சில நேரங்களில் சில மனிதர்கள் (2022) | உளவியல் சிக்கல்

2
சில நேரங்களில் சில மனிதர்கள்

ப்படத்துக்குச் சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற தலைப்புப் பொருத்தமாக உள்ளது. Image Credit

சில நேரங்களில் சில மனிதர்கள்

மனிதர்களின் உளவியலை, தவறுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கதை. ஒவ்வொருவரும் தாங்கள் நினைப்பது சரி என்று நினைத்துக்கொண்டு செய்ய ஆனால், அது தவறு என்று உணர்வதே சில நேரங்களில் சில மனிதர்கள்.

நான்கு பேரின் வாழ்க்கை ஒரு சம்பவத்தால் இணைக்கப்பட்டு இருக்கும் ஆனால், நால்வருமே ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்கள்.

இவர்கள் எந்த மாதிரியான சூழலில் பாதிக்கப்படுகிறார்கள், இதற்கு அவர்களுடைய பிரச்சனைகளுக்கு உளவியல் எப்படிக் காரணமாக உள்ளது என்பதே கதை.

நான்கு கதைகள்

அசோக்செல்வன் தான் கணிப்பது சரி என்று நினைப்பவர். இவரும், இவரது நண்பரும், காதலியாக வருபவரும் மிக மிக இயல்பான நடிப்பு.

ஒவ்வொரு சாதாரணப் பொதுஜனத்தின் வாழ்க்கையை அப்படியே பிரதிபலிக்கிறார்கள்.

சில காட்சிகளில் அசோக் செல்வன் மிகையாக உணர்ச்சியை வெளிக்காட்டியதை குறைத்து இருக்கலாம். OH MY கடவுளே இவரின் சிறந்த நடிப்பு.

அசோக்செல்வன் அப்பாவாக வரும் நாசர் நடிப்பு எப்போதும் போலச் சிறப்பு ஆனால், குரல் (டப்பிங்) வேறு யாரோ கொடுத்தது போலச் சில நேரங்களில் தோன்றுகிறது.

வெளிநாட்டில் படிப்பை முடித்துத் தமிழ்நாட்டில் புது விதமாகப் படமெடுக்கிறேன் என்று வருபவர் KS ரவிக்குமார் (படத்திலும் இயக்குநரே) மகன். இங்குள்ளவர்களை விடத் தனக்கு ரசனை இருப்பதாக நினைப்பவர்.

மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று குறிப்பாகச் சமூகத்துக்குப் பயப்படுபவர். தான் நல்லவன் என்று நிரூபிக்கப் போராடுபவர்.

அடுத்ததாக வருபவர் போலி கௌரத்துக்காக, மற்றவர்கள் முன்னிலையில் தான் கெத்தாகத் தோன்ற வேண்டும் என்று மற்றவர்கள் பார்வைக்காக வாழ்பவர்.

பிரச்சனையை எதிர்கொள்ளப் பயப்படுபவருக்கு நேரெதிராக மனைவி ரித்விகா.

ரித்விகாவின் நடிப்பு ரொம்ப நன்றாக இருந்தது. ரித்விகா மிகச்சிறந்த நடிகை, இவரைப் பலர் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லையென்பது என் எண்ணம். மெட்ராஸ் படத்தில் ஆகச்சிறந்த நடிப்பு.

ரித்விகா கணவராக வருபவரின் நடிப்புத் துவக்கத்தில் சாதாரணமாக இருந்தாலும், இறுதியில் தூள் கிளப்பி விட்டார். அட! என வியப்பாக இருந்தது.

கடைசியாக மணிகண்டன். இவரின் உளவியலை முடிந்தால் துவக்கத்திலேயே கண்டுபிடியுங்கள். மணிகண்டன் அக்கதாப்பாத்திரமாக வாழ்ந்துள்ளார்.

மணிகண்டனும் அவரது நண்பரும் வாகனத்தில் வரும் போது Resume பற்றிய பேச்சில், மணிகண்டனும் நண்பரும் பேசும் உரையாடல் மிக முக்கியமானது.

உரையாடலின் இறுதியில் மணிகண்டன் கூறும் வார்த்தை, பலரும் தங்கள் தவறுகளை உணராமல் கூறும் இயல்பான வார்த்தை.

இயக்குநர் புதுமுகமாம்! கலக்கல்.

வழக்கறிஞர்

வழக்கறிஞராக வருபவர் பட்டாசாக நடித்துள்ளார். அப்படியே தற்கால வழக்கறிஞரைக் கண் முன்னே நிறுத்தியுள்ளார். ரொம்ப எதார்த்தமான நடிப்பு.

காவல்துறை அதிகாரியிடம் பேசும் போதும், நண்பனாக இருந்தாலும், கட்டணத்தில் கறாராக இருப்பதும் என்று அலட்டிக்கொள்ளாமல் தெறிக்க விட்டுள்ளார்.

