Android TV என்றால் என்ன?

4
Android TV

தொலைக்காட்சிகளின் வசதிகள் காலத்திற்கு ஏற்ப மாறி வருகிறது. Smart TV வந்தது, தற்போது Android TV பிரபலமாக உள்ளது. Image Credit

Android TV

2014 ம் ஆண்டு Google I/O ல் Nexus Player க்காகக் கூகுள் வெளியிட்ட இயங்குதளம் (Operating System) Android TV. இதை முன்னணி நிறுவனமான சோனி உட்படப் பல நிறுவனங்கள் தங்கள் தொலைக்காட்சிக்குப் பயன்படுத்தி வருகின்றன.

SONY தன் Bravia மாடலுக்காக 2015 முதலே பயன்படுத்தி வருகிறது. TCL நிறுவனம் வருடத்துக்கு மில்லியன் கணக்கில் Android யுடன் விற்பனை செய்து வருகிறது.

Android TV யை 2017 ல் கூடுதல் வசதிகளுடன் கூகுள் மேம்படுத்தியது.

மொபைலில் பயன்படுத்தும் Android வடிவம், வசதிகளே இருப்பதால், பயன்படுத்த எளிதாக இருக்கும். சுருக்கமாகப் புதிதாக ஒன்றை பயன்படுத்துவது போல இல்லாமல், பழகிய வசதியுடன் பயன்படுத்துவதைப் போல இருக்கும்.

Google TV

 • 2010 ம் ஆண்டு Google TV யை கூகுள் அறிமுகப்படுத்தியது ஆனால், எதிர்பார்த்த வெற்றியைப்பெறவில்லை.
 • எனவே, Android TV யை 2014 ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.
 • தற்போது Android TV போலவே கூடுதல் வசதிகளுடன் Google TV யை மேம்படுத்தியுள்ளது.
 • Google TV இயங்கு தளத்தில் SONY, TCL, Chromecast ஆகியவை வெளியாகியுள்ளன.
 • 2022 ம் ஆண்டு இறுதியில் அனைத்து Android TV களும் Google TV க்கு மாற்றப் போவதாகக் (OS Upgrade) கூகுள் கூறியுள்ளது.
 • Google TV யில் வீட்டு CCTV உட்படப் பல்வேறு வசதிகளை இணைக்க முடியும்.
 • நமக்குப் பிடிக்கவில்லையென்றாலும் எதிர்காலத்தில் நம்மை Google TV ஆளப்போகிறது. அதாவது அனைத்துமே கூகுள் கட்டுப்பாட்டினுள் வந்து விடும்.
 • புரியும் படி கூறுவதென்றால், நம்மால் Facebook, Instagram, Twitter இல்லாமல் இருக்கலாம், கூகுள் பயன்படுத்தாமல் இருக்க முடியாது.
 • எதிர்காலம் Google TV என்பதை உறுதியாகக் கூற முடியும்.

Android TV யில் என்ன சிறப்பு?

 • இணையத்தை முதன்மையாகக் கொண்டு வடிமைக்கப்பட்டுள்ளது. வழக்கமான DTH வசதியுடனும் பயன்படுத்தலாம்.
 • Google Play Store இருப்பதால், நமக்குத்தேவையான Apps களை நிறுவிக்கொள்ளலாம்.
 • Android License உடன் வரும் தொலைக்காட்சிகளில் Chromecast ம் இணைந்து வருகிறது.
 • Android 12 Version (2021) வெகு சில தொலைக்காட்சிகளில் மட்டுமே உள்ளது. பெரும்பான்மையான தொலைக்காட்சிகள் Android 9 Version உள்ளது.
 • Voice Assistant இருப்பதால், தேடிக்கொண்டிராமல், இதில் கூறினாலே நேரடியாகப் படத்துக்கோ, நிகழ்ச்சிக்கோ போக முடியும்.
 • புதிய பதிப்பு (Version) வெளியிடப்பட்டால் Update செய்து கொள்ளலாம்.
 • Android தொலைக்காட்சி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை வருடாவருடம் மிக அதிகமாக உயர்ந்து வருகிறது குறிப்பாக அமெரிக்காவில்.
 • விரைவில் உலகம் முழுக்க AndroidTV ஆதிக்கம் செய்யும் குறிப்பாக இந்தியாவில்.
 • Roku நிறுவனம் தான் Smart TV யில் முன்னணியில் உள்ளது ஆனால், எதிர்காலத்தில் Android தொலைக்காட்சி எளிதாக முன்னணிக்கு வந்து விடும்.
 • சுருக்கமாக, Android வசதி இல்லையென்றால், எவரும் அந்நிறுவன TV யை வாங்க மாட்டார்கள்.

