புது மாதிரியான கதையமைப்பில் OH MY கடவுளே.
OH MY கடவுளே
நண்பர்களான அசோக்செல்வன் ரித்திகா சிங் திருமணம் செய்து கொள்கிறார்கள் ஆனால், அசோக் செல்வனுக்குப் பழைய நண்பி போலவே தோன்றும் ரித்திகா சிங் மீது மனைவியாக ஈர்ப்பில்லை. Image Credit
இவையல்லாமல் பல்வேறு காரணங்களால் பிரச்சனையாக விவாகரத்துக்கு விண்ணப்பிக்கிறார்கள்.
கடவுளாக வரும் விஜய்சேதுபதி, திருமணத்துக்கு ஒப்புதல் கொடுக்கும் காட்சிக்கு முந்தைய காட்சிக்கு அசோக் செல்வனை கொண்டு சென்று விட்டு விடுகிறார்.
ரித்திகா திருமணம் செய்து கொள்ளக் கேட்கும் போது மறுத்து விடுகிறார். இதன் பிறகான இரண்டாவது வாழ்க்கையில் என்ன ஆனது? என்பதே OH MY கடவுளே கதை.
கதையைக் கேட்க என்னவோ போல இருக்கும் ஆனால், எடுத்த விதம் அட்டகாசம்.
படம் வந்து பல நாட்களாகி விட்டது ஆனால், அசோக் செல்வனின் நடிப்பை பாராட்டியே ஆக வேண்டும் என்று தோன்றியதால் மட்டுமே இவ்விமர்சனம்.
அசோக் செல்வன்
முதல் பாதி ரித்திகா, அசோக் செல்வன் வழக்கமான நடிப்பு. அதே இளமையான குறும்புகள், சண்டைகள், நண்பர்களுக்குளே நடக்கும் சீண்டல்கள் தான்.
ஆனால், அசோக் செல்வன் திருமண வாழ்க்கைக்கு முந்தைய வாழ்க்கைக்குச் சென்ற பிறகு (சூர்யா ‘24‘ படம் போல) அவரின் நடிப்பு வேற லெவல்.
அவசரப்பட்டு ரித்திகாவை தவறவிட்டுவிட்டோமோ என்று அவர் நினைக்கும் ஒவ்வொரு காட்சியிலும் அப்படி நடித்துள்ளார்.
கொஞ்சம் கூட மிகை நடிப்பில்லை, அவ்வளவு அழகாகச் சோகத்தை, இழப்பை வெளிப்படுத்துகிறார். சமீபத்தில், இப்படி இயல்பாக உணர்வுகளை வெளிப்படுத்திய நடிகரைக் கண்டதாக நினைவில்லை.
மென் சோகம் ஆனால், அதை வெளிக்காட்டிய விதம் அற்புதம். எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை.. பார்த்தால் தான் புரியும்.
இரண்டாம் பாதியை இதுவரை மூன்று முறை பார்த்து விட்டேன்.
ரித்திகா சிங்
ரித்திகா சிங்கை அவரது வீட்டில் விட்டு, அவரையே சில நொடிகள் எதுவும் பேசாமல் பார்த்துப் பின் திருமணத்துக்கு வாழ்த்து சொல்வது டாப் க்ளாஸ் நடிப்பு.
ரித்திகா அப்பா MS பாஸ்கரிடம் ‘சாரி அங்கிள்‘ என்று அசோக் செல்வன் சொன்னதும், எதுவும் புரியாமல், ‘எதுக்குடா‘ ன்னு குழம்பும் காட்சி மனதைத் தொடும்.
அசோக் செல்வனுக்கு இரு கால சம்பவங்களும் நினைவில் இருக்கும், மற்றவர்களுக்கு இருக்காது. எனவே, அசோக் செல்வன் இரண்டையும் ஒப்பிட்டுப் பார்ப்பார்.
ரித்திகா நடிப்பும் மிகச் சிறப்பு. சரியான தேர்வாக உள்ளார்.
நண்பராக வரும் ஷா ரா நடிப்பும் கலக்கல். ஒவ்வொரு முறையும் இவர் ஏதாவது சொல்ல, அதற்கு அசோக் செல்வன் ‘அது சொன்னா உனக்குப் புரியாது‘ என்று கூற செம ரகளையா இருக்கும் 🙂 .
இவ்வசனம் கடைசிவரை வருவது ரசிக்கும்படி இருக்கும்.
