ஆயுஷ்மான் பாரத் யோஜனா காப்பீடு பெறுவது எப்படி?

3
ஆயுஷ்மான் பாரத் யோஜனா காப்பீடு

பிரதமர் ஆயுஷ்மான் பாரத் யோஜனா காப்பீடு பெறுவது எப்படி? (Pradhan Mantri Jan Arogya Yojana -PMJAY) என்று கூறுவதற்கு முன்னர்…

இப்படி எல்லாப் பெயரையும் இந்தியிலேயே வைத்தால், பல மக்களுக்குக் குறிப்பாகத் தென் மாநில மக்களுக்கு இத்திட்டங்கள் பற்றித் தெரியாமலே சென்று விடுகிறது.

இந்தி பெயரில் இருப்பதால், என்ன திட்டம்? எதற்கான திட்டம் என்பதே பெரும்பான்மையினருக்கு புரிவதில்லை.

இத்திட்டங்கள் பெயரை மாநிலத்துக்குத் தகுந்த மொழியில் மாற்றம் செய்யாத வரை மக்களால் முழுப் பயனைப் பெற முடியாது. Image Credit & News Credit

ஆயுஷ்மான் பாரத் யோஜனா காப்பீடு

ஏழைகளுக்கு, வருமானம் மிகக்குறைவாக உள்ளவர்களுக்கு, மற்றவர்கள் உதவியை எதிர்பார்ப்பவர்களுக்கு, ஆதரவற்றவர்களுக்கு மத்திய அரசு கொண்டு வந்த திட்டமே ஆயுஷ்மான் பாரத் யோஜனா காப்பீடு திட்டம்.

பிரதம மந்திரி மருத்துவ காப்பீடு திட்டம் என்று தமிழில் புரிந்துகொள்ளலாம்.

இத்திட்டம் மூலம் வருடத்துக்கு ₹5 லட்சம் வரை மருத்துவக் காப்பீட்டை நேரடியாக, பணமில்லா பரிவர்த்தனை மூலம் பயனாளர்கள் பெற முடியும்.

60 : 40 என்ற முறையில் மத்திய மாநில அரசுகள் செலவைப் பகிர்ந்து கொள்கின்றன.

கிராமப்புற மற்றும் நகர்ப்புற தகுதியானவர்கள் என்று இரு பகுதியாகப் பிரித்துள்ளார்கள்.

இதில் யாரெல்லாம் காப்பீடு பெற தகுதியானவர்கள் என்பதற்கான விதிமுறைகளைப் பார்ப்போம்.

கிராமப்புற தகுதியானவர்கள்

  • SC / ST பிரிவைச் சார்ந்தவர்கள்.
  • 16 – 59 வயதுக்குட்பட்ட ஆண் துணை இல்லாதவர்கள்.
  • பிச்சைக்காரர்கள் அல்லது மற்றவர் உதவியில் வாழ்பவர்கள்.
  • 16 – 59 வயதில் இல்லாதவர்கள்.
  • குடும்பத்தில் ஒரு மாற்றுத்திறனாளி உள்ளவர்.
  • வீடு இல்லா தினக்கூலி நபர்கள்.
  • அழிந்து வரும் சமூகத்தினர்.
  • சரியான மேற்கூரை இல்லாத வீட்டைக் கொண்டவர்.
  • கழிவு நீர் சுத்தம் செய்பவர்.

நகர்ப்புற தகுதியானவர்கள்

  • சலவைத் தொழிலாளி.
  • மின்சார (Electrician), வன்பொருள் (Mechanic) வேலைகளைச் செய்பவர்.
  • வீட்டு வேலை செய்பவர்.
  • சுகாதாரப் பணியாளர்கள்.
  • கைவினை பொருள் செய்பவர்.
  • துணி தைப்பவர் (Tailor).
  • செருப்புத் தைப்பவர்.
  • தள்ளுவண்டியில் விற்பனை செய்பவர்.
  • பிளம்பர், கட்டிட வேலை செய்பவர், சுமை தூக்கும் தொழிலாளி.
  • வெல்டிங் செய்பவர், பாதுகாவலராக (Security) உள்ளவர்.
  • வாகன ஓட்டுநர், ஓட்டுநர் உதவியாளர் (Cleaner), நடத்துநர்.
  • வண்டியில் சுமையை இழுத்துச் செல்பவர்.
  • பொருட்களைப் பரிமாறுபவர் (Delivery Boys), வெய்ட்டர்ஸ்.

காப்பீடு திட்டம் பெற தகுதியில்லாதவர்கள்

  • இரண்டு, மூன்று, நான்கு சக்கர வாகனம், மோட்டார் படகு வைத்துள்ளவர்.
  • சொந்தமாக விவசாயத்துக்கு வாகனம் வைத்துள்ளவர்.
  • Kisan Card ல் (விவசாயம்) ₹50,000 க்கு Credit Limit வைத்துள்ளவர்.
  • அரசு ஊழியர்.
  • மாதம் ₹10,000 க்கு மேல் சம்பாதிப்பவர்.
  • ஃப்ரிட்ஜ், Land Line தொலைபேசி வைத்துள்ளவர்.
  • தரமான வீட்டை வைத்துள்ளவர்.
  • 5 ஏக்கர் அல்லது அதற்கு மேல் விவசாய நிலம் வைத்துள்ளவர்.

