மோடியை குறைத்து மதிப்பிடாதீர்கள்

14
மோடியை குறைத்து மதிப்பிடாதீர்கள்

2014 பாராளுமன்றத்தேர்தலில் மோடி மீது இருந்த எண்ணத்துக்கும் தற்போதைய நிலைக்கும் ஏராளமான வித்யாசம். என்னவென்று பார்ப்போம். Image Credit

மோடி

2014 க்கு முன்பு மோடி அவ்வளவாக அறிமுகமில்லை, அதாவது குஜராத்தில் சிறப்பாகச் செய்கிறார் என்று அரைகுறையாகச் சமூகத்தளங்களில் தெரியும்.

ஆனால், தற்போது (2023) போல அவரைப் பற்றித் தெரியாது. அப்போது நன்மதிப்பும், திறமையின் மீதும் நம்பிக்கை இருந்த தலைவர் அடல் பிகாரி வாஜ்பாய் மட்டுமே.

எனவே, 2014 முடிவில் காங்கிரஸ் அரசு கண்டபடி ஊழல் செய்து இருந்ததால், அப்போதிருந்த வாய்ப்புகளில் பாஜக மட்டுமே மாற்றாக இருந்தது.

அதோடு குஜராத் வளர்ச்சி பற்றிய பேச்சுகள் அதிகம் இருந்த நேரத்தில் குஜராத்தை வைத்து ஃபேஸ்புக்கில் பல மார்க்கெட்டிங் பணிகள் பாஜகவால் செய்யப்பட்டன.

தற்போது இவை சாதாரணமாகி விட்டாலும், அப்போது (2014) சமூகத்தளத்தைப் பரப்புரைக்குப் பெரியளவில் பாஜக பயன்படுத்தியது.

சமூகத்தளங்கள்

தற்போது ட்விட்டர் மிகப்பெரிய சமூகத்தள ஊடகமாக இருந்தாலும் அப்போது ஃபேஸ்புக் மட்டுமே அனைவருக்கும் பொதுவானதாகவும், எளிதானதாகவும் இருந்தது.

இச்சமயத்தில் ஃபேஸ்புக் தீவிரமாகப் பயன்படுத்திக்கொண்டு இருந்தேன், மேற்கூறியபடி அந்தச் சூழலில் தொங்கு பாராளுமன்றம், கூட்டணி ஆட்சியில் விருப்பமில்லாததால், பாஜக தான் சரியான தேர்வாகத் தோன்றியது.

காரணம், தொங்கு பாராளுமன்றம் அமைவதற்குக் காங்கிரஸ் ஆட்சியே தொடரலாம்.

எனவே, அப்போது மோடி பிரதமர் ஆவதை ஆதரிக்கிறேன்! ஏன்? என்ற கட்டுரையை எழுதினேன். அச்சமயத்தில் கடும் விமர்சனத்தைக் கட்டுரை எதிர்கொண்டது.

பலரும் கடுமையாக விமர்சித்தார்கள். எனினும் எந்நிலையில் மாற்றமில்லை.

ஃபேஸ்புக்கில் நண்பர், ‘கிரிக்கு மோடியை பற்றித் தெரியவில்லை, ஆதரித்தது தவறு என்று பின்னர் உணர்வார்‘ என்று கூறியது பசுமையாக நினைவில் உள்ளது.

இவர் கூறியதை உண்மையாக்கும்படி சில விமர்சனங்கள் ஏற்பட்டன, குறிப்பாக இந்தி திணிப்புப் பிரச்சனை கூடுதலாக இருந்தது.

ஒருவேளை மற்றவர்கள் சொல்வது போலத் தவறான முடிவை எடுத்துவிட்டோமோ என்று கூட நினைத்தேன்.

இது ஒரு சங்கடமான நிலையை ஏற்படுத்தியது.

