இரண்டாம் அலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகம் இருந்த போது உலகமே அழிந்து விட்டது போல அலறிய உலக ஊடகங்கள் அமெரிக்காவில் நடப்பதற்கு அமைதி காத்து வருகின்றன. Image Credit
உலக ஊடகங்கள்
இந்தியாவின் வளர்ச்சி உலக ஊடகங்களை எரிச்சல் படுத்தியுள்ளது.
எனவே, வாய்ப்புக்கிடைக்கும் போதெல்லாம், இந்தியாவை அசிங்கப்படுத்துவதில் தீவிரமாக உள்ளன.
ஏதாவது நடக்காதா? சர்ச்சையாகாதா? அதை வைத்து இந்திய இடது சாரி ஊடகங்கள் மூலமாக எப்படிக் கிழித்துத் தொங்க விடலாம் என்று காத்துள்ளன.
ஆனால், தற்போது (ஆகஸ்ட் 2021) அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
ஒரு நாளைக்கு ஒரு இலட்சம் பேர் பாதிக்கப்படுகிறார்கள், 1000 பேர் இறக்கிறார்கள். சில இடங்களில் முதல் அலையில் இருந்ததை விட அதிகம் பேர் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், அன்று இந்தியாவுக்குக் கதறிய ஊடகங்கள், ஒன்றுமே நடக்காதது போல ஆப்கானிஸ்தான் செய்திகளில் தீவிரமாக உள்ளன.
இறப்பு
ஆக்சிஜன் பற்றாக்குறை, டெல்டா வைரஸால் ஏற்பட்ட அதீத தாக்கம் ஆகியவற்றால், இந்தியாவில் உயிரிழப்பு தினமும் 5000 கடந்தது.
இதனால், எரிக்கவே இடம் இல்லாமல் பலரை ஒரே இடத்தில் எரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதைத்தான் தலிபான்கள் கொன்ற நிழற்படக் கலைஞர் சித்திக் எடுத்து ஊடகங்களுக்குக் கொடுத்தார்.
இதை உலக ஊடகங்கள் குறிப்பாக New York Times, Washington Post, The Guardian (UK) போன்றவை தொடர்ச்சியாக மிகைப்படுத்திப் போட்டு இந்தியாவை உலக அரங்கில் நாறடித்தன.
இறந்தால் எரிப்பது இந்துக்கள் வழக்கம். அமெரிக்காவில் இதே போலத் தினமும் 5000 பேர் முன்பு இறந்த போது அவர்கள் வழக்கப்படி சவப்பெட்டியில் வைத்து ரோஜா வைத்தார்கள்.
சவப்பெட்டியில் வைத்ததைக் கலை நயத்தோடு நிழற்படம் மூலம் கண்ணீர் வடித்தவர்கள், இந்தியாவில் எரிவதை எதோ கொடூரமான செயல்போலச் சித்தரித்தார்கள்.
பாதிப்பு, இறப்பு கிட்டத்தட்ட ஒன்றே தான் ஆனால், அதைச் செய்தியாக்குவதில் மட்டும் வேறுபாடு.
இதை உலக ஊடகங்கள் மட்டுமல்ல இந்திய ஊடகங்கள் NDTV, Hindu, Indian Express உட்பட இடது சாரி ஊடகங்கள் இதற்குப் பின்பாட்டு பாடின.
அமெரிக்கா
தற்போது அமெரிக்காவில் திரும்ப அதிகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் ஆனால், ஊடகங்கள் ஒருவருமே பரபரப்பாகவில்லை.
அமெரிக்க ஊடகங்கள் மீது தான் கோபமே தவிர மக்கள் மீதல்ல. அவர்களும் நம்மைபோலத்தானே! இப்பிரச்சனையிலிருந்து விரைவில் மீண்டு வருவார்கள்.
அமெரிக்கா நன்றாக இருந்தால் தான் அந்நாட்டைச் சார்ந்துள்ள மற்ற நாடுகளும் நன்றாக இருக்க முடியும்.
ஏனென்றால், தற்போது ஒவ்வொரு நாடும் இன்னொரு நாட்டை வியாபார ரீதியாகச் சார்ந்துள்ளது.
தற்போது கொரோனா, காபூலில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு என்று நெருக்கடியான நிலையில் அமெரிக்கா உள்ளது.
கேரளா
கேரளா மாடல் என்று தமிழகத்தைக் கிண்டலடித்தார்கள் ஆனால், கேரளா முதல் அலையில் இருந்தே இன்னும் மீண்டு வரவில்லை.
