கணினியைப் பராமரிப்பது எப்படி?

11
கணினியைப் பராமரிப்பது எப்படி

ணினியைப் பராமரிப்பது மிக முக்கியம் என்பதை இக்கட்டுரை விளக்குகிறது.

கணினியைப் பராமரிப்பது எப்படி?

கணினி அடிக்கடி ஏதாவது மென்பொருள் பிரச்சனை கொடுக்கிறது. dll Error அல்லது Application error என்று ஏதாவது பிரச்சனை வந்து கொண்டு இருக்கிறது.

அதோடு, கணினி மிகவும் மெதுவாக வேலை செய்கிறது‘.

என்று பலர் கூறக் கேட்டு இருப்பீர்கள்.

ஏன்! நீங்களே இது போலப் புலம்பிக் கொண்டு இருக்கலாம். இதற்கெல்லாம் காரணம் கணினியைச் சரியாகப் பராமரிக்காதது தான். Image Credit

இலவசம்

“இலவசம்” என்றால் அதனால் நமக்குப் பயன் இருக்கிறதோ இல்லையோ அதைப் பெற வேண்டும் என்ற எண்ணம் பலரிடையே இருக்கிறது.

முதலில் அனைவரும் ஒன்றை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். உலகில் இலவசம் என்று எதுவுமில்லை.

அதைக் கொடுப்பவருக்கு அதனால் நேரடியாகவோ மறைமுகமாகவோ பலன் இருந்தே ஆக வேண்டும். இது புரியாமல் பலர் ஏமாந்து போகிறார்கள்.

நமக்குப் பாதிப்பில்லாத பலன் என்றால் பிரச்சனையில்லை ஆனால், நமக்குப் பிரச்சனையைக் கொடுத்து அதனால் அவர்களுக்குப் பலன் என்றால்…

யோசிக்க வேண்டும் அல்லவா! இது பற்றி விரிவாகப் பார்ப்போம்.

அரசாங்கம் கொடுக்கும் இலவசங்களால் மக்கள் கெட்டுப் போகிறார்களோ இல்லையோ! இலவசமாகக் கிடைக்கும் மென்பொருட்களால் நம் கணினி கெட்டுப் போவதோடல்லாமல், வேகமும் பெருமளவு குறைந்து விடும்.

இவையல்லாமல், நமக்கும் பெரும் தீங்கு இழைத்து விடும்.

இலவச மென்பொருளை ஏன் நிறுவுகிறோம்?

இலவசமாகக் கிடைக்கும் மென்பொருளை எதற்கு நிறுவுகிறோம்? அதில் உள்ள சில தொழில்நுட்பம் நமக்குத் தேவைப்படுகிறது என்பதற்காகத் தானே!

எடுத்துக்காட்டுக்கு, ஒரு காணொளியைப் பாதியாக வெட்ட, YouTube ல் இருந்து காணொளியைத் தரவிறக்கம் செய்ய, கணினியின் வேகத்தைக்கூட்ட, கணினியைப் பராமரிக்க, MP3 யை வெட்ட இது போல நிறையக் கூறிக்கொண்டே செல்லலாம்.

இவற்றைத்தான் Third Party Software என்று குறிப்பிடுவார்கள்.

Third Party Software

இது போல மென்பொருட்களை நிறுவும் போது அதிலும் ஒரு குட்டி இலவச இணைப்பாக Toolbar என்ற வீணாப்போன ஒரு மென்பொருளும் சேர்த்து வரும்.

இதை நிறுவக் கூடாது ஆனால், இதையும் பலர் நிறுவி வைத்துக் கொள்வார்கள்.

இது நம்முடைய உலவியின் [Browser] வேகத்தைக் குறைத்து விடும். அதோடு உலவியைத் திறந்தாலே முக்கி முக்கித் தான் திறக்கும்.

இதற்குக் காரணம் இந்த Toolbar மென்பொருளே!

