ஜிமெயில் எப்படி செல்கிறது தெரியுமா?

10
ஜிமெயில் எப்படி செல்கிறது தெரியுமா?

நினைத்த விஷயத்தை நொடியில் பகிர மின்னஞ்சல் நமக்குத் துணை புரிகிறது.

ஒருவருக்கு மின்னஞ்சல் அனுப்புகிறோம் அடுத்த நொடியில் மற்றவர் பெற்று விடுகிறார். நாமும் அதோடு நாமும் மற்ற வேலைகளைப் பார்க்கப்போய் விடுவோம்.

ஜிமெயில் எப்படி செல்கிறது தெரியுமா?

என்றாவது இடைப்பட்ட நேரத்தில் என்ன நடக்கிறது? நீங்கள் அனுப்புவது எப்படி மற்றவரைச் சென்று அடைகிறது என்று யோசித்து இருக்கிறீர்களா?

கூகுள் இது பற்றி விளக்கி ஒரு காணொளி வெளியிட்டு உள்ளது.

ஒரு நொடியில் எத்தனை வேலை நடக்கிறது என்று தெரிந்தால் வியப்படைந்து போவீர்கள் 🙂 .

இதோட விட்டார்களா!

கூகுள் எப்படி தனது சர்வர் அறைகளை (Data Centre) அவர்களது நிறுவனங்களை, பேருந்துகளைப் பராமரிக்கிறார்கள் என்று விளக்கி இருக்கிறார்கள்.

சும்மா இல்ல ECO Friendly முறையில் செயல்படுத்துவதை.

உலகிற்கு தீங்கு விளைவிக்கும் விசயங்களைக் குறைத்து சுற்றுப்புற சூழ்நிலையைப் பாதிக்காமல் தங்கள் செயல்பாடுகளைச் செய்து வருவதை விளக்கி இருக்கிறார்கள்.

இதை எல்லாம் பார்க்கும் போது கூகுளில் வேலை கிடைத்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை போவதை தடுக்க முடியவில்லை.

இங்கே புதுமைக்குத் தான் முக்கியத்துவம். இது பற்றி அறிய http://www.google.com/green/ சென்று பாருங்கள்.

கொசுறு 1

தற்போது விகடன் மதன் சண்டை தான் ஹாட் டாபிக்.

வாசகர் கேட்ட கேள்விக்கு மதன் கூறிய பதிலுக்கு விகடன் ஜெ படம் போட ஜெ டிவியில் நிகழ்ச்சி செய்யும் மதன் இது மாதிரி நினைத்து நான் கூறவில்லை அதற்கு இப்படி படம் போட்டு என்னைத் தர்மசங்கடத்துக்கு ஆளாக்கி விட்டீர்களே! என்று விகடனுக்கு கடிதம் போட..

விகடன் நாங்க இதுக்கு முன்னாடி போட்ட படத்துக்கெல்லாம் எதுவும் சொல்லல இப்ப மட்டுமே ஏன் சொல்றீங்க? உங்க நடு நிலையை இனியும் எப்படி மற்ற விசயங்களில் எதிர்பார்ப்பது அதனால் மொத்தமா கிளம்புங்க என்று கூறி விட்டார்கள்.

என்னைப்பொறுத்தவரை விகடன் கூறியது மிகச்சரி அதில் அவர்களுக்கு உள் காரணங்கள் இருந்து இருந்தாலும்.

மதன் அரசியை நம்பி விகடனை கை விட்ட கதையாக மாறி விட்டது. மதன் இந்த நிலைக்கு வர விகடனே காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

ஜெ வை நம்பினோர் கை விடப்படுவர் என்பது புது மொழி வைகோ உதாரணம், அண்ணன் விஜய்காந்த்தை கேட்டால் படத்தின் க்ளைமாக்ஸ் வசனம் மாதிரி நீண்ட விளக்கம் கொடுப்பாரு!

ஜெ டிவியில் அதிக நிகழ்ச்சிகள் கிடைக்கும் என்கிற எண்ணத்தில் மதன் இவ்வாறு செய்து இருந்தால் அவருக்காகப் பரிதாபப்படுவதைத் தவிர வேறு வழி இல்லை.

