காஷ்மீர் பிரச்சனை விவாதத்தில் குறுக்கிட்டு பதிலளிக்க முயன்ற அதிமுக MP ரவீந்திரநாத்தை “மக்களவை என்பது முதுகெலும்பு உள்ளவர்கள் பேசும் இடம். உங்களுக்கு முதுகெலும்பே கிடையாது, உட்காருங்கள்” என்று TR பாலு கூறினார்.
முதுகெலும்பு பற்றி யாரெல்லாம் பேசுவது என்று விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது.
முதுகெலும்பை பற்றி திமுக பேசலாமா?!
இது குறித்துக் கடுமையான கோபம் வரக்காரணமே “முதுகெலும்பு” வார்த்தை தான். வேறு ஏதாவது கூறியிருந்தால், பத்தோடு பதினோராவது விமர்சனமாகக் கடந்து சென்று இருப்பேன். Image Credit
இவர்கள் 2009 ல் 40 MP பதவிகளை வைத்துக்கொண்டு காங் அரசுக்கு எதிராக எந்த எதிர்ப்பையும் காட்டாமல், அப்பாவி ஈழத் தமிழர்கள் குறித்துக் கவலைப்படவே இல்லை ஆனால், இதை வைத்துத்தான் அரசியல் நடந்தது.
அகில உலகப் பிரபலமான கலைஞரின் 4 மணி நேர உண்ணாவிரதக் கூத்தெல்லாம் நடந்தது இந்த நேரத்தில் தான்.
காங் அரசு IT துறையைத் திமுக (தயாநிதி மாறன்) க்கு தரவில்லை என்று, கலைஞர் சக்கர நாற்காலியிலேயே டெல்லி சென்று, அவர்களை மறைமுகமாக மிரட்டி இத்துறையை வாங்கினார்.
இதன் பிறகு நடந்த BSNL ஊழல் தனிக்கதை.
அப்போது பதிவுலகம் பரபரப்பாக இருந்த காலம். தற்போது பெரும்பான்மையோர் சமூகத்தளங்களுக்கு நகர்ந்து விட்டார்கள்.
அச்சமயத்தில் எழுதிக்கொண்டு இருந்தவர்கள் அனைவருக்கும் ஈழப் பிரச்னை சமயத்தில் திமுக செய்த மோசடிகள், அநியாயங்கள் அனைத்தும் தெரியும்.
ராஜினாமா
முதுகெலும்பே இல்லாமல் பதவிக்காக அனைத்தையும் துறந்து, ஈழ மக்கள் கதறிய போது இரக்கம் காட்டாமல் 40 MP க்களும் பதவிக்காக அமைதியாக இருந்தார்கள்.
ராஜினாமா செய்வோம் என்ற குறைந்த பட்ச மிரட்டல் கூட இல்லை. பதவிகளுக்காக, காங் அரசுக்குக் கொடுத்த மிரட்டலில், கொஞ்சம் கூட ஈழத்தமிழர் பிரச்சனைக்குச் செய்யவில்லை.
இக்காலத் தலைமுறைக்குத் தெரிய வாய்ப்பில்லை.
பதவிக்காக ஒரு இனத்தையே அழிக்கத் துணை போனவர்கள், முதுகெலும்பை பற்றிப் பேசினால் கோபம் வருமா? வராதா? தற்போது நினைத்தாலும் ஆத்திரத்தை அடக்க முடியவில்லை.
இன்று வரை திமுக மீதும், கலைஞர் மீதும் கோபத்தில் இருப்பதற்குக் காரணம், 2009 ல் இவர்கள் நடந்து கொண்டது ஆறாத வடுவாக இருப்பதே.
அதுவும் கலைஞரை “தமிழினத் தலைவர்” என்று அழைத்தால், ஏற்படும் ஆத்திரம் கொஞ்ச நஞ்சமல்ல.
எதோ சும்மா அடித்து விடுறேன்னு நினைக்காதீங்க. 2009 ல் மனசு ஒடிந்து எழுதிய கட்டுரை பின்வருவது. இதைப்படித்துப் பாருங்கள், நான் சொல்வது எவ்வளவு உண்மை என்று புரியும்.
Read: அடப்போங்கய்யா! நீங்களும் உங்கள் ஈழ தமிழ் ஆதரவும்
இன்று பாஜகவிடம் அதிமுக மண்டியிட்டு விட்டதால், அன்று முதுகெலும்பு இல்லாமல் நடந்து கொண்ட திமுக செய்தது ஒன்றுமில்லை என்றாகி விடாது.
இந்திராகாந்தி கச்சத்தீவை கொடுக்கும் போது ஆட்சியில் இருந்தது திமுக, மீத்தேனுக்குக் கையெழுத்து போட்டது திமுக. இது போல அனைத்தையும் செய்து விட்டு இப்ப வீராவேசமாகப் பேசினால் முதுகெலும்பு நேராகி விடுமா?
இதே திமுகவினர் ராஜபக்ஷேவிடம் இளித்துக்கொண்டு நின்றதை மறக்க முடியுமா!
எதிர்க்கட்சி பாஜக என்பதால் தான் திமுக MP க்கள் இவ்வளவு பொங்கிக் கொண்டு, அனைத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்து கத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
இதே காங் ஆட்சியில் இருந்தால், திமுக MP க்களின் முதுகெலும்பு நிலை இன்றைய தலைமுறைக்கும் தெரிந்து இருக்கும்.
தமிழக மீனவர் கொலை
நீங்கள் எத்தனை பேர் கவனித்தீர்கள்…!
இதே காங், ஆட்சியில் இருந்த போது, திமுக கூட்டணி கட்சியாக இருந்த போது எத்தனை தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டனர்?
