ஹேக்கிங் (Hack) பாதுகாப்பு வழிகள் என்ன?

33
Hack ஹேக் ஹேக்கிங்

ணையத்தை பயன்படுத்துகிறீர்கள் என்றால் “ஹேக்கிங்” (Hack) என்ற வார்த்தை அறியாமல் இருக்க மாட்டீர்கள்.

அப்படி இதைத் தெரிந்து இருக்கவில்லை என்றால், இணையத்தை பயன்படுத்தப் போதுமான அறிவை இன்னும் பெறவில்லை என்பதே உண்மை.

ஹேக்கிங் பற்றித் தெரியாதவர்களும் தெரிந்தவர்களும் படிக்க வேண்டிய கட்டுரை.

ஹேக்கிங் என்றால் என்ன?

உங்களை அறியாமல் உங்கள் மூலமாகவே அல்லது உங்களுக்குத் தெரியாமல் உங்கள் தகவல்கள், மின்னஞ்சல், வங்கி மற்றும் பல இணைய கணக்குகளின் கடவுச்சொல்லை (Password) திருடுவதே ஹேக்கிங் ஆகும்.

எதற்கு ஹேக் செய்கிறார்கள்?

சிலர் இதைப் பொழுதுபோக்காகச் செய்கிறார்கள், இன்னும் சிலர் தங்களுக்கு பிடிக்காதவர்களின் கணக்கை முடக்க செய்கிறார்கள்.

சிலர் பணத்துக்காகச் செய்கிறார்கள் அதாவது நீங்கள் பணம் கொடுத்தால், நீங்கள் கூறும் கணக்கை ஹேக் செய்து கொடுத்து விடுவார்கள்.

இன்னும் சிலர் மற்றவர்களின் பணத்தை, தகவல்களைத் திருடச் செய்கிறார்கள்.

இதை எவ்வாறு தடுப்பது?

நான் கூறப்போவது உங்களை எச்சரிக்கை படுத்தவே! என்னதான் எச்சரிக்கையாக இருந்தாலும் கொஞ்சம் ஏமாந்தாலும் நமது கணக்கு முடக்கப்பட்டு விடும்.

எனவே பின்வருவனவற்றை கூடுமானவரை பின்பற்றப்பாருங்கள்.

1. https (Hypertext Transfer Protocol Secure)

பணப்பரிவர்த்தனை, பயனர் கணக்கைப் பயன்படுத்தும் தளங்கள்  குறிப்பாக உங்கள் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பயன்படுத்தினால் கண்டிப்பாக முகவரியில் https ஆகத்தான் இருக்க வேண்டும்.

இல்லையென்றால் உள்ளீடு செய்யக் கூடாது.

வங்கிக்கணக்கு உட்பட எந்தக் கணக்கில் நுழைந்தாலும் அது https ஆக உள்ளதா என்று உறுதி செய்த பிறகே உள்ளே செல்ல வேண்டும்.

https தகவல்களை Encrypt செய்து அனுப்பும், பாதுகாப்பானது.

பிற்சேர்க்கை முகவரியில் “HTTPS” இல்லையா..! தெறிச்சு ஓடிடுங்க 🙂

2. சரியான முகவரி

எப்போது மின்னஞ்சலைப் பயன்படுத்த நினைத்தாலும் நீங்களே முகவரியை முழுவதும் தட்டச்சு செய்யுங்கள். எடுத்துக்காட்டாக https://gmail.com. வேறு ஏதாவது சுட்டி (Link) மூலம் செல்லாதீர்கள்.

எடுத்துக்காட்டாக www.emaanthavan.com/gmail என்று இருக்கும் 🙂 . திறந்தாலும் கூகுள் மின்னஞ்சல் கணக்கு முகப்பு போலவே இருக்கும்.

கூகிள் கணக்கு என்று நினைத்துப் பயனர் கணக்கு மற்றும் கடவுச்சொல்லை கொடுத்துச் செல்வீர்கள்.

ஆனால், உள்ளே ஒன்றும் இருக்காது.

சரி! எதோ பிரச்சனை என்று மறுபடியும் நேரடியாக https://www.gmail.com என்று அடித்துச் சென்று விடுவீர்கள்.

ஆனால், உங்களுக்குத் தெரியாது, இன்னொருவருக்கு உங்கள் பயனர் விவரங்களைத் தாரை வார்த்து விட்டீர்கள் என்று.

