திரையரங்கு சில்மிஷங்கள் | CCTV ஆபத்து

4
திரையரங்கு சில்மிஷங்கள் Cinema Hall

திரையரங்கு CCTV சாதனத்தால் படம் பிடிக்கப்பட்ட திரையரங்கு சில்மிஷங்கள் காட்சி கடந்த சில நாட்களாக WhatsApp ல் சுற்றிக்கொண்டு இருக்கிறது. Image Credit

திரையரங்கு சில்மிஷங்கள்

பாதுகாப்பு காரணத்துக்காகவும், ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், யார் மீது தவறு என்று உறுதி செய்யவும் தற்போது திரையரங்குகள் CCTV சாதனங்களைப் பொருத்தி வருகிறார்கள்.

Night Vision” வசதியுடன் இருப்பதால், இருட்டாக இருந்தாலும் வெளிச்சத்தில் எடுப்பது போலக் காட்சிகள் இருக்கும்.

கூட்டமில்லாத திரையரங்குகளில் சில்மிஷங்களில் ஈடுபடுவதற்கென்றே செல்லும் ஜோடிகள் இக்காணொளிகளில் சிக்கி வருகிறார்கள்.

மீம்களில் கிண்டலடிக்கப்பட்ட போது அதன் வீரியம் புரியவில்லை ஆனால், காணொளியாகப் பார்க்கும் போது அதிர்ச்சிகரமாக உள்ளது.

சம்பந்தப்பட்ட இருவரின் முகமும் தெளிவாகத் தெரிகிறது. இது எப்படியும் அவர்களைச் சென்றடைந்து இருக்கும். எவ்வளவு பெரிய அவமானம்!

இரகசியம்

எல்லோருக்குமே இரகசியம் இருக்கிறது ஆனால், அது தெரியாதவரை பிரச்சனையில்லை. தெரிந்து விட்டால், விளைவுகள் மிக மோசமாக இருக்கும்.

தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இக்காலங்களில் “யாருக்கும் தெரியாது” என்று நினைப்பதை விட முட்டாள்தனமான எண்ணம் இல்லை.

நாம் ஏமாறும் சில நொடிகள், நிமிடங்களின் விளைவுகள், திரையரங்கு சில்மிஷங்கள் நம்மை மிக மோசமாக வந்தடையும்.

இவ்வகைச் செயல்களில் ஈடுபட்டு வருகிறவர்கள், எச்சரிக்கையாக இருங்கள்.

ஒரு நாள் உங்கள் காணொளிகள் உங்களுக்கே WhatsApp ல் வரலாம் அல்லது உங்களது காணொளியை நீங்களே ஆபாச தளத்தில் பார்க்கும் துர்பாக்கிய நிலைக்கு ஆளாகலாம்.

அந்த நாள் உங்கள் வாழ்க்கையின் மிக மோசமான நாளாக இருக்கும்.

தொடர்புடைய கட்டுரைகள்

லென்ஸ் [2017] Danger Of Sex Chat

அந்தரங்கம் பாதுகாப்பானதா?

செக்ஸ் ஒரு விரிவான பார்வை!

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel .

4 COMMENTS

  1. இப்போவெல்லாம் சார் திரையரங்கில் சில்மிஷம் மட்டுமல்ல செக்ஸ் கூட நடக்குது

    2 மாசத்துக்கு முதல் நான் படம் பார்க்க போகும் போது கூட்டமில்லை
    ஒரு பொண்ணு ***** இருந்திச்சு

  2. Anna,
    முதலில் இது போன்று வெளிவரும் காணொளிகள்தான் பொதுமக்களுக்கு பெரும்பாலும் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது(சில வருடங்களுக்கு முன்பு கூட உடை மாற்றும் அறை வீடியோக்கள் வெளியாகியது தற்போது பெரும்பாலும் அனைவரிடமும் இதுபற்றிய விழிப்புணர்வு உள்ளது ).
    ஸ்னோவ்டேன் போன்ற ஹாலிவுட் படங்களை பார்த்த பிறகு கேமரா என்றாலே ஒரு accha உணர்வு ஏற்படுவதை தவிர்க்க இயலவில்லை.
    திரை அரங்கில் NO SMOKING போன்று NIGHT VISION கேமரா உள்ளது என்ற அறிவிப்புகள் பயன் தரலாம் (Night Vision camera என்ற ஒன்று இருப்பதே பலபேருக்கு தெரியவில்லை:()

  3. படத்துக்கு சென்ற படத்தை மட்டும் தான் பார்க்கவேண்டும்.. இது போல சில்லறை வேலைகளில் ஈடுபடுவது தவறு!!! சினிமாவில் மட்டும் அல்ல, இரவு நேர போக்குவரத்து பயணங்களில் கூட நான் கண்டு இருக்கிறேன்..தற்போது காதல் என்றாலே, மணிக்கணக்கில் கைபேசியில் பேசுவது, அதன் நீட்சி நேரில் சந்திப்பது… அடுத்து இது போன்ற நிகழ்வுகள்.. கண்டிப்பாக தவறான வழிமுறை.. நிச்சயம் கண்டிக்க வேண்டிய ஒன்று.. குறிப்பாக பெண்களுக்கு இது குறித்த விழிப்புணர்வை கொண்டு வரவேண்டும்.. குறிப்பாக கல்லூரி பெண்களுக்கு..

    (ஒரு நாள் உங்கள் காணொளிகள் உங்களுக்கே WhatsApp ல் வரலாம் அல்லது உங்களது காணொளியை நீங்களே ஆபாச தளத்தில் பார்க்கும் துர்பாக்கிய நிலைக்கு ஆளாகலாம்.) இது போன்ற சம்பவம் ஒரு பெண்ணையோ, ஆணையோ மட்டும் பாதிப்புக்கு உண்டாக்குவதில்லை.. ஒட்டு மொத்த குடும்பமும், உறவுகளும் அதன் விளைவை சந்திக்கும்… பகிர்வுக்கு நன்றி கிரி..

  4. @Asraf நான் கொஞ்சம் பதமா சொன்னால்.. இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டீங்க 🙂 .. நான் பார்த்த காணொளியிலும் இது தான் நடந்தது.

    @கனகராஜ் விழிப்புணர்வு ஏற்படும் என்பது உண்மை தான். தெரியாதவர்கள் இப்படி மாட்டிக்கொள்கிறார்கள்.

    @யாசின் படத்தை பார்ப்பதை தவிர மற்ற எல்லா வேலையும் நடக்கிறது 🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!