Pay Later முறை பிரபலமான போது கிரெடிட் கார்டுக்குப் போட்டியாகக் களமிறங்கிய நிறுவனங்களில் ஒன்று Slice Card. Image Credit
Slice Card
இந்திய நிறுவனமான Slice Card பலரிடையே வரவேற்பை பெற்றது ஆனால், RBI கட்டுப்பாடுகளால் தற்போது சிக்கலில் உள்ளது.
Pay Later முறையிலிருந்து கிரெடிட் கார்டு முறைக்கே மாறி விடலாமா என்று பரிசீலித்துக்கொண்டுள்ளார்கள்.
காரணம், இவர்களுடைய முக்கிய அம்சமான வட்டி இல்லாமல் மூன்று மாதங்களுக்குத் தவணை முறையில் செலுத்தும் முறைக்கு RBI தடை விதித்து விட்டது.
இந்த வசதி தான் இவர்களுடைய முக்கியமான, பிரபலமான சேவை. அடிமடியிலேயே கை வைத்ததால் Pay Later நிறுவங்களுக்குச் சிக்கலாகி விட்டது.
எப்படி விண்ணப்பிப்பது?
Slice App நிறுவி அதன் வழியே விண்ணப்பிக்கலாம்.
யார் விண்ணப்பிக்கலாம்?
- 18 வயது நிரம்பியிருக்க வேண்டும்.
- இந்தியாவில் குடியிருக்க வேண்டும்.
- சம்பளக்காரராக அல்லது நிறுவனத்தை நடத்துபவராக இருக்க வேண்டும் (ஆனால், கல்லூரி மாணவர்களுக்கும் கொடுக்கிறார்கள்).
- CIBIL Score இல்லையென்றாலும் பிரச்னையில்லை.
கட்டணம் என்ன?
- இணைப்புக்கட்டணம் & ஆண்டுக்கட்டணம் கிடையாது.
- முதல் மாதம் முழுத்தொகையையும் செலுத்த முடியவில்லை என்றால், தவணை முறையில் செலுத்தலாம் ஆனால், கடுமையான வட்டி.
- இவ்வழியை நிச்சயம் பரிந்துரைக்கமாட்டேன்.
- பெட்ரோலுக்கு மாதத்துக்கு ₹4,000 வரை கூடுதல் Service கட்டணமில்லை.
பயன்படுத்தும் காலம் என்ன?
கடனட்டை (கிரெடிட் கார்டு) பணம் செலுத்தும் காலம் 50 நாட்கள் ஆனால், இவ்வகைக் கார்டுகளில் 35 நாட்கள்.
எடுத்துக்காட்டுக்கு 1 – 31 தேதி பயன்படுத்தும் காலம் என்றால், அடுத்த மாதம் 5 தேதிக்குள் பணத்தைச் செலுத்த வேண்டும்.
Credit Limit எவ்வளவு?
₹2000 முதல் ₹10,00,000 வரை கொடுக்கப்படுகிறது.
Spark
- Slice Card சிறப்பு Spark வசதி தான்.
- குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை (தோராயமாக மூன்று, நான்கு நாட்களுக்கு ஒருமுறை) சலுகைகள் மாறிக்கொண்டே இருக்கும்.
- இதில் நமக்குத்தேவையான சலுகையைத் தேர்வு (Activate) செய்து, செலவு செய்தால், அதில் குறிப்பிட்டுள்ள சதவீத Cashback உடனடியாகக் கிடைக்கும்.
- Dominos Pizza, Decathlon, PVR, IRCTC, ibaco Ice Cream, Rapido, Book My Show, Zepto, Swiggy, Zomoto, Lenskart, KFC, Mobile Recharge, Appolo Medicals உட்படப் பல நிறுவனங்களின் சேவைகளுக்கு தள்ளுபடியைப் பெறலாம்.
- இதில் சிலது Online ல் செலவு செய்தால் கிடைக்கும், சிலது நேரடியாகக் கடைகளில் செலவு செய்தால் மட்டுமே தள்ளுபடி கிடைக்கும்.
Rewards
- ஒவ்வொரு செலவு செய்யும் போதும் 1% தள்ளுபடி கிடைக்கும்.