3. OS & Anti Virus Update

கணினியில் Windows இயங்குதளம் (Operating System) பயன்படுத்துகிறீர்கள் என்றால் Windows update மற்றும் Anti Virus update கண்டிப்பாகச் செய்ய வேண்டும்.

இதைத் தானியங்கியாக அமைத்து விட்டீர்கள் என்றால், அதுவே இணையத்தை இணைத்தவுடன் Update செய்து விடும்.

அவ்வப்போது அது சரியாகச் செயல்படுகிறதா என்பதை மட்டும் கவனித்தால் போதுமானது.

இது உலவிக்கும் (Browser) பொருந்தும்.

4. சுட்டிகளில் (Link) எச்சரிக்கை

அறிமுகம் இல்லாத நபரிடம் இருந்து வரும் குறுந்தகவல், மின்னஞ்சலில் உள்ள சுட்டிகளை க்ளிக் செய்ய வேண்டாம்.

சந்தேகம் அளிக்கும் எந்தச் சுட்டியையும் க்ளிக் செய்ய வேண்டாம். இதன் மூலம் உங்கள் தகவல்களை எளிதாகச் சுருட்ட முடியும்.

5. தகவல் எச்சரிக்கை

உங்களுடைய வங்கிக் கணக்கு விவரங்கள் கேட்டு மின்னஞ்சல் வந்தால், தைரியமாக அதை டெலிட் செய்து விடலாம்.

எந்த வங்கியும் உங்கள் கணக்கு பற்றிய விவரங்கள் (பயனர் கணக்கு, OTP மற்றும் கடவுச்சொல்) கேட்டு மின்னஞ்சல் செய்யாது. 100% நம்பலாம்.

மின்னஞ்சல் பயனர் கணக்கு பற்றிய விவரங்களைக் கேட்டு வரும் மின்னஞ்சலும் இதே வகையைச் சேர்ந்ததாகும்.

6. இலவச மென்பொருள் வேண்டாம்

இலவசமாகக் கிடைக்கிறது என்று  எந்தப் புதிய மென்பொருளையும் நிறுவாதீர்கள் அதில் Spyware என்ற தகவல்களைத் திருடும் மென்பொருள் இருக்கலாம்.

இது தெரியாமல் இலவசம் என்று மகிழ்ச்சியாக நிறுவினால், உங்கள் கிரெடிட் கார்ட் எண் உட்பட அனைத்தையும் சுட்டு வேட்டு வைத்து விடுவார்கள்.

நம்ம தான் இலவசம் என்றால் பினாயிலும் குடிப்போமே! உஷாராக இருங்கள்.

எவ்வளவுக்கெவ்வளவு தேவையற்ற மென் பொருளை நிறுவுவதை தவிர்க்கிறீர்களோ அவ்வளவு நல்லது. கணினியின் வேகமும் சிறப்பாக இருக்கும்.

பிற்சேர்க்கை – கணினியைப் பராமரிப்பது எப்படி?

7. Keylogger

Keylogger என்ற மென்பொருள் உள்ளது.

இது மிக மிக அபாயகரமான மென் பொருளாகும். இதன் மூலம் நீங்கள் தட்டச்சு செய்யும் ஒரு எழுத்து விடாமல் அத்தனையையும் நீங்கள் அறியாமல் படிக்க முடியும்.

எளிமையாகக் கூறுவதென்றால் உங்களை மொட்டை அடிக்கும் மென்பொருளாகும்.

இது பற்றிச் சுருக்கமாகக் கூற முடியாது என்பதால் இது பற்றியும் இதில் இருந்து எவ்வாறு தப்பிப்பது என்பது பற்றியும் விரிவாகப் பின்னர் எழுதுகிறேன்.

பிற்சேர்க்கை – “Key Logger” என்ற ஆபத்து பற்றித் தெரியுமா?

8. பிரவுசிங் சென்டர்  

எல்லாவற்றையும் விட மிக ஆபத்தான இடம் என்றால், அது பிரவுசிங் சென்டர் தான். காசு கொடுத்து ஆப்பு வாங்கும் இடம், சொந்த செலவில் சூனியம் வைப்பது ஆகும்.

இங்கே மேற்கூறிய அனைத்துமே நடக்கலாம்.

எனவே, உங்களின் முக்கியமான கணக்குகளைப் பிரவுசிங் சென்டர்களில் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிருங்கள்.

தவிர்க்க முடியவில்லை என்றால், Private Browsing / Incognito முறையை IE, க்ரோம் (ctrl+shift+N) மற்றும் ஃபயர்ஃபாக்ஸில் பயன்படுத்தவும்.

