இந்தியா சுந்திரம் பெற்றதிலிருந்து காலனி அடையாளத்துடன் இருந்ததை கப்பற்படை சின்னத்திலிருந்து நீக்கி, புதிய அடையாளத்தை மத்திய அரசு மாற்றியுள்ளது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விக்ராந்த் போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் இம்மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. Image Credit
இந்தியக்கடற்படை சின்னம்
படைகளுக்குத் தனிச்சின்னம் வழக்கமானது.
1947 – 1950 வரை பிரிட்டிஷ் கொடியுடன் இருந்தது, பின்னர் 1950 – 2001 வரை பிரிட்டிஷ் கொடி நீக்கப்பட்டு இந்திய கொடி மாற்றப்பட்டது ஆனாலும், காலனி ஆதிக்க அடையாளம் கொடியில் இருந்தது.
இதை 2001 – 2004 முதல் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் காலனி அடையாளத்தை நீக்கிச் சின்னத்தை மாற்றினார்.
பின்னர் 2004 – 2014 சின்னத்திலிருந்த நீல வண்ணத்தில் மாற்றம் வேண்டும் என்றதால் இவை நீக்கப்பட்டு, காலனி அடையாளமே திரும்பக் கொண்டு வரப்பட்டது!
2014 ல் சத்யமேவ ஜெயதே (மூன்று சிங்கங்கள்) சின்னம் பாஜக அரசால் இணைக்கப்பட்டது.
தற்போது 2022 ல் காலனி அடையாளம் நீக்கப்பட்டு, இந்தியக்கொடியுடன் வீர சிவாஜி கப்பற்படை சின்னம் சேர்க்கப்பட்டுள்ளது.
சோழப்படை சின்னம் ஏன் இல்லை?
மிகப்பெரிய கப்பற்படையினால் பல நாடுகளை வெற்றி கொண்ட சோழப்படை சின்னம் ஏன் வைக்கவில்லை என்று பலரும் கேட்டு இருந்தார்கள்.
நியாயமான கேள்வி.
காரணம், ராஜராஜ சோழனும், ராஜேந்திர சோழனும் பல ஆயிரம் மைல்கள் பயணம் செய்து பல நாடுகளைத் தங்களது கடற்படையின் மூலம் கைப்பற்றியுள்ளனர்.
இவற்றோடு ஒப்பிடும் போது சிவாஜி கடற்படை ஒன்றுமே இல்லை.
பின்னர் ஏன் சிவாஜி படை சின்னத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது?
இதற்கும் தமிழர்களாகிய நாமும், தமிழக அரசியல்வாதிகளும் தான் காரணம்.
நாம் என்றாவது இவ்வளவு சிறப்பு வாய்ந்த நம் பண்டைய அரசர்களைக் கொண்டாடி இருப்போமா?! அவர்களின் திறமைகளைக் கூறி வியந்து இருப்போமா?
ஆனால், மராட்டியர்கள் கொண்டாடுகிறார்கள். இன்று வரை வீர சிவாஜியை தவிர்த்து அம்மாநிலத்தில் அரசியலே செய்ய முடியாது.
சிவாஜியை தங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்து மராத்தி மக்கள் மரியாதையை அள்ளிக்கொடுக்கிறார்கள்.
காஷ்மீரில் சமீபத்தில் மராத்தி ரெஜிம் சார்பாக இராணுவத்தில் வீர சிவாஜி சிலை அமைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
சாதித்தலைவர்களைக் கொண்டாடும் அளவுக்குக் கூட அரசர்களையும், சுதந்திர போராட்ட தலைவர்களையும் தமிழகத்தில் கொண்டாடுவதில்லை.
பேரரசர் ராஜராஜ சோழன் சமாதி என்ன நிலையில் இருக்கிறது தெரியுமா? ராஜராஜ சோழன் சிறப்புத் தெரிந்தவர்கள் மன உளைச்சலில் உள்ளார்கள்.
தற்கால மக்களால் கொண்டாடப்படும் வீர சிவாஜி இருக்கையில், நாமே கண்டு கொள்ளாத சோழப்படை சின்னத்துக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்!
திராவிடத் தலைவர்கள்
தமிழ்நாட்டில் திராவிடத் தலைவர்களைத் தவிர வேறு எவருமே தலைவர்களாக இங்குள்ள அரசியல்வாதிகளுக்குத் தெரியாது.
பாடங்களிலும், தெருக்குத்தெரு அண்ணா, கலைஞர், ஜெ, பெரியார் சிலைகளும், இடங்களுக்கு இவர்கள் பெயர்களும் தான் உள்ளது.
சுதந்திரத்தை எதிர்த்த, வெள்ளையரை ஆதரித்த பெரியாரை முன்னிலைப்படுத்திக் குடியரசு தின அணிவகுப்பில் ஸ்டாலின் வரலாற்றையே மாற்றுகிறார்.
இந்த நிலைமையில் இருந்தால், பண்டைய அரசர்களும், சுதந்திரத்துக்காகப் போராடிய தமிழ் தலைவர்களும் எப்படித் தற்காலத்தலைமுறைக்குத் தெரியும்.
இந்த அவமானத்தை வைத்துக்கொண்டு எந்தத் தைரியத்தில் சோழன் கடற்படை சின்னத்தை இந்திய கப்பற்படைக்கு வைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்?!
நம் தலைவர்களுக்கு அடுத்தவர் மரியாதை கொடுப்பதற்கு முன்னர் நாம் கொடுப்போம், பின்னர் கேள்வி கேட்போம்.