வசனங்கள் ரொம்ப இயல்பாக நண்பர்கள் சந்தித்துக்கொண்டால் எப்படி இருக்குமோ அதே போலச் செமையாக உள்ளது. ரொம்ப ரசித்தேன்.
ஒளிப்பதிவு பின்னணி இசை
பல காட்சிகளில் ஒளிப்பதிவு அழகாக இருந்தது. ‘கதைப்போமா’ பாடலில் ஒரு படி மேலே இருந்தது.
அசோக் செல்வனின் உணர்வுகளுக்கு ஏற்பப் பொருத்தமான பின்னணி இசையாகவும், காட்சியின் வலிமையை உயர்த்துவதாகவும் இருந்தது.
அசோக் செல்வனின் நடிப்பை கூடுதலாக உயர்த்திக்காட்ட பின்னணி இசை உதவியது என்றால் மிகையில்லை.
Sid ஸ்ரீராம் பாடும் (‘கதைப்போமா’) பாடல்கள் எல்லாம் ஹிட் ஆகுதா? இல்ல.. ஹிட் ஆகுற பாடல்களில் அவர் பாடுறாரா 🙂 .
படத்தில் லாஜிக் கேள்விகள் இருந்தாலும், அதைத் தவிர்த்தால் அழகான படம்.
இதுவரை இப்படத்தைப் பார்க்கவில்லையென்றால், அவசியம் பாருங்கள். அனைவருக்கும் பரிந்துரைக்கிறேன்.
OH MY கடவுளே திரையரங்கில் பார்க்கவில்லையே என்று வருத்தப்பட்டேன்.
Directed by Ashwath Marimuthu
Produced by G. Dilli Babu
Presenters: Ashok Selvan, Abhinaya Selvam
Written by Ashwath Marimuthu
Starring Ashok Selvan, Ritika Singh, Vani Bhojan, Sha Ra
Music by Leon James
Cinematography Vidhu Ayyanna
Edited by Boopathi Selvaraj
Release date 14 February 2020
Running time 146 minutes
Country India
Language Tamil
Read : கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி, சமீபத்தில் பார்த்த படங்களிலே என்னுடைய விருப்ப படம் ஐயப்பனும் கோஷியும் .. இந்த படத்தை பார்த்த பின் அந்த பிரமிப்பிலிருந்து வெளிவர எனக்கு சில நாட்கள் ஆனது .. படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் ரசித்து பார்த்தேன் .. 70 % மலையாளம் எனக்கு தெரியும் என்பதால் அவர்களின் உடல் மொழியை புரிந்து கொள்ள முடிந்தது ..
இந்த படத்திற்கு பின் தற்போது பார்த்த படங்களில் மிகவும் பிடித்த படம் ஓ மை கடவுளே .. நிச்சயம் இந்த படம் , தற்போது உள்ள இளைனர்களுக்கான படம் . படத்தின் காட்சிகளை இயக்குனர் செதுக்கி இருப்பார்.. அசோக் செல்வன் எனக்கு எப்போதும் விருப்பமான நடிகர் ..
கூட்டத்தில் ஒருவன் படம் எனக்கு மிகவும் பிடித்த படம்.. அசோக் செல்வனின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்து இருந்து .. படம் பார்க்கவில்லையென்றால் , பார்க்கவும் .. ஓ மை கடவுளே படத்தில் MS பாஸ்கர் நடிப்பு.. சொல்ல வார்த்தைகள் இல்லை .. எட்டு தோட்டாக்கள் படத்தில் அவருடைய நடிப்பை பார்க்கவும் .. ஒரு முழுமையான நடிகன் என்பதில் இந்த மாற்று கருத்தும் இல்லை .. பகிர்வுக்கு நன்றி கிரி..
யாசின் MS பாஸ்கர் எப்போதுமே தன் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவார். இதில் அவருக்கான வாய்ப்புகள் குறைவு ஆனால், அவர் வந்த காட்சிகளில் சிறப்பான நடிப்பு. குறிப்பாக அசோக் செல்வன் அவர் வீட்டுக்கு வரும் காட்சியில்.
என்ன… இவரோட ஒட்டுத்தாடி தான் கொஞ்சம் உறுத்தலாக இருந்தது. எட்டுத்தோட்டாக்கள் அவர் வசனம் வைத்து இன்னும் மீம்ஸ் வருகிறது 🙂 .
கூட்டத்தில் ஒருவன் பார்த்து விட்டேன் என்று நினைக்கிறேன்.