இது உங்கள் தகவல்களை எங்கும் சேமிக்காது ஆனால் Keylogger மென்பொருள் முறையில் தகவல்களைத் திருட முடியும்.

பாதுகாப்பே இல்லாமல் இருப்பதற்கு இந்த முறை கொஞ்சம் பரவாயில்லை என்று கூறலாம் அவ்வளவே.

9. கடவுச்சொல்

அனைத்திலும் கவனமாக இருந்தாலும், கடவுச்சொல் கடினமாக இல்லையென்றால் விரல் சொடுக்கும் நேரத்தில் கண்டு பிடித்து விடுவார்கள்.

எவ்வளவு சிறப்பான அல்லது கேவலமான கடவுச்சொல்லை வைத்து இருக்கிறீர்கள் என்று பின் வரும் தளங்களில் சென்று அறிந்து கொள்ளுங்கள்.

மொக்கை கடவுச்சொல்லாக இருந்தால் உடனே மாற்றி விடுங்கள்.

a) https://www.security.org/how-secure-is-my-password/

b) https://1password.com/password-generator

10. ஒரே கடவுச்சொல் கூடாது

அனைத்து கணக்குகளுக்கும் (Gmail, facebook, twitter, instagram) ஒரே கடவுச்சொல்லை வைக்கக் கூடாது.

அப்படி வைத்தால், ஒரு கணக்கை ஹேக் செய்தால் உங்கள் அனைத்து கணக்குகளும் கையை விட்டுப்போய் விடும்.

கூகிள் கணக்கை எடுத்துக்கொண்டால் அதில் மின்னஞ்சல், கூகுள் ஃபோட்டோஸ், காலண்டர், YouTube, Docs, கூகுள் ட்ரைவ் என்று அனைத்தும் காலி ஆகி விடும்.

ஒரு கடவுச்சொல் ஆனால், நீங்கள் இழப்பது எத்தனை பாருங்கள்! இவை இல்லாமல் facebook, twitter, instagram, Amazon, flipkart என்று பல கணக்குகள் உள்ளன.

11. Two step Authentication

இரட்டை அடுக்குப் பாதுகாப்பு முறையை செயல்படுத்திஇருக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் கணக்கின் பாஸ்வேர்ட் தெரிந்து இருந்தாலும், ஹேக் செய்தவர்களால் கணக்கில் நுழைய முடியாது.

OTP அல்லது வேறு எந்த வகையில் (Like.. Google Authenticator) செயல்படுத்தியிருக்கிறீர்களோ, அவ்வழியில் சென்றால் மட்டுமே நுழைய முடியும்.

90% பயனாளர்கள் Two step Verification செயல்படுத்தவில்லையென கூகுள் கூறுகிறது.

இவ்வசதியை செயல்படுத்தியவர்களின் கணக்கு ஹேக்கிங்கில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது.

எனவே, இவ்வசதியை சோம்பேறித்தனம் பார்க்காமல் செயல்படுத்தவும்.

Read: ஜிமெயிலின் இரட்டை அடுக்குப் பாதுகாப்பு வசதி!

12. யாரையும் நம்ப வேண்டாம் 

உங்கள் கணக்கின் கடவுச்சொல்லை யாருக்கும் கொடுக்காதீர்கள்.

அப்படி அவசியம் கொடுக்க வேண்டி வந்தால், வேலை முடிந்தவுடன் உடனே கடவுச்சொல்லை மாற்றி விடுங்கள். எவ்வளவு நெருங்கிய நண்பராக இருந்தாலும் சரி!

இந்த விசயத்தில் யாராக இருந்தாலும் நம்ப வேண்டாம் காரணம், நாளை வேறொருவர் ஹேக் செய்தால் கூட உங்கள் நண்பரைச் சந்தேகப்பட வேண்டி வரும்.

இது அனாவசிய பிரச்சனைகளைத் தரலாம், நட்பை முறிக்கலாம்.

மேற்கூறியவை ஓரளவு இணைய பாதுகாப்பை அளிக்கும். இருப்பினும் இதையும் மீறி எச்சரிக்கையாக இருப்பது நம் கையில் தான் உள்ளது.

நம் கணக்கை யாரும் இதுவரை முடக்கவில்லையென்றால், நம் கணக்கு பாதுகாப்பாக உள்ளது என்று அர்த்தமல்ல. ஹேக் செய்பவர்கள் நம் கணக்கைக் குறி வைக்கவில்லை என்பதே உண்மை.

