Webcam எச்சரிக்கை

3
Webcam எச்சரிக்கை

ணையம் எவ்வளவுக்கு எவ்வளவு நல்லதோ அதே சமயம் பல சிக்கல்களையும் கொண்டு வரும். கொஞ்ச நாட்களுக்கு முன்பு வந்த Webcam செய்தி இது. Image Credit

Webcam

ஆபாச தளங்களைப் பார்வையிடும் போது தான் மனைவியுடன் உறவில் இருந்த காணொளியையே காண நேர்ந்து, அதிர்ந்து சைபர் க்ரைமில் புகார் அளித்துள்ளார்.

இதற்கான காரணம். சம்பந்தப்பட்ட நபரின் படுக்கையறையில் உள்ள Android TV யில் Webcam மூலமாக இவர்களைக் காணொளி எடுத்துள்ளார்கள்.

என்ன நடந்தது?

பாதிக்கப்பட்ட நபர் Porn (ஆபாச) காணொளிகள் பார்க்கும் வழக்கமுடையவர். இது போலத் தளங்களுக்குச் சென்றால், நம் கணினியின் பாதுகாப்பு மிகக் கேள்விக்குறி.

காரணம், அத்தளங்களைப் பார்க்கும் போது எளிதாக ஹேக்கர்ஸ் ஊடுருவி மென்பொருளை நிறுவி, தங்கள் கட்டுப்பாட்டில் நம் கணினியை எடுத்து விடுவார்கள்.

இவருக்கு எப்படி நடந்தது?

Porn தளங்களைப் பார்வையிடும் போது எதோ ஒரு ஹேக்கர் கும்பல் இவர் Android TV / கணினியைக் கட்டுப்பாட்டில் எடுத்து விட்டது, இவருக்குத் தெரியவில்லை.

Android TV யில் Webcam, அதுவும் படுக்கையறையில் இருந்தததால், ஹேக்கர்களுக்கு வசதியாகி விட்டது.

அதன் மூலம் கண்காணித்துக்கொண்டு இருந்தவர்கள் கணவன் மனைவி உறவு கொள்ளும் போது பதிவு செய்து எடுத்துக்கொண்டார்கள்.

இது தான் விஷயம்.

இது போலக் காணொளி கிடைத்தால் எங்கே செல்லும்? ஆபாச தளங்களுக்குத்தான். இதை விற்றுக் கணிசமான பணத்தைப் பெற்றுக்கொள்வார்கள்.

ஏனென்றால், Professional Porn காணொளிகளுக்கு இருக்கும் தேவையை விட Scandal காணொளிகளுக்கான தேவை அதிகம்.

எனவே, திருட்டுத்தனமான காணொளிகளை விருப்பமாகப் பார்க்கவே அதிகம் உள்ளனர். ஏனென்றால், அடுத்தவன் அந்தரங்கத்துக்கு உலகம் முழுக்க வரவேற்பு.

இதை எப்படித் தவிர்க்கலாம்?

1. ஆபாச தளங்களுக்குச் செல்லாதீர்கள்.

அதையும் மீறி செல்ல வேண்டும் என்றால், மிகப்பாதுகாப்பான வழிமுறையைக் கையாளுங்கள்.

2. Webcam பயன்படுத்தப்படாமல் இருந்தால், அதில் ஸ்டிக்கர் பொட்டு அல்லது டேப் ஒட்டி மறைத்து விடுங்கள்.

தேவைப்படும் போது மட்டும் எடுத்துப் பயன்படுத்துங்கள்.

Webcam பயன்பாட்டில் இருந்தால், Camera அருகே உள்ள Light, Blink ஆகிக்கொண்டு இருக்கும். எனவே, இதைக் கவனிக்கவும்.

பின்வரும் கட்டுரைகளைப் படித்தால், ஓரளவு எச்சரிக்கையாக இருப்பது பற்றித் தெரிந்துகொள்ளலாம் அதோடு விழிப்புணர்வும் அடையலாம்.

கணினியைப் பராமரிப்பது எப்படி?

திரையரங்கில் சில்மிஷங்களில் ஈடுபடுபவரா?

முகவரியில் “HTTPS” இல்லையா..! தெறிச்சு ஓடிடுங்க 🙂

லென்ஸ் [2017] Danger Of Sex Chat

குளியறையில் ரகசிய கேமரா!

“Key Logger” என்ற ஆபத்து பற்றித் தெரியுமா?

அந்தரங்கம் பாதுகாப்பானதா?

ஃபேஸ்புக் அந்தரங்கப் பாதுகாப்பு

ஹேக்கிங்கில் (Hack) இருந்து தப்பிப்பது எப்படி?

பின்குறிப்பு

செய்திகளில் ஒவ்வொருவரும் ஒவ்வொருமாதிரி குறிப்பிட்டு இருந்தார்கள். அதாவது சிலர் கணினி என்று, சிலர் Android TV என்று.

எதுவாக இருந்தாலும், Webcam இருந்தால், மேற்கூறிய வழிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்றவும்.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

  1. மிகவும் பயனுள்ள தகவல் அதே சமயம் திகிலூட்டும் தகவலும் கூட . சரியான சமயத்தில் எச்சரிக்கை விடுத்திருக்கீர்கள் .

    நான் பொதுவாக தமிழ்மணம் சென்று அங்கிருந்து தான் உங்கள் தளத்திற்கு வருவேன். ஆனால் சிறிது நாட்களாக அந்த தளம் செயல் பட வில்லை அதாவது ஜூலை 26 பிறகு அதில் ஒரு மாற்றமும் இல்லை. உங்கள் தளம் தெரியும் ஆதலால் நேரடியாக வந்து விட்டேன் மற்ற தளங்களுடைய முகவரி தெரியாததால் செல்ல முடியவில்லை

    தமிழ்மணம் திரட்டி நிறுத்த பட்டு விட்டதா என்ன ?

  2. தமிழ்மணம் தளம் இதற்கு முன்பும் இது போல ஆகி இருக்கிறது ஆனால், சில நாட்களில் சரியாகி விடும்.

    இது போல நீண்ட நாட்கள் எடுத்துக்கொண்டதில்லை. காரணம் தெரியவில்லை.

    சரி செய்து திரும்ப வருவார்கள் என்று நினைக்கிறேன். தமிழுக்கு என்று இருக்கும் ஒரே ஒரு திரட்டி இது தான். இதுவும் நிறுத்தப்பட்டால் எழுதுபவர்களுக்கு பெரும் இழப்பு.

  3. இணையம் பாதுகாப்பானது என்று எப்போதும் கூற முடியாது.. ஆனால் பயன்படுத்துவோர் கவனமான இருப்பது அவசியம்.. தெரிந்த நட்பு வட்டாரத்தில் இது போன்ற வேறு ஒரு பிரச்சனையின் காரணத்தினால் கணவன் / மனைவிக்கு இடையில் பிரச்சனை முற்றி விவகாரத்தில் முடியும் அளவிற்கு சென்றது… எச்சரிக்கை பதிவிற்கு நன்றி கிரி..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!