க்ரோம் உலவி ஏன் பயன்படுத்த வேண்டும்?

13
க்ரோம் உலவி

லவிகளில் [Browser] தற்போது பட்டையக்கிளப்பிக் கொண்டு இருப்பது சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் ‘க்ரோம் உலவி’ தான்.

இந்தப்பதிவு ஏன் க்ரோம் உலவியை பயன்படுத்த வேண்டும்? இதன் பயன்கள் / சிறப்புகள் என்ன? என்பதை விளக்குகிறேன். Image credit

வடிவமைப்பு

க்ரோம் அறிமுகப்படுத்தியவுடன் அனைவரையும் கவர்ந்தது இதன் வடிவமைப்பு தான். வந்தவுடன் ரொம்ப “லைட்டாக” இருக்கிறது என்று அனைவராலும் கூறப்பட்டது.

உலவியில் என்ன லைட் என்று நினைக்கிறீர்களா! பயன்படுத்தினாலே புரிந்து விடும்.

மிக வேகமாகத் திறக்கும் அதோடு,  தேவையற்ற பகுதிகள் அனைத்தையும் நீக்கி நாம் படிக்கும் இடத்தின் அளவை ஆக்கிரமிக்காமல் எவ்வளவுக்கெவ்வளவு இடம் தர முடியுமோ அந்த அளவிற்கு கொடுத்து இருப்பார்கள்.

நாம் விருப்பப்பட்டால் இன்னும் கூடத் தேவையற்ற பகுதிகளை நீக்க முடியும்.

நாம் திறந்து வைத்துள்ள TAB ஐ நமக்குத் தேவையான வரிசையில் வரிசைப்படுத்த முடியும் அதாவது Drag and Drop முறையில் மாற்றி அமைக்க முடியும்.

ஒரு TAB ல் உள்ள ஒரு தளம் ஹேங் ஆகி விட்டால் மொத்த உலவியையும் மூடத் தேவையில்லை அந்த ஒன்றை மட்டும் மூடி மற்றதை தொடர்ந்து பயன்படுத்தலாம்.

வேகம்

கூகுள் என்றால் வேகம் என்று அனைவருக்கும் தெரியும். உலவி வேகமாக இருக்க வேண்டும், இல்லை என்றால் இணைய இணைப்பு வேகமாக இருந்தாலும் உலவி சரியாக இல்லையென்றால்  பயனில்லை.

கூகுள் பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி க்ரோம் வேகத்தை அதிகப்படுத்தி இருக்கிறது.

பாதுகாப்பு

பாதுகாப்புக்கு கூகுள் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் என்பதை பல்வேறு தருணங்களில் உணர்ந்து இருக்கலாம். தளத்தில் “மால்வேர்” இருந்தால் நம்மை எச்சரிக்கைப் படுத்தும்.

உலவி பாதுகாப்பாக இல்லை என்றால் ஹேக்கர்கள் எளிதாக நம் கணக்கை ஆட்டையப்போட்டு விடுவார்கள்.

கூகுள் இதற்காகவே க்ரோம் உலவியில் ஹேக்கிங் போட்டி வைக்கும் அதாவது, க்ரோம் உலவியில் உள்ள பாதுகாப்பு குறைப்பாடுகளை யார் ஹேக் செய்கிறார்களோ அவர்களுக்குப் பரிசு. இது போலப் போட்டிகள் வைத்துக் குறைகளைச் சரி செய்யும்.

கூகுள் SYNC

இருப்பதிலேயே இது தான் அட்டகாசமான வசதி. இந்த வசதி மூலம் நம்முடைய புக் மார்க் மற்றும் Add on களை [க்ரோம் ல் இதன் பெயர் Extension] வீடு, அலுவலகம், மொபைல், டேப்லெட் என்று அனைத்து இடங்களிலும் கொண்டு வந்து விடலாம்.