அனுமதிக்கப்பட்ட சிகிச்சைகள்

  • Prostate Cancer
  • Coronary artery bypass grafting
  • Double valve replacement
  • Carotid angioplasty with stent
  • Pulmonary valve replacement
  • Skull base surgery
  • Laryngopharyngectomy with gastric pull-up
  • Anterior spine fixation
  • Tissue expander for disfigurement following burns

அனுமதிக்கப்படாத சிகிச்சைகள்

  • OPD (Out Patient Department)
  • Drug rehabilitation programme
  • Cosmetic related procedures
  • Fertility related procedures
  • Organ transplants
  • Individual diagnostics (for evaluation)

சுருக்கமாக, அறுவை சிகிச்சை அல்லது பெரிய சிகிச்சைகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும், ஆலோசனைகளுக்கு அல்ல.

எப்படிக் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்வது?

அருகில் உள்ள இ – சேவை மையம், சுகாதார மையத்தை அணுகலாம் அல்லது 14555 அல்லது 1800-11-565 எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

இணைய தள முகவரி https://www.pmjay.gov.in/

கூடுதல் தகவல்கள்

ஏற்கனவே உடல் பிரச்சனையிருந்தாலும், இத்திட்டத்தில் இணைந்த பிறகு காப்பீடு பெறலாம். தனியார் காப்பீடு திட்டத்தில் இது முடியாது.

மக்கள் அரசு மருத்துவமனையைத் தவிர்த்துத் தனியார் மருத்துவமனைக்கு இத்திட்டத்தின் மூலம் செல்வதால், சில இடங்களில் இத்திட்டம் இன்னமும் அனுமதிக்கப்படாமல் உள்ளன.

இத்திட்டத்தால் ஆரம்ப சுகாதார நிலையங்கள் / அரசு மருத்துவமனைகள் மக்களால் தவிர்க்கப்படலாம்.

தனியார் மருத்துவமனைகள் இத்திட்டத்தின் மூலம் அரசை ஏமாற்றலாம் என்பது இத்திட்டத்தின் குறை.

ஏன் பரிந்துரைக்க வேண்டும்?

இத்திட்டம் குறித்துத் தெரியாமல் கடன் பெற்றுச் சிகிச்சை மேற்கொள்ளும் காப்பீடு பெறக்கூடிய தகுதியானவர்கள் உள்ளனர்.

அவர்களுக்கு இத்திட்டம் குறித்து அறியத்தந்தால் நிச்சயம் அவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

ஏனென்றால், பல நல்ல திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே இல்லை. அரசும் மக்களிடம் கொண்டு சேர்க்க தவறி விடுகிறது, கட்சியினரும் செய்வதில்லை.

2 கோடிக்கும் அதிகமானோர் ஆகஸ்ட் 2021 வரை பயனடைந்துள்ளார்கள் எனும் போது ஏன் மற்றவர்களும் முயற்சிக்கக் கூடாது?!

தோராயமாக இந்தியா முழுக்கத் தினமும் 15,000+ பேர் பயன் பெறுகிறார்கள்.

வசதி இல்லாமல் சிரமப்படலாம் ஆனால், விழிப்புணர்வு இல்லாமல் வாய்ப்பு இருந்தும் சிரமப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

உங்களுக்குப் பயனில்லை என்றாலும், தேவைப்படுபவர்களுக்கு இலவச காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்திக் காப்பீடு அட்டையைப் பெற அறிவுறுத்துங்கள்.

தொடர்புடைய கட்டுரைகள்

e-Rupi சேவையைப் பயன்படுத்துவது எப்படி?

சைபர் கிரைம் புகாரளிப்பது எப்படி? [FAQ]

இத்தள கட்டுரைகள், செய்திகள், தொழில்நுட்பத் தகவல்கள் ஆகியவற்றை எளிதாகப் பெற –> giriblog WhatsApp Channel

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

  1. இன்றைய சூழ்நிலையில் காப்பீடு மிகவும் அவசியமானதாக உள்ளது.. எனக்கு ஆரம்பம் முதலே இவற்றில் பெரிய ஆர்வம் இல்லாமே இருந்தது.. நண்பர் சக்தியும் காப்பீடு முகவராக இருக்கிறார்.. இடையில் குழந்தைகளுக்காக ஏதேனும் பாலிசி எடுக்கலாம் என்று யோசித்தேன்.. நிறுவன விதிகள் எனக்கு முழுமையாக உடன்பாடு இல்லாமல் இருந்தது.. அதனால் இதுவரை எந்த பாலிசியும் எடுக்கவில்லை.. ஆயுஷ்மான் பாரத் யோஜனா காப்பீடு திட்டம் பற்றி விரிவாக எழுதி உள்ளீர்கள்.. கண்டிப்பாக இந்த கட்டுரை பலருக்கு பயன்படும்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. @யாசின்

    ஆமாம், சக்தி கூறினார்.

    யாசின் பாலிசி கண்டிப்பாக எடுங்க. Medical Insurance, Term Insurance இரண்டும் மிக முக்கியம்.

    இவையல்லாமல் இன்னும் சில திட்டங்கள் குறித்து நண்பர்கள் கூறினார்கள். அது பற்றி வரும் நாட்களில் எழுதுகிறேன்.

    ஏராளமான பயனுள்ள திட்டங்கள் உள்ளது ஆனால், பலருக்கு தெரியவில்லை. எனக்கும் தெரியவில்லை 🙁 .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here