திடீர் என்று தலைவரை சந்திக்கும் (பார்க்கும்) வாய்ப்புக் கிடைத்தது.
ரசிகர்கள் பலரில் ஒருவனாக நேற்று (திங்கள்) கலந்து கொண்டேன். அதோடு அங்கு நிலவும் நடைமுறை சிக்கல்களையும் உணர முடிந்தது.
ஒருங்கிணைப்பது எளிதல்ல
ரசிகர்களை ஒருங்கிணைப்பது மிகப்பெரிய சவால். “என்னை அழைக்கவில்லை, அனுமதியில்லை, என்னைக் கண்டுகொள்ளவில்லை, நானும் மிகப்பெரிய ரசிகன்” போன்ற நெருக்கடிகளைச் சமாளிப்பது கடினம்.
நேரில் பார்த்தால் தான் உணர்ந்து கொள்ள முடியும்.
சிலர் புரிந்து கொள்வார்கள் பலர் கோபப்படுவார்கள். நேரில் பார்த்த பிறகு தான்.. “ஐயையோ! எப்படிய்யா ஐந்து நாள் நிகழ்ச்சியை நடத்தி முடித்தார்கள்?” என்று இருந்தது.
அனைவரையும் திருப்தி செய்வது சாத்தியமே இல்லை. இதை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அங்கே உள்ள பாதுகாவலர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் படும் பாடு ரொம்பப் பாவம்.
தலைவர் வரும் முன்பே மன்றத் தலைவர் திரு சுதாகர் “வரிசையாக வாங்க, குடும்பங்களுக்கு முன்னுரிமை, யாரும் காலில் விழக்கூடாது, பேசக்கூடாது” என்று அறிவுறுத்தினார்.
விர்ர்ர்ர்ர்ர்ரும்
இது வரை யார் என்றே தெரியாத “தமிழர் முன்னேற்றப்படை” வீரலட்சுமி செய்த போராட்டத்தால், தலைவர் தாமதமாகத் தான் வந்தார்.
இத்தனை வருடங்களாகத் திரைப்படங்களிலும் தொலைக்காட்சியிலும் மட்டுமே பார்த்தவரை நேரில் பார்க்கும் தருணம் செம்ம 🙂 .
வந்தவுடன் எழுந்த சத்தம் அடங்க சில நொடிகள் ஆனது.. “The Mask” படத்துல வர ஜிம் கேரி மாதிரி விர்ர்ர்ர்ருனு கறுப்பு உடையில் எப்போதும் போல வேகமாக வந்தார்.
வந்தவுடன் அனைவருக்கும் வணக்கம் கூறி விட்டு, தமிழ்த் தாய் வாழ்த்துத் துவங்கியது.
பின்னர் நிழற்படம் எடுக்கும் நேரம் துவங்கியது..
பெண்கள் குழந்தைகள்
நானும் வரிசையில் நின்றேன்.. குழுவாக எடுப்பவர்கள் தனியாக எடுப்பவர்கள் என்று அழைத்தார்கள். நிழற்பட எண்ணைக் கூறி பின்னர் நாம் வாங்கிக்கொள்ளலாம் என்றார்கள்.
திடீர் என்று விசில் சத்தம், “என்னடா இது!” என்று பார்த்தால், பெண்கள் நின்று கொண்டு இருந்தார்கள் 🙂 . பெண்களும் குழந்தைகளும் வரும் போது சத்தம் அதிர்ந்தது.
ஒரு குழந்தையை அதன் தாய், தலைவர் மடியில் வைக்க, பார்வையாளர்கள் பகுதியில் இருந்து விசில் சத்தமும் கத்தலும் அதிர, குழந்தை அழ ஆரம்பித்து விட்டது.
பின்னர் தாயை அருகில் பார்த்துச் சமாதானமானது, நிழற்படத்தில் எப்படி வந்தது என்று தெரியவில்லை. இக்குழந்தை பெரிய நபராகும் போது ஒரு சுகமான நினைவாக இருக்கும் 🙂 .
பொடுசுகளுக்கு தலைவர் மடியிலேயே அமர்ந்து / சாய்ந்து இருக்கிறோம் என்ற எண்ணம் அவர்கள் முகத்தில் அதீத மகிழ்ச்சியைக் கொடுத்தது.
பல ஆண்டுகள் எதிர்பார்ப்பும் இரண்டு நொடிகளும்!
என் முறை வரும் போது, கொஞ்சம் பதட்டமாக இருந்தது..
எல்லோரும் அதிகபட்சம் 3 / 4 நொடிகள் நின்றார்கள்.
