ஃபேஸ்புக் அந்தரங்கப் பாதுகாப்பு

5
ஃபேஸ்புக் அந்தரங்கப் பாதுகாப்பு

பேஸ்புக்கின் பல்வேறு வசதிகளைப் பற்றி அறியாமலே பலர் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எதைப் பகிர்வது / பகிரக் கூடாது என்பதில் பல குழப்பங்களைச் சந்தித்து வருகிறார்கள். ஃபேஸ்புக் அந்தரங்கப் பாதுகாப்பு பற்றிப் பார்ப்போம்.

ஃபேஸ்புக் அந்தரங்கப் பாதுகாப்பு

இந்த வசதி கூகுள் + ல் சில எளிமையாகப் புரிந்தாலும் ஃபேஸ்புக்கில் கொஞ்சம் குழப்பமாக / தெரிந்து கொள்ள சிரமமாக இருக்கிறது என்பது உண்மை தான்.

இதில் உள்ள வசதிகளைப் பார்ப்போம். Image Credit

பின்வருபவை அந்தரங்கம் (ப்ரைவசி) வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மட்டுமே! Public க்காகப் பகிர்பவர்கள் சும்மா தெரிந்து வைத்துக் கொள்ளலாம்.

அந்தரங்கம் வேண்டும் என்பவர்கள் நண்பர்களுக்கு இடையே மட்டுமே தங்கள் நிலைத்தகவலை (Status) பகிர்வார்கள்.

ஆனால், அதிலும் சில நிலைத்தகவலை மற்றவர்கள் பார்க்கக் கூடாது என்று நினைப்பார்கள் அதனால், அனைவரும் பார்ப்பார்களே என்று பகிர விருப்பப்படுவதைக் கூடப் பகிரவே மாட்டார்கள்.

இது போல யோசிக்க வேண்டியதே இல்லை. இதையெல்லாம் எளிதாகச் சமாளிக்கலாம்.

பட்டியல்

கிரிக்கெட் சம்பந்தப்பட்ட விசயங்களில் ஆர்வம் என்றால் இதில் ஆர்வம் உள்ளவர்களை மட்டும் ஒரு பட்டியல் உருவாக்கி அந்தக் பட்டியலுக்கு மட்டும் நிலைத்தகவலை பகிரலாம்.

இதனால் ஆர்வமில்லாதவர்கள் இதைத் தங்களுடைய டைம் லைனில் பார்க்க வேண்டிய அவசியமில்லை.

பட்டியலை உருவாக்க Friends என்பதை இடது புறத்தில் க்ளிக் செய்தால், படத்தில் உள்ளது போல வரும். இதன் மூலம் நீங்கள் பட்டியல் உருவாக்கிக் கொள்ளலாம்.

சிலர் தங்கள் நண்பர்கள் பட்டியலில் நிறைய நண்பர்களை வைத்து இருப்பார்கள் ஆனால், அதில் சிலர் மட்டுமே interact செய்வார்கள் மற்றவர்கள் Silent reader ஆக இருப்பார்கள்.

யார் யார் உங்களுடன் Like / comment என்று தொடர்பில் இருக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே தெரியும்படியும் உங்கள் நிலைத்தகவலைப் பகிரலாம்.

இதற்காக செய்ய வேண்டியது முதலில் ஒரு பட்டியல் (List) உருவாக்கி யார் யார் உங்களுடன் தொடர்பில் இல்லாமல் இருக்கிறார்களோ அவர்களை எல்லாம் இதில் சேர்க்க வேண்டும்.

இது ரொம்ப ரொம்ப எளிது.

இவ்வாறு ஒரு பட்டியலை உருவாக்கியவுடன், நீங்கள் புதிதாக ஒரு நிலைத்தகவலை பகிரும் போது அதில் Friends என்று இருப்பதற்குப் பதிலாக Custom என்று தேர்வு செய்ய வேண்டும்.

இதில் Don’t Share this with என்பதை தேர்வு செய்து அதில் இந்தப் பட்டியலைக் கொடுத்து விட்டால் போதும்.

இந்த நிலைத்தகவல் இவர்களைத் தவிர மற்றவர்கள் பார்க்கலாம்.