மோடி ஆட்சி

ஓரிரு வருடத்தில் முடிவு செய்ய வேண்டாம், கொஞ்சம் பொறுத்திருந்து பார்ப்போம் என்று இருந்தேன் ஆனால், தற்போது மோடி செய்திருப்பது அளப்பரியது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து பல முன்னேற்றங்களைக் கொண்டு வந்து, இரண்டாம் ஆட்சி முடிவில் வியக்க வைக்கும் சாதனைகளைச் செய்து விட்டார்.

இதுவரை ஒரு ஊழல் குற்றச்சாட்டுகூட மத்திய அரசின் மீது இல்லையென்பது மிகப்பெரிய சாதனை. ஒட்டு மொத்த அரசியல் கட்சிகளும் சேர்ந்தும் குற்றம் கண்டுபிடிக்க முடியவில்லை.

மோடியை குறைத்து மதிப்பிட்டதற்காக வெட்கமாகவும் இருந்தது.

துவக்க பிரதமர் காலத்தை ஒப்பிடும் போது மோடியும் தொடர்ந்து தன்னைப் பக்குவப்படுத்திக்கொண்டே வருவதைக் கண் முன்னால் காண முடிகிறது.

துவக்கத்தில் இந்தி திணிப்பு பெரிய தலைவலியாக இருந்தது, எரிச்சலை ஏற்படுத்தும் அறிவிப்புகள் ஏதாவது வந்து கொண்டே இருக்கும்.

தற்போது இதில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. மாநில மொழிக்கு மரியாதை கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

எங்குச் சென்றாலும் தமிழை மோடி உயர்த்திப் பேசுகிறார். அரசியலுக்காகச் செய்கிறாரோ உண்மையிலேயே செய்கிறாரோ ஆனால், செய்கிறார்.

இதை மற்ற தலைவர்கள் செய்யவில்லை.

வளர்ச்சிப்பணிகள்

மோடி தலைமையில் இந்தியா சாதித்து வரும் சாதனைகளை இக்கட்டுரையில் கூற முடியாது காரணம், கூற ஏராளமான செய்திகள் உள்ளது.

எனவே, இவற்றைத் தொடராக எழுதத் திட்டமிட்டுள்ளேன். எழுதும் அனைத்தும் அனைவருக்கும் தெரிந்தும் தெரியாமலும் இருக்கும் திட்டங்களே!

விவேக்கோ யாரோ தனியா சொன்னால் சாதாரணமாக இருக்கு, சேர்த்துச் சொன்னால் வயலண்ட்டா இருக்கு என்பது போலக் கூறுவார் 🙂 அதுபோலத் திட்டங்களைப் பட்டியலிட்டேன் கிறுகிறுத்து விட்டது.

இவ்வளவு திட்டங்களா! என்பதை விட, அத்தனையையும் செயல்பாட்டில் வெற்றிகரமாக உள்ளது என்பதே. திட்டங்கள் அறிவிப்பது பெரிய விஷயமல்ல, அதைச் செயல்படுத்த வேண்டும். இதைத் தரமாக செய்கிறார்கள்.

இவற்றோடு வட மாநிலங்கள், வட கிழக்கு மாநிலங்களில் ஏன் பாஜக வெற்றிப் பெறுகிறது? என்பதையும் எழுதுகிறேன். இதற்கெல்லாம் மிக நியாயமான காரணங்கள் உள்ளன.

மோடி அரசு வெற்றிகரமாக அவற்றைச் செய்து வருகிறது.

எனவே, மோடி அரசின் திட்டங்கள், சிறந்த அமைச்சர்கள், அவர்கள் செய்த சாதனைகள் உட்படப் பலவற்றை எழுதத் திட்டமிட்டுள்ளேன்.

மோடியை குறைத்து மதிப்பிடாதீர்கள்

தமிழக ஊடகங்கள் மோடியின் சாதனைகளை முழுக்க மறைத்து, பொதுமக்களிடையே அவரின் சாதனைகளைக் கொண்டு சேர்க்காமல் அவரை வில்லனைப் போலச் சித்தரித்து வருகிறார்கள்.

