சொந்த நாட்டையே கிண்டலடிக்கும் சைக்கோக்கள் இந்தியாவில் மட்டும் தான் இருக்க முடியும். வேறு எந்த நாட்டிலும் இது போல நடந்து கொள்வதாகக் கேள்விப்பட்டதில்லை. Image Credit
மோடியை கிண்டலடிக்க சீனாக்காரனை ஆதரிப்பது, அவர்கள் இந்திய வீரர்களைத் தாக்கினால் நக்கலடிப்பது என்று கேவலமாக நடந்து கொண்டு வருகிறார்கள்.
மோடி பிரச்சனைனா அவரை விமர்சனம் பண்ணுங்க. அதுக்கு ஏன்டா! இந்தியாவைக் கிண்டலடிக்கறீங்க? உங்களுக்கு மோடி பிரச்சனையா இந்தியா பிரச்சனையா?
சீனா அற்புதம்
சீனாக்காரன் அற்புதமா கொரோனாவை கட்டுப்படுத்துகிறான் நம்ம அரசுக்குத் துப்பில்லைன்னு சொல்றானுங்க (கொரோனோவை பரப்பியது கணக்கில் இல்லை).
சீனாக்காரன் லாக் டவுன்னா என்னன்னு தெரியுமா? எப்படி இருக்கும்னு தெரியுமா?
வெளியே சுற்றினால், சுண்ணாம்பு தடவிடுவானுக. வாயைத் திறக்க முடியாது. என்ன கதறினாலும் அரசு கேட்காது. சில வீடுகளில் கதவையே பூட்டி சீல் வைத்து விட்டது.
இதையே இங்கே பண்ணுனா சும்மா இருப்பீங்களா? ‘ஐயோ அம்மா அடக்குமுறை, சர்வாதிகாரம்‘ அது இதுன்னு கதறி இருக்க மாட்டீங்க..!
இங்கே ட்விட்டர்ல சீனாவை ஆதரிக்கிற மாதிரி அங்கே உட்கார்ந்து மற்ற நாட்டை ஆதரித்து வசனம் பேசினால், பிதுக்கி எடுத்துடுவானுக.
திடீர்னு ஆளே காணாம போய்டுவாங்க. யாரும் கேள்வி கேட்க முடியாது.
அரசு கூறுவது தான் செய்தி! அதைத்தான் செய்தியாகக் கொடுக்க முடியும்! 4000+ பேர் கொரோனாவில் இறந்தார்கள் என்றால், அது தான் உலகுக்குச் செய்தி.
இணையம் இருக்குன்னு என்னென்ன கேள்வியெல்லாம் கேட்டுட்டு, மீம் போட்டுட்டு இருக்கீங்க..! இதையெல்லாம் சீனாவில் கற்பனை கூடச் செய்ய முடியாது.
உங்களை அங்கே விட்டு வரணும்டா.. அப்பத்தான் இந்தியாவோட அருமை புரியும்.
நம்ம நாடுன்னு எந்தப் பாசமும் இல்லையா?! உனக்கு மோடி பிரச்சனைனா மோடியைத் திட்டு, அதுக்கு ஏன்டா இந்தியாவை அசிங்கப்படுத்துறீங்க!
சீனாக்காரன் நம்ம வீரர்களைக் கொல்வதைப் பார்த்து எப்படி சிரிக்க முடிகிறது? இதில் சிரிக்க என்ன இருக்கிறது? சைக்கோத்தனம் அன்றி வேறில்லை.
கொரோனா பிரச்சனையைத் திசை திருப்ப இந்தச் சில்லறை வேலையைச் சீனாக்காரன் பண்ணிட்டு இருக்கான், இதுக்கு அவனுகளுக்கு புகழ் மாலை!
உலகமே கொரோனா பிரச்சனையில் துவண்டு கிடக்கும் போது, இதைப்போல ஒரு கேவலமான வேலையைச் சீனாக்காரன் செய்கிறான், அவனுக்கு ஆதரவு!!
இது போதாதுன்னு பாகிஸ்தான், இம்ரான்கானுக்கு வேற பாராட்டுப் பத்திரம்.