ஹேக் செய்பவர்கள் நினைத்தால், உங்களின் சிறு தவறு கூட அவர்களுக்குப்போதும் உங்கள் “கணக்கை” முடித்து விடுவார்கள் 🙂 .

தொடர்புடைய கட்டுரைகள்

ஃபேஸ்புக்கின் இரட்டை அடுக்குப் பாதுகாப்பு வசதி

SIM SWAP மோசடி [FAQ]

கூகுள் அறிமுகப்படுத்திய “Titan Security Key”

அடிக்கடி கடவுச்சொல்லை மாற்ற வேண்டுமா?

கூகுள் அறிமுகப்படுத்திய அதி பாதுகாப்பு வசதி

எது மாறினாலும் “123456” மட்டும் மாறவில்லை!

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

33 COMMENTS

  1. இப்பொழுது keylogger போன்ற பிரச்சினைகளை சமாளிக்கத் தான் virtual keyboard முறையை எல்லா முக்கிய இணையத்திலும் உபயோகிக்கிறார்கள்…

  2. இது தெரிஞ்சிருந்தா என் பழைய பிளாக்கை இழந்திருந்திருக்கமாட்டேன் :((

  3. மிகவும் பயனுள்ள பதிவு. நிறைய தகவல்கள். நன்றிங்க.

  4. கணினி படிக்காமல், பொழுது போக்காக பயன் படுத்துவோர் அனைவருக்கும் தேவையான அடிப்படை தகவல்களின் தொகுப்பு, புதிய மக்களுக்கு கண்டிப்பாக பயன்படும்.

    பகிர்வுக்கு நன்றி கிரி.

  5. நல்ல பயனுள்ள தகவல் கிரி… என்னதான் இப்படி சொல்லி கொடுத்தாலும் சில நேரங்களில் தவறு செய்து விடுகிறோம்…. என்ன பண்ண…..

    நாளைக்கு தலைவர் பற்றிய பதிவா??

  6. நம்ம மக்களுக்கு பறி போகற வரை இதெல்லாம் சீரியசா எடுத்துக்க மாட்டோமே… அது தானே பிரச்சனை 🙂 Virtual Keyboard உபயோகிப்பதை சொல்ல மறந்துட்டீங்களா அண்ணா?

  7. பயனுள்ள தகவல்!!!

    இன்னும் விரிவாக அலசியிருக்கலாம் (malware /spyware )!!!

  8. எச்சரிக்கையுடன் இருக்க உபயோகமான தகவல்களையும் குறிப்புகளையும் கொடுத்திருக்கிறீர்கள். நல்ல பதிவு.

  9. மிகவும் பயனுள்ள ஒரு செய்தியை கடைசி வரை படிக்குமாறு மிக எளிமையாகவும் நகைச்சுவை தூவியும் சொல்லியிருகீங்க. (ஆட்டை போடருது, சொந்த செலவிலே சூன்யம் வச்சிக்கிறது, ஓசின்னா பெனாயில் கூட குடிக்கறது எல்லாமே அந்தந்த இடத்துக்கு பொருத்தமா தான் இருக்கு!) . நன்றி நண்பரே.

  10. மிகவும் பயனுள்ள அடிப்படை தகவல்கள் கிரியார் 🙂
    நான் மேலும் விழிப்போடு இருக்க முனைகிறேன்

  11. //உங்கள் சொந்தக் கணினியாகவே இருந்தாலும் உங்கள் கடவுச்சொல்லை சேமித்து வைக்காதீர்கள். எப்போது உள்ளே நுழைந்தாலும் ஒவ்வொரு முறையும் கடவுச்சொல்லை கொடுத்தே செல்லுங்கள் அதுவே பாதுகாப்பானது. உங்கள் உலவியில் உள்ள History,Cookies ஐ சீரான கால இடைவெளியில் நீக்கிக்கொண்டே இருக்க வேண்டும்.//

    பொதுவெளியில் எக்ஸ்ன்னாலே எனக்கு அலர்ஜி!அதுவும் கட்டம் கட்டி அடுத்த முறை அப்படியே வா!ன்னு கூப்பிடற ஆளுக நிறைய பேர் இருக்கிறாங்க.விட்டுருவோமா என்ன?

    மொத்த பத்திகளுக்கும் தனித்தனியா பின்னூட்ட்டம் போடற மாதிரி இருக்குது உங்க பதிவு.

