்கொண்டு அலகு குத்துவது போன்ற நிகழ்வுகளை நிகழ்த்துகிறார்கள்.

 7. //கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் மற்றும் அலகு குத்துவதில் உடன்பாடு இல்லாதவர்கள், நம்பிக்கையுள்ளவர்கள் மனம் புண்படும் படியான கருத்துக்கள் தெரிவிப்பதை தவிர்க்கவும்//

  நட்புரீதியில் வேண்டுகோள் ஏற்றுகொள்ளப்பட்டது,

  அதேபோல் இதெல்லாம் ஒரு மேட்டருன்னு பதிவாக போடுவதையும் தவிர்க்கவும்

 8. //கோவி.கண்ணன் said…
  மருந்து குடிக்கும் போது….
  அரோகரா அரோகரா…//

  முருகா! என்னே! உன் சோதனை முதல் பின்னூட்டமே நாத்திகவாதிகிட்ட இருந்தா! :-)))

  //சரி சரி நீ மொட்டை போட்டு இருக்கியா சொல்லு.//

  யோவ்! நான் மொட்டை போட்டா என்ன போடாட்டி என்ன? நாத்திகவாதிக்கு தைபூசத்துல என்ன வேலை 😉

  எந்த பதிவுக்கு வரக்கூடாதோ அதுக்கு தான்யா இவரு சரியா வராரு 🙂

  முருகா! இந்த கோவி கண்ணனுக்கு நல்ல புத்திய கொடுப்பா 🙂

  ===================================================================

  ராமலக்ஷ்மி, நான் ஆதவன், லோகன், சரவணகுமரன், வடுவூர் குமார், அசோசியேட், ஜோ, ராஜ நடராஜன் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி ..

  ஒரே பதிலை தனி தனியா கூறி மொக்கை போட வேண்டாம் என்று ஒரே நன்றியாக கூறி விட்டேன்.

  ===================================================================

  //வால்பையன் said…
  நட்புரீதியில் வேண்டுகோள் ஏற்றுகொள்ளப்பட்டது//

  தப்பிச்சாங்கடா “சாமி”!!! 😉

  //அதேபோல் இதெல்லாம் ஒரு மேட்டருன்னு பதிவாக போடுவதையும் தவிர்க்கவும்//

  அருண் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி, அவங்கவங்களுக்கு அவங்கவங்க நியாயம். உங்களுக்கு இது ஒன்றுமில்லாத விசயமாக இருக்கலாம் ஒரு சிலருக்கு இது தான் முக்கிய விசயமாக இருக்கலாம்.

  நம் கருத்தை நம்முடனே வைத்து கொள்வோமே, மற்றவர்கள் உணர்வுகளை சரியா தவறா என்று நாம் தீர்மானிக்க முடியாது. நம் செயல்கள் பல மற்றவர்களால் ஏற்று கொள்ள முடியாததாக இருக்கலாம், அதற்காக மற்றவர்கள் நம்மை இதை செய்யாதே என்று கூற எப்படி உரிமை கிடையாதோ அதே போல நமக்கும் கிடையாது.

  இந்த வேண்டுகோள் வைக்கவில்லை என்றால் நீங்க என்ன பின்னூட்டம் போட்டு இருப்பீங்கன்னு எனக்கு தெரியும் :-).

  மதிச்சதுக்கு நன்றி 🙂

 9. அருமையான படத்தொகுப்பு கிரி..

  அப்படியே என்னென்ன பாட்டுக்கு ஆடினார்கள் என்று போட்டிருந்தாலும் நல்லாயிருந்திருக்கும்…:-)))

 10. //வேண்டுகோள்

  கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் மற்றும் அலகு குத்துவதில் உடன்பாடு இல்லாதவர்கள், நம்பிக்கையுள்ளவர்கள் மனம் புண்படும் படியான கருத்துக்கள் தெரிவிப்பதை தவிர்க்கவும் //

  ரைட்டு……..

 11. பல வருடங்கள் இருந்தாலும் அங்கு போய் பார்த்ததில்லை,ஒருவேளை வேலை நாளாக இருந்திருக்ககூடும்.
  படங்கள் நன்றாக இருந்தது.

