TRAI ஏன் இதைப் பரிசீலிக்கக் கூடாது?!

2
TRAI

ல நடவடிக்கைகளை எடுக்கும் TRAI எதனால் குறுந்தகவலில் பகிரப்படும் Link யைத் தடை செய்யவில்லை என்று புரியவில்லை. Image Credit

குறுந்தகவல் தடை

தற்போது சைபர் க்ரைம் குற்றங்கள் பெரும்பாலும், பயனாளர்கள் குறுந்தகவலில் வரும் Link யை க்ளிக் செய்வதாலே நடைபெறுகிறது.

TRAI நினைத்தால், Link உடன் வரும் குறுந்தகவல்களுக்குத் தடை விதிக்க முடியும். இதை ஏன் இதுவரை செய்யவில்லை என்று புரியவில்லை.

ட்விட்டரில் DM செய்யும் போது Link அனுப்பினால், அந்த Message செல்லாது.

இது போல ஒருவர் / நிறுவனம் அனுப்பும் குறுந்தகவலில் (SMS) Link யை இணைத்து அனுப்பினால் தடை செய்யும் வசதியை ஏன் TRAI ஏற்படுத்தக் கூடாது?

இவ்வாறு செய்தால், பல ஆயிரம் பேர் Phishing பிரச்சனையால் பாதிக்கப்படுவது தடுக்கப்படும்.

எதாக இருந்தாலும், நிறுவனத்தின் தளத்தில் / செயலியிலேயே பார்த்துக்கொள்ளும்படி அறிவுறுத்த வேண்டியது தானே! எதற்கு Link?

வங்கிகள் அனுப்பும் Link என்று நம்பித்தானே மக்கள் ஏமாறுகிறார்கள். Link க்ளிக் செய்யாதீர்கள் என்று சொல்வதை விட மொத்தமாகத் தடை விதிக்கலாமே!

இத்தடையால் எந்தப் பாதிப்பும் யாருக்கும் ஏற்படப்போவதில்லை.

காரணம், குறுந்தகவலில் வரும் Link க்ளிக் செய்து தான் ஒரு வேலையைச் செய்ய முடியும் என்ற எந்தக்கட்டுப்பாடும் இல்லை.

இதில் என்ன கொடுமையென்றால், ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் Link எதையும் க்ளிக் செய்யாதீர்கள் என்று கூறி, மேலும் தகவல்களுக்கு Airtel.in செல்லுங்கள் என்று Link கொடுத்து இருப்பார்கள்! என்ன கொடுமை சார்.

பழகி விடும்

Link அனுப்புவதற்குத் தடையென்றால், வங்கிகளும், நிறுவனங்களும் Link அனுப்புவதைத் தவிர்த்து வேறு வழிகளில் பயனாளர்களுக்குச் தகவல்களைக் கூறி விடுவார்கள்.

இவ்வளவு வருடங்களாகக் கவனித்த வரை, குறுந்தகவலில் வரும் Link எதற்குமே பயனளிப்பதில்லை.

நேரடியாகக் குறிப்பிட்ட தளத்துக்குச் செல்ல முடியும் என்பதைத்தவிர இதனால் எந்தப்பயனும் இல்லை எனும் போது எதனால் TRAI தடை செய்யவில்லை என்று தெரியவில்லை. இதில் வேறு ஏதாவது தொழில்நுட்ப பிரச்சனைகள் உள்ளதா?

இதைச் செயல்படுத்தினால் பல அப்பாவி மக்களின் சேமிப்புப் பாதுகாக்கப்படும்.

தொடர்புடைய கட்டுரைகள்

தேவையற்ற அழைப்புகளைத் தவிர்ப்பது எப்படி?

OTP SPAM SCAM | Kotak Mahindra Bank

WhatsApp OTP SCAM எப்படி நடைபெறுகிறது?

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. கிரி.. நான் ஊரில் இருந்த சமயத்திலும் கைப்பேசியில் பல SMS வந்து கொண்டே தான் இருந்தது.. அவற்றில் சில லிங்குகளும் இருந்தது.. 95% மெசேஜ்கள் எனக்கு எந்த விதத்திலும் பயன்படாது..

    TRAI நினைத்தால், Link உடன் வரும் குறுந்தகவல்களுக்குத் தடை விதிக்க முடியும். இதை ஏன் இதுவரை செய்யவில்லை என்று புரியவில்லை. நானும் இதை பற்றி யோசித்து இருக்கிறேன்..

    இதில் என்ன கொடுமையென்றால், ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் Link எதையும் க்ளிக் செய்யாதீர்கள் என்று கூறி, மேலும் தகவல்களுக்கு Airtel.in செல்லுங்கள் என்று Link கொடுத்து இருப்பார்கள்! என்ன கொடுமை சார். : சத்திய சோதனை..

    இதைச் செயல்படுத்தினால் பல அப்பாவி மக்களின் சேமிப்புப் பாதுகாக்கப்படும். உண்மை கிரி.. எதிர்காலத்தில் இந்த சேவை விரைவில் வரும் என நம்புவோமாக.. பகிர்வுக்கு நன்றி கிரி.

  2. @யாசின்

    “நான் ஊரில் இருந்த சமயத்திலும் கைப்பேசியில் பல SMS வந்து கொண்டே தான் இருந்தது.. அவற்றில் சில லிங்குகளும் இருந்தது.. 95% மெசேஜ்கள் எனக்கு எந்த விதத்திலும் பயன்படாது..”

    இது தான் பிரச்சனை யாசின். Link யாருக்குமே பயனில்லை காரணம், எதையும் தளத்தில் சென்று நேரடியாக செய்து கொள்ளலாம்.

    அப்படியிருக்கும் போது எதற்கு இதை TRAI அனுமதிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!