சூப்பர் ஸ்டார் ரஜினி

21
சூப்பர் ஸ்டார் ரஜினி

டுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்விகளும், அடுத்த சூப்பர் ஸ்டார் நான் தான் என்றும் பலரால் பேசப்பட்டுக் கொண்டு இருக்கிறது.

இதற்கு ரஜினி ஒருவர் தான் சூப்பர் ஸ்டார் என்றும் / அடுத்த சூப்பர் ஸ்டார் இவர் என்றும் ஊடகங்களில் மாற்றி மாற்றி இதே சுற்றிக்கொண்டு இருக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினி

1978 ம் ஆண்டு கலைஞானம் தயாரிப்பில், எம்.பாஸ்கர் இயக்கத்தில் “பைரவி” படத்தில் ரஜினி கதாநாயகனாக நடித்து இருந்தார்.

அதுவரை வில்லனாகவும், துணை கதாப்பாத்திரங்களும், இரண்டாவது கதாநாயகனாகவும் தான் நடித்துகொண்டு இருந்தார்.

இப்படத்தின் சென்னை நகர விநியோக உரிமையை “கலைப்புலி” தாணு எடுத்து இருந்தார்.

அப்போது சென்னையில் மிகப் பிரபலமான திரையரங்கான “பிளாசா” வில் [தற்போது இது மூடப்பட்டு விட்டது] ரஜினியின் 35 அடி உயர கட்டவுட் வைத்து, சென்னை முழுவதும் விளம்பரத்திற்காக சுவரொட்டிகள் ஒட்டினார்.

இது பற்றித் தாணு

‘ரஜினியின் நடிப்பு, அவருக்கே உரித்தான ஸ்டைல் எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

எனவே, அவர் முதன் முதலாகக் கதாநாயகனாக நடித்த ‘பைரவி’ படத்தின் விநியோக உரிமையை வாங்க விரும்பினேன்.

எஸ்.மகாலிங்கம், ஆர்.பி.ஜெயகுமார் என்ற 2 நண்பர்களைப் பங்குதாரர்களாகச் சேர்த்துக்கொண்டு, பைரவி படத்தின் சென்னை நகர விநியோக உரிமையை வாங்கினேன்.

படத்தைப் பொதுமக்கள் எப்படி ரசிக்கிறார்கள் என்று அறிந்து கொள்ள, ராஜகுமாரி தியேட்டருக்குப் பகல் காட்சிக்கு ரஜினி வந்தார். அவருடன் கலைஞானம், பஞ்சு அருணாசலம், கே.என்.சுப்பு ஆகியோரும் வந்தார்கள்.

போஸ்டர்களை ரஜினி பார்த்தார். `சென்னை நகர டிஸ்டிரிபியூட்டர் யார்?’ என்று அருகில் இருந்தவர்களிடம் கேட்டார். சிலர் என்னிடம் வந்து, `ரஜினி சார் உங்களைப் பார்க்க விரும்புகிறார்’ என்றார்கள்.

நான் ரஜினியிடம் சென்றேன். `பென்டாஸ்டிக் போஸ்டர்! பியூட்டிபுல் பப்ளிசிட்டி’ என்று என் கையைப் பிடித்துக் குலுக்கினார். நான் மகிழ்ந்து போனேன்.

பிளாசா டாக்கீசில் வைத்திருந்த பெரிய `கட் அவுட்’டையும் அவர் பார்த்தார். அதன் பிறகு அவரை நான் சந்தித்தபோது, `உங்கள் விளம்பரங்கள் எனக்குள் ஒருவித வைப்ரேஷன் (அதிர்வுகள்) உண்டாக்குகின்றன’ என்றார்.

இதன்பின் பட அதிபர் கலைஞானம், டைரக்டர் எம்.பாஸ்கர் இருவரும் என்னை ஒரு நாள் வந்து பார்த்தார்கள்.

‘ரஜினி அனுப்பி, உங்களை வந்து பார்க்கிறோம். எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் ஆகிய மூத்த கலைஞர்கள் இருக்கும்போது, தன்னை சூப்பர் ஸ்டார் என்று அழைப்பதை ரஜினி விரும்பவில்லை. அப்படி விளம்பரப்படுத்துவதை நிறுத்திவிடச் சொன்னார்’ என்றார்கள்.