 12. படங்களும் எழுத்துநடையும் அருமை. எங்கள் ஊரில் ஆடி திருவிழாவிற்கு இப்படிதான் அழகு குத்தி வருவார்கள். அதை பார்த்த உணர்வு.

 13. “சிங்கம்புரம்” என்று சீனத்து பட்டுமேனி பெயரை மாற்றி அமைக்கக்கூடும் இனி வரும் காலங்களில்….
  வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !

 14. பிரபாகரன், டொன் லீ, SKY , புதுவை தமிழன், அப்துல்லா, நல்லதந்தி, வெயிலான் மற்றும் நசரேயன் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி

  //அப்படியே என்னென்ன பாட்டுக்கு ஆடினார்கள் என்று போட்டிருந்தாலும் நல்லாயிருந்திருக்கும்…:-)))//

  அவங்க புத்தகம் வைத்து பாடிட்டு இருந்தாங்க, எனக்கு இந்த பாட்டு ஒன்று தான் தெரிந்த பாட்டு ஹி ஹி

  //அண்ணே இப்பல்லாம் பூசம் தமிழ்நாட்டவிட வெளிநாட்ல உள்ள நம்ப ஆளுங்கதான் சிறப்பா கொண்டாடுறாங்க//

  அப்துல்லா! பழனியில் சூப்பரா இருக்கும் … ஒரு முறையாவது அங்கே போக நினைக்கிறேன் ..ஆனா கூட்டத்தை நினைத்து பயமா இருக்கு

  //கோவி அண்ணே, கிரி அண்ணே அடுத்தவங்களுக்கு மொட்டை போடாத நல்ல மனுசனா இருக்காரே!! அதப் பாராட்டுங்கண்ணே :))//

  கோவி க(அ)ண்ணன் இம்சை தாங்க முடியல :-)))

 15. //தமிழகத்தில் கொண்டாடப்படும் தைப்பூசத்திற்கு சற்றும் குறைவில்லாத கொண்டாட்டங்கள் பல வெளிநாடுகளில் கொண்டாடப்படுகிறது.//

  என்னாது தமிழகத்தில் கொண்டாடப்படும் தைப்பூசத்திற்கு சற்றும் குறைவில்லாதவா??? அண்ணே இப்பல்லாம் பூசம் தமிழ்நாட்டவிட வெளிநாட்ல உள்ள நம்ப ஆளுங்கதான் சிறப்பா கொண்டாடுறாங்க. நான் சிறு வயதில் பார்த்த பூசம் இங்கு இல்லை. ஆனால் சிங்கையில் உள்ள என் மாமனார் வருடா வருடம் கூட்டமும், கொண்டாட்டமும் சிங்கையில் அதிகரித்தே வருவதா சொல்றாரு

 16. // கோவி.கண்ணன் said…
  சரி சரி நீ மொட்டை போட்டு இருக்கியா சொல்லு.

  //

  கோவி அண்ணே, கிரி அண்ணே அடுத்தவங்களுக்கு மொட்டை போடாத நல்ல மனுசனா இருக்காரே!! அதப் பாராட்டுங்கண்ணே :))

 17. அருமை! அற்புதமான படங்கள்.நான் சில வருடங்கள் தொடர்ச்சியாக தை பூசத்துக்கு வடலூர் போய்க்கிட்டு இருந்தேன். இந்த வருடம் போகமுடியலை :(. அந்தக் குறையை இந்த கட்டுரையும், படங்களும் தீர்த்து வைத்து விட்டன!.

 18. சூப்பர் படங்கள்!
  சூப்பர் தைப்பூசம்!

