தமிழக பாஜக ஏன் வெற்றி பெற முடியவில்லை?

3
தமிழக பாஜக

மிழக பாஜக நிலை மிகப்பரிதாபமாக உள்ளது. இதற்குப் பெரும்பான்மை காரணம் அவர்களே என்பது இதை விடப் பரிதாபம். Image Credit

பாஜக ஏன் தமிழகத்தில் வளர்ச்சியடைய / வெற்றிபெற முடியவில்லை என்பதை எனக்குத் தெரிந்த அளவில் கூறுகிறேன்.

தமிழக பாஜக

 

பாஜக தமிழக மாநில தலைவரான தமிழிசை அவர்கள் தமிழகப் பாஜக க்கு மிகப்பெரிய பின்னடைவு.

தமிழிசை அவர்கள் நல்லவர், குற்றப்பின்னணி இல்லாதவர் என்ற தகுதி இருந்தாலும் கட்சியின் தலைவருக்குண்டான பொறுப்பு, பேச்சு அவரிடம் இல்லாதது பெரிய குறை.

தமிழிசை தனக்கு கிடைத்த வாய்ப்பை வீணடித்துள்ளார் என்பது வருத்தமான உண்மை.

இவரின் பேச்சு எப்போதுமே மற்றவர் கிண்டலடிக்கும் படியே உள்ளது, முதிர்ச்சியான பேச்சாக இல்லை.

அதோடு மற்றவர்கள் கிண்டலடிக்கும்படியே நடந்து கொண்டுள்ளார். இதைத் தெரிந்து செய்கிறாரா தெரியாமல் செய்கிறாரா என்று புரியவில்லை.

இது கட்சியையும் பெரியளவில் பாதிக்கிறது.  கட்சியின் மீதான மதிப்புக் குறைகிறது.

மீம் உருவாக்குபவர்களுக்கு எதையாவது எடுத்துக்கொடுத்துக்கொண்டே இருக்கிறார். இதனால், இவரோடு இவர் சார்ந்த கட்சியும் பாதிக்கப்படுகிறது.

இனி தமிழிசை தன்னை மாற்றிக்கொண்டாலும் அவரின் பிம்பத்தை மாற்றுவது எளிதல்ல. எனவே, பாஜக வேறு ஒருவரை மாநில தலைவராக மாற்றுவதே சரி.

என்னுடைய பரிந்துரை வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள்.

H ராஜா

 

அடுத்த மிகப்பெரிய பிரச்சனை ராஜா. பாஜக க்கு ஏழரையைக் கூட்டவென்றே இவர் கட்சியில் இருப்பது போல உள்ளது, இதற்கு முன்பு சு.சாமி.

இவரது சில கருத்துகள் ஏற்றுக்கொள்ளும்படி, லாஜிக்காக இருந்தாலும் இவர் கூறும் முறை அனைத்தையும் கெடுத்து விடுகிறது.

தொடர்ந்து கருத்தை வெளியிடுகிறேன் பேர்வழி என்று ஏதாவது சர்ச்சையை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்.

இவரால் பாஜக க்கு என்ன நல்லது நடந்தது என்று பார்த்தால், பூஜ்யம் என்று தான் இருக்கும். அதற்குப் பதிலாக வட்டியும் முதலுமாகச் செமையாகச் சேதாரம் செய்து வைத்து இருக்கிறார். இவரால், கட்சிக்கு எந்தப் பயனுமில்லை.

இவரைக் கட்சியை விட்டு நீக்க வேண்டும் அல்லது இவரை வாயை மூடிக்கொண்டு இருக்குமாறு தலைமை அறிவுறுத்த வேண்டும்.

பாஜக கட்சியினர்

 

மோடி பல நல்ல திட்டங்களைக் கொண்டு வந்துள்ளார் ஆனால், இவற்றைச் சரியான முறையில் மக்களிடையே கொண்டு சேர்க்கும் வேலையைத் தமிழகப் பாஜக செய்யவில்லை.

இவர்கள் தேவையற்ற விஷயங்களில் செலுத்திய கவனங்களை மத்திய அரசின் திட்டங்களைக் கொண்டு செல்வதில் காட்டி இருந்தால், இவ்வளவு மோசமான நிலை வந்து இருக்காது.

இவர்கள் பேச்செல்லாம் மத ரீதியான பேச்சாகவே உள்ளதே தவிர, வேறு எதையும் முன்னிறுத்தி பேசியதாகத் தெரியவில்லை. இது நிச்சயம் அவர்களுக்குப் பின்னடைவே.

எதிர்ப்பு அரசியலுக்குச் செலவு செய்த நேரத்தை, தங்கள் கட்சிக்கான பிரச்னை என்ன என்பதை உணர்ந்து அதைச் சரி செய்ய முயற்சித்து இருக்க வேண்டும்.