ஆனால், இதற்குள் சூப்பர் ஸ்டார் என்ற பெயர் பிரபலமாகி விட்டது. ரஜினியை பார்க்கும்போதெல்லாம் ரசிகர்கள் `சூப்பர் ஸ்டார்’ என்று குரல் எழுப்ப ஆரம்பித்து விட்டனர்.

எனவே, நான் துணிந்து `கிரேட்டஸ்ட் சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிக்கும் பைரவி என்று விளம்பரம் செய்தேன்.

தன்னடக்கத்தின் காரணமாக, தன்னை `சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்க வேண்டாம் என்று ரஜினி கூறினார். என்றாலும், ரசிகர்கள் மத்தியில் `சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டம் நிலைத்து விட்டது.

`நடிகர் திலகம்’ என்றால் அது சிவாஜிகணேசன் ஒருவரை மட்டும் குறிப்பிடுவது மாதிரி, `சூப்பர் ஸ்டார்’ என்றால் அது ரஜினி ஒருவரை மட்டும் குறிப்பிடும் சொல்லாகிவிட்டது.’

இவ்வாறு தாணு கூறினார். [நன்றி மாலைமலர்]

குறிப்பு : ரஜினி ஆரம்பத்தில் ‘ஸ்டைல் மன்னன்’ என்று அழைக்கப்பட்டார். ‘பைரவி’ படத்துக்குப் பின், ‘சூப்பர் ஸ்டார்’ என்றே குறிப்பிடப்படுகிறார்.

“பெப்சி” உமா

“பெப்சி” உமா ஒரு முறை சன் டிவியில் நடிகர் சரத்குமாரை பேட்டி எடுத்த போது “அடுத்த சூப்பர் ஸ்டார் ஆவது உங்கள் விருப்பமா?” என்று கேட்டார்..

சூப்பர் ஸ்டார் என்பது ஒரு பட்டம். இதை அடைவது என்பது ஒரு நடிகருக்குச் சரியான நோக்கமாக இருக்க முடியாது.

ஒரு மாநில / தேசிய விருது, ஆஸ்கார் விருது போல ஒரு விஷயத்தை நோக்கிப் பயணப்படுவது என்றால், அது தான் உண்மையான நோக்கம் / முயற்சி

என்று கூறி இருந்தார். இப்படியே அல்ல, இது போல பொருள் வரும் படி.

உண்மையில் சரத்குமார் கூறியதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்துமில்லை. சரத்குமார் பேசிய பேச்சில் அப்போது எனக்கு ரொம்பப் பிடித்த ஒரு விஷயம் கூட.

சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கான மதிப்பு

என்னைப் பொருத்தவரை “சூப்பர் ஸ்டார்” என்ற பட்டத்தில் எதுவும் கிடையாது.

ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் கொடுக்கப்பட்ட போது தற்போது இருக்கும் மதிப்பு போல, அப்பட்டத்திற்கு மதிப்பு இருந்து இருக்க முடியாது.

வழக்கமான ஒரு பட்டமாகத் தான் இருந்து இருக்க முடியும் என்பது என் கணிப்பு.

பல பட்டப்பெயர்களுடன் இதுவும் ஒன்றாகத்தான் இருந்து இருக்க முடியும், கொஞ்சம் கூடுதல் கவர்ச்சியாக இருக்கிறது என்பதைத் தவிர.

தற்போது சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்கு மதிப்பு வர ரஜினி தான் 100% காரணமே தவிர அந்தப் பட்டமல்ல.

ரஜினியின் 38 வருட உழைப்பு, மக்களைக் கவர்ந்த முறை, காலங்கள் பல கடந்தும் இன்னும் முதல் இடத்தில் இருப்பது, தென்னிந்தியர்கள் என்றாலே நக்கலாகப் பார்க்கும் வட மாநிலத்தில், தன்னுடைய ஒரு பேட்டிக்காக வட மாநில ஊடகங்களைக் காத்திருக்க வைப்பவர் என்று பல விஷயங்கள் உள்ளது.