  //இதில் இரண்டு பொடிசுகள் காவடிக்கு வந்தவர்கள் அடித்த ட்ரம்ஸ் சத்தத்திற்கு செம ஆட்டம் போட்டார்கள்//

  இதுல கிரி படம் எங்கே? 🙂

  //பெருமாள் கோவிலில் இருந்து காவடி புறப்பட்டு//
  //தண்டாயுதபாணி முருகன் கோவிலை அடைகிறது//

  சூப்பரோ சூப்பர்!
  இரு தமிழ்க் கடவுள்கள் மாயோனுக்கும் சேயோனுக்கும், இப்படிக் காவடி கனெக்சன் கொடுத்த கிரியே வாழ்க! 🙂

 19. //சும்மா வெளு வெளுன்னு வெளுத்துட்டாரு(எனக்கு கை கால் எல்லாம் பரபரன்னு ஆகி விட்டது). செமையா ஆடுனாரு..நான் மிரண்டு போயிட்டேன்//

  இந்த வருசம் மிரட்சி!
  அடுத்த வருசம் புரட்சி!
  நீங்களே ஆடு ஆடு-ன்னு ஆடப் போறீங்க-ன்னு நினைக்கிறேன்! :))

  கோவி அண்ணா,
  அருள் வந்த நம்ம கிரியை மலை ஏத்துற வேல உங்களுது-ன்னு இப்பவே அப்பாயின்ட் பண்ணி வைக்கறேன்! 🙂

 20. //சுருட்டு சாமியார் மாதிரி இவர் சுருட்டு பக்தர் :-)). சுருட்டோட தான் வந்தாரு, அதோட ஒரு ஆட்டம் வேற போட்டாரு..ஒண்ணும் சொல்றதுக்கில்ல :-))//

  அட…என்ன கிரி…முருகனே சுருட்டு பிடிக்கிறான்! அந்த மேட்டர் தெரியாதுங்களா? ஹிஹி! இக்கட சூடு! :)))

  http://madhavipanthal.blogspot.com/2008/05/blog-post.html
  விராலிமலை முருகப்பெருமான் பிடிக்கும் சுருட்டு பீடி!

 21. நடந்ததை நடந்தபடியே சொன்ன அருமையான பதிவு.
  படங்களும் சூப்பர்.

  இந்த ஊர்லே பாருங்க பெரிய திரையில் கோவில் உள்ளே நடக்கும் பூசையை காட்டுராங்க. உள்ளே போகலைன்னாலும் வெளியே இருந்தே பார்த்துத் தரிசனம் ஆயிருது.

  கோவிலின் உள்ளே மூலவரைப் படம் எடுத்தாலும் ஒன்னும் சொல்றதில்லை.
  அருளுக்கும் பொருளுக்கும் பஞ்சம் வந்துருச்சா என்ன?

  நம்ம தமிழ்நாட்டுலேதான் இல்லாத கெடுபிடிகள்(-:

  ஒரு இடத்தில் வச்சுருந்த காந்தி சிலையைக்கூடப் படம்பிடிக்கத் தடா(-:

  இப்படி இருந்தா என்னாத்தை பதிவு போடுறது சொல்லுங்க:-))))

 22. //kannabiran, RAVI SHANKAR (KRS) said…
  சூப்பர் படங்கள்!
  சூப்பர் தைப்பூசம்!//

  நன்றி KRS

  //இதுல கிரி படம் எங்கே? :)//

  விளம்பரம் வேண்டாம்னு தான் ஹி ஹி ஹி

  //இந்த வருசம் மிரட்சி!
  அடுத்த வருசம் புரட்சி!
  நீங்களே ஆடு ஆடு-ன்னு ஆடப் போறீங்க-ன்னு நினைக்கிறேன்! :))//

  ஆட்டம் போடுவதில் பெரிய ஆளு நாங்க.. வாய்ப்பு தான் சரியா கிடைக்க மாட்டேங்குது 😉

  //கோவி அண்ணா,
  அருள் வந்த நம்ம கிரியை மலை ஏத்துற வேல உங்களுது-ன்னு இப்பவே அப்பாயின்ட் பண்ணி வைக்கறேன்! :)//

  நல்ல ஆளை பார்த்து சொன்னீங்க போங்க :-))))

  என்னை குப்புற தள்ளிவிட்டுட்டு போய்டுவாரு ஹா ஹா ஹா

  //அட…என்ன கிரி…முருகனே சுருட்டு பிடிக்கிறான்! அந்த மேட்டர் தெரியாதுங்களா? ஹிஹி! இக்கட சூடு! :)))//