த்தா! யார்ரா நீங்கெல்லாம்!
மாநிலப் பாசம்
சரி நாட்டுப்பற்று தான் இல்லை.. மாநிலப்பற்றாவது இருக்கா?! ‘தமிழன்டா தமிழன்டா‘ன்னு கூவ வேண்டியது ஆனால், தமிழ்நாட்டைக் கிண்டலடிப்பது.
கேரளாவை பாரு கேரளாவை பாருன்னு! கூப்பாடு.
கேரளாவும் தமிழ்நாடும் ஒன்றா! கேரளாவின் மக்கள் தொகையும் தமிழ்நாட்டின் மக்கள் தொகையும் ஒன்றா?
தமிழ்நாடு போல கேரளா வியாபாரம் சார்ந்த மாநிலம் அல்ல. எனவே, அங்குள்ள மக்கள் இடம்பெயர்வு, பழக்க வழக்கம், மக்கள் அடர்த்தி வேறு.
கேரளாவில் தொற்று மிகக்குறைவு அல்லது தொற்றே இல்லையெனும் அளவுக்குக் கூறப்பட்ட சமயத்தில், கேரளாவில் இருந்து தமிழகம் வந்த வந்த இருவரைச் சோதித்த போது அவர்களுக்குத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
தொற்று இல்லையென்று கூறினால், அங்கே பிரச்சனையில்லை என்று அர்த்தம் கிடையாது, பலருக்கு சோதிக்காமலே இருந்து இருக்கலாம்.
கேரளா சிறப்பாகச் செய்தால், கேரளாவை பாராட்டு.. அதற்காகத் தமிழ்நாட்டை ஏன் இகழ வேண்டும்?
ஒருத்தரை பாராட்ட இன்னொருத்தரை இகழணும்னு எந்த லூசுப்பயடா சொன்னது?!
ஒவ்வொரு நாட்டிலும், மாநிலத்திலும் போய்ப் பாருங்க.. அவனவன் அவங்க இடத்தில் ஆயிரம் பிரச்சனையென்றாலும் அவங்க ஊரை, மாநிலத்தை, நாட்டை விட்டுக்கொடுக்காம பேசுறாங்க.
ஆனால், இங்கேயோ மாநிலத்தைக் கேவலமா பேசுவது, மீம் போடுவது, நாட்டை நக்கலடிப்பதுன்னு படு கேவலமாக நடந்து கொண்டுள்ளார்கள்.
இவனுக எல்லாம் சோத்தை தான் திங்குறானுகளான்னு சந்தேகமாக இருக்கு.
EPS சரியா செய்யலையா.. அவரை விமர்சனம் பண்ணுங்க, அதுக்காக அடுத்த மாநிலத்தை ஒப்பிட்டுக் கேவலப்படுத்தாதீங்க. தமிழ்நாட்டில் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விடச் சிறப்புத் தான்.
உங்களுக்கெல்லாம் இருக்கும் போது நம்ம மாநிலத்தின், நாட்டின் அருமை புரியாதுடா..
எங்காவது சிக்கி தெரு நாய் மாதிரி படாத பாடு படனும், அப்பத்தான் நம்ம மாநிலத்தின், நாட்டின் அருமை புரியும்.
Read – திராவிட அரசியல் தமிழகத்தை சீரழித்ததா?
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
தங்களின் கருத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். இவர்கள் எல்லாம் கிணற்று தவளைகள். உண்மை தெரியாமல் உளரித் திரிபவர்கள்.இந்தியாவிலேயே மிகப்பெரும்பாலான விஷயங்களில் நம் தமிழ் மாநிலமே சிறந்து விளங்குகிறது என்ற உண்மை தெரியாமல் இருப்பவர்கள். மற்ற மாநில மக்கள் தமிழ் நாட்டை சொர்க்கமாக நினைக்கும் விஷயம் இந்த மரமண்டைகளுக்கு தெரியாது. இவர்கள் சொன்னாலும் புரியாது சுயமாகவும் தெரியாது ரகம். நம் தமிழகத்தின் அருமை தெரியாமல் இருப்பவர்கள். இவர்களால் பூமிக்கு பாரம் நாட்டிற்கு கேடு. அவ்வளவுதான். நான் எண்ணியதை நீங்கள் எழுத்துருவாக தந்துவிட்டீர்கள். மிகவும் மகிழ்ச்சி
ஐயய்யோ…கிரி.
