Tab group செய்யும் வசதியைக் கூகுள் க்ரோம் உலவி அறிமுகப்படுத்தியுள்ளது. அதிகளவு Tab பயன்படுத்துபவர்களுக்கு உதவும் Tab Groups In Google Chrome வசதியைப் பற்றிக் காண்போம். Image Credit
Tab Groups In Google Chrome
உலவியை (பிரவுசர்) அதிகமாக, முழுமையாகப் பயன்படுத்துபவர்கள் அனைவருக்கும் உள்ள பிரச்சனை, ஏராளமாகத் திறந்து வைத்துள்ள தளங்களை எப்படி வகைப்படுத்துவது என்பது.
ஏனென்றால், தொழில்நுட்பம், செய்தி, பொழுதுபோக்கு, விளையாட்டு என்று ஏராளமான தளங்களைத் தொடர்ச்சியாகத் தினம் பயன்படுத்துபவர்கள் அதிகம்.
ஆனால், இக்கூட்டத்தில் நமக்குத் தேவையானவற்றை உடனே கண்டறிவது சிரமமானது.
எனவே, இதற்குச் சுலபமான வழியான Tab group யை க்ரோம் அறிமுகப்படுத்தியுள்ளது.
எப்படிப் பயன்படுத்துவது?
அலுவலகத்தில் ஜிமெயில், YouTube, ட்விட்டர், ஃபேஸ்புக் ஆகிய தளங்களைப் பயன்படுத்துகிறீர்கள்.
இதோடு அலுவலகம் தொடர்புடைய தளங்களையும் பயன்படுத்துகிறீர்கள்.
யாராவது ஒருவர் உங்கள் உலவியைக் கண்டால் என்னென்ன தளங்களைப் பயன்படுத்துகிறீர்கள் என்று தெரியும்.
அதோடு அலுவலகப் பணிக்காக Screen Share செய்தால், இத்தளங்களும் மற்றவர் பார்வைக்குச் செல்லும்.
இதைத் தவிர்க்க
இவை அனைத்தையும் ஒரு குழுவினால் அடக்கி விட்டால் எப்படி இருக்கும்!? அது தான் இச்சேவையின் பயன் / சிறப்பு.
எப்படிச் செயல்படுத்துவது?
- ஏதாவது ஒரு Tab யை right க்ளிக் செய்து Add tab to group –> New group தேர்வு செய்து கொள்ளுங்கள்.
- உங்களுக்கு விருப்பப்பட்ட பெயரைக் கொடுக்கவும் (Personal / News).
- இதில் ICONS / Smiley யும் சேர்த்துக்கொள்ள முடியும்.
- இதன் பிறகு இது தொடர்பான Tab யை க்ளிக் செய்து Add tab to group கொடுத்தால், நீங்கள் மேலே கொடுத்த பெயரைக் காட்டும்.
- அதைத் தேர்வு செய்தால், இந்த Tab அதில் இணைந்து விடும். இதே போல மற்ற Tab க்கும் செய்ய வேண்டும்.
- இதில் இணைக்காத Tab ஒன்றை திறந்த பிறகு, நீங்கள் உருவாக்கிய group பெயரை க்ளிக் செய்தால், இணைத்த அனைத்து Tab களும் இதற்குள் மறைந்து விடும்.
- அனைத்தும் தெரிய வேண்டும் என்றால், திரும்ப அதை க்ளிக் செய்தால் போதும்.
- இது போலப் பல group களை உருவாக்க முடியும். group வண்ணங்களையும் மாற்றிக்கொள்ளலாம்.
- அலுவலகக் கணினியில் பயன்படுத்த அவசியமான வசதி.
இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது குழப்பமாக இருக்கலாம் ஆனால், கூறியவற்றை வைத்து முயற்சித்தால் எளிதாகப் புரியும்.
பிரவுசரை மூடினால் அல்லது கணினியை Reboot செய்தால், group வசதி நீங்கி விடும்.
திரும்ப இதைக் கொண்டுவர, History க்ளிக் செய்து Tab எண்ணிக்கையை க்ளிக் செய்தால் திரும்ப வந்து விடும்.
இதைச் செயல்படுத்த புதிய க்ரோம் பதிப்பை (Version 89.0.4389.90) நிறுவி இருக்க வேண்டும். நிறுவ, Help –> About Google Chrome சென்றால் போதும்.
க்ரோம் உலவியில் வருவதற்கு முன்னரே மற்ற உலவிகளில் இவ்வசதி வந்து விட்டது குறிப்பிடத்தக்கது.
Tab Groups In Google Chrome பயன்படுத்திப் பார்த்துக் கருத்துகளைக் கூறுங்கள்.
தொடர்புடைய கட்டுரைகள்
க்ரோம் உலவி ஏன் பயன்படுத்த வேண்டும்?
Microsoft Edge | கூகுள் க்ரோம் உலவிக்கு மாற்று
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
நன்றி. பயனுள்ள வசதி. கூகுள் பாறைகள். 😜😂
புதிய செய்தியை பகிர்ந்தமைக்கு நன்றி கிரி..
@தேவா @ யாசின் 🙂