  ஆஹா! அப்படியா! படித்து விட்டு கருத்து கந்தசாமி ஆகிறேன் 😉

  ===================================================================

  முரளிகண்ணன் வருகைக்கு நன்றி

  ===================================================================

  //துளசி கோபால் said…
  நடந்ததை நடந்தபடியே சொன்ன அருமையான பதிவு.
  படங்களும் சூப்பர்.//

  நன்றி மேடம்

  //நம்ம தமிழ்நாட்டுலேதான் இல்லாத கெடுபிடிகள்(-://

  நம்ம ஊர்ல தான் எல்லாத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்க ஒரு கோஷ்டி தயாரா இருக்கே 😉

  //ஒரு இடத்தில் வச்சுருந்த காந்தி சிலையைக்கூடப் படம்பிடிக்கத் தடா(-://

  அடப்பாவிகளா! இது நெம்ப ஓவரா இருக்கே

  //இப்படி இருந்தா என்னாத்தை பதிவு போடுறது சொல்லுங்க:-))))//

  :-)))))

  ===================================================================

  //கானா பிரபா said…
  😉 kalakkal boss//

  நன்றி கானாபிரபா உங்கள் முதல் வருகைக்கும் சேர்த்து

 23. என்னாது தமிழகத்தில் கொண்டாடப்படும் தைப்பூசத்திற்கு சற்றும் குறைவில்லாதவா??? அண்ணே இப்பல்லாம் பூசம் தமிழ்நாட்டவிட வெளிநாட்ல உள்ள நம்ப ஆளுங்கதான் சிறப்பா கொண்டாடுறாங்க. நான் சிறு வயதில் பார்த்த பூசம் இங்கு இல்லை. ஆனால் சிங்கையில் உள்ள என் மாமனார் வருடா வருடம் கூட்டமும், கொண்டாட்டமும் சிங்கையில் அதிகரித்தே வருவதா சொல்றாரு

  yes yes yes

 24. சேர்த்து தந்த படங்கள் அத்தனையும்
  வார்த்து எடுத்த தங்கங்கள்
  பார்த்து பார்த்து பரவசமானேன்
  கோர்த்த கரங்களுடன் நன்றி கிரி

 25. கிரி மலேசியாவில் தான் இப்படி தைப்பூசம் கொண்டடுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். உங்கள் பதிவு மூலமாகத் தான் சிங்கையிலும் இப்படி கொண்டாடுவார்கள் என்றுத் தெரிந்துக் கொண்டேன். நல்லாப் பதிவு. பாராட்டுகள்.

 26. **************
  நான் சில வருடங்கள் தொடர்ச்சியாக தை பூசத்துக்கு வடலூர் போய்க்கிட்டு இருந்தேன்.
  **************
  நல்லதந்தி,

  வடலூரா ? வயலூரா ?

 27. வலைபூக்கள், சிவாஜி, சேகர்(முதல் வருகை), மோகன், மணிகண்டன், பாண்டித்துரை, ஜோதிபாரதி, வினோ மற்றும் தமிழன் வருகைக்கு நன்றி

  //வடலூரா ? வயலூரா ?//

  மாற்றி கூறி விட்டார் என்று நினைக்கிறேன் 🙂

  //வளைச்சு வளைச்சு சுட்டிருக்கிங்க//

  உண்மையாகவே வளைச்சு வளைச்சு தான் எடுத்தேன் ஹி ஹி

  //புது முகவரிக்கு வாழ்த்துக்கள்..!//

  வாழ்த்து கூறிய தமிழன் அவர்களுக்கு என் நன்றி 🙂

 28. வடலூர் என்பதே சரி.

  அங்கேதான் இராமலிங்க அடிகளின் ஆஸ்ரமத்தில் தைப்பூசம் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது.
  மிகப்பெரிய அளவில் அன்னதானம் நடைபெறும்.

 29. *******
  வடலூர் என்பதே சரி.

  அங்கேதான் இராமலிங்க அடிகளின் ஆஸ்ரமத்தில் தைப்பூசம் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது.
  மிகப்பெரிய அளவில் அன்னதானம் நடைபெறும்.