- ₹3,00,000 செலவு செய்தால், 1.5% தள்ளுபடி.
- ₹5,00,000 செலவு செய்தால், 2% தள்ளுபடி கிடைக்கும்.
- இவ்வாறு சேரும் பாயின்ட்ஸ், Monies என்று குறிப்பிடப்படுகிறது.
Contactless Payment
- contactless payment இருப்பதால், ஒவ்வொரு முறையும் PIN அழுத்த வேண்டும் என்பதில்லை. Tap செய்தால் போதுமானது.
- தேவையான தொகையை இதற்கு நிர்ணயிக்கலாம்.
- இவை அனைத்தையும் Slice App லியே எளிதாக மாற்ற முடியும்.
UPI
வங்கிக்கணக்குளை இணைத்து UPI வழியாகப் பணம் செலுத்தலாம்.
யார் பெறலாம்?
Spark தள்ளுபடிக்காகவும், Fuel Surcharge Waiver காகவும் முதன்மையாகப் பயன்படுத்துகிறேன். இந்த விஷயத்தில் எனக்கு இலாபகரமாக உள்ளது.
இதுவரை Card பயன்படுத்தாதவர்களுக்கு Slice Card யை பரிந்துரைக்கிறேன் அல்லது மேற்கூறியதில் ஏற்புடையவர்களுக்கு,
இதுவரை CIBIL Score இல்லாதவர்கள், இதன் மூலம் ஏற்படுத்தலாம்.
ஆனால், நினைவில் கொள்ள வேண்டியது, சரியான நேரத்தில், பணத்தை திரும்பச் செலுத்துபவர்களுக்கு மட்டுமே பரிந்துரைக்கிறேன்.
மற்றவர்கள் விலகி நிற்கவும்.
பிற்சேர்க்கை
RBI விதிமுறைகள் காரணமாக, Slice தனது சேவையை Prepaid சேவையாக மாற்றப்போவதாக அறிவித்துள்ளது.
இதன் முழு விவரங்கள் தெரிந்த பிறகு இதுபற்றிக் கூறுகிறேன்.
தொடர்புடைய கட்டுரைகள்
கிரெடிட் கார்டில் வாடகை செலுத்துவது இலாபமா?
சிபில் ஸ்கோர் என்றால் என்ன? [FAQ]
HDFC Credit Card Vs ICICI Credit Card Vs SBI Credit Card எது சிறந்தது?
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி, இதுவரை அறியாத புதிய தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி.. ஆனால் எனக்கும் இந்த கார்டுகும் ரொம்ப தூரம். நான் முன்பே பல பதிவுகளில் என்னுடைய நிலையை குறித்து தெளிவுபடுத்தியுள்ளேன். இதுவரை எந்த கிரெடிட் கார்டும் வாங்க வேண்டிய தேவையும், அவசியமும் ஏற்படவில்லை. அதனால் அதனை பற்றி சிந்திக்கவும் இல்லை மற்றும் கூட பணி புரிந்தவர்கள், தெரிந்த நண்பர்கள் கிரெடிட் கார்டை சரியாக பயன்படுத்தாமல், தேவையில்லாமல் செலவு செய்து பிரச்சனையில் மாட்டிய அனுபவத்தை நான் நேரில் கண்டு இருக்கிறேன்.
அது மட்டுமில்லாமல் சொந்த ஊரை விட்டு வந்து இங்கு வேலை செய்யும் போது கடன், மாத தவணை, வட்டி இவற்றில் இதுவரை நான் மாட்டியது இல்லை. எதிர்காலத்திலும் மாட்ட கூடாது என்பது தான் என் விருப்பம். அதனால் ஒன்றுக்கு பத்து முறை யோசித்து இவைகளை தவிர்த்து விட்டேன். நான் சொந்த தொழில் செய்த போது கூட முழு பணமும் என் சேமிப்பு பணம் தான். வங்கி கடனோ, இல்லை மற்றதோ கிடையாது.