தற்போது அண்ணாமலை வந்த பிறகே பல விஷயங்கள் மக்களுக்கு மத்திய அரசு செய்து வருகிறது என்பதே தெரிய வந்துள்ளது.

தமிழக ஊடகங்கள் முழுக்கத் திமுக கட்டுப்பாட்டிலிருப்பதால், மோடியின் சாதனைகள் மறைக்கப்பட்டு வருகின்றன.

இங்கே உள்ளவர்கள் மோடி எதிர்ப்பு என்ற குறுகிய வட்டத்திலிருந்து கொண்டு மோடி செய்தது எதுவுமே தெரியாமல், உளறிக்கொண்டு இருப்பதைப்பார்க்கையில் எரிச்சலே மேலிடுகிறது.

மோடி ஒன்றுமே செய்யவில்லையென்றால் சரி என்று கடந்து செல்லலாம் ஆனால், He is well deserved!

இவ்வளவு முன்னேற்றங்களை, வளர்ச்சி திட்டங்களைச் செய்துகொண்டுள்ளார் ஆனால், பலர் எதுவுமே தெரியாமல் கண்மூடித்தனமான எதிர்ப்பில் உள்ளார்கள்.

இவற்றை எழுதத் திட்டமிட்டதற்கு, மற்றவர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற காரணம் இருந்தாலும், இவ்வளவு சாதனைகளைச் செய்தவரைக் கண்டுகொள்ளாமல் உள்ளார்களே என்ற ஆதங்கமே.

பொறுமை தேவை

சில விஷயங்களை மோடி ஏன் செய்யவில்லையென்ற கோபம் எனக்கு இருக்கும் ஆனால், எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்து விட முடியாது.

அதற்கான காலம் வரும் போது தான் செய்ய முடியும் என்ற நிதர்சனத்தைப் புரிந்து கொள்ளவே எனக்கு ஆண்டுகள் பல ஆனது.

பிரச்சனைகள் அவர்களுக்குத் தெரியும் ஆனால், நமக்குத்தெரியாது. இது தெரியாமல், அவர்களைக் கோபித்துக்கொள்வதில் அர்த்தமில்லை.

எடுத்துக்காட்டுக்கு, இலங்கைக்கு ஏன் மத்திய அரசு உதவி செய்கிறது? அந்தச் சின்ன நாடு சீன இந்தியா பிரச்சனைகளை வைத்துச் சாதுர்யமாகத் தனது தேவைகளைப் பெற்றுக்கொள்கிறது என்ற விமர்சங்களைக் காண முடிகிறது.

காரணம், இலங்கை அவ்வப்போது சீனாக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

முன்னரே கூறியபடி, சில விஷயங்கள் சராசரி குடிமகனுக்குத் தெரியாது, அவை அரசாங்கத்துக்கு மட்டுமே தெரியும்.

மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவது சரியான அரசல்ல, என்ன செய்தால் மக்களுக்கு நல்லது என்று உணர்ந்து நடவடிக்கைகளை எடுப்பதே சிறந்த அரசு.

இதை மோடி தலைமையில் மத்திய அரசு சிறப்பாகச் செய்து வருகிறது.

எதை, எப்போது, எப்படி, எங்கே செய்ய வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும். எனவே, அவசரப்படவேண்டாம்.

பலர் எதிர்பார்க்கும் Uniform Civil Code எப்போது வரும்? ஏன் தாமதம் செய்கிறார்கள்? என்ற கேள்வி இருக்கும்.

இதன் பின்னணியில் உள்ள சட்டப் பிரச்சனைகளை ஆராயாமல், கால சூழ்நிலை திட்டமிடாமல் செய்ய முடியாது. இதுபோலத்தான் பல நடவடிக்கைகளும்.