இதன் மூலம் தேவையில்லாம பேரைக் கெடுத்துக் கிட்டது தான் மிச்சம். மதன் சார்! கவலைப்படாதீங்க நம்ம மக்களுக்கு மறதி அதிகம் விரைவில் ஓகே ஆகிடும் 🙂

கொசுறு 2

விஜய் டிவி ல நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் ரஹிலா பேகம் வந்த நிகழ்ச்சி செமையா இருந்தது.

கணவன் மனைவி இருவரும் ரொம்ப பொருத்தமான ஜோடியாக இருந்தார்கள்.

ரஹிலா கவுண்டர் வடிவேல் வசனங்களைப் பேசியது செம 🙂 .

அதிலும் “எதிர்க்கட்சிக்காரன் பார்த்தா என்னை என்ன நினைப்பான்” என்று கூறியதும் எனக்குச் சிரிப்பு தாங்கல 😀 பொதுவா நகைச்சுவையில் ஆண்கள் தான் அதிகம் தெரிவார்கள் இதில் இவர் வெளுத்து வாங்கி விட்டார்.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

10 COMMENTS

 1. பதிவு+கொசுறுகள் நல்லா இருந்துச்சி சார்…. NVOK செம…. 🙂

 2. கொசுறு ௫ க்கு வழிமொழிக்கிறேன் ;-))

  பொதுவாக உங்கள் ஜிமெயில் பதிவுங்கள் அனைத்தும் மிக உபயோகமான தெரிந்துக்கொள்ளும் பதிவுங்கள் தல. எனக்கு சில டவுட்டு இருக்கு மெயில் அனுப்புரேன்.

 3. விஜய் டிவியில் அந்த பெண் பங்கேற்ற நிகழ்ச்சி ரொம்ப அருமை கவுண்டமணி பேவரைட் START MUSIC அந்த பெண் தலையை ஆட்டியது ரொம்ப சிரிப்பு நான் பார்த்த எபிசோடிலே இதுதான் ரொம்ப ஜாலியாக இருந்தது

 4. பகிர்வுக்கு நன்றி கிரி… ஈமெயில் செயல்பாடு தொடர்ந்து பயன்படுத்தினாலும் அதன் அறிமுகம் புதுமை தான்…

 5. மெயில் அனுப்பிய ஓரிரு நிமிடங்களில் இத்தனை வேலைகளா

 6. கிரி,

  indha computer pathi samacharam parthaley nan adhai skip panni viduven 🙁 . pudhu vishayathai katru kolla somberithanam matrum yen madaiku indha madhiri vishyam padichalum puriya mattengudhu . matrabadi unga kosuru athanaiyum arumaiyaga irundhadhu…:)

  ——————————————————————-

  ungalukku car otta theriyuma giri? neenga chennaiku vandha unga kooda jollya oor suthalam ra nappasaila ketten. 😛

  ————————————————————————————–

  வழக்கு எண் 18 / 9 —- indha padathai nanum parthen giri. romba neat ah azhaga padathai yeduthu irukanga. ahey samayam bore adikkama nalla pogudhu. mathapadi nama newspaperla adikkadi padikura vishayangaldhan padathula irukku. ungal karuthudhan yen karuthum. Yennai poruthavarai ‘ADUKALAM” padathukku appuram yennai biramikka vaika innum oru padam vara villai.

  RAJESH V

 7. அனைவரின் வருகைக்கும் நன்றி

  @கோபிநாத் அனுப்புங்க. தெரிந்தால் கூறுகிறேன்.

  @Anbuthil நிமிடங்களில் அல்ல நொடிகளில் 🙂

  @ராஜேஷ் எனக்கு கார் ஓட்டத்தெரியாது. நான் சிறுவயதில் இருந்தே ஹாஸ்டலில் இருந்ததால் வாய்ப்புக் கிடைக்கவில்லை. இல்லைனா என்ன வாங்க சுத்துவோம் 🙂 ஆடுகளம் செம படம் போன வாரம் கூட பார்த்தேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here