மோடி

 

கஜா புயலின் போது தமிழகத்துக்குப் பிரதமர் மோடி எட்டியே பார்க்கவில்லை ஆனால், தேர்தல் சமயத்தில் மூன்று முறை வந்தார்.

வரவேண்டிய நேரத்தில் வராமல், பிரச்சாரத்துக்கு வந்து என்ன பயன்?

புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த மோடி வர வேண்டும் என்ற அவசியமில்லை ஆனால், கஜா புயல் போல ஒரு அழிவின் போது கட்டாயம் வர வேண்டும்.

கஜா புயலுக்கு நிவாரண நிதி பலமுறை கெஞ்சிய பிறகே கொஞ்சம் அனுமதித்தார்கள்.

அதே ஒடிஷாவில் ஃபனி புயல் தாக்கும் முன்பே 1000 கோடி நிவாரணம் கொடுக்கிறார், இரண்டாம் கட்ட உதவியும் வழங்கப்படும் என்று அறிவிக்கிறார்.

கஜா புயலின் பாதிப்பை விட ஃபனி புயல் மிகக்கோரமானது என்றாலும், இரண்டு பக்கமும் பாதிக்கப்படுவது மக்கள் தான் என்பது தெரியாதா?

இந்தியாவில் அதிகப்படியான வரிப்பணம் கொடுக்கும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் உள்ளது ஆனால், வரிப்பணம் பற்றிக் கவலைப்படாத வட மாநிலங்களுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் தமிழகத்துக்குக் கொடுக்கப்படுவதில்லை.

பாகுபாடு காட்டும் போது மக்களுக்குக் கோபம் வருவது இயல்பு தானே! இது போலப் பல சம்பவங்கள் ஒன்று சேரும் போது மக்கள் மனதில் வெறுப்பு வருவது இயல்பு.

இதை எதிர்க்கட்சிகள், பாஜக வினரை பிடிக்காத அமைப்புகள் நன்கு பயன்படுத்திக்கொள்கின்றன.

எடுத்துக் கொடுக்க இவர்களே இருக்கும் போது அதைப் பெரிதாக்குவது சிரமமா என்ன?!

இந்தித் திணிப்பு

 

இந்தித் திணிப்பால் பாஜக வே பாதிப்படைந்தது என்றால் வியப்பாக இருக்கும். ஆனால் அது தான் உண்மை.

இவர்கள் திட்டங்களின் பெயர்கள் அனைத்தும் இந்தியிலேயே உள்ளதால், பலருக்கு இவர்களது திட்டமே தெரியவரவில்லை. இது மிகப்பெரிய இழப்பு.

உண்மையில் மத்திய அரசு, மக்கள் பயன்பெறும் பல நல்ல திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது ஆனால், இந்திப் பெயரால் பலருக்கு தெரியவே இல்லை.

இன்னும் சில திட்டங்கள் ஏற்கனவே, தமிழ்நாட்டில் செயல்பாட்டில் உள்ளது. வட மாநில மக்களுக்கு அவை புதிதாக இருக்கலாம் ஆனால், இங்கே அது பழைய திட்டம்.

உண்மையில் இவ்வளோ எழுதும் எனக்கே மின்சாரம் தொடர்பான உதய் திட்டம் மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜல் சக்தி என்ற தண்ணீர் தொடர்பான அமைச்சகம் / திட்டம் மட்டுமே தெரியும்.

எனக்கு நதிநீர் இணைப்பு, தண்ணீர் குறித்த விஷயங்களில் ஆர்வம் என்பதால், இப்பெயர் நினைவில் உள்ளது.

நான் பல திட்டங்கள் குறித்துப் படித்தும், திட்டங்கள் பெயர் இந்தியில் உள்ளதால், நினைவில் இல்லை அதோடு திட்டம் குறித்தும் மறந்து விட்டது.

விழிப்புணர்வு இல்லை

 

மத்திய அரசு ஏழை மக்களுக்கு வீடு கட்டித்தரும் திட்டமெல்லாம் கொண்டு வந்துள்ளது ஆனால், அது குறித்து இங்கே எத்தனை பேருக்கு விழிப்புணர்வு உள்ளது?

இதை நான் சொன்ன பிறகே “அப்படியா!” என்று நினைத்து இருப்பீர்கள், சரி தானே! இப்பவும் எனக்கு அந்த திட்டத்தின் பெயர் நினைவில்லை.

எனவே, இந்தி பெயர்கள் இப்படிக் கூடப் பாஜக க்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று அவர்கள் உணர வேண்டும்.