கூற ஏராளம் இருக்கு

மோடியின் சாதனைகளை ஒரு கட்டுரையில் கூறி விட முடியாது. எனவே, இனி வரும் காலங்களில் ஒவ்வொரு முக்கியக் கட்டுரையையும் எழுதுகிறேன்.

என்னென்ன வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் தொடராக எழுதுகிறேன். வலது சாரி ஆதரவாளனாக இதைக்கடமையாகக் கருதுகிறேன்.

இவற்றோடு திராவிடப் போலி அரசியலையும் எழுதுவேன். இது ரொம்ப முக்கியம் 🙂 .

தொடர்புடைய கட்டுரைகள்

திராவிடப் போலி அரசியல் அறிக

நடுநிலை என்பது சாத்தியமா இல்லையா?

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

14 COMMENTS

  1. அருமையான பதிவு..

    மற்றவர்கள் சொல்வதை கடந்து செல்லுங்கள்..

    உங்கள் பணியை தொடர்ந்து செய்து வருக..

    வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  2. உண்மை. ஆனால் திராவிட அரசாங்கங்களும் தெரிந்தோ தெரியாமலோ நல்லது செய்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு கர்நாடக/தமிழ்நாடு interior கிராமங்களில் பயணம் செய்தால் சாலைகள்/பள்ளிகள்/அரசு மருத்துவமனைகள் தமிழ் நாட்டில் சிறப்பாக இருப்பதை கண்கூடாக பார்க்கலாம்.

  3. வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள். படிக்க ஆர்வமாக இருக்கிறேன். மோடி அரசின் சாதனைகள் எனக்கு தெரியாத பல விஷயங்கள் இருக்கும் என நினைக்கிறேன்.

    முதலில் நானும் பெட்ரோல் விலை உயர்வு. அதிகரிக்கும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மோடி எதையுமே செய்யவில்லை என நினைத்தேன்.

    ஆனால் தற்போதைய இலங்கை பாகிஸ்தான் நிலைமையை பார்த்தால் கொரோனாவால் சீரழிந்து போன நாடுகளை போல் நம் நாடு ஆகாமல் மோடி எவ்வளவு சாதுர்யமாக செயல்பட்டு நம் நாட்டு மக்களை காப்பாற்றியிருக்கிறார் என புரிந்தது.

    நீங்கள் சொல்வது சரிதான். சாதாரண மக்களுக்கு அனைத்தும் உடனே புரியாது. நிர்வாகம் செய்பவருக்கு தான் அதில் உள்ள சிக்கல் தெரியும்.

    இன்னமும் கூட மோடி அரசு ஏன் இவ்வளவு அதிகாரம் இருந்தும் திமுக போல ஊழல் செய்யும் கட்சிகளை ஒன்றும் செய்யாமல் பார்த்துகொண்டு இருக்கிறார்கள் என கோபம் வரத்தான் செய்கிறது.

    மேற்கு வங்கத்தில் மமதா வெற்றி பெற்றவுடன், தன் தோல்வியின் கோபத்தில் பாஜக தொண்டர்கள் மேல் கொலைவெறி தாக்குதல் நடத்தி அவ்வளவு வன்முறை நடந்தேறியது.

    மோடி அரசு அந்த ஆட்சியை கலைத்து இருக்க வேண்டாமா? ஆனால் ஏன் அவர்கள் சரியான காரணம் இருந்தும் ஆட்சி கலைப்பை செய்ய மறுக்கிறார்கள் என கோபம் வருகிறது. இதுவும் அரசியல் கணக்காக இருக்குமோ?

    தேர்தலால் மட்டுமே அவர்களை தோற்கடித்து அவர்களை பழிவாங்க வேண்டும் என நினைக்கிறாரோ. அப்போது கட்சிக்காக உயிர்துறந்த தொண்டர்கள் பாவம் தானே.

