SIM SWAP மோசடி [FAQ]

1
SIM SWAP மோசடி

மும்பை தொழிலதிபர் வங்கிக் கணக்கில் இருந்து 1.86 கோடி ரூபாய் SIM SWAP மோசடி செய்யப்பட்டுள்ளது அதாவது பல கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.

SIM SWAP மோசடி

எப்படித் திருடப்பட்டது?

இவருடைய சுய விவரங்களைத் திருடி, SIM SWAP என்ற முறையில், வேறொரு SIM மூலமாக OTP பயன்படுத்திப் பணம் மாற்றப்பட்டு இருக்கிறது. Image Credit

SIM எப்படி மாற்றுவது?

உங்களுடைய SIM எதோ காரணத்தால் வேலை செய்யவில்லை (Signal வரவில்லை) என்றால், வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளித்தால், உங்களுடைய பழைய SIM UIM எண்ணைப் பெற்று புதிய SIM வழங்கப்படும்.

Mobile தொலைந்து விட்டால்…?

உங்களுடைய சுய விவரங்களை வாடிக்கையாளர் சேவை மையத்தில் கொடுத்துப் பெறலாம்.

பாதிக்கப்பட்டவருக்கு எப்படி பணம் குறித்த சந்தேகம் வந்தது?

இவருடைய தொலைபேசி எண் வேலை செய்யவில்லை என்பதால், புகார் அளித்த போது புதிய SIM வழங்கப்பட்ட விவரம் தெரிய வந்து இருக்கிறது.

வங்கிக்குச் சென்று புகார் அளித்த பிறகு கடைசியாக அனுப்பட்ட 20 லட்சம் ரூபாயை மட்டும் மீட்டு இருக்கிறார்கள். விசாரணை நடந்து கொண்டுள்ளது.

என் சந்தேகங்கள் / விளக்கங்கள்

Online Transfer முறையில் பணம் திருடப்பட்டுள்ளதால், இவருடைய Online கணக்கும் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

SIM SWAP எப்படி நடந்தது?

மால்வேர் / Phishing மூலமாக விவரங்கள் திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

RTGS / NEFT / IMPS முறையில் பணம் அனுப்ப தின பரிவர்த்தனைக் கட்டுப்பாடுள்ளது. 1.86 கோடி பணத்தை ஒரே நாளில் அனுப்ப முடியாது.

ஒரு நாளைக்கு அதிகபட்சம் 10 லட்சம் மட்டுமே அனுப்ப முடியும். எனவே, இது ஒரு நாளில் அனுப்பப்பட்ட (1.86 கோடி) பணம் அல்ல.

இவருக்கு மின்னஞ்சலில் Alert தகவல் வந்து இருக்க வேண்டும், இவர் கவனிக்காமல் இருந்து இருக்க வாய்ப்புண்டு.

வியாபார நிமித்தம் காரணமாக நடப்புக் கணக்குகளுக்கு (Current Account) “No Maximum Transaction Limit“.

அல்லது

அவர்களின் வழக்கமான பரிவர்த்தனைக்கு ஏற்ப அதிகபட்ச தின கட்டுப்பாடை (Per Day Transaction Limit) மாற்றிக்கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வகையில் இவருடைய கணக்கு இருந்தால் மட்டுமே இந்தத் திருட்டு சாத்தியம்.

ஊடகங்கள் மொட்டையாகச் செய்திகளைத் தருவார்களே தவிர, எப்படி திருடப்பட்டது? என்ன நடந்தது என்பதை உடனே விசாரித்துக் கூற மாட்டார்கள்.

எனவே, உண்மையான பிரச்சனை என்ன? என்ன நடந்தது? எப்படி? எந்த வழியில் பணப் பரிமாற்றம் நடந்தது? என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் தெளிவுபடுத்தினால் மட்டுமே தெரியும்.

எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும்?

SIM ஒரு மணி நேரம் வேலை செய்யவில்லை என்றாலும், உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்தை அழைத்துப் புகார் அளிக்க வேண்டும்.

மொபைலை அறிமுகம் இல்லாதவர்களிடம் கொடுக்கக் கூடாது.