இந்தி பெயரில் உள்ள திட்டங்களை, தமிழகத்தில் தமிழ் பெயரில் மொழிமாற்றம் செய்து மக்களிடையே கொண்டு செல்வது மட்டுமே அறிவான செயல்.

இல்லையென்றால் இவர்கள் திட்டமே மக்கள் மனதில் நிற்காது. எத்தனை கோடி செலவு செய்து விளம்பரம் கொடுத்தாலும், அதனால் கொஞ்சம் கூட பயனில்லை. புரியாத திட்டத்தின் பெயருக்கு எதற்கு விளம்பரம்? மக்கள் வரிப்பணம் தான் வீண்.

மீத்தேன் திட்டம்

 

தமிழகத்தில் மீத்தேன் திட்டத்தை அறிமுகப்படுத்தியது திமுக ஆனால், அவர்கள் அதைப் பாஜக செய்ததாகக் கூறி அதை வைத்தே வெற்றியும் பெற்று விட்டார்கள்.

தானே திட்டத்தைக் கொண்டு வந்து, அதையும் தானே எதிர்த்து வெற்றி பெறுவதெல்லாம் வேறு லெவல்.

ஆனால், பாஜக இதை நாங்கள் கொண்டு வரவில்லை என்பதை மக்களிடையே கொண்டு செல்லத் தவறி விட்டது.

அதோடு கெயில் குழாய், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மக்கள் கடுமையாக எதிர்த்தும் பிடிவாதமாகச் செயல்படுத்துவது அவர்களுக்குத் தமிழகத்தில் பிடிப்பு இல்லை என்பதாக எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

கல்லை விட்டுப் பார்க்கும் பாஜக

 

மத்திய அரசு தமிழ் மொழியோடு ஏதாவது பிரச்னை செய்து கொண்டே உள்ளது. சமீபத்திய எடுத்துக்காட்டுத் தமிழில் பேசக்கூடாது என்ற தென்னிந்திய ரயில் நிர்வாகம் அறிவிப்பு.

மூன்று மொழிக்கொள்கையில் கட்டாய இந்தி.

இது போல ஏராளமான செயல்களை வேண்டும் என்றே செய்துகொண்டுள்ளது. இவற்றைப் பின்னர் திரும்பப் பெற்றுக்கொள்கிறது என்றாலும், மக்களுக்குத் திணித்தது மட்டுமே நினைவில் இருக்கும், திரும்பப் பெற்றதை மறந்து விடுவார்கள்.

திரும்பப் பெறப்போகிறார்கள் என்பது எனக்கே தெரியும் போது, ஏன் தேவையற்று இதைச் செய்து மக்களைச் சீண்ட வேண்டும். இது யாருக்கு இழப்பு?

இது போன்ற தொடர்ச்சியான சீண்டல்கள் பாஜக க்கு எதிர்ப்பு மனநிலையே கொண்டு வரும் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து உண்டா?

வட மாநில சிந்தனை

 

தான் வட மாநில கட்சி இல்லை என்று பாஜக கூறி வந்தாலும், வட மாநில சிந்தனையுடன் தான் நடந்து வருகிறது.

தமிழ்நாட்டுக்கு என்று உள்ள பிராந்திய பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளாமல், தொடர்ச்சியாக எரிச்சலை கிளப்பும் படி நடந்து வருகிறது.

தமிழகப் பிரச்சனைகள் என்ன? மக்களின் தேவை என்ன? உண்மையாகவே அவர்களின் வளர்ச்சிக்கு என்ன செய்வது? தலையாயப் பிரச்னை என்ன? என்பதை அறிந்து அதைச் சரிசெய்யவில்லை என்றால் எக்காலத்துக்கும் வெற்றி பெற முடியாது.

இதைக் கட்சி தலைவர் அமித்ஷா ஏன் இன்னும் உணரவில்லை என்பது வியப்பாக உள்ளது.

இந்தியா முழுக்க அசத்தும் அவர் தமிழ்நாட்டில் தீவிரமாகக் கவனம் செலுத்தவில்லை. அவர் கவனம் செலுத்தினாலும் தமிழக பாஜக வினர் சரியாகக் கொண்டு செல்லவில்லை என்றால் அதனால் பயனில்லை.

தமிழகத்தில் பாஜக இடங்களைப் பெற வேண்டும் என்றால், அவர்களது அணுமுறையை மாற்றாத வரை வாய்ப்பே இல்லை.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

  1. யாருக்கு இழப்பு? கடைசியில் இழப்பு தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும்தான். தமிழ்நாட்டு பிஜேபியில் இருப்பவர்கள் என்ன வட இந்தியர்களா? அவர்களின் தோல்வியால் தமிழர் யாருக்கும் அமைச்சரவையில் சீட்டு இல்லை. இப்போது கேபினட் மீட்டிங்கில் தமிழ்நாட்டுக்காக பேச யாரும் இல்லை. தோல்வியால் வட இந்தியர்களுக்கும் பிஜேபி தலைமைக்கும் சற்றே மனத்தாங்கல் தவிர வேறு பெரிய இழப்பு ஏதுமில்லை.