அருமையான நடிப்பு. இவர் இதற்கு முன் படத்தில் நடித்துள்ளாரா?

திரைக்கதை

எங்குமே தொய்வு ஏற்பட்டதாக எனக்குத் தோன்றவில்லை ஆனால், படம் மெதுவாகச் சென்றதாக நண்பர் கூறினார்.

உளவியல் கதைகள் எனக்குப் பிடிக்கும் என்பதால், ஒருவேளை என்னை ரொம்பக் கவர்ந்து இருக்கலாம். இப்படத்தை எப்படித் தவற விட்டேன் என்று தெரியவில்லை.

இப்படத்தில் உறுத்தலாக ஒரே காட்சி இருந்தது. KS ரவிக்குமார் அவ்வளவு பிரச்சனையாக இருக்கும் போதும் ஜாலியாக இருப்பார்.

என்னதான் மற்றவர்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்றாலும், இது போல இருக்க முடியுமா? என்ற சந்தேகம் உள்ளது.

என்னால் மற்றவர்கள் நினைப்பதைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்க முடியும் ஆனால், இவ்வளவு இயல்பாக இருப்பது இயலாது என்றே தோன்றுகிறது.

படத்துக்கு ஒளிப்பதிவு பலம் என்று கருதுகிறேன் காரணம், நடுத்தர மக்களின் இடங்களாகப் பல காட்சிகளின் இயல்பு மாறாமல் கொடுத்து இருக்கிறார்.

எனவே, நம்ம கதை என்ற உணர்வைப் படம் தருகிறது. கதையைக் கவனித்த நேரத்தில் பின்னணி இசையைக் கவனிக்க மறந்து விட்டேன்.

யார் பார்க்கலாம்?

உளவியல் கதைகளை விரும்புபவர்கள் தவறவிடக்கூடாத படம்.

நண்பர் கூறியது போலப் படம் மற்றவர்களுக்கு மெதுவாக இருப்பது போலத் தோன்றலாம் ஆனால், எனக்கு அப்படியில்லை. ரொம்பவே ரசித்துப்பார்த்தேன்.

தமிழ்ப் படங்கள் பார்ப்பதில் ஆர்வம் பெருமளவு குறைந்து விட்டது. ரொம்ப நாட்களுக்குப் பிறகு தமிழில் திருப்தியாகப் பார்த்த படம்.

aha OTT யில் காணலாம். Amazon Prime ல் இந்தியாக்கு இல்லை.

Directed by Vishal Venkat
Written by Vishal Venkat
Produced by Ajmal Khan Reyaa
Starring Ashok Selvan, Nassar, K. Manikandan
Cinematography Meyyendiran
Edited by Prasanna GK
Music by Radhan
Release date 28 January 2022
Country India
Language Tamil

தொடர்புடைய கட்டுரைகள்

உளவியலை புரிந்து கொள்வதில், தீர்வு காண்பதில் சிறு வயதிலிருந்தே ஆர்வம் அதிகம். எனவே, உளவியல் தொடர்பான ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

அவற்றில் சில….

மற்றவரை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்

மன்னிப்புக் கேளுங்கள்

எண்ணம் போல் வாழ்க்கை என்றால் என்ன?

கேட்டுப் பார்ப்பதில் தவறில்லையே..!

நேர்மறை எண்ணங்கள் என்றால் என்ன?

நேரம் சரியில்லையென்றால் என்ன செய்வது?

அடுத்தவன் என்னைப் பற்றி என்ன நினைப்பான்?

மன அழுத்தம் எப்படி இருக்கும்?!

செய்த தவறுக்காக வருந்துகிறீர்களா?!

நீங்கள் மாறாமல் பிரச்சனைகள் தீராது!

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News, Offers follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. கிரி.. நான் கடைசியாக படத்தை பார்த்து 3 மாதங்கள் ஆகிறது.. எனக்கு அசோக் செல்வன் நடிப்பு இயல்பாகவே பிடிக்கும்.. தனக்கான உயரத்தை இன்னும் இவர் அடையவில்லை என்று தான் எண்ணுகிறேன்.. இந்த தலைமுறை நடிகர்களில் மிகவும் யதார்த்தமான நடிகராக நான் கருதுகிறேன்.. OH MY கடவுளே படம் மிக சிறந்த படம் என்பதில் ஐயமில்லை..

    மூன்று மாதத்திற்க்கு முன் Hridayam மலையாள படம் பார்த்தேன்.. தரமான படம்.. நம்மை விட இந்த தலைமுறை இளைஞர்களுக்கு இன்னும் அதிகமாக பிடிக்கும் என எண்ணுகிறேன்.. படம் வெளியாகி ஒரு வருடம் மேல் இருக்கும்.. படத்தை பார்க்க வில்லை என்றால் பார்க்கவும்..

  2. @யாசின்

    Hridayam பாதி பார்த்தேன்.. பின்னர் எதோ காரணங்களால் தொடரவில்லை ஆனால், பட்டியலில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!