தற்போது (ஆகஸ்ட் 2021) 30,000 பாதிப்பைத் தாண்டிச் சென்று கொண்டுள்ளது. அவர்கள் உண்மையான தகவலை அளிக்கிறார்கள் என்று முட்டு வேற.
தமிழகத்தில் 1,50,000 பரிசோதனைகளில் 1600+ வந்தால், கேரளாவில் 1,30,000 பரிசோதனைகளில் 30,000+ பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் பொய் கணக்கு காட்டியதாகவும், தின பாதிப்பு 2000 தாண்டவில்லையென்று விமர்சனம் உள்ளது.
அரசு பொய் விவரங்களைக் கொடுத்து இருக்கலாம் ஆனால், தொடர்ந்து அதைச் செய்ய முடியாது.
காரணம், மக்களுக்குப் பாதிப்பின் வீரியம் உணர முடியும். ஒருவருக்கொருவர் விவாதிக்கும் போது அதன் வீரியம் புரியும்.
எனவே, பொய்யான கணக்கு என்றால், 100, 200 குறைத்துக் காட்டலாம், ஆயிரக்கணக்கில் தொடர்ந்து ஏமாற்ற முடியாது.
எனவே, உண்மைத்தகவல்களைக் கேரளா வெளியிடுகிறார்கள் என்ற முட்டு செல்லாது.
இப்ப கூட ‘இந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனா‘ன்னு தான் செய்தி வெளியிடுகிறார்கள்!
இந்தியாவில் 40,000 என்றால் கேரளாவில் 30,000 பேர் ஆனால், கேரளாவை பற்றிப் பேசவில்லை.
தென் மாநிலங்களில் தொற்று அதிகரித்தால் அதற்கு முக்கியக் காரணம் கேரளா தான்.
மூன்றாம் அலை
செப்டம்பர் முதல் கல்லூரிகள், பள்ளிகள் திறக்கப்படுகின்றன. எனவே, இதன் பிறகே எப்படிக் கொரோனா பாதிப்புப் பரவுகிறது என்று தெரிய வரும்.
அக்டோபரில் மூன்றாம் அலை வரும் என்கிறார்கள். தற்போது அனைத்து மாநிலங்களும் அனுபவம் பெற்று விட்டார்கள்.
தொற்று அதிகரிக்கும் போது கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தித் தொற்றைக் கட்டுப்படுத்துகிறார்கள்.
எனவே, இரண்டாம் அலை போல மூன்றாம் அலை இருக்காது என்று நம்புகிறேன்.
உலக ஊடகங்கள், இந்திய ஊடகங்கள் ஒருதலைப்பட்சமாகச் செய்தி கூறுவதை நிறுத்தாது. வரும் காலங்களில் இதுபோலச் செருப்படி வாங்குவதையும் நிறுத்தாது.
கேரளா மாடல் என்று புகழ்ந்தவர்கள் வாய் தற்போது பூட்டப்பட்டுள்ளது.
மோசமான இந்தியா என்று எழுதித்தள்ளிய உலக ஊடகங்கள் இன்று ஆப்கானிஸ்தான் செய்தியைப் பேசிச் சமாளித்துக்கொண்டுள்ளார்கள்.
எதுவுமே நடக்காத மாதிரி ஊடகங்கள் நடிப்பாங்க பாருங்க.. அடேங்கப்பா! நடிகர் திலகம் தோத்தாரு போங்க!
இந்தியா வளர்ச்சியை எவரும் தடுக்க முடியாது. யார் என்ன கூறினாலும் அனைத்தையும் அடித்துத் துவம்சம் செய்து வளர்ந்து கொண்டே செல்லும்.
தொடர்புடைய கட்டுரைகள்
இந்தியாவை கிண்டலடிக்கும் சைக்கோ இந்தியர்கள்
தாலிபான்களை ஆதரிக்கும் இந்திய கூலிபான்கள்
Drug Mafia | உலக மருந்து அரசியல் | COVID-19
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
இணையத்தில் படித்த பிடித்தமான வரிகள்..
“புதைந்தோம்” என
நினைப்பவர்களுக்குத் தெரியாது…
“விருட்சமாக” வளர்வோம் என்று!!!
இது தான் “இந்தியா” …
இதெல்லாம் கடந்து போய் கொண்டே இருக்க வேண்டியது தான் கிரி.
நேற்று ஆக 31 இந்திய GDP உயர்ந்துள்ளது. வாய்ப்பில்லை என்றவர்கள் அமைதி.
இந்தியா பெரு வளர்ச்சி அடையும்.