கடன் என்பது யாருக்கும் எப்போதும் வைக்கவே கூடாது என்பது என் எண்ணம். எல்லாவற்றிக்கும் மேல் முஸ்லிமாக பிறந்த ஒவ்வொருவரும் , இறந்த ஒருவருக்கு அவரை நல்லடக்கம் செய்யும் முன், அவர் யார்க்கும் கடனாளியாக இருக்க கூடாது. அப்படி கடன் பொறுப்புக்கள் இருந்தால் அவற்றை அவரது சந்ததியோ, குடும்பமோ அல்லது நெருங்கிய உறவுகளோ இல்லை அவர் சார்பில் யாரவது பொறுப்பு ஒப்பு கொண்ட பின் தான் அவரை நல்லடக்கம் செய்ய வேண்டும் என்பது கட்டாயம்.
பண்டைய அரேபியா ஆட்சி காலத்தில் இறந்தவர்களின் கடன் பொறுப்புகளை யாருமே ஏற்காத பட்சத்தில் அரசாங்கம் ஏற்கும். இதற்கென்று தனி துறையே இருந்துள்ளது. எனக்குள் கடனை குறித்து அச்சம் ஏற்பட இந்த நிகழ்வு ஒரு முக்கிய காரணம்.. அதுபோல நான் என் சவ்ரியத்துக்கும், என் ஆடம்பரத்துக்கும் கடன் வாங்கி செலவு செய்து விட்டு, அதன் வலிகளை என் சந்ததிகளுக்கு விட்டு செல்வது ஒரு குற்றம் என கருதுகிறேன். தேவைக்கு கடன் வாங்கலாம் & கொடுக்கலாம்?? ஆனால் ஆடம்பரத்துக்கு!!!! பகிர்வுக்கு நன்றி கிரி.
@யாசின்
“சொந்த ஊரை விட்டு வந்து இங்கு வேலை செய்யும் போது கடன், மாத தவணை, வட்டி இவற்றில் இதுவரை நான் மாட்டியது இல்லை. எதிர்காலத்திலும் மாட்ட கூடாது என்பது தான் என் விருப்பம்.”
உங்கள் விருப்பம் நிறைவேற வாழ்த்துகள் 🙂 .
“முஸ்லிமாக பிறந்த ஒவ்வொருவரும் , இறந்த ஒருவருக்கு அவரை நல்லடக்கம் செய்யும் முன், அவர் யார்க்கும் கடனாளியாக இருக்க கூடாது. அப்படி கடன் பொறுப்புக்கள் இருந்தால் அவற்றை அவரது சந்ததியோ, குடும்பமோ அல்லது நெருங்கிய உறவுகளோ இல்லை அவர் சார்பில் யாரவது பொறுப்பு ஒப்பு கொண்ட பின் தான் அவரை நல்லடக்கம் செய்ய வேண்டும் என்பது கட்டாயம்.”
அப்படியா! இது எனக்கு புதிய தகவல்.
முஸ்லிம்கள் வட்டிக்கு விட மாட்டார்கள், கூடாது என்பது மட்டுமே எனக்குத் தெரிந்தது,.
“பண்டைய அரேபியா ஆட்சி காலத்தில் இறந்தவர்களின் கடன் பொறுப்புகளை யாருமே ஏற்காத பட்சத்தில் அரசாங்கம் ஏற்கும். இதற்கென்று தனி துறையே இருந்துள்ளது.”
பரவாயில்லையே! பெரிய விஷயம் தான்.
“நான் என் சவ்ரியத்துக்கும், என் ஆடம்பரத்துக்கும் கடன் வாங்கி செலவு செய்து விட்டு, அதன் வலிகளை என் சந்ததிகளுக்கு விட்டு செல்வது ஒரு குற்றம் என கருதுகிறேன்.”
மிகச்சரியாக கூறினீர்கள். இதனுடைய வலி என்னவென்பது எனக்கு நன்கு தெரியும்.
நிச்சயம் இது ஒரு தவறான செயல்.
“தேவைக்கு கடன் வாங்கலாம் & கொடுக்கலாம்?? ஆனால் ஆடம்பரத்துக்கு!!!! ”
இது தவறு தான்.
ஆனால், கடனட்டை என்றாலே கடன் என்று கருத வேண்டியதில்லை.
பயன்படுத்தத் தெரிந்தவர்களுக்கு இது ஒரு அற்புதமான சேவை. கடனட்டையால் எனக்கு கிடைத்த இலாபங்களை தனிக்கட்டுரையாக பட்டியலிடுகிறேன்.