    இது போல சில விமர்சனம் மோடி மீது இப்போதும் உள்ளது. ஆனால் அவரின் ஆட்சி நிர்வாகம் மீது முழு நம்பிக்கை இருக்கிறது. கிட்டதட்ட ஒருவருடமாக பெட்ரோல் விலைஉயர்வு இல்லாமல் இருப்பது மகப்பெரிய சாதனைதான்.

    இலவசங்களுக்கு எதிரானவராக காட்டிகொள்ளும் மோடி கர்நாடக தேர்தலில் வெற்று பெறுவதற்காக இலவசங்களை அள்ளி விட்டிருக்கிறார்கள்.

    வருடத்திற்கு மூன்று இலவச சிலண்டர். தினமும் அரைலிட்டர் பால் என்று நிறைய இலவச அறிவிப்புகள். இது விமர்சனமாகி இருக்கிறது.

    தினமலர் கூட இன்றைய (02-05-2023) தலையங்கத்தில் விமர்சித்து இருக்கிறது. இதுவும் ஒரு சறுக்கலே.

    கர்நாடகாவில் பாஜக தோற்கும் என்கிறார்கள். தோற்றால் எதிர்கட்சிகள் தெம்பாக வழிபிறக்கும். ஓரணியில் இணைவோம் என்று கோஷம் பலமாக இருக்கும்.

    பாஜக வெற்றி பெற்றால் எதிர்கட்சிகள் சோர்ந்து போய்விடுவார்கள். பார்க்கலாம் என்ன ஆகிறதென்று

  4. தொடர்ந்து எழுதுங்கள். படிக்க ஆர்வமாக இருக்கிறேன். மோடி அரசின் சாதனைகள் எனக்கு தெரியாத பல விஷயங்கள் இருக்கும் என நினைக்கிறேன்.

  5. @Suki & Praba நன்றி

    @அரி

    “கர்நாடக/தமிழ்நாடு interior கிராமங்களில் பயணம் செய்தால் சாலைகள்/பள்ளிகள்/அரசு மருத்துவமனைகள் தமிழ் நாட்டில் சிறப்பாக இருப்பதை கண்கூடாக பார்க்கலாம்.”

    இக்கட்டுரை மோடியின் சாதனைகளை மற்றவர்கள் கூற தவிர்க்கிறார்கள். எனவே, அதை கூறப்போகிறேன் என்பது மட்டுமே.

    நீங்கள் கூறியதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்துமில்லை. இது பற்றி நிறைய எழுதி இருக்கிறேன். குக்கிராம சாலைகள் கூட சில இடங்களில் சிறப்பாக இருக்கும்.

    https://www.giriblog.com/has-dravidan-parties-damaged-tn/ இக்கட்டுரையில் விளக்கமாகக் கூறியுள்ளேன்.

  6. @ஹரிஷ்

    “இலங்கை பாகிஸ்தான் நிலைமையை பார்த்தால் கொரோனாவால் சீரழிந்து போன நாடுகளை போல் நம் நாடு ஆகாமல் மோடி எவ்வளவு சாதுர்யமாக செயல்பட்டு நம் நாட்டு மக்களை காப்பாற்றியிருக்கிறார் என புரிந்தது.”

    கட்டணத்தை அனைத்து நேரங்களிலும் குறைத்து விட முடியாது.

    இதை மோடி அரசாங்கம் தெளிவாக உணர்ந்து இருந்தது. அதனாலே குறைந்த விலையில் எண்ணெயை வாங்கியும் கட்டணத்தை குறைக்கவில்லை.

    எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை வைத்தும், பொதுமக்கள் விமர்சனம் செய்தும் குறைக்கவில்லை.

    குறைத்து இதனால் நாளை பிரச்னை ஏற்பட்டால், அதற்கும் அரசை தான் அனைவரும் திட்டுவார்கள் ஆனால், அப்போது விமர்சனத்தோடு நாடும் மோசமான சூழ்நிலைக்கு சென்று இருக்கும்.