    ஆமா!போன தடவை வந்தப்போ என்னவோ உங்ககிட்ட கடன் கேட்ட மாதிரி இருக்குதே:)

  12. ஓசி பெனாயில்! அடைமொழி நல்லாயிருக்குதே:)

  13. //ஹேக் செய்பவர்கள் உங்கள் கணக்கை குறி வைக்கவில்லை என்பதே உண்மை.//

    இது மட்டும்தான் எவரெஸ்ட்.

  14. உங்கள் தமிழ்மண நட்சத்திர வாரத்தில் எதிர்பார்த்த மாதிரியே ஒரு கணினிநுட்ப பதிவு.
    இவ்வாறு சமூக நன்மையை கருத்தில் கொண்டு எழுதப்படும் பதிவுகளை வரவேற்கிறேன்.
    நன்றி.

  15. தலைவா … நீங்களும் எங்கள் (ரஜினி ) குடும்பத்தை சேர்ந்தவர் என்பது தெரியும்!! தயவுசெய்து எனது பின்னூட்டத்தை வெளியிட்டு நமது தலைவருக்கு மேலதிக ஒட்டு கிடைக்க உதவி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்…மேலும் உங்கள் நண்பர் வட்டாரத்துக்கு தெரியபடுத்தி நமது தலைவருக்கு இந்த அவர்ட் கிடைக்க செய்வதில் ஒரு சிறு துளியாக நாமும் இருப்போமே என தாழ்மையுடன் வேண்டி கொள்கிறேன்..
    (இதை நண்பர் எப்பூடி க்கும் அனுப்பினேன்..ஆனால் என்னால் அனுப்ப முடியவில்லை..அதில் ஏதோ எரர் சொல்கிறது…உங்களால் முடிந்தால் இதை எப்பூடிக்கும் தெரியபடுத்தி ,அவரது ப்லோகிலும் வெளியிட வைக்குமாறு தாழ்மையுடன் வேண்டி கேட்டு கொள்கிறேன்..நன்றி நண்பா..)

    நமது தலைவர் (இந்திய சூப்பர் ஸ்டார் ) ரசிக குடும்ப நண்பர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்…..

    இந்த வீடியோ நாம் அனைவரும் பார்த்து சந்தோஷ படக்கூடிய வீடியோ…நிறைய நண்பர்கள் பார்த்து இருக்கலாம்..இந்த லிங்க் இதுவரை இந்த வீடியோ பார்த்திராத நண்பர்களுக்காக…..இது நம் தலைவருக்கு பெஸ்ட் என்டர்டைனர் ஆப் இந்தியா அவார்ட் மன்மோஹன்சிங் கையால் பெற்ற போது வந்த வீடியோ..
    (இந்த வீடியோவில் ஷாருக் கான் பேசும்போது நமது பிரதமர் அமர்ந்து இருப்பார்..!! தலைவர் பேசும்போது தலைவர் பக்கத்தில் வந்து நிற்பார்!! அது தான் தலைவரின் பவர்!!) ஒ.கே. இந்த வீடியோவை முதலில் பார்த்து சந்தோஷ படுங்க..

    Rajni and Shah Rukh in NDTV Indian of the year Award ceremon:
    ,நாம் அனைவரும் தலைவருக்கு இந்த அவார்ட் மீண்டும் கிடைக்க செய்ய வேண்டும்..
    இந்த வருடம் இந்த அவார்ட் தலைவருக்கு கிடைப்பது நூற்றுக்கு நூறு சதவிகிதம் உறுதி..இது ஏற்கனவே எழுத பட்டு விட்ட ஒன்று என்பதே உண்மை..காரணம் ரோபோட் அளவுக்கு வேறு எந்த படமும் சாதனை செய்யவில்லை ..இந்த அவார்ட் தலைவருக்கு சிவாஜி சாதனையால் கொடுக்கப்பட்ட அவார்ட்..சிவாஜியை விட பத்து மடங்கு சாதனை ரோபோட் செய்துள்ளது..நிச்சயம் இந்த வருட அவார்ட் தலைவருக்கு தான்……இருந்தாலும் உங்கள் அனைவருக்கும் எனது வேண்டுகோள்..நான் கொடுக்கும் லிங்க் போய்,உங்கள் மெயில் ஐடி கொடுத்து என்டேர்டைன்மென்ட் செக்சன் சென்று தலைவருக்கு ஒட்டு போடும்படி மிக தாழ்மையுடன் வேண்டி கேட்டுக் கொள்கிறேன்..ஒரே ஒரு ஒட்டு போட வேண்டிய அவசியம் இல்லை.என்னிடம் ஆறு மெயில் ஐடி இருந்தது…எனவே நான் ஆறு ஒட்டு தலைவருக்கு போட்டுள்ளேன்..மற்றும் எனக்கு நண்பர் கூட்டம் அதிகம்..அவர்கள் அனைவருக்கும் விஷயம் சொல்லி,அவர்களையும் ஒட்டு போட வைத்து விட்டேன்..அவர்களும் தலைவர் ரசிகர்களே..எனது பங்குக்கு ,நான் மற்றும் எனது நண்பர்கள் மூலம் குறைந்த பட்சம் நூறு ஓட்டுக்கு மேல போட்டாச்சு…நீங்களும்,உங்களது ஓட்டையும் போட்டு,உங்கள் நண்பர்களுக்கும் இந்த விஷயம் தெரியபடுத்தி,அவர்களையும் ஒட்டு போட (தலைவர் ரசிகர்களை மட்டும்..யாரையும் கட்டாயபடுத்த வேண்டாம்.) வைக்குமாறு மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்..
    நீங்கள் ஒட்டு போட வேண்டிய லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது….

