UPI பரிவர்த்தனைக்கு NPCI கட்டுப்பாடு

1
UPI பரிவர்த்தனைக்கு NPCI கட்டுப்பாடு

ணையப் பணப் பரிவர்த்தனையில் UPI என்ற மிகப்பெரிய புரட்சியைக் கொண்டு வந்து, தற்போது UPI பரிவர்த்தனைக்கு NPCI கட்டுப்பாடு கொண்டு வந்துள்ளது.

அதிகபட்சம் 30% பரிவர்த்தனை

ஒரே நிறுவனம் தன் கட்டுப்பாட்டிலேயே (Monopoly) அனைத்தையும் வைத்துக்கொள்ள முடியாதபடி, மொத்த பரிவர்த்தனையில் 30% மட்டுமே அதிகபட்சம் வைத்துக்கொள்ள முடியும் என்று NPCI (National Payments Corporation of India) கூறியுள்ளது. Image Credit

அதிகபட்சம் ஒரு நிறுவனம் 30% சந்தையை மட்டுமே வைத்துக்கொள்ள முடியும்.

UPI பரிவர்த்தனைக்கு NPCI கட்டுப்பாடு

எடுத்துக்காட்டுக்கு ஒட்டுமொத்த UPI பணப்பரிவர்த்தனையில் Google Pay / PhonePe நிறுவனங்கள் தற்போது 80% பணப்பரிவர்த்தனையை மேற்கொள்கின்றன.

இனி 30% க்கு மேல் பணப்பரிவர்த்தனையை Google Pay / PhonePe அனுமதிக்க முடியாது.  அனுமதித்தால் NPCI அபராதம் விதிக்கும்.

எனவே, Google Pay ல் பணம் அனுப்ப முடியவில்லை என்றால், அடுத்ததாக Amazon Pay, Paytm, BHIM, WhatsApp Pay செயலிகளைப் பயன்படுத்தி அனுப்ப வேண்டும்.

Monopoly

ஒரு நிறுவனம் Monopoly யாக அமைந்து விடாமல் தடுக்க எடுக்கப்படும் முயற்சி என்றாலும், நிறுவனத்தின் பக்கம் இருந்தும் யோசிக்க வேண்டும்.

பில்லியன் கணக்கில் முதலீடு செய்து கட்டமைப்பை வைத்துள்ள நிறுவனமும், சாதாரண நிறுவனமும் ஒன்று என்றளவில் உள்ளது.

எப்படியிருந்தாலும் அனுப்ப முடியாதவர்கள் நம்ம செயலிக்கு வந்து தானே ஆக வேண்டும் என்று அடுத்தக் கட்ட நிறுவனங்கள் நினைக்க வாய்ப்புள்ளதே!

இதனால் சேவையில் தரக்குறைபாடு ஏற்படும்.

மற்ற நாடுகளின் முதலீடு

சீனா போன்ற நாடுகள் முன்னணியில் உள்ள நிறுவனத்தில் முதலீடு செய்து பணப்பரிவர்த்தனையைத் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளதாக NPCI கருதுகிறது.

TikTok போன்ற பொழுதுபோக்கு செயலியாக இல்லாமல் நிதி சம்பந்தப்பட்ட செயலியாக இருப்பதால், இந்த எச்சரிக்கை அவசியம் இருப்பதாக NPCI கருதுகிறது.

நியாயமான காரணமாக இருந்தாலும் இதைக் கட்டுப்படுத்த வேறு முறைகளைக் கையாண்டு இருக்கலாம்.

தற்போது வரை பேச்சு அளவிலேயே உள்ளது. ஜனவரி 2021 முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று NPCI அறிவித்துள்ளது. எனவே, செயல்முறைக்கு வரும் போது இதில் உள்ள நடைமுறை சிக்கல்களைக் களைவார்கள் என்று நம்புகிறேன்.

கொசுறு

Google Pay பயன்படுத்த மிக எளிதாக இருந்தாலும், சில நேரங்களில் பணம் செல்வதில் பிரச்சனை ஏற்படுகிறது.

எனவே, தற்போது Amazon Pay தான் பயன்படுத்துகிறேன்.

Read : அமேசான் சலுகைகள்

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

1 COMMENT

  1. Absolutely right thing to do…in fact pleasantly surprised npci has such a forethought. Not just about national security, but from pure market economy perspective…damn good for competition and to avoid any oligarch or monopoly. Kudos to npci.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!