நம்முடைய கடவுச்சொல் [Password], ஹிஸ்டரி என்று அனைத்துமே SYNC ஆகி விடும். இதன் மூலம் ஒரு இடத்தில் இவற்றைச் சேமித்தாலும், அத்தகவல்கள் நம்முடைய அனைத்து சாதனங்களிலும் வந்து விடும்.

இதை எப்படி செயல்படுத்துவது?

க்ரோம் நிறுவியவுடனே இதைச் செயல்படுத்த நமக்கு அறிவிப்பு கொடுக்கும், இல்லை என்றாலும் Settings பகுதியில் செயல்படுத்த  முடியும்.

நம் கூகுள் கணக்கை இதில் கொடுத்து விட்டால், நம்  கணக்கில் இந்த விவரங்கள் சேமிக்கப்பட்டு விடும்.

எடுத்துக்காட்டாக உங்கள் அலுவலக க்ரோம் உலவியில் புதிதாக ஒரு புக்மார்க் செய்கிறீர்கள் என்றால், இது உங்கள் கணக்கில் சேமிக்கப்பட்டு, உங்கள் வீட்டில் உள்ள க்ரோமிலும் இவை வந்து விடும்.

இதனால் ஒரு இடத்தில் சேமிக்கப்பட்டதை எந்தச் சிக்கலும் இல்லாமல் இன்னொரு இடத்தில் தானியங்கியாகப் பெற முடியும்.

அடடா! நாம் அங்கே புக்மார்க் செய்தோமே இங்கே எப்படி பெறுவது!! என்ற கவலையே வேண்டாம். இதே வசதியை மைக்ரோசாப்ட் ம் கொண்டு வரப்போவதாகக் கூறி இருக்கிறார்கள்.

தானியங்கி புதுப்பிப்பு [Automatic Update]

குறிப்பிட்ட நாட்கள் உங்கள் க்ரோம் உலவியை முழுவதுமாக மூடித் திறக்கவில்லை என்றால் (Hibernate mode) அதுவே உங்களுக்கு நினைவு படுத்தும்.

தற்போது அறிமுகப்படுத்தி இருக்கும் புது வெளியீட்டில் லேப்டாப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதன் பேட்டரி திறனை 25 % கூடுதல் படுத்தி இருக்கிறது குறிப்பாகக் காணொளிகளைக் காணும் போது.

Do Not Track என்ற வசதியையும் கொடுத்து இருக்கிறது இதன் மூலம், விளம்பர நிறுவனங்கள் நம் தகவல்களைப் பின்தொடர்வதை தடை செய்ய முடியும். இந்த வசதி இருந்தாலும் இதையும் மீறித் தகவல்களை எடுப்பவர்கள் உண்டு.

எப்படி, நாம் மொபைலில் Do Not Disturb Enable செய்து இருந்தாலும் சில விளம்பர நிறுவனங்கள் குறுந்தகவல் [SMS] அனுப்பவதில்லையா! அது போல.

இந்த வசதியின் மூலம் பெருமளவில் மாற்றம் வந்து விடாது காரணம் பலருக்கு இந்த வசதி இருக்கிறது என்றே தெரியாது. க்ரோம் கூட இந்தப் புதிய பதிப்பில் தான் இந்த வசதியைக் கொண்டு வந்து இருக்கிறது.

எத்தனை பேருக்கு இது இருக்கிறது என்று தெரியப்போகிறது, இது போல நீங்கள் படித்தால் தான் உண்டு அதை விட முக்கியம் படித்தாலும் சோம்பேறித்தனம் பார்க்காமல் இதை Settings பகுதியில் சென்று Enable செய்ய வேண்டும்.

இதை எத்தனை பேர் செய்யப்போகிறார்கள்? 🙂 .

தகவல் சேமிப்பில்லா வசதி [No History]

Private browsing என்பதை கூகுள் Incognito என்ற வசதியின் மூலம் நமக்குத் தருகிறது.

இதன் மூலம் நாம் இணையத்தில் பார்க்கும் தகவல்கள் எதுவும் இதில் சேமிக்கப்படாது. வங்கிக்கணக்குகளை, அடல்ட் தளங்களைப் பார்வையிடுபவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்துவது நலம்.

