RBI (Reserve Bank of India) வழியாகத் தங்கத்தை Sovereign Gold Bonds என்ற பெயரில் பத்திரமாக (Bond) மத்திய அரசு வழங்கி வருகிறது. Image Credit
Sovereign Gold Bonds
முன்னறிவிப்புச் செய்து தேதியை அறிவித்து Gold Sovereign Bonds விற்பனையை RBI அறிவிக்கும். அந்தத் தேதிகளில் Gold Sovereign Bonds களை பெற்றுக்கொள்ளலாம்.
Sovereign Gold Bonds நன்மைகள் என்ன?
- கடைகளில் வாங்கும் தங்கத்தின் விலையை விட Online Bond விலை குறைவு.
- கடைகளில் தங்கமாகப் பெறும் போது GST, செய்கூலி, சேதாரம் ஆகியவற்றுக்காகக் கொடுக்கப்படும் (வீணாக்கப்படும்) பணம் இதில் மிச்சம்.
- பின்னர் நம் விருப்பத்துக்கு ஏற்ப அந்தக் காலத்துக்கு ஏற்ற வடிவமைப்பில் (Design) நகையை வாங்கலாம்.
- முன்னரே நகையாக வாங்கினால் பிற்காலத்தில் Outdated Model / Design ஆக வாய்ப்புள்ளது. திரும்ப அழித்துப் செய்தால் கடும் இழப்பு (செய்கூலி, சேதாரம்).
- தங்கத்தைப் பாதுகாக்க தேவையில்லை. அதாவது பாதுகாப்புப் பெட்டகம் (Locker) தேவையில்லை. வீட்டில் பயந்து வைக்க வேண்டியதில்லை.
- குறைந்த பட்சம் 1 கிராம், அதிகபட்சம் 4 கிலோ தங்கத்தை ஒரு நிதி ஆண்டில் வாங்கலாம்.
- RBI வெளியிடும் போதெல்லாம் 1 கிராம் 2 கிராம் என்று வாங்கினால், எளிதாகத் தங்கம் சேர்ந்து விடும்.
- பின்னாளில் பெரியளவில் தங்கம் வாங்க வேண்டும் என்ற சுமை இருக்காது.
- ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வாங்கிய தங்கத்தின் தொகைக்கான வட்டியாக 2.50% கொடுக்கப்படும்.
- இப்பத்திரத்தை (Bond) வைத்துக் கடனும் பெறலாம்.
- மத்திய அரசு மூலமாக வருவதால், ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்பில்லை.
- முடிவு காலத்தில் தங்கத்துக்கு வரி கிடையாது, TDS பிடிக்கப்படுவதில்லை ஆனால், வட்டிக்கு வரி உண்டு.
நெருக்கடிகள் என்ன?
- 8 வருடங்கள் இதன் முதிர்ச்சி (Maturity) காலம் (ஆனால், 5 வருடங்களில் எடுக்கலாம்).
- எதிர்காலத்தில் தங்கத்தின் விலை குறைந்தால், முதிர்ச்சி நாளில் தங்கத்தின் விலை என்னவோ அது தான் கிடைக்கும்.
- குறுகிய காலத் தேவைக்கு Bond பயனளிக்காது.
- அதாவது ஓரிரு வருடங்களில் திருமணம் அல்லது வேறு விழாக்களுக்குத் தங்கம் தேவைப்பட்டால், Bond ல் வாங்குவது பயனளிக்காது.
- PAN கொடுக்க வேண்டும்.
Bond எப்படி வாங்குவது?
- அஞ்சல் அலுவலகம், வங்கி அல்லது Demat கணக்கு மூலமாக வாங்கலாம்.
- Demat கணக்குத் துவங்கினால், மின்னணு முறையில் தகவல்கள் சேமிக்கப்படும்.
- அஞ்சல் அலுவலகம், வங்கிக்குச் சென்று வாங்க வேண்டிய தேவையில்லை, அலைச்சல் மிச்சம். உட்கார்ந்த இடத்திலேயே Online ல் வாங்கி விடலாம்.