இவை அனைத்தும் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தால் வந்ததல்ல, அதற்கும் மேலாக ரஜினியின் திறமை, அவர் நடந்து கொள்ளும் முறை என்று பல காரணங்கள் உள்ளது.

சுருக்கமாகக் கூற வேண்டும் என்றால், சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்கு பெருமை ரஜினியால் தானே தவிர, இப்பட்டத்தால் ரஜினிக்கு அல்ல.

ஒருவேளை தாணு, “சுப்ரீம் ஸ்டார்” என்று வைத்து இருந்தாலும், தற்போதைய நடிகர்கள் அந்தப் பட்டத்தை நோக்கியே பேசிக்கொண்டு இருப்பார்கள்.

ஊடகங்களும் அடுத்த சுப்ரீம் ஸ்டார் யார் என்றே கேட்டுக்கொண்டு இருந்து இருக்கும்.

ஒரு பேச்சுக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை ரஜினிக்கு வைக்காமல் அந்த சமயத்தில் வேறு நடிகருக்கு வைத்து இருந்தால், தற்போது அந்தப்பட்டமே காலாவதியாகி இருக்கும்.

எவருமே “அடுத்த சூப்பர் ஸ்டார் யார்?” என்று தற்போது போலக் கேட்டுக்கொண்டு இருந்து இருக்க மாட்டார்கள். கொஞ்சம் லாஜிக்காக யோசித்துப் பாருங்கள் புரியும்.

மக்கள் திலகம் & நடிகர் திலகம்

“மக்கள் திலகம்” என்ற பட்டப் பெயர் எம் ஜி ஆர் அவர்களைத் தவிர வேறு யாருக்கும் பொருந்துமா? “நடிகர் திலகம்” என்ற பட்ட பெயர் சிவாஜி அவர்கள் தவிர வேறு யார் வைக்க முடியும்?

இப்பட்டங்களால் பட்டங்களுக்குத் தான் பெருமையே தவிர இவர்களுக்கு அல்ல.

இப்பட்டங்கள் இல்லை என்றாலும் இவர்கள் பார் போற்றும் நடிகர்களாகத் தான் இருந்து இருப்பார்கள். எவரும் மறுக்க முடியுமா?

தற்போதுள்ள நடிகர்கள் எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தைப் பெற முடியாது.

ஒருவேளை ரஜினி நடிப்பில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, தான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று தன்னை யார் அறிவித்துக் கொண்டாலும் / அறிவிக்க வைத்தாலும் அசிங்கப்பட்டே நிற்பார்கள்.

இது 100 % உறுதி. இதைப் புரிந்து கொள்ளாமல் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று பேசிக்கொண்டு இருப்பது அர்த்தமற்ற செயல்.

அந்தக் காலக்கட்டங்களில் “பட்டங்கள்” வைப்பது / வைத்துக் கொள்வது வழக்கமாக இருந்தது, அதற்கு மக்கள் ஆதரவும் இருந்தது.

தற்போது மக்கள் இதை விரும்புவதில்லை, கிண்டலாகவே பார்க்கிறார்கள்.

இதை உணர்ந்து தற்போதைய சில நடிகர்கள் பட்டம் வைத்துக்கொள்வதில்லை.

இறுதியாக, பட்டங்களால் எவரும் பெருமை அடைய / பெரிய ஆளாகி விட முடியாது.

ஒருவரின் பிரபலம் / மதிப்பு என்பது அவர் நடந்து கொள்ளும் முறையில் தான் உள்ளதே தவிர, சூப்பர் ஸ்டார் போன்ற பட்டங்களால் அல்ல.

தொடர்புடைய பதிவு : தலைவர் ரஜினி [2011]

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

21 COMMENTS

  1. ஒரு சிறு இடைவெளிக்கு பின் சூப்பர் ஸ்டார் பற்றிய ஒரு கட்டுரை.. சொன்ன விஷியத்தை திரும்ப சொல்லாமல் சிம்பிள்ல சொல்லி இருப்பது உண்மையிலே சூப்பர். தங்க மீன்கள் படம் நன்றாக இருப்பதாக நண்பன் சொன்னான்.. நீங்க படம் பார்த்து, நேரம் இருந்தால் உங்க கருத்தை எழுதலாமே??