    இந்த ஓட்டுப் பதிவு தலைவரின் பிறந்தநாள் (cnn கூட தலைவர் பிறந்த நாளை தேர்ந்தெடுத்துள்ளது!) நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைகிறது..
    தலைவர் அரசியலுக்கு வந்தால் அவரை நாம் எப்படி ஜெயிக்க வைப்போம் என்பதை ஒரு முன்னோட்டமாக இதை எடுத்துகொள்வோம்….
    அவருக்கு அரியாசனம் கொடுக்கும் முன்..,இந்த அவார்ட் தலைவருக்கு கொடுத்து அழகு பார்ப்போம்..நன்றி நண்பர்களே..
    இந்த ஓட்டெடுப்பை பற்றி சரியான நேரத்தில் தகவல் கொடுத்த தலைவர் ரசிகர் DR.SUNEEL
    (ஒன்லி சூப்பர் ஸ்டார் டாட் காம் வாசக நண்பர் )அவர்களுக்கு எங்கள் தலைவர் ரசிகர் குடும்பம் சார்பாக நன்றிகளும் வாழ்த்துக்களும்…

  16. மாணிக்கம், ராபின், கவிநயா, தினேஷ், அப்துல்லா, சித்ரா, மதிசுதா, சிங்கக்குட்டி, RK, பிரதீபா, அணிமா, ராமலக்ஷ்மி, ராஜன், சுனில், Breeze, அனுஷ்கா, எஸ் கே, ஜீவதர்ஷன், ராஜ நடராஜன், லோகன், பிரபு, செல்வா மற்றும் டீன் வருகைக்கு நன்றி

    @RK இல்லை 🙂

    @பிரதீபா நான் இது பற்றி தனியாக இடுகை எழுதுவதாக கூறி இருக்கிறேனே! 🙂 இதில் கூற நிறைய விஷயம் இருக்கு. Virtual Keboard இல்லாம தப்பிக்க ஒரு வழி இருக்கு.

    @அணிமா ரொம்ப விளக்குனா படிக்கிற விருப்பம் போய் விடும். எப்போதுமே படிப்பவர்களுக்கு ரொம்ப படிக்க கொடுத்தால் முழுவதும் படிக்க மாட்டார்கள் அப்புறம் அதனால் ஒரு பயனும் இல்லை. பிறகு தனித்தனியாக எழுதலாம்.

    @ராஜன் இப்படி எழுதினால் தான் விருப்பமாக படிப்பாங்க.. இல்லைனா கொட்டாவி விட்டுடுவாங்க 🙂

    @ராஜ நடராஜன் நீங்கள் கேட்டது ரஜினி பற்றிய பாலிவுட் பதிவில் கூறி இருக்கிறேன் 🙂

    @பிரபு முயற்சி செய்கிறேன்.

    @டீன் சொல்லிட்டீங்க இல்ல..போட்டு தள்ளிடுவோம் 😉

  17. கடவுசொல்லை சரி பார்க்கும் பொது அத்தளங்கள் நமது கடவுச்சொல்லை ஹாக் பண்ணமாட்டார்களா?

  18. ரொம்ப அருமையா விளக்கமா சொல்லியிருக்கீங்க கிரி நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!