  *******

  நன்றி துளசி மேடம். எனக்கு இது சுத்தமாவே தெரியாது.

  ஆனா வயலூர்லையும் விமரிசையா கொண்டாடுவாங்க.

 30. //மணிகண்டன் said…
  நன்றி துளசி மேடம். எனக்கு இது சுத்தமாவே தெரியாது.
  ஆனா வயலூர்லையும் விமரிசையா கொண்டாடுவாங்க.//

  யாராவது இந்த இரண்டு இடத்தையும் விளக்கமா கூறினா நல்ல இருக்கும்

  KRS வருக வருக 🙂

  ===================================================================

  //IV said…
  சிங்கபூரில் தைப்பூசத்தை பார்க்க பாதிக்க தங்களின் அருமையான பதிவு!
  வாழ்த்துக்கள்//

  நன்றி வேலுச்சாமி உங்கள் முதல் வருகைக்கும் சேர்த்து

  ===================================================================

  ராஜா என்ன என்னை திட்டுறீங்க :-))))

  வயலூர் வடலூர் பற்றி ஏதாவது தகவல் கூற நினைத்தீர்களா!

 31. ஏற்கனவே படிச்சுட்டேன்.. பின்னூட்டம் போட மறந்துட்டேன். 🙂

  நல்ல பதிவு.. இது நான் எதிர்பார்த்த பதிவு தான் 🙂

  கடைசி போட்ட.. ”லிட்டில் இந்தியா” பேருந்து நிறுத்ததில் இருந்து எடுத்தது போல தெரியுது 🙂

 32. //ஆளவந்தான் said…
  ஏற்கனவே படிச்சுட்டேன்.. பின்னூட்டம் போட மறந்துட்டேன். 🙂
  நல்ல பதிவு.. இது நான் எதிர்பார்த்த பதிவு தான் :)//

  நன்றி ஆளவந்தான்

  //இது ஐம்பதாவது பின்னூட்டம் ? :)//

  51. நன்றி 🙂

 33. சிங்கப்பூரில் புனர்பூசத்தன்றே களைகட்டிவிடும். புனர்பூசத்தன்று மாலை சுமார் 6.00 மணியளவில் சைனாடவுனில் உள்ள லயன் சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து நகரத்தார்கள் மற்றும் பொதுமக்கள் சூழ செட்டிக்காவடிகளுடன் முருகன் வெள்ளிரதத்தில் புறப்பட்டு டாங் ரோடு ஆலயத்தை சுமார் இரவு 10.00 மணியளவில் வந்து சேர்வார்கள். இந்த ஊர்வலம் எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல் முருகன் பாடல்களை மட்டுமே பாடி வருவார்கள். 10.00மணிமுதல் 11.00 மணி வரை பொதுமக்கள் முருகனுக்கு சீர்வரிசை எடுப்பார்கள். பிறகு சுமார் 11.00 மணியளவில் முருகன் பக்த்தர்கலுக்கு ஊஞ்சலில் தரிசனம் கொடுப்பார். சுமார் 11.45 மணிக்கு அர்த்த சாமம் நடைபெற்று ஆலயம் நடை சாத்தப்பெரும். உடனே 15~20 நிமிடங்களில் மருபடியும் ஆலயம் திறக்க காத்துஇருக்கும் பால்குடத்துடன் அதிகாலை சுமார் 12.01க்கு பூசம் துவங்கும்.
  இந்த ஆண்டு கடைசிக்காவடி பின்னிரவு சுமார் 1.00மணியளவில் (அதாவது மறுநாள் அதிகாலை) வந்தது. 2.00~2.30 மணிக்கு அர்த்த சாமம் நடைபெற்று ஆலயம் நடை சாத்தப்பட்டது.

  உடனே ஆலயத்தை சுத்தம் செய்ய துவங்கி அதிகாலை 5.00 மணிக்குள் ஆலயமும் சுத்து வட்டாரமும் சுத்தமாகிவிடும். மறுநாள் காலை வந்து பார்த்தால் இந்த இடமா அது எனத்தோன்றூமளவுக்கு சுத்தமாக இருக்கும்.