    “அதிகாரம் இருந்தும் திமுக போல ஊழல் செய்யும் கட்சிகளை ஒன்றும் செய்யாமல் பார்த்துகொண்டு இருக்கிறார்கள் என கோபம் வரத்தான் செய்கிறது.”

    இது அனைவருக்குமே இருக்கும். அதோடு இதிலும் அரசியல் இருக்கும்.

    பாஜக முழுக்க நியாயவான்கள் அல்ல. மற்றவர்களை போல மோசமில்லை. இதை பலர் உணர்வதில்லை.

    “மோடி அரசு அந்த ஆட்சியை கலைத்து இருக்க வேண்டாமா?”

    எனக்கும் கோபமுள்ளது ஆனால், ஆட்சியை கலைப்பது வீண். காரணம், அனுதாபத்தில் திரும்ப அவர்களே வருவார்கள்.

    எனவே, இதை உணர்ச்சிவசப்பட்டு முடிவு செய்யும் செயல் அல்ல.

    “தேர்தலால் மட்டுமே அவர்களை தோற்கடித்து அவர்களை பழிவாங்க வேண்டும் என நினைக்கிறாரோ. அப்போது கட்சிக்காக உயிர்துறந்த தொண்டர்கள் பாவம் தானே.”

    சில நேரங்களில் எதார்த்தம் என்ற ஒன்றுள்ளது. நம் விருப்பத்தை விட இவை நிதர்சனத்தை கொடுப்பவை.

    சிலவற்றை உடனே செய்ய முடியாது, காரணங்கள் நாம் அறிய மாட்டோம், அவர்களுக்கு தெரியும்.

    “இலவசங்களுக்கு எதிரானவராக காட்டிகொள்ளும் மோடி கர்நாடக தேர்தலில் வெற்று பெறுவதற்காக இலவசங்களை அள்ளி விட்டிருக்கிறார்கள்.”

    இலவசங்களை அள்ளி விடவில்லை.

    BPL பயனாளர்களுக்கு அரை லிட்டர் பால், வருடத்துக்கு மூன்று சிலிண்டர் கொடுத்துள்ளார்கள். அதோடு சிறுதானியம் கொடுப்பதாக கூறியுள்ளார்கள்.

    இதை ஒரேடியாக இலவசம் என்று மட்டுமே கடந்து விட முடியாது. காரணம், இவை பணம் கொடுப்பது போல அல்ல, மக்களின் ஊட்ட சத்தை அதிகரிப்பது போலத்தான்.

    மிக்சி, கிரைண்டர், ப்ரிட்ஜ், மாதம் 2000 பணம், இலவச பேருந்து பயணம் இவற்றுக்கு பதிலாக மேற்கூறியவை நூறு மடங்கு சிறந்தவை.

    இருப்பினும் இலவசம் என்ற பிரிவில் வருவதால் விமர்சனத்துக்குள்ளாகும்.

    கர்நாடகா தேர்தல் இரு பக்கமும் கடுமையாக உள்ளது. கணிக்க முடியவில்லை.

  7. What other news ? all news media is doing propaganda either for right wing or left wing I don’t trust any of them. I thought congress was corrupt maybe modi will put them in jail do some good for the country so I voted for him. Other than his government’s foreign policy and infrastructure works and some well fare schemes he has not done anything remarkable.

    He is good at PR other politicians are following his path doing publicity stunts. Demonetization was a failure people suffered. he introduced electoral bonds to allow anyone to donate(bribe) pollical party’s anonymously. He reduced corporate taxes and increased indirect taxes. He accuses congress of dynasty politics while his party members sons and daughters holds high position in their party itself. Religious intolerance is growing in India i have seen with my own eyes that people starting to hate minority religions. his party members are openly spreads hatred towards minority religions and southern states. He intimidates anyone who speaks against by sending income tax raids.

    politicians are in politics to make money or gain power serving people is the last thing in their mind. every coin has two sides.