உலவியைத் திறந்தால் திடீர் என்று சம்பந்தமே இல்லாத தளத்தின் முகவரி Home Page ஆக இருக்கும். நீங்கள் என்ன செய்தாலும் செட்டிங் மாற்றினாலும் போகாது.

பின்னர் இதற்கென்று உள்ள Adware மென்பொருளை நிறுவி நீக்க வேண்டும் அல்லது Registry யில் எல்லாம் கை வைக்க வேண்டியதாக இருக்கும்.

இதெல்லாம் கண்ட மென்பொருளை நிறுவுவதாலும், ஆபாசத் தளங்கள் போவதாலும் அங்கு இருந்து ஒட்டிக் கொள்வதாகும்.

இணையத்தில் உலவுபவர்கள் Registry cleaner, System booster, System Maintenance, Computer Doctor போன்ற கவர்ந்திழுக்கும் மென்பொருட்களின் விளம்பரங்களைக் காணாமல் இருக்கவே முடியாது.

நம் கண் முன்னே வந்து மின்னிக்கொண்டு இருக்கும்.

இதை நிறுவினால் கணினியை வேகமாக்கலாம், பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம் என்று தோன்றும். இதில் ஏமாறாமல் தப்பித்தவர்கள் குறைவு.

தங்கள் இணைய வாழ்க்கையில் ஒருமுறையாவது ஏமாந்து இருப்பார்கள்.

நானும் ஒரு காலத்தில் ஏமாந்து இருக்கிறேன் ஆனால், உடனே சுதாரித்து விட்டேன்.

கணினியின் வேகத்தைப் பாதிக்கும் காரணிகள்

இந்த மென்பொருட்கள் நம் கணினியைக் குப்பை ஆக்குவதோடு கணினியின் வேகத்தை மிகவும் மெதுவாக்கி விடும்.

என்ன காரணம் என்றே தெரியாமல், ஏன் கணினி இவ்வளவு மெதுவாக இருக்கிறது? எதனால் இத்தனை Error வருகிறது? என்று குழம்பிக் கொண்டு இருப்போம்.

பிரச்சனையே நாம் தான் என்பதை அறியாமல்.

இது போதாது என்று இவைகள் நம் தகவல்களைத் திருடி அனுப்பும் மால்வேர்களாகவும் இருக்கலாம். கணினியின் வேகத்தைக் குறைத்தால் கூடப் பரவாயில்லை, நம் தகவல்களைத் திருடி விட்டால்…!

எனவே, சீரான இடைவெளியில் நம்மையும் அறியாமல் ஏதாவது மென்பொருள் நிறுவப்பட்டுள்ளதா என்று சோதித்துப் பார்ப்பது நல்லது.

இலவசமான மென்பொருட்கள் அனைத்துமே ஆபத்தா?!

இலவசமாகக் கிடைக்கும் அனைத்துமே பிரச்சனையைத் தரும் என்று எண்ண வேண்டியதில்லை.

பிரபலமான நிறுவனங்களின் மென்பொருள்களைச் சோதித்து நமக்குத் திருப்தி ஏற்பட்ட பிறகு தொடர்ந்து பயன்படுத்தலாம்.

உதாரணத்திற்கு Google Chrome Browser, Firefox Browser, Safari Browser, iTunes, Dropbox, Java, Ccleaner, 7Zip, WinSCP போன்றவை.

இவை சிறு எடுத்துக்காட்டு தான் இது போல Branded Software இலவசமாகப் பயன்படுத்தினால் நமக்குப் பிரச்சனையில்லை.

இதிலும் நமக்கு உண்மையாகவே தேவை என்று இருப்பவைகளையே நிறுவ வேண்டும், அவசியமில்லை என்றால், தவிர்க்க வேண்டும்.

இவற்றை நிறுவும் போதும் (Java போன்றவை) நம்மை Toolbar நிறுவக் கேட்கும் அதைத் தேர்வு செய்யாமல் தவிர்த்து விட வேண்டும்.

