எப்போதோ எதிர்பார்த்த நிகழ்வு, அமைதியாக முடிந்து இருக்க வேண்டிய நிகழ்வு, அசிங்கமாகி முடிந்து இருப்பது கூகுள் ரசிகனாக எனக்கு மிக வருத்தம். Image Credit
கூகுள்+
கூகுள் + என்ற சமூகத்தளம் இருப்பது கூட இன்னும் பலருக்குத் தெரியாது, தெரிந்தாலும் அதைப் பயன்படுத்துவது கிடையாது என்பது அதை விடச் சோகம்.
ஃபேஸ்புக் Killer என்று வர்ணிக்கப்பட்டு 2011 ல் கூகுளால் துவங்கப்பட்ட கூகுள் + இப்படிப் பரிதாபமான நிலையை அடைந்தது வருத்தமே!
2015 ம் ஆண்டு முதல் கூகுள் + ல் இருந்த ஒரு Bug காரணமாக (தோராயமாக) ஐந்து லட்சம் பயனாளர்கள் மின்னஞ்சல், தொலைபேசி எண், பாலினம், வயது போன்றவை பாதுகாப்பில்லாமல் இருந்துள்ளது.
இதை 2018 மார்ச் மாதம் கூகுள் கண்டுபிடித்து, சத்தமில்லாமல் இரண்டு வாரம் அதைச் சோதனை செய்து சரிபடுத்தியுள்ளது. இதை “Wall Street Journal” பத்திரிகை கண்டு சமீபத்தில் அறிவிக்க, சர்ச்சையாகி விட்டது.
கூகுள் தனது தளத்தில்..
“இப்படி ