எது மாறினாலும் “123456” மட்டும் மாறவில்லை!

2
123456 password

பாதுகாப்பு வசதிகள் என்னென்னவோ வந்துடுச்சு, அதை உடைக்க என்னென்னவோ தொழில்நுட்பங்கள் வந்தாச்சு! Image Credit

இப்படி இரண்டு பக்கமும் போட்டி போட்டு முயற்சிகள் நடந்து கொண்டு இருக்க, “ஓஹோ! அப்படியா!“ன்னு பலர் வேடிக்கை பார்த்துட்டு இருக்காங்க.

யாருங்க அவங்க?!

அவங்க தான்,  கடவுச்சொல்லை (Password) 123456 ன்னு வைக்கும் பயனாளர்கள்.

2018 வருட “டாப் 10 மோசமான கடவுச்சொற்கள்” பட்டியலிலும் “123456” கடவுச்சொல்லே முன்னணியில் உள்ளது.

நான் ஒவ்வொருமுறையும் சொல்வது தான்…

உங்கள் கணக்கு ஹேக் செய்யப்படவில்லை என்றால், பாதுகாப்பாக உள்ளது என்று அர்த்தமில்லை. இன்னும் உங்கள் கணக்கை யாரும் குறி வைக்கவில்லை என்று அர்த்தம் 🙂 “.

100% பாதுகாப்பு என்று முடிந்த வரை முயற்சிக்கலாமே தவிர, சிறு கவனக்குறைவு, Bug கூட உங்கள் கணக்கை மற்றவர்களுக்குத் தாரை வார்த்து விடும்.

கடவுச்சொல்லை எளிதாக ஊகிக்கும் வகையில் வைக்காமல், கடினமாக வைக்க வேண்டும். அனைத்து கணக்குகளுக்கும் ஒரே கடவுச்சொல்லை வைப்பது, சொந்த செலவில் சூனியம்.

பின்வரும் கட்டுரைகளில் உங்கள் கணக்கை எப்படிப் பாதுகாக்கலாம் என்று விளக்கப்பட்டுள்ளது. தேவைப்படுகிறவர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

கூகுள் அறிமுகப்படுத்திய அதி பாதுகாப்பு வசதி

ஃபேஸ்புக் அந்தரங்கப் பாதுகாப்பு

ஃபேஸ்புக்கின் இரட்டை அடுக்குப் பாதுகாப்பு வசதி

ஜிமெயிலின் இரட்டை அடுக்குப் பாதுகாப்பு வசதி!

அடிக்கடி கடவுச்சொல்லை மாற்ற வேண்டுமா?

“Key Logger” என்ற ஆபத்து பற்றித் தெரியுமா?

நம் அந்தரங்கம் பாதுகாப்பானதா?

ஹேக்கிங்கில் (Hack) இருந்து தப்பிப்பது எப்படி?

என் பரிந்துரை, தயவு செய்து கடவுச்சொல்லை மற்றவர்களுடன் பகிராதீர்கள். தேவையற்று பல சாதனங்களில் உங்கள் கணக்கில் நுழையாதீர்கள்.

கூகுள் கணக்கு மிக முக்கியமானது ஏனென்றால், உங்களுடைய பல சேவைகளுக்கும் ஒரே கணக்கு தான். உதாரணமாக, ஜிமெயில், ட்ரைவ், ஃபோட்டோஸ் போன்றவை.

எனவே, பாதுகாப்பாக இணையத்தைப் பயன்படுத்துங்கள், கவனக்குறைவாக இருக்காதீர்கள்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. நிச்சயம் பயனுள்ள பதிவு.. நீங்கள் முன்பே பல முறை இதுகுறித்து எச்சரிக்கை செய்துள்ளீர்கள்.. ““உங்கள் கணக்கு ஹேக் செய்யப்படவில்லை என்றால், பாதுகாப்பாக உள்ளது என்று அர்த்தமில்லை. இன்னும் உங்கள் கணக்கை யாரும் குறி வைக்கவில்லை என்று அர்த்தம் “. இதை படிக்கும் போதே ஒருவித இனம் புரியாத பதற்றம் ஏற்படுகிறது.. நான்கைந்து கடவு சொற்கள் வைத்து இருந்தாலும், சில நேரங்களில் குழப்பம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை!!!

    நேற்று கூட நண்பனது கடனட்டையில் பணம் செலுத்தும் போது, கடனட்டைக்கு பதில், ATM மிஷின்ல டெபிட் கார்டு வைத்து விட்டேன்.. ஒருமுறை குழம்பி, திருப்பவும் குழம்பி, வரிசை மாறி வேறு இடத்தில் நின்று, அந்த மெஷின்லயும் அதே பிரச்சனை.. அவரசமாக வேற பாட்மிண்டன் விளையாட போக வேண்டும்..கூட்டமும் அதிகம், கொஞ்ச நேரத்துல மண்டை காய்ந்து விட்டது… நிதானமாக யோசித்த போது தான் பிரச்சனை புரிந்தது.. பின்பு வேலையும் எளிதாக முடிந்தது..

    பதறிய காரியம் சிதறும் என்பது உண்மையான ஒன்று!!! சில வங்கி சம்பந்தமான அலுவலக நிகழ்வுகளில் கடவு சொல்லை பயன்படுத்தும் போது ஒரு வித பதட்டம் எப்போதும் ஏற்படும்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. தற்போது இதற்கு Password Manager போன்ற வசதிகள் வந்து விட்டது ஆனால், நீங்கள் குறைவான இணைய சேவைகளையே பயன்படுத்துவதால், உங்களுக்கு பெரிய பிரச்சனை நெருக்கடி இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here