கேரளா மாடலுக்கு வந்த சோதனை!

4
கேரளா

கொரோனா பாதிப்பு இரண்டாம் அலை முடிந்து, மூன்றாம் அலை பேச்சு வந்தும் கேரளாவில் முதல் அலை பாதிப்பே முடிவிற்கு வரவில்லை. Image Credit

கேரளா மாடல்

முதல் அலையில் தமிழகத்தில் தொற்று அதிகரித்த போது, கேரளாவில் குறைந்து வந்தது. அதோடு மற்ற ஏற்பாடுகளிலும் முன்னணியில் இருந்தது, வெளிநாட்டில் பாராட்டையும் பெற்றது.

இதனால் தமிழக இடது சாரி ஊடகங்கள் தொடர்ந்து கேரளா மாடலைப் பாருங்கள்! என்று தமிழகத்தை நக்கல் அடித்து வந்தன.

கேரளாவை பார்த்துத் தமிழகம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினர்.

ஆனால், இன்றோ தமிழகம் இரண்டாம் முறையாக கிட்டத்தட்ட பழைய நிலைக்குத் திரும்பி விட்டது ஆனால், கேரளா கொரோனா பாதிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை (ஜூலை 2021) தினமும் 10,000+ என்று உள்ளது.

முதல் அலை பாதிப்புத் தமிழகத்தில் அதிகரித்த காலத்தில் அதிமுக ஆட்சியில் இருந்தது, அதனாலும் தமிழகத்தை மட்டம் தட்டி வந்தார்கள்.

அனைத்து இந்திய ஊடகங்களும் கேரளா மாடல் என்று பேசிக்கொண்டு இருந்து, தற்போது எதுவும் நடக்காதது போல அமைதியாக உள்ளார்கள்.

இதே நிலை குஜராத், உத்தரப்பிரதேசம் என்றால், தற்போது அமைதியாக உள்ள ஊடகங்கள் அனைத்தும் தினம் புதுப் புதுத் தலைப்பில் கட்டுரை எழுதித் தள்ளியிருப்பார்கள்.

எடுத்துக்காட்டுக்கு இவர்கள் எப்படிச் செய்தியைக்கொடுக்கிறார்கள் என்று பாருங்கள்.

கேரளாவில் ஒரு நோயாளியை வாகன வசதி இல்லாததால், சைக்கிளில் அழைத்துச் சென்றதை, மனிதாபிமானம், தைரியம் என்று வர்ணித்தார்கள்.

அதே மற்ற மாநிலங்களில் நடந்தால், அரசின் மோசமான நிலையைக் காணுங்கள்! என்று செய்தி.

பிரச்சனை மாநிலம் அல்ல ஊடகங்கள்

கேரளா சிறந்த மாநிலம் என்பதில் சந்தேகம் இல்லை ஆனால், ஊடகங்களும், இடது சாரிகளும் மாநிலத்துக்குத் தகுந்த மாதிரி நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வது தான் கடுப்பாகிறது.

கேரளா மீதோ அதன் மக்கள் மீதோ வருத்தம் இல்லை, முன்களப்பணியாளர்கள் மீது தான் கடுப்பு.

இவை ஒரு பக்கம் என்றாலும், எப்படிக் கேரளாவில் குறையாமல் உள்ளது என்பது புரியாத புதிராக உள்ளது! கேரளாவில் இன்னும் முதல் அலையே முடியவில்லை.

மஹாராஷ்டிராவிலும் குறையவில்லை ஆனால், மக்கள் அடர்த்தியை ஒப்பிடும் போது கேரளா நிலை மோசம்.

மொத்த இந்திய பாதிப்பில் இவ்விரு மாநிலங்களே 60% க்கும் மேல் பாதிப்பைக்கொண்டுள்ளன.

ஆனால், எந்த ஊடகமாவது இதைப் பற்றிப் பேசுகிறதா பாருங்கள்! இப்படியொரு சம்பவமே நடக்காதது போல மற்ற செய்திகளை விவாதித்து வருகிறார்கள்.

இந்தியாவில் பிரச்சனை, சம்பவம் முக்கியமல்ல, பிரச்சனையை யார் செய்கிறார்கள், செய்தார்கள் என்பது தான் முக்கியம்.

என்ன வகையான குற்றமாக இருந்தாலும் இதே நிலை தான்.

ஊடகங்கள் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்ளும் போது அவர்கள் மீது எப்படி மதிப்பு இருக்கும்?!

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

4 COMMENTS

 1. நீங்களும் பத்திரிக்கை தர்மத்தை பற்றி பல முறை சொல்லியும் விட்டீர்கள், புலம்பியும் விட்டீர்கள். என்ன செய்ய? ஒன்னும் பன்ன முடியாது. அவர்களாக பார்த்துதான் திருந்தனும் அல்லது ஒரு நாள் மக்களால் திருத்தப் படுவார்கள்.

  பத்திரிக்கை துறை நான்காவது தூண் – அப்படின்னு எந்த பத்திரிக்க காரனாவது சொன்னா செவுள்ளயே ஒன்னு கொடுக்கனும்ங்னா. அதுவும் முக்கியமா இந்த தினமலர் காரனா இருந்த இன்னும் ஒரு அடி சேர்த்தே கொடுக்கலாம் தப்பில்லை.

 2. கிரி, கொரோனா பாதிப்பு குறித்த செய்தி பார்த்தே பல மாதமாகி விட்டது.. கேரளாவில் இன்னும் பாதிப்பு குறையவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.. இதுவும் கடந்து போகும்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

 3. @கார்த்திக் “நீங்களும் பத்திரிக்கை தர்மத்தை பற்றி பல முறை சொல்லியும் விட்டீர்கள், புலம்பியும் விட்டீர்கள்.”

  🙂

  “ஒன்னும் பன்ன முடியாது. அவர்களாக பார்த்துதான் திருந்தனும் அல்லது ஒரு நாள் மக்களால் திருத்தப் படுவார்கள்.”

  உண்மை தான் கார்த்திக். கடுப்பா தான் இருக்கு.

  “அதுவும் முக்கியமா இந்த தினமலர் காரனா இருந்த இன்னும் ஒரு அடி சேர்த்தே கொடுக்கலாம் தப்பில்லை.”

  😀 கார்த்திக் உங்களுக்குத் தினமலர் மட்டும். மற்றவர்களுக்கு அனைத்து ஊடகங்களும் 🙂 .

  @யாசின்

  “கேரளாவில் இன்னும் பாதிப்பு குறையவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது”

  ஆமாம் யாசின். இன்னைக்கு ஜூன் நான்காவது வாரம் ஆனாலும் 17000+ பாதிப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here