எந்த நிறுவனங்களில் Android உள்ளது?

 • Sony
 • TCL
 • Hisense
 • Xiaomi (Mi)
 • OnePlus
 • Skyworth
 • Philips
 • Vu

AndroidTV பயன்படுத்தக் கூகுள் கணக்கு தேவையா?

ஆம்.

கூகுள் கணக்கு இல்லாமலும் அதில் ஏற்கனவே உள்ள Apps (YouTube, Amazon Prime, NETFLIX) களை பயன்படுத்த முடியும் ஆனால், புதிதாகச் செயலிகளை (Apps) நிறுவ வேண்டுமென்றால், கூகுள் கணக்குத் தேவை.

Primary கூகுள் ஐடியை பயன்படுத்தாமல், இதற்காக வேறொரு Backup ஐடியை பயன்படுத்துவது நல்லது.

வீட்டில் அனைவரும் TV யை பயன்படுத்துவதால், குழந்தைகளோ மற்றவர்களோ தவறாக ஏதாவது செய்து விட வாய்ப்புள்ளது, பாதுகாப்பு முக்கியக்காரணம்.

அதோடு கூகுள் Artificial Intelligence பயன்படுத்துவதால், உங்கள் விருப்பங்களும் மற்றவர்கள் விருப்பங்களும் இதில் இணைந்து குழப்பமான பரிந்துரைகளைக் கொடுக்கலாம்.

முக்கியப் பரிந்துரை

TV வாங்கும் யோசனையிருந்தால் Android TV வாங்கவும்.

TV அடிக்கடி வாங்கும் பொருளல்ல. எனவே, Android TV வாங்காமல் Non Smart TV / Smart TV வாங்கினால், எதிர்காலத்தில் இம்முடிவுக்காக வருத்தப்பட நேரிடும்.

காரணம், தற்போது இணையம் / OTT காலம். எனவே, Android தொலைக்காட்சியின் முக்கியத்துவம் அதிகம்.

சமீபத்தில் தொலைக்காட்சி வாங்க திட்டமிட்ட போது Android TV வாங்கலாமா என்று அதைப் பற்றித் தேடி படித்த பிறகே இதன் சிறப்பு, பயன் புரிந்தது.

மேற்கூறிய அனைத்தும் கடந்த ஒரு மாதத்தில் தெரிந்து கொண்டவையே.

சமீபத்தில் Vu Android தொலைக்காட்சி வாங்கியது எவ்வளவு சரி என்று உணர்கிறேன். இது பற்றி விரைவில் எழுதுகிறேன்.

பிற்சேர்க்கை

Vu Premium (55 inch) Ultra HD (4K) Android TV Review

தொடர்புடைய கட்டுரைகள்

Chromecast பற்றித் தெரியுமா?

Android மொபைல் பயன்படுத்துகிறீர்களா?

Android OS பதிப்புகளின் பெயர் ஏன் மாறுகிறது?

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

4 COMMENTS

 1. I’m planning to buy this week. Which model VU you purchased? A model with JBL speakers recently launched? When compared to display quality, I think Samsung Crystal 4K is much better option now, but without Android since Samsung comes out with their own OS Tizen.

  Now, totally confused which one to buy… 🙁

 2. @Varadaradjalou

  Me purchased Vu 55″ 4 K. I’m satisfied with the quality of picture. You may consider it.

  If you prefer to purchase Samsung then you can get ACT Fibre box, Roku, Chromecast (Latest with remote) it has Apps installation options. Especially ACT and Chromecast (with remote), same as Android TV.

  But I suggest you to get direct Android TV instead of external devices like this.

  As well Samsung must be expensive than Vu so its waste of money.

  @Vijayakumar sure will write 🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here