நான் தலைவர் முகத்தைக் கூடச் சரியாகப் பார்க்கவில்லை.. தேவையில்லாமல் நின்று தர்மசங்கடத்தைக் கொடுக்க வேண்டாம் என்று படம் எடுத்தவுடன் நகர்ந்து விட்டேன்.
இரு நொடிகளில் அனைத்தும் முடிந்து விட்டது 🙂 . படம் இன்னும் கைக்குக் கிடைக்கவில்லை.
அலுவலகத்துக்கு நேரமானதால், அரைகுறை மனதோடு உடனே கிளம்ப வேண்டியதாகி விட்டது.
சொல்லவே இல்ல…
வெளியே வந்தவுடன் அம்மாவை அழைத்துக் கூறினேன்.. “தம்பி! என்கிட்டே சொல்லவே இல்ல! சொல்லி இருந்தால், டிவியில பார்த்திருப்பேன் இல்ல..” என்றார்.
“இல்லைங்ம்மா இது டிவில வராது” என்று கூறினேன், திருப்தியடையவில்லை. “சரி! ரஜினி என்ன கூறினார்? என்ன பேசினாய்?” என்று ஆர்வமாக அப்பாவியாகக் கேட்டார் 🙂 .
பின்னர் மனைவியை அழைத்துக் கூறினேன்.. “எப்படிங்க..!! என்று இன்ப அதிர்ச்சியாகி.. சொல்லவே இல்ல!!” என்றார் 🙂 . “ஆமாம்” என்று கூறி பிறகு அழைக்கிறேன் என்றேன்.
கூறாமல் இருந்ததற்குக் காரணங்களில் ஒன்று ஒருவேளை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டால் என்னை விட இவர்கள் இருவருமே மிகவும் ஏமாற்றமடைவார்கள் குறிப்பா அம்மா.
இது ச்சும்மா டீசர் தான்.. 🙂
தலைவரிடம் ஐந்து நிமிடங்களாவது பேச வேண்டும், சிலவற்றைப் பகிர்ந்து கொள்ள வேண்டும், இரண்டு கேள்விகளையாவது கேட்டு “கிரி Blog Exclusive” என்று போட வேண்டும் என்பதே பல வருட காத்திருப்பு / விருப்பம்!
இதை என் பதிவிலும் கூறி இருக்கிறேன். நிச்சயம் நடக்கும்.. காத்திருக்கிறேன் 🙂 .
தொடர்புடைய கட்டுரைகள்
ரஜினிக்கு ரசிகனாக இருப்பதால் என்ன பயன்?
“ரஜினி” திரைப்பட முதல் காட்சி (FDFS) அனுபவங்கள்
கொசுறு
தலைவர் அரசியலுக்கு வருவதாக பேச்சு அடிபடும் இந்த நேரத்தில் சமூகத்தளங்களில் கடுமையான விமர்சனங்களைக் காண முடிகிறது.
தலைவரே கூறியது போல “இவர்கள் நன்மை செய்து கொண்டு இருப்பதாகவே எனக்கும் தோன்றுகிறது”.
ஊழல் செய்து கோடி கோடியாய் சம்பாதிக்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகளை விட “நான் அரசியலுக்கு வருவது கடவுள் கையில் உள்ளது” என்று கூறுவது அப்படி ஒரு கொலைக் குற்றமா?!
கோபம் இருக்கலாம் ஆனால், அதற்காக ஒட்டு மொத்த ஊடகங்களும், சமூகத்தளங்களில் பலரும் கடுமையாக தாக்கும் அளவுக்கு அவர் எந்தப் பெரிய தவறும் செய்து விடவில்லை.
ஊடகங்கள் பத்திரிகை தர்மம் என்ற ஒன்றை குழி தோண்டிப் புதைத்து விட்டார்கள்.
ரஜினியை விமர்சிப்பதில் காட்டும் ஆர்வத்தை அரசியல்வாதிகள் செய்யும் தவறுகளில் காட்டி இருந்தால், தமிழ்நாடு இருக்கும் நிலையே வேறு.
ரஜினி விமர்சிக்கப்படக்கூடாதவர் அல்ல ஆனால், தற்போது நடந்து கொண்டு இருப்பது விமர்சனமல்ல “வன்மம்”.
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
புகைப்படத்தைத்தான் முதலில் எதிர்பார்த்தேன்.
//இது ச்சும்மா டீசர் தான்.. // அடுத்து POSTER, அடுத்து INTERVIEW. மகிழ்ச்சி.
