Microsoft Edge | கூகுள் க்ரோம் உலவிக்கு மாற்று

0
Microsoft Edge

னியுரிமை (Privacy) காரணமாக, கூகுள் சேவைக்கு மாற்றுத் தேடுபவர்கள் உள்ளார்கள். கூகுள் க்ரோம் உலவிக்கு (Browser) மாற்றாக Firefox உட்பட பல பரிந்துரைக்கப்பட்டாலும் குறிப்பிடத்தக்க இடத்தை Microsoft Edge பெற்று வருகிறது.

Chromium தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட உலவி. க்ரோம் உலவியைப் போன்றே வடிவமைப்பு, வசதிகள், சேவைகள் உள்ளது.

Microsoft Edge வசதிகள் என்ன?

  • Single Sign On : மைக்ரோசாஃப்ட் கணக்குடன் இணைத்துக்கொண்டால் உலவியில் சேமிக்கப்படும் அனைத்து விவரங்களும் (SYNC) இக்கணக்கிலும் இருக்கும்
  • Microsoft Defender SmartScreen : இணைய தளங்களைப் பயன்படுத்தும் போது மால்வேர், வைரஸ் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், எச்சரிக்கைப்படுத்தும்.
  • PDF : Builtin PDF இருப்பதால், PDF கோப்புகளைப் படிக்க வசதி.
  • Collections : சில நேரங்களில் பெரிய கட்டுரையாக இருக்கலாம், உடனே படிக்க முடியாது. அவற்றை இதில் சேமித்து (Bookmark போல) பின்னர் படிக்கலாம்.
  • Style : தேவைக்கு ஏற்றது போல வடிவமைப்பை மாற்றலாம்.
  • Price Comparison : பொருட்களை வாங்கும் போது வேறொரு நிறுவனத்தின் பொருளுடன் ஒப்பிடும் வசதி.
  • Deals with Coupons : இணையத்தில் பொருட்கள் வாங்கும் போது அப்பொருளுக்கு சலுகை கூப்பன் இருந்தால் வழங்கும்.
  • Password Monitor : பாஸ்வேர்ட் திருடப்பட்டு இருந்தால் (compromised), தெரிவிக்கும்.
  • Safe passwords : ஏராளமான இணையதளங்களில் கணக்கு உள்ளதால், அனைத்து பாஸ்வேர்டையும் நினைவு வைப்பது இயலாதது என்பதால், இதில் சேமித்து கடினமான பாஸ்வேர்டை வைக்க முடியும்.
  • Tracking Prevention : இணையத்தளங்கள் நம் தகவல்களைப் பின்தொடராதபடி Track செய்வதை தடுக்கலாம்.
  • Microsoft Defender SmartScreen : பாதுகாப்பான இணையத்தை வழங்குகிறது. பாதுகாப்பற்ற தளங்களுக்குச் சென்றால் எச்சரிக்கைப்படுத்தும்.
  • InPrivate mode : இவ்வசதியைப் பயன்படுத்தினால், எதுவும் சேமிக்காது. க்ரோம் உலவியின் Incognito Mode போல.
  • Microsoft 365 : நம் தகவல்களை Microsoft 365 உடன் எளிதாக இணைக்க முடியும்.
  • Web Capture : தேவையான பகுதியை Screenshot எடுக்க முடியும். தனி மென்பொருள் அவசியமில்லை.
  • Extension : Grammar Spellcheck, Dictionary, Ad Blocker போன்ற Extension களை நிறுவலாம்.

Microsoft Edge எப்படியுள்ளது?

2020 ஜனவரி அறிமுகப்படுத்தப்பட்ட புதிய Microsoft Edge பயன்படுத்திப் பார்த்தவரை வேகமாகவும், மெமரி குறைவாகவும் எடுக்கிறது.

சில நேரங்களில் க்ரோம் உலவியை விடச் சிறப்பாக உள்ளது.

எழுத்துக்கள் கண்களுக்கு இதமாக, வடிவமைப்பு பயன்படுத்த எளிதாக உள்ளது.

Internet Explorer & துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Edge போல இல்லாமல், புதிய Edge நன்றாக உள்ளது.

அனைத்து முக்கிய இயங்குதளங்களிலும் பயன்படுத்த முடியும்.

மேலும் விரிவான விவரங்களுக்கு, டவுன்லோடு செய்ய –> Microsoft Edge Download

தொடர்புடைய கட்டுரை

DuckDuckGo | கூகுள் தேடுதலுக்கு மாற்று

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here