- அதோடு Demat கணக்கை Share வாங்கவும் பயன்படுத்திக்கொள்ளலாம். Demat கணக்கைப் பராமரிக்க ஆண்டுக்கு ₹200 ஆகலாம்.
- Online ல் Bond வாங்கும் போது தோராயமாக ₹50 குறைத்து கொடுப்பார்கள்..
- Demat கணக்காக இல்லாமல் Bond யைக் காகிதமாக (பத்திரமாக) வாங்கினால், தொலைந்து விடுவதற்கான வாய்ப்புள்ளது.
எனவே, Demat கணக்குத் துவங்கி Bond வாங்க பரிந்துரைக்கிறேன்.
இறுதியாக, மேற்கூறியது உங்களுக்கு ஏற்புடையதாக இருந்தால், Sovereign Gold Bonds வாங்கப் பரிந்துரைக்கிறேன்.
தங்கம் என்பது எக்காலத்துக்கும் ஒரு குடும்பத்துக்கு இருக்கும் தேவை.
எனவே, எளிமையான முறையில், பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியும் எனும் போது இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலலாம்
குழந்தைகள் சிறு வயதாக இருக்கும் போதே சிறிய அளவில் தொடர்ச்சியாக வாங்குவது, இறுதியில் மிகப்பெரிய சுமையைக் குறைக்கும்.
அதோடு வாங்குவதும் எளிது என்பது இதற்குள்ள மிகச்சிறந்த பயன்.
மேலும் தகவல்களுக்கு RBI FAQ
தொடர்புடைய கட்டுரைகள்
முதன்மை வங்கிக் கணக்கு அவசியமானது ஏன்?
வீடு நிலம் அடமானம் வைக்கிறீர்களா?
சிபில் ஸ்கோர் என்றால் என்ன? [FAQ]
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
கிரி.. நல்ல தகவல்.. நிச்சயம் பல பேருக்கு பயனுள்ளதாக இருக்கும்.. கொரோனாவோட தாக்கத்திற்கு பிறகு எதை செய்தாலும் ரொம்ப யோசித்து செய்ய வேண்டிய கட்டாயத்தில் எல்லோரும் இருக்கிறோம்.. குறிப்பாக என்னை போன்ற (எதையும் முன் பின் தீவிரமாக) யோசிக்காமல் முடிவெடுக்கும் பழக்கம் கொண்டவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.. பகிர்வுக்கு நன்றி கிரி..
தற்போது மனைவி இந்த செலவுக்கு பணம் வேண்டும் என்றாலே (கவுண்டர் நியாபகம் தான் வருகிறது : அரிசி என்ன வெலை விக்கித்து டோய்!!!! மரண காமெடி.. கவுண்டர் காமெடியில் மிகவும் பிடித்தது இந்த காமெடி.. அவரோட உடல் மொழி அம்சமா இருக்கும்)..
@யாசின்
உண்மை. துவக்கத்தில் நானும் சில தவறுகள் செய்துள்ளேன். தற்போது யோசித்துப்பார்த்தால் கடுப்பாக உள்ளது.
எனவே தான் தற்போது ஒவ்வொன்றையும் பல முறை யோசித்தே செய்கிறேன். நண்பர்கள் ஆலோசனை கூறுகிறார்கள்.
சமீபத்தில் நிறைய நிதி சம்பந்தப்பட்ட ஆலோசனைகளைப் பெற்று வருகிறேன். அதைத்தான் இங்கே பகிர்ந்து வருகிறேன்.
என்னைப் போலப் பலருக்கு பயனளிக்கும் என்ற எண்ணத்தில்.
“அரிசி என்ன வெலை விக்கித்து டோய்!!!”
😀 😀 ராமராஜனை வைத்து அவர் பேசுவதும் செம ரகளையா இருக்கும்.