 34. தகவலுக்கு நன்றி ராஜா.

  //உடனே ஆலயத்தை சுத்தம் செய்ய துவங்கி அதிகாலை 5.00 மணிக்குள் ஆலயமும் சுத்து வட்டாரமும் சுத்தமாகிவிடும். மறுநாள் காலை வந்து பார்த்தால் இந்த இடமா அது எனத்தோன்றூமளவுக்கு சுத்தமாக இருக்கும்.//

  சிங்கப்பூர் என்றால் சுத்தம் தான் 🙂

 35. ராஜா என் பதிவை நினைவு வைத்து இவ்வளோ மாதங்கள் கழித்தும் கோவில் பற்றிய செய்திகளை கொடுத்ததற்கு மிக்க நன்றி, எனக்கு கும்பாபிஷேகம் அன்று அலுவலகம் இருக்கிறது, முடிந்த வரை செல்ல முயற்சிக்கிறேன்.

  இந்த பதிவை வெளியிட்டு பல மாதங்கள் ஆவதால் நீங்கள் குறிப்பிட்டுள்ள செய்தி யார் கண்ணிலும் [துளசி மேடம் தவிர 😉 ] படாது. எனவே எனது அடுத்த பதிவில் இது பற்றிய செய்திகளை குறிப்பிடுகிறேன். பலருக்கு பயனுள்ளதாக இருக்கும்.

  உங்கள் உதவிக்கு நன்றி

  =========================================================================

  ஸ்ரீ ராஜபாபு மற்றும் துளசி மேடம் வருகைக்கு நன்றி.

 36. சிங்கப்பூர் அருள்மிகு தெண்டாயுதபாணி ஆலயத்தின் மகாகும்பாபிஷேகம் எதிர்வரும் நவம்பர் 27ம் நாள் காலை 10.00 மணியளவில் நடைபெற இருக்கிறது, அனைவரும் கலந்துகொண்டு அருள்மிகு தெண்டாயுதபாணியின் பேரருளைப்பெற்றுயுயுமாறு வேண்டுகிறோம்.

  இதை அவர்களது இணையதளத்திலும் நேரடியாக ஒள்பரப்புகிறார்கள், நேரில் வர இயலாதவர்கள் இணையத்தில் பார்க்கலாம். இணையதள முகவரி : http://www.sttemple.com

 37. தொடர்ந்து 48 நாட்களுக்கு கலை நிகள்ச்சிகளும் உண்டு. இந்தியாவிலிருந்து உண்ணிக்கிருஷ்ணன், நித்திய ச்ரி மகாதேவன், பாம்பே சகோதரிகள், வீரமணி ராஜு, சோ. சோ.மீ.சுந்தரம், கண.சிர்சபேசன், பழ.முத்தப்பன், அரித்வாரமங்களம் பத்மச்ரி டாக்டர் A.K. பழனிவேல், M.ற்.விஜயா மகள் பாம்பே சாரதா,சன் TV அசத்தல் மன்னர்கள், திருப்பனந்தாள் மடாதிபதி ச்ரி சுந்தரமூர்தி தம்பிரான், பாம்பே ஜெய ஸ்ரி, சுதா ரகுனாதன், மற்றும் உள்ளூர் கலைஞர்கள் பங்கேற்கிரார்கள்.

  மேல் விபரங்களுக்கு கீழ் உள்ள முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் : http://www.sttemple.com/Consec09KalaiNiglBooklet.pdf

 38. அன்று விடுமுறையாச்சே, வர இயலாவிட்டால் இணையத்தில் பாருங்கள், அதற்கு முன்பு நேரம் கிடைக்கும் பொழுது ஒருமுறை நல்லா கோயொலை படம் பிடிங்கள், சிங்கப்பூரில் இருந்து, தற்சமயம் வெளியூரில் உள்ளவர்களுக்கு செய்த உதவியாக இருக்கும். கோயில் புதுப்பொலிவுடன் மிக சிறப்பாக உள்ளது.

 39. படத்தை பார்த்தால் சரி என்று தானே தோன்றுகிறது!

  அருமையான படங்களுடன் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here