“நண்பரின் மனைவி குளிப்பதை ரசிக்க நண்பர் வீட்டு குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்திய என்ஜினீயர் கைது” – Image Credit
இச்செய்தியைப் தினத்தந்தியில் பார்த்ததும் கள்ளக்காதல், குளிப்பதைப் பார்த்தான், கூட்டிட்டு ஓடிட்டான்னு இதே செய்தி தான் என்று கடுப்பானது.
இது போன்ற செய்திகளைப் பார்த்தாலே எரிச்சலாகிறது.
“ரகசிய கேமரா” என்று பார்த்தது நினைவுக்கு வர தெரிந்த விசயம் என்றாலும் எப்படி நடந்து என்று தெரிந்து கொள்ள விரும்பினேன்.
குளியறையில் ரகசிய கேமரா!
ஒருவர் நண்பனின் மனைவி மீது மோகம் கொண்டு குளியறையில் பேனா போல ஒரு ரகசிய கேமரா வைத்துக் குளிப்பதை படம் எடுத்துள்ளார்.
இச்சாசாதனத்தைக் கண்டு பிடித்துத் தன் நண்பர் சகஜமாக வீட்டில் உலவுவதால் சந்தேகப்பட்டுக் கேட்க முதலில் மறுத்தவர் பின் “அப்படித்தான் செய்வேன் என்ன செய்ய முடியும்?‘ என்று கேட்டு இருக்கிறார். News Credit
பின்னர் காவல்துறையில் புகார் செய்து கைது செய்து இருக்கிறார்கள்.
“தனது நண்பரின் மனைவி அழகாக இருப்பார் என்பதால் அவரது அழகை ரசிக்க விரும்பியதாகவும் எனவே, நண்பரின் வீட்டுக்குள் சகஜமாகச் சென்று வரும் தான், அவரது குளியல் அறையில் யாருக்கும் தெரியாமல் பேனா வடிவிலான கேமராவை வைத்ததாகவும், அதில் பதிவாகும் நண்பரின் மனைவி குளிக்கும் காட்சிகளைத் தனது வீட்டில் இருந்தபடியே கம்ப்யூட்டரில் பார்த்து ரசித்து வந்ததாகவும் கூறியிருக்கிறார்.“
எனக்கு இதைப் படித்ததும் கொஞ்சம் திக்குன்னு தான் இருந்தது.
இந்தக் கம்முனாட்டிக எங்குமே பாதுகாப்பில்லை என்பது போல ஆக்கி விட்டார்கள். நண்பனே இப்படிச் செய்தால், யாரைத் தான் நம்புவது?
மேலோட்டமாகப் பார்த்தால், இது எதோ கள்ளக்காதல், குளிப்பதைப் பார்த்தான் என்பது போலச் வழக்கமானச் செய்தியாகத் தோன்றலாம் ஆனால், இதில் உள்ள பிரச்சனைகளை உணர்ந்தால் இதனால் ஏற்படும் பின்விளைவுகள் புரியும்.
எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது.
வீட்டில் இருந்தபடியே பார்த்தான் (Live) என்பது இவர்களாகவே போட்டுக் கொண்டார்களா உண்மையான செய்தியா என்று தெரியவில்லை.
வீட்டில் இருந்தே என்றால் இணையம் தேவை. எப்படி இருந்தாலும் மிக ஆபத்தான ஒன்றே! Image credit – gadgetsandgear.com
சிங்கப்பூரில் பலர் பயன்படுத்துகிறார்கள் ஆனால், அவை வீட்டு பணிப் பெண்ணிடம் குழந்தையை விட்டு வருவதால் அவர்கள் சரியாகக் கவனிக்கிறார்களா என்பதைக் கண்டறிய பயன்படுத்தப்படுகிறது.
ஆனால், இதைத் தவறாகப் பயன்படுத்தவே பலர் முயல்கிறார்கள்.
எதிர்காலத்தில் Hidden Camera Detector அத்யாவசியமான சாதனமாக இருக்கும்.
எங்கு புதிதாகத் தங்கினாலும் இதன் மூலம் சோதித்த பிறகே தங்க முடியும் என்ற நிலை வரும். இதுவும் 100% உத்திரவாதமில்லை ஆனால், மோசமில்லை என்ற அளவுக்கு உதவும் அவ்வளவு தான்.
உங்களுக்குச் சந்தேகமிருந்தால் Hidden Camera Detector பயன்படுத்திப் பாருங்கள்.
குளியறையில் ரகசிய கேமரா! எனவே, அஜால் குஜால் மேட்டர் என்று கடந்து சென்று விடாதீர்கள். இதில் உள்ள பிரச்சனைகள் மிக மோசமானது.
மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம்.
ஏற்கனவே இது குறித்து எழுதி இருக்கிறேன் என்றாலும், ஏனோ இச்செய்தியை பத்தோடு பதினொன்றாக எடுத்துக் கொண்டு நகர முடியவில்லை.
நம் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் அவர்களின் பாதுகாப்பு ரொம்ப முக்கியம்.
எனவே, இந்த விசயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தொழில்நுட்ப வளர்ச்சியில் அனைவரின் அந்தரங்கமும் கேள்விக்குறியாகி விட்டது!
தொடர்புடைய கட்டுரை : அந்தரங்கம் பாதுகாப்பானதா?
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
வணக்கம் நண்பரே…
நல்லதொரு விடயத்தை அழகாக எச்சரிக்கை செய்து இருக்கின்றீர்கள் ஆனால் பலரும் இதன் வன்மத்தை உணருவதில்லை தனக்கு நேரிடும் பொழுதே உணர்கின்றார்கள் என்பதை நினைக்கும் பொழுது வேதனையாகத்தான் இருக்கிறது
தொட்டால் சும் நெருப்பென்று சிலர் தொடும் போதே உணர்கின்றார்கள்
வாழ்த்துகள் கிரி அவர்களே..
நட்புடன்
கில்லர்ஜி
How to detect? Any method?
கேமரா டிடக்டர் ஒரு 600 மதிப்புள கிடைக்குது.. நானும் சீனாவிலேர்ந்து வாங்கியிருக்கேன் இனிமேதான் அது எப்படி வேலை செய்யுதுன்னு பார்க்கணும்.
இந்த மாதிரி செய்திகளை படிச்சாலே ஒரு வித உதறல் ஏற்படுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியில் அனைவரின் அந்தரங்கமும் கேள்விக்குறியாகி விட்டது என்பது கண்டிப்பாக ஏற்று கொள்ளக்கூடிய உண்மை. சில நேரங்களில் யாரை நம்புவது, நம்பாமல் இருப்பது என்ற பல கேள்விகள் உள்ளன.
புதிய நட்பு கொள்ளும் போது அவசரப்படாமல் நிதானமாக நட்பு பாராட்டுதல் முக்கியமானது. பழைய உறவுகளிலும் கவனம் வேண்டும். குறிப்பாக நமது அந்தரங்க விஷியங்களை அடுத்தவர்களுடன் பகிர்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மீண்டும் ஒரு எச்சரிகையான பதிவுக்கு நன்றி கிரி.
@கில்லர்ஜி பலருக்கு தான் பாதிக்கப்பட்டால் மட்டுமே அதன் தீவிரத்தை உணருவார்கள்.
@SSK இதைத் தான் மேலே கூறியிருக்கேனே!
@ராஜ்குமார் பயன்படுத்திப் பார்த்துட்டு சொல்லுங்க
@யாசின் அந்தரங்க விசயங்களை மற்றவர்களிடம் பகிரவே கூடாது.
Miga nalla pathivu