    நீங்கள் எழுதிய காரணங்களோடு, போன இரு நாடாளுமன்ற தேர்தலிலும் தமிழகத்தின் கணக்கு தவறிவிட்டது. போன எலக்சனில் ஜெயல‍லிதாவுக்கு ஓட்டுப்போட்டால் அவர் பிரதமராவார் என நம்பி ஏமாந்தார்கள். இந்த எலக்சனில் ராகுல் பிரதமராவார் என நம்பி ஏமாந்து உள்ளார்கள். முன்பு எல்லா நாடாளுமன்ற தேர்தல்களிலும் காங்கிரஸுக்கு ஒட்டுப்போடுவார்கள். அதே போல் இந்த எலக்சனில் காங்கிரஸோடு பிஜேபியையும் இரண்டு தொகுதிகளில் ஜெயிக்க வைத்திருந்தால் நமக்கும் அமைச்சர்கள் கிடைத்திருப்பார்கள்.

    நாம் இந்தியை வெறுப்பதை விட்டுவிட்டு இந்தி படித்தால்தான் இந்திய அளவில் அதிகாரத்தை கைப்பற்ற முடியும். குஜாராத்திகளின் தாய்மொழி என்ன இந்தியா? இப்போது அவர்கள் இந்தி பெல்டை அவர்கள் மொழியில் பேசி ஓரமாக உட்கார வைத்து உள்ளார்கள். முன்பெல்லாம் இந்தி பெல்ட் ஆசாமிகள்தான் அதிகாரத்தில் இருப்பார்கள். உணர்ச்சி வசப்படாமல் யோசிக்க வேண்டிய விடயமிது.

  2. Hi Giri, Thanks for this article. In my view, BJP government did few good things to the country in last five years.
    As per my knowledge, below are the schemes,
    1) 2.3 lakh for house construction
    2) 2 lakh Term insurance (Premium amount: Rs.330/year) ; Accidental insurance (Rs.12/ year) – 1 lakh for partial disability ; 2 lakhs for death
    3) Clean India – toilets to every Indian ( Rs- 12k)
    4) Make in India
    5) Mudra loan to entrepreneur (10 Lakhs)
    6) No tax until 5 lakhs income
    7) Outlets to provide generic medicine at cheap cost
    8) Free LBG gas connection to poor
    9) Formed Cauvery Water Regulation Committee

    TN people knew these schemes and benefitted too. But they didn’t voted for BJP…Strange thing????
    TN BJP Leader: No leader has any plans or vision to improve the party hold in TN.
    TN Media : Both Print and visual media supported DMK and spread more hate about Modi. Also media people asked unwanted questions to BJP leaders in interviews and try to make sensations out of it.
    Urban and educated people: Simply believed in memes and not interested to read and understand about the background of any issue.
    Rural : Most of the people voted to congress (in my village) to get their loan(gold/Agriculture) waived and to get 6k per month scheme proposed by congress.
    My point here is, political parties & Media always do their false propaganda against BJP. As a citizen of India, we should understand each issue and vote to right person.
    I am not supporting Modi or BJP here, but compared to Rahul, Modi is much better to India. Also he is not corrupt like other TN leaders. There is no pride in trending #GobackModi, He is our PM we should respect and proud of him.

  3. @நந்தா இந்தி குறித்த கருத்தை நான் ஏற்கனவே விரிவாக எழுதி உள்ளேன். நேரம் இருக்கும் போது படிக்க முயற்சியுங்கள்.

    https://www.giriblog.com/is-india-developing-because-of-hindi/

    https://www.giriblog.com/hindi-imposition-damages-tamil-identity/

    https://www.giriblog.com/two-languages-policy-is-correct-or-wrong/

    @மணிகண்டன்

    “TN people knew these schemes and benefitted too. But they didn’t voted for BJP…Strange thing????”

    பலருக்கு இது குறித்து தெரியாது என்பதே உண்மை. காரணம், மேலே கூறியது.

    “Both Print and visual media supported DMK and spread more hate about Modi. Also media people asked unwanted questions to BJP leaders in interviews and try to make sensations out of it.”

    சரியே!

    “Most of the people voted to congress (in my village) to get their loan(gold/Agriculture) waived ”

    நானும் கேள்விப்பட்டேன்.

    “I am not supporting Modi or BJP here, but compared to Rahul, Modi is much better to India. Also he is not corrupt like other TN leaders.”

    ஏற்றுக்கொள்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here