  2. லிட்டில் சூப்பர் ஸ்டார் or யங் சூப்பர் ஸ்டார் பட்டங்கள் குறித்து ….?

  3. இப்போ இருக்குறவங்க இதை MP MLA போஸ்ட் மாத்ரி இத எடுத்துகிறாங்க …
    அருமையான பதிவு

  4. சூப்பர்……சூப்பர்…..சூப்பர்…….அருமையான பதிவு…..உங்களுடைய மற்றுமொரு பெஸ்ட் போஸ்ட்…நீங்க சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை……..சூப்பர் ஸ்டார் பட்டம் அல்ல,எந்த பட்டம் வைத்திருந்தாலும், அதுக்கு இப்போது craze உருவாகி இருக்கும்…….தலைவரால தான் அந்த பட்டத்துக்கு இந்த பெருமை கிடைத்தது……..

  5. ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க கிரி.
    தலைவருக்கு இனி மேல் சாதிக்க ஒன்றுமே இல்ல. அவருக்கு இருக்கிற பக்குவம் வேறு எந்த மனிதருக்கும் வராத ஒன்று.

  6. இந்தப்பதிவுக்கு கமெண்ட் போடவே பயமாயிருக்கு…கமல் ரசிகர்கள்,ரஜினி ரசிகர்கள்ன்னு 1 வருஷத்துக்கு மாத்தி மாத்தி போட்டு மெயில் ஃபுல் ஆயிடும்.இருந்தாலும் போட்டு வைப்போம். 😉

  7. நல்லவேலை பவர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் என்று வைக்கவில்லை இல்லை என்றால்……..
    ரும் போட்டு யோசிப்பாங்களோ எப்படி எல்லாம் எமாத்துறதுனு.

    எனக்கு எந்த ஸ்டார் மேலேயும் நம்பிக்கை இல்லை.

  8. “ராஜ் – அவருக்கு இருக்கிற பக்குவம் வேறு எந்த மனிதருக்கும் வராத ஒன்று”
    எதோ படத்த பார்த்தோமா விசில் அடிச்சோம ன்னு இருக்கோணும் …
    ஓகே..அவரோட பக்குவத்த பல மேடடைகளில் பாத்துட்டோம்ல…

  9. இந்த கட்டுரையை ரஜினி படித்து பார்த்தால் அவருக்கே சிரிப்பு வரும் கிரி. வெளியே வந்தால் தன்னுடைய சுயம் வெளியே தெரிஞ்சுடுன்னு வீட்டு சிறையிலே இருக்கும் அவரு பாவமமையா…

  10. தல,
    செம பதிவு ரஜினி என்றும் எனக்கு நெருக்கம் தான். ரஜினிய எப்படி பாத்தாலும் எனக்கு புடிக்கும் தல
    என்னவோ தெரில “என் ரஜினி” அப்படின்னு ஆசையா சொல்லுவேன் எங்க வீட்டுல. வேற எந்த நடிகனையும் அப்படி சொல்ல தோணவே மாட்டேங்குது
    பாருங்க ஊரே கேலி பண்ணுற கோச்சடையான் டீசெர் கூட புடிச்சு இருக்கு எனக்கு காரணம் ரஜினி.

    Actor விஜய் எனக்கு புடிச்சு இருந்துச்சு ஒரு period ல இப்ப என்னடா நா mgr ரசிகர் தன்ன சொல்லுறார் இந்த மாதிரி பச்சோந்தி compare பண்ணா என் ரஜினி என்னிக்கும் தங்கம் தான் மனசால சொக்க தங்கம்

    நன்றி தல இந்த பதிவுக்கு

    – அருண்

  11. எப்படிண்ணே அது வரிக்கு வரி உண்மையாகவே எழுதுறீங்க அருமை அருமை நன்றி

  12. \\\\\\\\\Actor விஜய் எனக்கு புடிச்சு இருந்துச்சு ஒரு period ல இப்ப என்னடா நா mgr ரசிகர் தன்ன சொல்லுறார் இந்த மாதிரி பச்சோந்தி compare பண்ணா என் ரஜினி என்னிக்கும் தங்கம் தான் மனசால சொக்க தங்கம்./////