இதை ஒரு முறை செய்தால் இது Default ஆகவே அடுத்த முறையும் இதே வசதியை எடுத்துக்கொள்ளும். பகிர்ந்த பிறகும் நீங்கள் மாற்றலாம், ஒன்றும் பிரச்சனையில்லை.

எடுத்துக்காட்டுக்கு ஒரு குறிப்பிட்ட நிலைத்தகவலை உங்கள் நண்பர்களில் இருவர் மட்டும் பார்க்க வேண்டாம் என்று நினைக்கிறீர்கள்.

அதாவது அவர்களுக்கு இதில் மாற்றுக் கருத்து இருக்கலாம், சண்டைக்கு வரலாம் என்று கருதுகிறீர்கள் என்றால், மேலே கூறியது போல அந்தப் பட்டியலுக்குப் பதிலாக இவர்கள் பெயரை Don’t Share this with ல் குறிப்பிட்டால் போதுமானது அவர்களால் இதைக் காண முடியாது.

இதன் மூலம் உங்களுக்கு ஏற்படும் தர்மசங்கடமான நிலையை, சண்டையை, வீண் சச்சரவைத் தவிர்க்க முடியும்.

நமக்குச் சிலரின் நிலைத்தகவல் பிடிக்காது அதோடு அவர்கள் நம் நண்பர்கள் பட்டியலிலும் இருக்க மாட்டார்கள் இருப்பினும் நண்பர்கள் பட்டியலில் உள்ளவர்கள் யாராவது நமக்குப் பிடிக்காத ஒருவரின் கருத்தைப் (Like / Share) பகிர்வார்கள் (அவருக்குப் பிடித்து இருக்கலாம்).

இதைத் தடுக்கவும் ஒரு வழி இருக்கிறது.

அந்த Drop Down list ஐ க்ளிக் செய்தால் அதில் மேலே உள்ளது போல வரும்.

அதை தேர்வு செய்து அதில் உள்ள வசதிகளை நம் தேவைக்கு ஏற்றது போலப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்தப் படத்தில் உள்ளதை விளக்குகிறேன். இதை என் நண்பர் தன்னுடைய டைம் லைனில் பகிர்ந்து இருக்கிறார்.

1. I don’t want to see this

உங்களுக்கு உங்கள் நண்பர் பகிர்ந்து இருந்த குறிப்பிட்ட ஒரு செய்தி பிடிக்காமல் இருக்கலாம், இது தேவை இல்லாமல் உங்கள் கண்களில் பட்டு உங்களைக் கோபப்படுத்தலாம் / எரிச்சல் அடைய வைக்கலாம்.

எனவே, இதைத் தேர்வு செய்தால் உங்கள் டைம் லைனில் இருந்து இந்தச் செய்தி (மட்டும்) மறைந்து விடும்.

2. Unfollow < Friend Name >

இதைத் தேர்வு செய்தால் உங்கள் நண்பர் பகிரும் எந்தச் செய்தியும் உங்கள் டைம் லைனில் வராது (Unfriend ஆகாது).

3. Hide all from giriblog

இதைத் தேர்வு செய்தால் உங்களின் இந்த நண்பர் மட்டுமல்ல வேறொரு நண்பர் giriblog ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து பகிர்ந்தாலும் உங்கள் டைம் லைனில் வராது.

இது மிகவும் பயனுள்ளது.

ஏனென்றால் நமக்குப் பிடிக்காத நிலைத்தகவல்களை தொடர்ந்து நம் நண்பர் (Like / Share) பகிர்கிறார் என்றால் இதை செய்து விட்டால், திரும்ப நம் பார்வையில் பட்டு நம்மை எரிச்சல் படுத்தாது.

ஒரு குறிப்பிட்ட நண்பரை Unfriend செய்ய விருப்பமில்லை ஆனால், நீங்கள் பகிரும் எதையும் அவர் பார்க்கக் கூடாது என்று நினைத்தால் அவரை Restricted குழுவில் சேர்த்து விட்டால் போதுமானது.

நீங்கள் இடும் எந்த நிலைத்தகவலையும் அவரால் பார்க்கவே முடியாது.