கண்மூடித்தனமாகத் திமுக எதிர்க்கும் பாஜக ஆட்சியில் எத்தனை தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டனர்?
அக்காலங்களில் தொடர்ந்து நடந்த மீனவர் படுகொலைகளை வைத்து “நீர்ப்பறவை” என்ற படமே வந்தது! அந்த அளவுக்கு மீனவர் கொலையின் தாக்கம் இருந்தது.
இதனுடைய தயாரிப்பாளர் கூட “ரெட் ஜெயண்ட்” உதயநிதி தான்.
காங் ஆட்சிக் காலத்தின்போது இலங்கை கடற்படையினரால், தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது / தாக்கப்படுவது கிட்டத்தட்ட தினச் செய்தி!
இது எத்தனை பேருக்கு நினைவில் உள்ளது. இதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? காங் ஆட்சி இறுதி வரை இக்கொலைகள் தொடர்ந்தன.
இதை ஏன் தடுக்கவில்லை? திமுக “முதுகெலும்பு” எங்கே சென்றது?
கடந்த ஐந்து வருடங்களில் எத்தனை மீனவர்கள் சுடப்பட்டுள்ளனர்? எத்தனை செய்திகள் இது குறித்துப் படித்துள்ளீர்கள்?
பலருக்கு தமிழக மீனவர்கள் சுடப்படுவது குறித்த சம்பவமே மறந்து போய் இருக்கலாம் காரணம், அது போலத் தற்போது நடப்பதே மிக மிகக் குறைவு.
இவற்றையெல்லாம் கேட்காத போது, முதுகெலும்பை பற்றி திமுக பேசலாமா?!
இடம் பொருள் ஏவல்
ரவீந்திரநாத் சின்ன வயசு, அனுபவம் இல்லாதவர் என்பதால் தானே, பாராளுமன்றத்தில் அவ்வளவு பேர் அமர்ந்து இருக்கும் இடத்தில் இது போல அநாகரீகமாகக் கூறத் தோன்றியது.
என்ன தான் எதிர்க்கட்சியாக இருந்தாலும், மற்ற மாநில MP க்கள் முன்பு இது போலக் கூறுவது தவறு என்று தெரியவில்லையா? அவரும் தமிழக MP தானே!
வயது குறைவு என்றால், என்ன வேண்டும் என்றாலும் பேசி விடலாமா?
தமிழகச் சட்ட மன்றத்தில் இது போலப் பேசுவதற்கும், பாராளுமன்றத்தில் பேசுவதற்கும் வித்யாசமில்லையா?
அசிங்கப்பட்ட TR பாலு
அனைத்தையும் எதிர்ப்பது போலக் காஷ்மீர் பிரச்னை குறித்து வழக்கம் போலப் பொங்க,
லடாக் MP Jamyang Tsering Namgyal,
“உங்களுக்கு லடாக் பற்றி என்ன தெரியும்? அதனுடைய புவியியல் அமைப்பு தெரியுமா? நாங்கள் படும் கஷ்டம் தெரியுமா? எங்கள் கலாச்சாரம் பற்றி தெரியுமா? எதையோ படித்துட்டு உளறாதீர்கள்!” என்று கேட்டு மானத்தை வாங்கி விட்டார்.
இந்த பதில் இவருக்கு மட்டுமல்ல, இவரைப் போலப் பேசிய அனைவருக்கும்.
பேச வேண்டிய நேரத்தில் பேசவேண்டியதுக்கு பேசாமல் அமைதியாக இருந்து விட்டுத் தற்போது அக்கறை இருப்பது போல 370 க்கு பொங்கி அசிங்கப்பட்டு நிற்கிறார்கள்.
என்ன சுவாரசியம் என்றால், ரவீந்திரநாத்தை அவமானப்படுத்திக் கெத்து காட்டிய TR பாலு அசிங்கப்பட்டது, ரவீந்திரநாத்தை விட ஐந்து வயது குறைந்த லடாக் MP யிடம்.
கர்மா.
TR பாலு அவர்களே! உங்களுக்கு மட்டுமல்ல அந்தச் சமயத்தில் திமுகவில் பதவியில் இருந்த எவருக்கும் முதுகெலும்பை பற்றிப் பேச அருகதையில்லை.
தொடர்புடைய கட்டுரைகள்
கிரி, இது மட்டுமே இன்னும் பல விஷயங்கள் இருக்கு லடாக் MP கூறியது போல் விஷயம் தெரியாமல் BJP எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே இவர்கள் கூவுகிறார்கள் . பெரும்பான்மை இல்லாமல் பிஜேபி DMK விடம் ஆதரவு கேட்டு மந்திரி பதவி கொடுத்திருந்தால் அப்போது பேச மாட்டார்கள்.இதே TR பாலு அவர்களுக்கு மந்திரி பதவி கொடுக்க முடியாது என்று காங்கிரஸ் கூறிய போது கலிஞ்சர் எவ்வளுவு உறுதியா இருந்தார் என்பதும் 63 தொகுதி கேட்டு CBI ரைட் விட்ட போதும் எவவ்ளவு உறுதியா இருந்தார் என்பது அனைவரும் தெரிந்ததே … இன்னும் கிளறினால் நெறய கிடைக்கும் ….
கிரி, தெளிவாக சொல்லி இருக்கீங்க!!! சகோதரர் சரவணன் சொல்வது போல் இவர்களை பற்றி பேசினால், பட்டியல் நீண்டு கொண்டே தான் செல்லும்.. இதுவும் கடந்து போகும்.. பகிர்வுக்கு நன்றி கிரி..
@சரவணன் இவர்கள் பட்டியல் மிகப்பெரியது. ஊடக வலிமையால் அனைத்தையும் மறைத்து விட்டார்கள்.
@யாசின் நன்றி