SIM பிரச்சனை காரணமாக மாற்றினால், பாதுகாப்புக் காரணமாக இரண்டு நாட்களுக்குக் குறுந்தகவல் அனுப்ப / பெற முடியாது.

யாராவது SIM SWAP செய்தால், OTP மூலம் திருடி விடக் கூடாது என்ற எச்சரிக்கை காரணமாக.

இலவசமாகக் கிடைக்கிறது என்று கண்ட செயலிகளையும் நிறுவாதீர்கள். இதன் மூலமாக உங்கள் தகவல்கள் திருடப்பட்ட அதிக வாய்ப்புள்ளது.

இரும்புத்திரை படத்தில் வருவது போல.

வங்கி இணையக் கணக்குகளில் Per Day Maximum Transaction Limit குறைத்து வைக்கவும். தேவைப்படும் போது அதிகரித்துக்கொள்ளலாம்.

பற்று, கடனட்டை (Debit and Credit Card) பயன்படுத்துகிறீர்கள் என்றால், உங்கள் செலவைப் பொறுத்து தினப்பயன்பாடு அளவை குறைத்து வைக்கவும்.

HDFC கடனட்டை என்றால், பின்வரும் சேவையைப் பயன்படுத்தவும். இது கடனட்டையைத் தவறாக மற்றவர் பயன்படுத்தக் கிடைக்கும் வாய்ப்பைத் தவிர்க்கும்.

Read : HDFC கடனட்டையின் பாதுகாப்பான பரிவர்த்தனை

மேலும் பாதுகாப்பு குறித்த கட்டுரைகள்

கணினியைப் பராமரிப்பது எப்படி?

கூகுள் அறிமுகப்படுத்திய அதி பாதுகாப்பு வசதி

ஃபேஸ்புக் அந்தரங்கப் பாதுகாப்பு

ஃபேஸ்புக்கின் இரட்டை அடுக்குப் பாதுகாப்பு வசதி

ஜிமெயிலின் இரட்டை அடுக்குப் பாதுகாப்பு வசதி!

அடிக்கடி கடவுச்சொல்லை மாற்ற வேண்டுமா?

“Key Logger” என்ற ஆபத்து பற்றித் தெரியுமா?

நம் அந்தரங்கம் பாதுகாப்பானதா?

ஹேக்கிங் (Hack) பாதுகாப்பு வழிகள் என்ன?

எது மாறினாலும் “123456” மட்டும் மாறவில்லை!

பணப் பரிவர்த்தனை Alert Notification ல் குறுந்தகவல் மட்டுமல்லாது, மின்னஞ்சலையும் கொடுத்து வையுங்கள்.

எனவே, பணம் எடுக்கப்பட்டால் இரண்டுக்கும் எச்சரிக்கை வரும். ஒன்றைத் தவறவிட்டால் இன்னொன்றில் எச்சரிக்கையாகி விடலாம்.

கொசுறு 1

இணைய பணப் பரிவர்த்தனைகளை எதிர்காலத்தில் தவிர்க்கவே முடியாது. எனவே, நாம் எச்சரிக்கையாக இருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

அறிமுகம் இல்லாதவர்களிடம் எத்தகவலையும் கொடுக்காதீர்கள்.

OTP, CVV எண்கள் மற்றும் தனிப்பட்ட விவரங்களை வங்கியில் இருந்து கேட்கமாட்டார்கள். எனவே, எவர் கேட்டாலும் கொடுக்காதீர்கள்.

கொசுறு 2

SIM SWAP மோசடி குறித்து அனைவரும் தெரிந்து வைத்து இருக்க வேண்டும். எதிர்காலத்தில் இது போலக் குற்றங்கள் பரவலாக நடக்க வாய்ப்புள்ளது.

எனவே, உங்கள் குடும்பத்தினருக்கு, நண்பர்களுக்கு இது குறித்து தெரியப்படுத்தி எச்சரிக்கைப்படுத்துங்கள்.

இது இந்தியா மட்டுமல்ல, அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

1 COMMENT

  1. எச்சரிக்கையான பதிவு.. பகிர்வுக்கு நன்றி கிரி..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here