Unfollow

ஒரு குறிப்பிட்ட நண்பரை Unfriend செய்ய விருப்பமில்லை ஆனால், அவர் எதைப் பகிர்ந்தாலும் நீங்கள் பார்க்க விருப்பப்படவில்லை என்றால், Unfollow செய்து விடுங்கள்.

இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் நண்பரை Unfriend செய்ய வேண்டிய அவசியமில்லை ஆனால், அவர் பகிரும் எதையும் நீங்கள் பார்க்க வேண்டியதில்லை (மேலே கூறியுள்ள 2 வது குறிப்பு).

நீங்கள் விருப்பப்படும் போது திரும்ப Follow செய்து கொள்ளலாம்.

Block

உங்களை ஒருத்தர் தொல்லை செய்து கொண்டே இருக்கிறாரா? Block செய்து விடுங்கள். அவ்வளோ தான்.

இதன் பிறகு என்ன குட்டிக்கரணம் அடித்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. பொய்யான கணக்கில் வந்து தான் பிரச்சனை செய்ய முடியும்.

இது போல ப்ரைவசிக்கு ஏகப்பட்ட வசதிகளைக் கொடுத்து இருக்கும் ஃபேஸ்புக்கை திட்டிக்கொண்டு புலம்பிக் கொண்டு இருப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

தொழில்நுட்ப வசதிகளைத் தெரிந்து கொண்டு முழுமையாகப் பயன்படுத்தினால் கூடுதல் பயனைப் பெற முடியும்.

இறுதியாக, பாதுகாப்பு வசதிகள் இருந்தாலும், நீங்கள் இணையத்தில் பகிர்ந்து விட்டீர்கள் என்றால் அது எப்படி வேண்டும் என்றாலும் மாறலாம்.

உங்கள் நண்பர்கள் பட்டியலில் உள்ள ஒருவர் Screenshot எடுத்துப் போட்டுவிட்டால் கூடப் போதும். கதை முடிந்தது.

இது போல நடந்து ஒருவர் நாட்டை விட்டே சென்ற உண்மைக் கதையெல்லாம் உண்டு.

எனவே இணையத்தில் பகிர வேண்டியதை மட்டும் தான் பகிர வேண்டும் அனைத்தையுமே அல்ல.

தொழில்நுட்பம் எப்படி நம் அந்தரங்கத்தை உலகம் முழுக்க பரப்புகிறது, எப்படி நாம் எச்சரிக்கையாக இருப்பது என்பது பற்றி விரைவில் எழுதுகிறேன்.

Read போட்டது ஒரு ஃபேஸ்புக் ஸ்டேடஸ் ஆனது டோட்டல் டேமேஜ்

Read ஃபேஸ்புக்கின் இரட்டை அடுக்குப் பாதுகாப்பு வசதி

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel .

5 COMMENTS

  1. Interpretations about keeping privacy in Facebook are very useful also could be very easy to understand. Let me know how to upload you tube video in face book and how can we create a ‘like page’ in facebook?

    Gayathrinaga

  2. கிரி.. சூப்பர் மெஸேஜ்.. கண்டிப்பாக பல நண்பர்களுக்கு பயன்படும் என நம்புகிறேன்.. இணையம் தொடர்பான நிறைய செய்திகளை உங்கள் பதிவுகள் மூலமாக தான் தெரிந்து கொண்டு வருகிறேன்…

    இது போன்ற பதிவுகளை விட்டு விடாமல், குறிப்பிட இடைவெளியில் பதிவது மகிழ்வை தருகிறது… உங்கள் தொழில்நுட்ப பதிவுகள் எளிமையாக உரைநடையில் இருப்பது இன்னும் சிறப்பே!!! பகிர்தமைக்கு மகிழ்ச்சி கிரி..

  3. @காயத்ரிநாகா உங்களுக்கு ஏற்கனவே ஒரு முறை இது பற்றி கூறியதாக நினைவு. https://www.facebook.com/pages/ இங்கே சென்று ஒரு பக்கம் உருவாக்கிக் கொள்ளலாம்.

    @யாசின் லோகன் நன்றி.

  4. Naan Facebook use pannathu illai thala
    Intha PDF Yennoda appa ku rumba useful la iruku nu sonnaar ru
    Last weekend share pannen

    Sagala kala vallavana irukeenga giri… Medical thavira:)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!