Online லையே செய்ய முடியும் 

தற்போது பெரும்பாலான வேலைகளை Online லையே செய்ய முடிகிறது. எனவே இதற்காக மென்பொருள் நிறுவ வேண்டிய அவசியமில்லை.

எடுத்துக்காட்டுக்கு YouTube காணொளியைத் தரவிறக்கம் செய்ய வேண்டும் என்றால் இதற்காக மென்பொருள் நிறுவ வேண்டிய அவசியமில்லை, இணையத்தில் இருந்தே தரவிறக்கம் செய்ய முடியும்.

அப்படியும் சில மென்பொருளைத் தவிர்க்க முடியாமல் நிறுவ வேண்டியது நேர்ந்தால், வேலை முடிந்த பிறகு அதை உடனடியாக நீக்கி விட வேண்டும்.

தற்காலிக கோப்புகள் நீக்கம்

இரண்டு வாரத்திற்கு ஒருமுறை Ccleaner போன்ற மென்பொருளைப் பயன்படுத்தி Temporary file களை நீக்கி விட வேண்டும்.

இதன் மூலம் அவசியமற்ற குப்பைகள் இருக்காது, பாதுகாப்பாகவும் இருக்கும்.

ஆறு மாதத்திற்கு ஒருமுறை உங்கள் இயங்கு தளத்தை Reinstall செய்வது நல்லது.

எதற்கு என்றால், நம்மையும் அறியாமல் சில மென்பொருள்கள் திருட்டு வேலை செய்து கொண்டு இருக்கலாம். எனவே, அதற்கு ஒரே வழி OS Reinstallation தான்.

இது கணினியின் வேகத்தைக் கூட்டும். கணினியைப் பராமரிப்பது எளிதாகும். எனவே, இதை வருடத்திற்கு இரண்டு முறை செய்வது நல்லதே!

தற்போது Cloud Computing வந்து விட்டதால், ஒவ்வொருமுறையும் Backup எடுத்து Reinstall செய்து கொண்டு இருக்க வேண்டிய தேவையில்லை.

Security

அவசியம் Antivirus மென்பொருளை நிறுவி இருக்க வேண்டும்.

நீங்கள் எவ்வளவுக்கெவ்வளவு Third Party மென்பொருள்களைத் தவிர்க்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு உங்கள் கணினி சிறப்பாக வேலை செய்யும்.

Registry Cleaner, System Booster, System Maintenance, Computer Doctor போன்ற மென்பொருட்களை மறந்தும் நிறுவாதீர்கள்.

அவசியமான மென்பொருள்களை மட்டும் வைத்துக்கொண்டு மற்றதை நீக்கி விட வேண்டும். சுருக்கமாக நீங்க புடுங்குவது எல்லாமே தேவையில்லாத ஆணி தான் 🙂 .

மேற்கூறியவற்றைப் பின்பற்றினால் உங்கள் கணினி நிச்சயம் எந்தப் பிரச்சனையும் செய்யாமல் (Hardware பிரச்சனை தவிர்த்து) சிறப்பாக வேலை செய்யும்.

நீங்களும் கவலை இல்லாமல் இருக்கலாம். கணினியைப் பராமரிப்பது எளிதே.

கொசுறு

SSD

உங்கள் கணினி நாளடைவில் வேகம் குறைவதற்கு உங்களுடைய Hard disk ம் ஒரு காரணமாக இருக்கலாம்.

Hard disk ல் உள்ள சாதனங்கள் நாளடைவில் அதனுடைய திறனை இழந்து விடுவதும், உங்கள் கணினியின் வேகம் குறைவதற்கு முக்கியக் காரணம்.

எனவே, மடிக்கணினி பயன்படுத்துபவர்கள் அடுத்த முறை வாங்கும் போது SSD என்று கூறப்படும் Solid State Drive வாங்கலாம் ஆனால், விலை அதிகம்.

