கூகுள் அறிமுகப்படுத்திய அதி பாதுகாப்பு வசதி

3
Google Advance Security Program

விக்ரமாதித்தன் போலக் கூகுள் தனது முயற்சிகளில் மனம் தளராமல் தொடர்ந்து எதையாவது செய்து கொண்டே இருக்கிறது. தற்போது கூகுள் கணக்குக்கு அசத்தலான பாதுகாப்பு வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

Business (Google G Suite) பயனாளர்களுக்கு மட்டுமே இருந்த இந்த வசதியை தற்போது அனைவருக்குமான வசதியாகக் கூகுள் மாற்றி இருக்கிறது.

கூகுள் கணக்கு என்பது அனைவருக்கும் மிக முக்கியமான ஒன்று குறிப்பாக Android திறன்பேசி பயன்படுத்துபவர்கள், ஜிமெயில், ட்ரைவ் போன்றவற்றைப் பயன்படுத்துபவர்களுக்கு.

Google Advanced Protection Program

இப்படிப்பட்ட முக்கியமான கணக்கை யாரவது ஆட்டையைப் போட்டு விட்டால் என்ன செய்வது?

நம்மைப் போன்றவர்கள் வேறு கணக்கை உருவாக்கித் தொடரலாம் ஆனால், ரகசிய தகவல்கள், முக்கியக் கோப்புகளை வைத்து இருப்பவர்களின் நிலை?

இதற்குத் தான் கூகுள் இரட்டை அடுக்குப் பாதுகாப்பு (Two Step Verification) முறையைக் கொண்டு வந்தது, OTP மூலம் நுழைவது.

ஆனால், SIM Card Swap போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இதையும் Hack செய்து விடுகிறார்கள்.

முன்னரே கூறியபடி நம் கணக்கு Hack செய்யப்படவில்லையெனில் பாதுகாப்பாக உள்ளது என்று அர்த்தமல்ல, நம்மை யாரும் இதுவரை குறிவைக்கவில்லை என்று அர்த்தம்.

எனவே, தற்போதைய Google Advanced Protection Program வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.

பாதுகாப்புச் சாதனங்கள்

இதற்கு நாம் இரண்டு சாதனங்களை அமேசான் அல்லது வேறு தெரிந்த இடங்களில் வாங்க வேண்டும். Image Credit – Yubico.com

ஒன்று கணினிக்கு இன்னொன்று திறன்பேசியில் நுழைவதற்கு. இது பார்க்க USB Stick போல இருக்கும். திறன்பேசியில் NFC தொழில்நுட்பம் மூலமாக வேலை செய்யும்.

இந்த வசதியை எப்படி செயல்படுத்துவது?

கூகுள் கணக்கில் நுழைந்து இரட்டை அடுக்குப் பாதுகாப்பு வசதியில் சென்று Add Security Key தேர்வு செய்ய வேண்டும். இதன் பிறகு இச்சாதனத்தை இணைத்த பிறகு, கூகுள் இதில் தனது Security Code யை நிறுவி விடும்.

இதன் பிறகு எந்தக் கணினி, திறன்பேசியிலும் புதியதாக நுழைய வேண்டும் என்றாலும், இச்சாதனம் இருந்தால் மட்டுமே கூகுள் கணக்கில் நுழைய முடியும்.

இரு சாதனங்களும் நம்ம ஊர் மதிப்பில் கிட்டத்தட்ட ₹ 11,000 வருகிறது.

இதில் எனக்கு இன்னும் சில சந்தேகங்கள் உள்ளது. பின்னர் இது குறித்துப் படித்துத் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.

கட்டுப்பாடுகளும் மேலும் தகவல்களுக்கும் https://landing.google.com/advancedprotection/

பின்வரும் காணொளி நான் கூறியதை எளிதாகப் புரிந்து கொள்ள உதவும்.

“Key Logger” என்ற ஆபத்து பற்றித் தெரியுமா?

ஜிமெயிலின் இரட்டை அடுக்குப் பாதுகாப்பு வசதி!

ஃபேஸ்புக்கின் இரட்டை அடுக்குப் பாதுகாப்பு வசதி

கொசுறு

கூகுள் தன்னுடைய Calendar சேவையின் வடிவத்தை மேம்படுத்தி இருக்கிறது. சோதித்துப் பார்த்தேன், புதிய வடிவமைப்பு நன்றாக உள்ளது. முயற்சித்துப்பாருங்கள்.

https://calendar.google.com

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

  1. //SIM Card Swap போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இதையும் Hack செய்து விடுகிறார்கள்.//

    How is this possible? Can you please explain?

    (Becauase, I am using this two step verification and under impression that nobody can hack this? Because my mobile phone is with me. Moreover it is registered with my Aadhaar too.)

  2. கிரி, புதிய தகவலை தந்தமைக்கு நன்றி. தற்போது இந்த வசதி எனக்கு தேவைப்படும் என்று தோன்றவில்லை. ஆனால் எதிர்காலத்தில் பயன்பட வாய்ப்பு உண்டு. குறிப்பெடுத்து கொள்கிறேன், தேவைப்படும் போது பயன்படுத்தி கொள்கிறேன். பகிர்வுக்கு நன்றி கிரி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!