    Arun super

    same feeling

  13. கிரி
    சில வருடங்களுக்கு முன் ஒரு முறை விகடன் மதன் பதில்களில் திரு மதன் அவர்கள் இப்படி சொல்லியிருந்தார் அதாவது சூப்பர் ஸ்டார் பட்டதை விட மேலான வார்த்தைகள் சுப்ரீம் ஸ்டார் மற்றும் அல்டிமேட் ஸ்டார் போன்ற பட்டங்கள் இருபினும் ரஜினியின் தாக்கத்தினால் தான் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் இவை எல்லா பட்டங்களைவிட மேலானதாக ஒரு அழுத்தம் பெற்றுள்ளது என்று. அதையே நீங்களும் கூறியுள்ளீர்கள்.நன்றி

  14. இது இன்று நேற்று அல்ல, பாபா படம் வந்தது முதல் பல இடங்களில் பலரால் பேசப்படும் விசையம்தான், எப்போது இந்த கேள்விக்கு நான் சொல்வது ஒரே பதில்தான்.

    “சூப்பர் ஸ்டார் நாற்காலி என்பது விக்ரமாதித்தன் சிம்மாசனம் போல், அவருக்கு பின் யார் வேண்டுமானாலும் அந்த சிம்மாசனத்தில் அமரக் கூடும், ஆனால் விக்ரமாதித்தன் சிம்மாசனத்தில் அமர்ந்தவர் எல்லாம் விக்ரமாதித்தன் கிடையாது என்பதுதான் உண்மை.”

    நன்றி.

  15. அருமை கிரி…….

    ஒவ்வொரு ரசிகரின் பார்வையில் இருந்தும் எழுதியது போல் உள்ளது……

  16. Super ஸ்டார் பட்டத்தை உயர்த்திப் பேசிவிட்டு தல என்ற வார்த்தை உங்கள் வாயில் வந்திருக்கிறது. கிரிக்கெட்டில் இந்திய அளவில் பேர் வாங்கின கிரிக்கெட் வீரருக்கு தல என்று பட்ட பெயர் கொடுத்துள்ளார்கள் ஆனால் தல ரசிகர்கள் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை அதை தல கொஞ்சம் கூட கண்டுக்கவே இல்லை கேள்விப்பட்டாலும் அது பெருமையா தான் நினைச்சுகிட்டு போவாரு. படத்துல தனக்கு பட்டப்பெயர் வேண்டாம் வெறும் பேரை போடுங்கன்னு சொன்னா ஒரே நடிகர் அஜித் மட்டும் தான். ஏதாவது ஒருத்தரில ஏதாவது ஒரு வேலையை சிறப்பா செஞ்சா சிறப்பாக செய்பவரை தலஎன்ற பட்டத்தை கொடுத்து விடுகிறார்கள். தலையும் சரி தல ரசிகர்களும் சரி அதை துளி கூட தப்பா பேசுவதில்லை. ஆனால் தமிழ்நாட்டுல தலன்றது ஒருத்தர் மட்டும் தான். உலக அளவில் அவர் மட்டும்தான் தல. அது என்னமோ தெரியல தோனிக்கு எத்தனையோ பட்ட பேர் வந்து கொடுத்து இருக்கலாம் ஆனா அவர் விரும்புனாரான்னு தெரியல மக்கள் விரும்புனாங்கலானு தெரியல அவருக்கு தல என்கிற பட்டத்தை கொடுத்து இருக்காங்க. அஜித் ரசிகர்கள் தலபட்ட பறிபோயிடிச்சேன்னு ஒரு கமெண்ட் கூட போட்டதில்லை. ஒருத்தர கௌரவ படுத்தனும் மரியாதை கொடுக்கணும்னு அவருக்கு செஞ்ச செயலை பாராட்டணும்னா அவர தலன்னு சொல்லி கூப்பிடுறீங்க.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!