இனி எதிர்காலம் SSD தான். மின்னல் வேகம் அது தான் “SSD”

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

11 COMMENTS

  1. இந்த பதிவ கொஞ்ச நாளைக்கு முன்னாடி எழுதி இருக்க கூடாதா அண்ணா என் மடிக்கணினி தப்பி இருக்குமே அண்ணா

    போன வாரம் spark security browser என்ற ஒன்றை நிறுவினேன் . கூடவே system speed booster, cleaner, defragmenter என ஒட்டுண்ணிகளும் திறந்த வீட்டில் நுழைந்த எதோ ஒன்றை போல நுழைந்துவிட்டது . இது எனக்கு அப்போது தெரியாது. இந்த மென்பொருள் பிரபல பதிவர் ஒருவர் சிபாரிசு செய்தது அவர் இதற்கு முன் பல நல்ல பயனுள்ள பாதுகாப்பான மென்பொருள் கலை சிபாரிசு செய்தவர் என்பதால் நம்பி இன்ஸ்டால் செய்தேன்

    ஒரு வாரம் கழித்து recycle bin இல் இருந்தவற்றை கிளின் செய்த போது junk files reached 500mb னு சொல்லி கிளீன் பண்ண சொல்லியும் ஒரு பாப் அப் விண்டோவும் வர நான் ஓகே கொடுக்க windows32 folder il இருந்த எல்லா file களும் கோவிந்தா

    ஒரு மணி நேரம் போராடியும் உட்கார்ந்த கணணியை நிற்க வைக்க முடியல வேறு வழி ன்யறி os re install செய்ய வேண்டியதாயிற்று .

    ஆன்லைன் வந்தாலே எனக்கு இப்ப பயமாவே இருக்கு அண்ணா
    எவ்ளோதான் உசாரா இருதாலும் இந்த adware தொல்லை தான் தாங்க முடியல

  2. போன வாரம் தான் Reinstall செய்தேன்…

  3. ரொம்ப உபயோகமான பதிவு தல
    SSD பத்தி எனக்கு தெரியாது,SSD பதிவு காக waiting

    – அருண் கோவிந்தன்

  4. கண்டிப்பாக பயன் தரும் பதிவு…பகிர்வுக்கு நன்றி கிரி..

  5. உலகில் இலவசம் என்று எதுவுமில்லை. இலவசம் என்றால், அதைக் கொடுப்பவருக்கு அதனால் நேரடியாகவோ மறைமுகவோ பலன் இருந்தே ஆக வேண்டும். இது புரியாமல் பலர் இலவசம் என்ற வார்த்தையில் ஏமாந்து போகிறார்கள்————–nice lines

  6. அனைவரின் வருகைக்கும் நன்றி

    @Elam இது பற்றி நான் கேள்விப்பட்டதில்லை. இதன் பிறகு சென்று பார்த்தேன். இவை அவசியமில்லை. Ccleaner பயன்படுத்துங்கள் இதுவே போதும்.

    @கார்த்தி Adware ஒரு பெரிய விசயமே இல்லை.. பின்னர் ஒருநாள் இது பற்றி எழுதுகிறேன்.

    @ஜெயகுமார் புரியவில்லை.

    @அருண் விரைவில் எழுதுகிறேன்

  7. எனது லேப்டாப்பில் தேவை இல்லாதவை எவை என்று எப்படி தெரிந்து கொள்வது. எனக்கு இதில் அனுபவம் மிக குறைவு

  8. சக்தி நீங்கள் பயன்படுத்தும் Applications தவிர்த்து மற்ற அனைத்தும் தேவையில்லாததே!

    பயன்படுத்தும் Applications உண்மையிலேயே தேவையே என்றால் மட்டுமே வைத்துக்கொள்ளவும். இலவசமாகக் கிடைக்கும் Applications தவிர்ப்பது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!