ரொம்ப நாளைக்கு அப்புறம் பொங்கிட்டீங்க 🙂 ஒரு மனுசன் பாவம் எவ்வளவு நாளைக்குத்தான் பொறுமையா இருக்க முடியும்.
த்தா! 🙂
” உங்களுக்கெல்லாம் இருக்கும் போது நம்ம மாநிலத்தின், நாட்டின் அருமை புரியாதுடா.. எங்காவது சிக்கி தெரு நாய் மாதிரி படாத பாடு படனும் அப்பத்தான் நம்ம மாநிலத்தின், நாட்டின் அருமை புரியும். ”
விடுங்க பாஸ்.இதெல்லாம் ஒரு வகை சைகோ. மோடி ஒழிக என்று பக்கத்து நாட்டுக்காரன் கூவினாலும் இவனுகளும் சேர்ந்துக் கொண்டு ஒழிக ஒழிக என்று கூவுவானுங்கள். அவன் ஒழிகன்னு சொல்வது நம்ம நாட்டு பிரதமரை என்ற அறிவு கொஞ்சம் கூட இருக்காது.
Yes. Correct.
because some dumb dont understand nationalism, if u think in narrow with narrow mind ur point is right but if u think from open mind indian national is a jail for ethnic groups. Question is benefit from it, think this way Cricket players, some corrupted politician, corporate, wep manufactures other than that ordinary civilians??
கிரி, தற்போது எந்த மாதிரியான சூழ்நிலையில் எல்லோரும் உலகம் முழுவதும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது அறிந்ததே !!! இந்த பிரச்சனையிலிருந்து மீண்டு வந்தாலும் வரும் நாட்கள் எவ்வாறு செல்லும் என்பதை கணிக்க முடியவில்லை ..
தனிமனிதன் மட்டுமல்லாமல், எல்லா நாட்டு அரசாங்கமும் எப்படி பிரச்சனையிலிருந்து விடுபடுவோம் என எல்லா முயற்சிகளும் எடுத்து வருகிறது .. ஆனால் சில மனிதர்களை புரிந்து கொள்ளவே முடியவில்லை .. உங்கள் கோபம் நியமானதே .. ஆனால் இது போல அரை வேக்காடாக இருப்பவர்கள் புரிந்து கொள்வார்களாக ??? என்பது கடவுளுக்கு தான் வெளிச்சம் .. பகிர்வுக்கு நன்றி கிரி ..
@Ananthan நம்ம மாநிலத்தோட சிறப்பு தெரியாத பயலுங்க. இந்தியாவோட மதிப்பு தெரியாதவங்க கிட்ட இந்தியா, மாநிலத்தோட மதிப்பு தெரியாதவங்க கிட்ட தமிழ்நாடு. தமிழோட மதிப்பு தெரியாதவங்க கிட்ட தமிழ்.
தலையெழுத்து.
@அரி அப்படியில்ல… தேவைக்குத் தகுந்த மாதிரி. சில விஷயங்களைச் சுருக்குனு சொல்லணும்.. அப்ப தான் என்னனு பார்ப்பாங்க.
@கரிகாலன் Exactly.
பிரதமர் யாராக இருந்தாலும், இது போல ஒரு சூழ்நிலையில் நம்ம நாட்டு பிரதமரை தான் ஆதரிக்கணும். அது மன்மோகன் சிங்காக இருந்தாலும், மோடியாக இருந்தாலும்.
எப்படித்தான் கொஞ்சம் கூட நாட்டு பாசமே இல்லாமல் குறுகிய மனப்பான்மையோடு சிந்தித்து இதுபோல நடந்துக்குறாங்களோ.
@கருணை 🙂
@Who People doesn’t understand where to criticize / appreciate.
@யாசின் இவங்க எண்ணமே முற்றிலும் வேறு. நாட்டை விட, தனிப்பட்ட கோபதாபங்களே இவர்களுக்குப் பெரியது.