திராவிடத்தால் தமிழர் வரலாறே மாற்றப்பட்டு வருகிறது.
பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் என்ற நாவல் மட்டும் வெளியாகவில்லையென்றால், சோழன் வரலாறு, பெருமை, திறமை அனைத்தும் மறைக்கப்பட்டு, திராவிடம் மட்டுமே தமிழகம் என்று திராவிடக் கட்சிகள் சாதித்து இருப்பார்கள்.
சோழப்பேரரசின் வரலாறைக் கூறும் சிறப்பு வாய்ந்த நாவல்கள் பல இருந்தாலும் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்தது இந்நாவல் மட்டுமே.
இந்நாவலாலே பலரும் சோழப் பேரரசை எளிமையாக தெரிந்து கொள்ள முடிந்தது.
வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற படம் வரவில்லையென்றால் அவரின் சிறப்புகள் எத்தனை பேருக்குத் தெரிந்து இருக்கும்?!
வெள்ளைக்காரனுக்கே தண்ணி காட்டிய கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு எவ்விதம் மரியாதை செய்து கொண்டுள்ளார்கள்?!
இவரின் சாதனைகளையும் திரைப்படம் தான் மக்களிடையே கொண்டு சென்றது.
நாவல்களும் திரைப்படங்களும் இல்லையென்றால், தமிழகத்தில் பலருக்கு பண்டைய அரசர்களையும், இந்திய சுதந்திர போராட்ட வீரர்களையும் தெரியாது.
இது தான் தமிழகத்தின் நிலைமை.
சாதி தலைவர்
ராஜராஜ சோழனை எதோ சாதிக்கட்சி தலைவரைப் போலச் சித்தரித்துச் சிலர் பேசி உரிமை கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள்.
இப்படிப் பேசிய இவர்கள் வாயைத் துவக்கத்திலேயே உடைத்து இருந்தால், இது போன்ற கேவலமான நிலைமைக்கு ராஜராஜ சோழன் நிலைமை வந்து இருக்குமா?
ராஜராஜ சோழனின் பெருமையும், சிறப்பும் தெரிந்து இருந்தால் தானே இதைத் தடுக்க வேண்டும் என்ற அக்கறை வரும். இங்க தான் எதுவுமே கிடையாதே!
இதுல சோழனின் கொடி சின்னத்தை வைக்க வேண்டுமாம்!
தமிழின் பெருமையும் தெரியாது, பண்டைய தமிழ் அரசர்களின் அருமையும் தெரியாது, சுதந்திரத்துக்கு இன்னுயிரை நீத்த தலைவர்கள் சிறப்பும் புரியாது ஆனால், 24 / 365 நேரமும் தமிழை, தமிழனை வைத்து அரசியல்.
வெட்கமாவே இருக்காதா!
தொடர்புடைய கட்டுரைகள்
குடியரசுத் தினத்தை அசிங்கப்படுத்திய தமிழக அரசு
திராவிட அரசியல் தமிழகத்தை சீரழித்ததா?
திராவிடரா? தமிழரா? | எதில் பெருமை?
ராஜராஜ சோழன் | அரசர்களின் அரசன்
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
கிரி, நம்முடைய பண்டைய வரலாற்றை படிக்கும் போது தான் எப்படிபட்ட ஒரு மிக சிறந்த வாழ்வியலை நமது முன்னோர்கள் வாழ்ந்து உள்ளார்கள் என்பது விளங்கும்.. (காரணம், ராஜராஜ சோழனும், ராஜேந்திர சோழனும் பல ஆயிரம் மைல்கள் பயணம் செய்து பல நாடுகளைத் தங்களது கடற்படையின் மூலம் கைப்பற்றியுள்ளனர்.இவற்றோடு ஒப்பிடும் போது சிவாஜி கடற்படை ஒன்றுமே இல்லை. உண்மையில் சிவாஜி மிக பெரிய தரைப்படை வைத்து இருந்தது உண்மை..
ஆனால் சிவாஜியை ராஜராஜ சோழனுடன் compare பண்ண முடியாது. இரண்டும் இருவேறான துருவங்கள்.. மற்றும் ஆட்சி புரிந்தது வெவ்வேறு காலகட்டங்கள்.. எந்த விதமான தொழில்நுட்ப வளர்ச்சியும் இல்லாத காலகட்டத்தில் ராஜராஜனின் கடற்படை பல நாடுகளை வெற்றி கொண்டது உலகின் எந்த பேரரசாலும் செய்ய இயலாத ஒரு சாதனை.. நிச்சயம் நம் சந்ததியினர் இந்த வரலாற்று நிகழ்வுகளை நிச்சயம் தெரிந்து வைத்து இருக்க வேண்டியது அவசியமானது..
@யாசின் ‘
‘”உண்மையில் சிவாஜி மிக பெரிய தரைப்படை வைத்து இருந்தது உண்மை..”
தரைப்படை பற்றிய விவரங்கள் எனக்குத் தெரியாது.
ஆனால், சிவாஜி கடற்படையை விடசோழப்படை மிக மிக வலிமையானது என்று தெரியும். சோழர்கள் வெற்றி பெற்ற நாடுகளே இதற்கு சாட்சி.
“நிச்சயம் நம் சந்ததியினர் இந்த வரலாற்று நிகழ்வுகளை நிச்சயம் தெரிந்து வைத்து இருக்க வேண்டியது அவசியமானது..”
கண்டிப்பாக. சந்ததிகளுக்கு நம் முன்னோர்கள் திறமையை அறியச் செய்வது நம் கடமை.