இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நம்முடைய கூகுள் பாஸ்வேர்ட் மாற்ற வேண்டும் என்று ஒரு கட்டுரையில் படித்தேன். இது சரியா? என்பது குறித்த கட்டுரையே இது.
பாஸ்வேர்ட்
கடவுச்சொல்லை (Password) அடிக்கடி மாற்றுவது நல்ல செயல் தான். இதன் மூலம் நமது கணக்கை ஹேக் செய்பவர்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியும்.
இது உண்மை என்றாலும், ஒரு வகையில் இவ்வளவு சீக்கிரம் மாற்ற வேண்டிய தேவையில்லை.
கூகுள் கணக்கு அனைவருக்கும் முக்கியமானது. இதன் சேவைகளைப் பலவற்றுக்குப் பயன்படுத்துவதால், மிக முக்கியமான கணக்காக உள்ளது.
இக்கட்டுரை கூகுள் கணக்கு என்றில்லை, அனைத்து கணக்குகளுக்கும் பொருந்தும்.
மூன்று முக்கிய இடங்கள்
கூகுள் கணக்கு முக்கியம் என்றால், உங்கள் கூகுள் கணக்கை அதிகபட்சம் மூன்றே இடங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
1. உங்கள் திறன்பேசி
2. அலுவலக மடிக்கணினி / கணினி
3. வீட்டு மடிக்கணினி / கணினி
- வேறு எந்தப் பொது இடத்திலோ, நண்பர்கள் கணினியிலோ உங்கள் கூகுள் கணக்கில் நுழையக் கூடாது.
- மேற்கூறிய மூன்று இடங்களிலும் உங்களைத் தவிர வேறு யாரும் நுழைய அனுமதிக்கக் கூடாது, அனுமதித்தாலும் உங்கள் நேரடி கண்காணிப்பில் இருக்க வேண்டும்.
- இதில் எந்தச் சமரசத்துக்கும் இடம் கொடுக்கக் கூடாது.
- உங்கள் கடவுச்சொல் ஊகிக்கக் கடினமான ஒன்றாக இருக்க வேண்டும்.
- கூகுள் கணக்கின் கடவுச்சொல் போன்று வேறு எந்த இணையக் கணக்குக்கும் வைக்கக் கூடாது.
- கண்டிப்பாக இரட்டை அடுக்குப் பாதுகாப்பு முறையைச் செயல்படுத்தி இருக்க வேண்டும்.
இந்த விதிமுறைகளைப் பின்பற்றினால், குறைந்தது ஒரு வருடத்துக்குக் கடவுச்சொல்லை மாற்ற வேண்டிய அவசியமில்லை, வேறு எதுவும் நெருக்கடி வராதவரையில்.
பாஸ்வேர்ட் அடிக்கடி மாற்றுபவர்கள் செய்யும் தவறுகள்
அடிக்கடி மாற்றுபவர்கள் ஏற்கனவே உள்ள கடவுச்சொல்லோடு 1, 2, 3 என்று கூடச் சேர்த்துக்கொள்வார்களே தவிர முற்றிலும் புதிய கடவுச்சொல்லாக மாற்றுபவர்கள் குறைவு.
அடிக்கடி மாற்றுபவர்கள் மிக எளிதான கடவுச்சொல்லையே வைப்பார்கள்.
அனைத்து கணக்குகளின் கடவுச்சொற்களும் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருக்கும்.
பரிந்துரை
மேற்கூறிய விதிமுறைகளைப் பின்பற்றுவதோடு, இரட்டை அடுக்குப் பாதுகாப்பு முறையையும் செயல்படுத்தினால், வருடத்துக்கு ஒரு முறை கடவுச்சொல்லை மாற்றினால் போதும். https://www.lastpass.com/
வைக்கப்படும் பாஸ்வேர்ட் கடினமானதாக இருக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தொடர்புடைய கட்டுரைகள்
கூகுள் அறிமுகப்படுத்திய அதி பாதுகாப்பு வசதி
“Key Logger” என்ற ஆபத்து பற்றித் தெரியுமா?
நீண்ட நாட்களுக்கு பின் தொழில்நுட்பம் குறித்த செய்திகளை பகிர்ந்தமைக்கு நன்றி. நான் பொதுவாக அதிகமாக கடவுச்சொல்லை மாற்றுபவன் இல்லை.. இருப்பினும் நீங்கள் எச்சரித்தமைக்கு நன்றி. சில சமயங்களில் கடவு சொல்லின் குழப்பம் ஏற்படும். யோசித்து யோசித்து பார்த்தால் மூளை வேலை செய்யாத மாதிரி இருக்கும். பகிர்வுக்கு நன்றி கிரி.
யாரிடமும் கூறாமல், மற்ற இடங்களில் பயன்படுத்தாமல் இருந்தாலே போதும்.