  8. @Krish

    Its disappointing that you didn’t find any achievements from Modi Govt. You are saying Modi is doing PR, I agree that but even if he did that also it’s worth doing.

    since his govt has done so many fantastic jobs and I am surprised that it’s not coming to your attention.

    This is the reason I’m planning to write about those achievements and what he has done in the last 9 years.

    You have to understand that nobody is perfect and 100% pure politicians in India. He is a lot better than anyone.

    I’m monitoring Modi Govt work and they have done excellent work and I’m satisfied with it.

    You didn’t see any other religious people do the hate campaign?! Every religion is doing a hate campaign, not BJP / Hindu alone.

    For every action, there will be a reaction.

    You don’t need to trust media but there is Google. so search every news and find whether it’s true or not. Don’t simply blame.

    I’m 100% confident that Modi Govt is doing excellent work. I’m proud that I had supported him before (2014).

    DON’T BELIEVE ANYONE BUT FIND THE TRUTH AND VERIFY.

    I’m not here to satisfy others but to express my views. It’s up to you whether take it or not.

    Thank you for your understanding

  9. @Giri

    I don’t trust your political opinion too. There is this thing called confirmation bias, you only see the good things and ignore their wrong doings for example I am sure you are okay with them toppling governments they have done it 8 times so far. how did they manage to convince the MLAs to jump party after winning elections do you think its ethical and no corruption involved.

    you are only seeing what you want to see.

    If you don’t disagree with any of their methods and ideas you are not thinking on your own.

    I have been reading your blog for 4 or 5 years I started to read for the movies reviews and tech news. but lately your political posts sounds like copy paste from WhatsApp.

  10. @Krish

    Did I ask you to trust me? I never do.

    I have clearly explained who / how I’m. https://www.giriblog.com/neautral-is-possible-or-not/

    Here everyone is biased including you and me so don’t have the right to blame about bias. We can say our opinion that’s it.

    “how did they manage to convince the MLAs to jump party after winning elections do you think its ethical and no corruption involved.”

    In the above comment itself, I had mentioned that “You have to understand that nobody is perfect and 100% pure politicians in India”

    so of course BJP is another political party but in my view, they are better than any other party. SIMPLE

    No political party can be and your expectation is too high which is not practical. You can’t find a single party as you expected.

    if you think some other party is better than BJP then it’s your view and I don’t mind. Everyone has their own opinion so I have.

    “I have been reading your blog for 4 or 5 years I started to read for the movies reviews and tech news. but lately your political posts sounds like copy paste from WhatsApp.”

    Good. Do stick with movie reviews and tech news. Ignore political articles which is good for you.

    I’m always trying to avoid wrong information in my article but if there is then it might be a genuine mistake not intentional.

    Can you show me a single article in which I gave false information like WhatsApp forward? You can’t jus criticize my writing without proof and leave.

    share the article link and point out the wrong info so that I will explain it. If it’s my mistake I can apologise since I don’t have any ego in correcting myself.

    You have to understand that opinion and information both are different. I may be wrong in opinion but not in information.

    I may not be neutral but am not doing fake propaganda which is against my policy. Even I thought too also I can’t write fake information.

    The problem is here nobody is neutral but everyone will expect others to be natural.

    So I suggest you to read the other site’s political articles that are writing neutral as you think. I’m not the right person and you know that.

  11. @Giri
    //In the above comment itself, I had mentioned that “You have to understand that nobody is perfect and 100% pure politicians in India”//

    So you are okay with them toppling governments after losing elections. you don’t find that unethical?

  12. @Krish

    “So you are okay with them toppling governments after losing elections. you don’t find that unethical?”

    Are you expecting ethics in politics? You are kidding.

    As I mentioned, be practical. Here no one is ethical. We have the choice to choose who is a lesser evil.

    BJP is doing a lot better than the rest, that’s all, that doesn’t mean BJP is clean and following ethics.

    You can’t expect ethics in politics and media. This is the fact, even if you don’t like it.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here