பொறுத்தவன் பூமி ஆள்வான் எனும் பழமொழிக்கேற்ப உங்கள் நெடுநாள் ஆசை அரங்கேறி இருக்கிறது .
நிச்சியமாக இந்த உணர்வை சொல்லில் விவரிக்க முடியாது
வாழ்த்துக்கள்.
வாழ்வின் மர்மம் தான் வாழ்வின் ருசி. நாளை என்ன நடக்கும் என்பது முன்கூட்டியே தெரியாமல் இருப்பதால் தான் வாழ்க்கை நகர்ந்து கொண்டே செல்கிறது. வாழ்வின் மகிழ்வான தருணங்களை என்றும் மறக்க முடியாது.
இத்தனை ஆண்டுகள் தொடர்பில் இருந்தவன் என்ற அடிப்படையில் உங்கள் உணர்ச்சிகளை புரிந்து கொள்ள முடிகிறது. தலைவர் நிறையப்பேருக்கு அவர்களுக்கு தெரியாமல் “ஆச்சரியம் அளித்துள்ளார்” நிச்சயம் உங்களுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கும். பகிர்வுக்கு நன்றி கிரி.
இது வரை யார் என்றே தெரியாத “தமிழர் முன்னேற்றப்படை” வீரலட்சுமி செய்த போராட்டத்தால், தலைவர் தாமதமாகத் தான் வந்தார்…….
வந்தேறிகளை தலைவர் மதிக்கும் உங்களுக்கு ,தமிழர் முன்னேற்றப்படை” வீரலட்சுமி என்ன தமிழர் தலைவைர்கள் பசுபொன் முத்துராமலிங்க தேவர் ஐயா ,காமராஜர் ,வ. உ. சிதம்பரம்பிள்ளை,திருப்பூர் குமரன் கூட யார் என்றே தெரியாத சான்ஸ் இல்ல
வந்தேறிகளை களின் அடிமைகள் ………
ராஜேஷ் இவ்வளவு பேசுறீங்களே,
வ.உ.சி யின் மகன் சமீபத்தில்தான் இறந்தார். வார்த்தையில் அஞ்சலியாவது செலுத்தினீர்களா?
வந்தேறிகளா?
வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களை தாயகம் திரும்பச் சொல்லி அழைக்க முடியுமா?
யாரும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாட்டிற்கு செல்லக்கூடாது என்று சொல்ல முடியுமா?
உங்களால்.
by the way;
முத்துராமலிங்கத்தேவர் “இமானுவேல் சேகரன்” கொலை வழக்கின் முதல் குற்றவாளி என்று தெரியுமா?
கொலைக்குற்ற வழக்கு நடந்த காலம் முழுவதும் சிறையில் இருந்தது தெரியுமா?
வழக்கறிஞர் சீனிவாசஐயங்கார் மூலம் சாட்சிகளை கலைத்து, பொய்சாட்சி கூற வைத்தது தெரியுமா?
அந்த சீனிவாசஐயங்கார்தான் கமலஹாசனின் தந்தை என்று தெரியுமா?
dai காத்தவராயன் vantheri rajiniku support pannum nee oru tamil na ka iruka mudiyathu .wait and see (tamilans ) throw u out from tamil nadu including u and u r rajini
super rajesh
வாழ்த்துகள் கிரி.
எந்த மாவட்டத்தின் சார்பாக நீங்கள் கலந்து கொண்டீர்கள்? ஈரோடு / சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர்களை அழைக்கவில்லையே!
நான் எங்க ஊர் ரசிகர் மன்றத்திடம் கேட்டுள்ளேன், வாய்ப்பு கிடைக்குமா எனத் தெரியவில்லை.
2002 சென்னை உண்ணாவிரதத்தின் போது; மேடைக்கு முன்பாக நாள் முழுவதும் நின்று கொண்டே தலைவரை பார்த்துக் கொண்டே இருந்தேன்.
எனக்கும் தலைவரிடம் கூற சில விஷயங்கள் உள்ளன.
1. அமிதாப் மாதிரி எல்லாம் முயற்சி செய்யாதீங்க, கடைசி வரைக்கும் சிங்கம் மாதிரி ஹீரோவாவே நடிக்கனும். [கபாலி மாதிரி காலாவும் வயசான கெட்டப் இப்பவே எனக்கு பீதியை கிளப்புது]
2. அரசியல் வேண்டாம் தலைவா, உடல் நலத்தை பார்த்துக் கொண்டு அமைதியாக ஓய்வெடுத்தாலே போதும்.
3. சுயசரிதை எழுத வேண்டும்.
வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களை தாயகம் திரும்பச் சொல்லி அழைக்க முடியுமா?
தமிழர்கள் வேலைக்கு தான் சென்று உள்ளார் ,அரசியலுக்கு அல்ல
அந்த சீனிவாசஐயங்கார்தான் கமலஹாசனின் தந்தை என்று தெரியுமா?
எதிலிருந்து உங்கள் ஜாதி வெறி தெரிகிறது ( நானும் மதுரை தான்)
//தமிழர்கள் வேலைக்கு தான் சென்று உள்ளார் ,அரசியலுக்கு அல்ல//
உங்கள் அறியாமைக்கு வருந்துகிறேன்.
பல நாடுகளில் அரசியல் அதிகாரத்தில் தமிழர்கள் உள்ளார்கள்.
மேலும்;
அங்கு சம்பாதித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்வதில்லையா?
//உங்கள் ஜாதி வெறி தெரிகிறது//
இமானுவேல் சேகரன் கொலை வழக்கு பற்றி கூறியது ஜாதி வெறிக்காக அல்ல;
கொலைகாரனை கொண்டாடுவோர்க்கு; ரஜினி பிடிக்காதுதான்.
ரஜினி யாரையும் கொலை செய்யவில்லை, பொதுச்சொத்தை கொள்ளையடிக்கவில்லை, சமூகவிரோத செயல்களில் ஈடுபடவில்லை.
//நானும் மதுரை தான்//
நானும் ரௌடி என்பது போல் உள்ளது 🙂
வ.உ.சி மகன் சமீபத்தில் வாழ்ந்து மறைந்ததும் அதே மதுரையில்தான்.
@சோமேஸ்வரன் 🙂
@செந்தில் உண்மை.. இந்த உணர்வு மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாது.
@யாசின் உங்கள் வாழ்த்துக்கு நன்றி யாசின் 🙂
@ராஜேஷ் நான் யார் செய்வது என்று பார்ப்பதில்லை.. அவர்கள் செய்யும் செயல்களை மட்டும் கவனிக்கிறேன். யாராக இருந்தாலும் அவர்கள் செயல் சிறப்பு என்றால் பாராட்டவும் தவறு செய்தால் விமர்சிக்கவும் தயங்க மாட்டேன்.
வந்தேறி வந்தேறி என்று இதையே கூறி உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்.
@காத்தவராயன் நான் சென்னை இணைய ரசிகர்களில் ஒருவனாக கலந்து கொண்டேன்.
1. அவருடைய வயசுக்கு கபாலி மாதிரி கதாப்பாத்திரங்கள் தான் சரி காத்தவராயன். இனி டூயட் எல்லாம் பாடி நடிக்க முடியுமா? நடித்தால் நன்றாக இருக்குமா?
காலா போன்ற கதாப்பாத்திரங்கள் தான் சரி. அவர் சரியாகத் தான் செல்கிறார்.
ஹீரோவாக நடிப்பார் ஆனால், இது போல கதாப்பாத்திரங்களில்.
2.எனக்கு அவர் வரணும் 🙂 . அவர் மாதிரி ஆட்கள் வந்து நல்லது செய்வாங்க என்று நம்பும் சராசரி நபர். நம்முடைய அரசியல் ஊழல்கள் லஞ்சம் போன்றவற்றால் வெறுத்துப் போய் இருக்கிறேன்.
ரஜினி என்றில்லை அவர் போல யார் உண்மையாக வந்தாலும் எனக்கு ஏற்புடையது தான்.
3. இதற்கு அவரே பதில் கூறி விட்டார். சுயசரிதை எழுதினால் உண்மையாக இருக்க வேண்டும். இதனால் பலர் மனது வருத்தப்படும் எனவே, அந்த தைரியம் வரும் போது எழுதுகிறேன் என்று கூறி இருக்கிறார்.
அவர் கூறுவது நடைமுறை எதார்த்தம். எல்லாத்தையும் கூறி விட முடியாது.. அதுவும் இவரைப் போன்றவர்களுக்கு ரொம்ப சிரமம்.
தங்களை முதன் முறையாக சந்தித்ததிலும் மிக்க மகிழ்ச்சி. கிரி. ரஜினி அவர்களை சந்தித்த அந்த சில நொடிகள் தந்த உற்சாகம் மிக பெரிது.
தலைவரோட நம்ம தல..
வாழ்த்துக்கள் கிரி
குட்டி ரஜினி மாதிரி இருக்கீங்க தலைவர் கூட உள்ள போட்டோ ல 🙂