நீங்கள் பார்க்கும் தளத்தின் தகவல்கள் உலவியில் சேமிக்கப்படுவதை விரும்பவில்லை என்றால் இந்த வசதியைப் பயன்படுத்தலாம்.

இதை ctrl + shift + N யை  நீங்கள் அழுத்துவதன் மூலம் எளிதாகப் பயன்படுத்தலாம். தற்போது இந்த வசதி அனைத்து உலவிகளிலும் வந்து விட்டது.

2008 ம் வருடம் அறிமுகமாகி நான்கு வருடத்தில் முதல் இடத்தைப் பிடிப்பது என்றால், க்ரோம் திறமையைப் புரிந்துகொள்ளுங்கள்.

சும்மா போங்காட்டம் ஆடி எல்லாம் இந்த இடத்தைப் பிடிக்க முடியாது. சரக்கு இருந்தால் தான் வெற்றி பெற முடியும். க்ரோம் சாதித்து இருக்கிறது.

இவ்வளவு சிறப்புள்ள க்ரோம் உலவியை நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால் நீங்கள் ஏராளமான வசதிகளை இழந்து கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

குறைகளாகக் கூறப்படுவது Flash Crash பிரச்சனை, மெமரி அதிகம் எடுத்துக்கொள்வது, கூகுள் கண்காணிப்பதாகக் கூறப்படுவது ஆகியவையாகும்.

க்ரோம் உருவாகிய வருடம் 2008 முதல் அதன் நான்கு வருட வளர்ச்சியைக் கூகுள் அழகாக வடிவமைத்துள்ளது. இதில் சென்று பாருங்கள். Chrome Time Machine.

இதில் வரும் படங்களை நீங்கள் க்ளிக் செய்து பெரிதாக்கிப் பார்க்கலாம் அதோடு, இதில் வரும் காணொளிகளையும் இதே முறையில் பார்க்க முடியும்.

கூகுள் க்ரோம் பயன்படுத்துங்கள், வேகத்தை அனுபவியுங்கள் 🙂 .

தொடர்புடைய கட்டுரைகள்

க்ரோம் இயங்குதளம் (Chrome OS) வெற்றி பெறுமா?

ஹேக்கிங் (Hack) பாதுகாப்பு வழிகள் என்ன?

ஜிமெயிலுக்கு ஏன் மாற வேண்டும்!

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

13 COMMENTS

 1. இதுவரைக்கும் எல்லாரும் என்னென்னவோ சொல்லிப் பார்த்துட்டாங்க.. க்ரோம் ட்ரை பண்ணியும் பார்த்துட்டேன். ஆனாலும் எனக்கென்னவோ பயர்பாக்ஸை விட்டுட்டு போக மனசில்லை. ரொம்ப வருஷமா பாவிச்சிட்டே இருந்தது,, ஏகப்பட்ட அடோன்ஸ். கிட்டத்தட்ட க்ரோமில் உள்ள எல்லா வசதியும் இதிலும் இருக்கிறதென்று நினைக்கிறேன். இப்போ பிரிய மனசில்லை கிரி.. 🙂

 2. கிரி “Do Not Track” செட்டிங்-ல எங்கே இருக்கு? என்னுடைய crome -ல இல்லையே.

  • உங்களுடைய க்ரோம் புதிய பதிப்பு இருக்க வேண்டும். இதை சோதனை செய்ய “About Google Chrome” சென்றால் பார்க்க முடியும். இதன் பிறகு Settings –> Show advanced settings –> Privacy –> கடைசியாக உள்ளது.

 3. crome -ல பெரிய problem என்னன்னா, கிரோமுக்குனு தனி proxy செட்டிங் இல்ல.அது IE -ல இருந்துதான் “proxy” செட்டிங் எடுத்துக்கும்.

 4. நான் நீண்ட காலமாக உபயோகித்து வருகிறேன் .நீங்கள் சொல்லிய சில சிக்கல்கள் தவிர பிரிண்ட் எடுக்கும்போது சில வேளைகளில் பிரிண்ட் பிரிவியு பார்க்க முடியாததுட ன் பேஜ் செட்டப் செய்யமுடியாதுள்ளது .குறிப்பாகக் பிரிண்ட் பபண்ண வேண்டியது பிடிஎவ் ஆக இருக்கும்போது .

 5. அனைவரின் வகுகைக்கும் நன்றி

  @அந்தோணி டேவிட் Windows 8 நான் இன்னும் பயன்படுத்த துவங்கவில்லை. என்னுடைய Windows 7 நன்றாக உள்ளதால் அதை மாற்ற மனசு வர மாட்டேங்குது, அதோடு என்னுடையது factory setup ல இருக்கு எப்ப வேண்டும் என்றால் எளிதாக ஃபார்மட் செய்ய முடியும். இதை நான் மாற்றி விட்டால் கொஞ்சம் சிரமம் இதற்காக யோசிக்கிறேன். எப்படியும் விரைவில் மாற்றி விடுவேன்.

 6. //எனக்கு கூகுள் தரும் கணக்கு வழக்கு இல்லாத சேவைக்கு / வசதிக்கு, நான் கூகுள்க்கு செய்யும் சிறு பாராட்டாக / கைமாறாக இதை நினைக்கிறேன், அவ்வளவே. பணம் வாங்கி சேவை தருகிறவன் கூட கூகுள் போல வசதிகளை தருவதில்லை. நான் ஒரு கூகுள் ரசிகன் என்பதில் பெருமையடைகிறேன்.//

  நூறு வீதம் ஆமோதிக்கிறேன்… க்ரோம் பயன்படுத்த தொடங்கியதிலிருந்து, க்ரோமின் தீவிர வெறியனாகவே மாறிவிட்டேன்…

  நான் பயன்படுத்தும் extension கள்:

  * Super Full Feeds for Google Reader : கூகுள் ரீடர் ரசிகர்களுக்கு ஒரு must have extension. கால் பக்கத்தை மட்டுமே RSS இல் தந்துவிட்டு, மீதியை ‘மேலும் படிக்க’ என்று போட்டு கடுப்பேத்தும் பதிவுகளை, முழுதாக, ரீடரில் வைத்தே படிக்க உதவும் ஒரு அற்புத ஆட் ஆன்.
  * Google Dictionary : எந்தவொரு ஆங்கில / வேற்றுமொழி வார்த்தையில் டபிள் கிளிக் செய்தாலும், அந்த வார்த்தைக்கான deninition / english translation ஐக் காட்டும் ஒரு must have extension
  * WOT : இணையத்தின் ஒவ்வொரு லிங்கின் நம்பகத்தன்மையை காட்டி, ஸ்பேம், வைரஸ் லிங்குகளிடமிருந்து நம்மைக் காக்கும் இன்னொரு must have ext. ஒரு சோசியல் நெட்வர்க் போல சாதாரண பயனர்களின் ரேட்டிங்கைக் கொண்டு நடத்தப்படுவதால், உடனுக்குடன் புதுப்பிக்கப்படும் ரேட்டிங்குடன், அந்தப் பக்கத்தில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் பலர் சொல்லியிருப்பார்கள்..

  * Session Buddy : திறந்திருக்கும் விண்டோக்களின் தொகுப்பை சேவ் செய்து சில நாட்கள் கழித்து பயன்படுத்த உதவும்.
  * RSS Subscription (By Google) : ப்ளாக்குகளின் ஆர் எஸ் எஸ் ஓடைகளை கண்டுபிடித்து எளிதாக Subscribe செய்ய உதவுகிறது
  * Speed Dial 2 : நாம் விரும்பிய speed dial pages களுடன், Bookmark, apps போன்றவற்றுக்கும் அழகான lay out உடன் வருகின்றது.

  அப்புறம், நீங்க என்ன பயன்படுத்தறீங்க?

 7. கூகிள் க்ரோம் போல் பாதுகாப்பும் வேகமும் வேறு எதிலும் கிடையாது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here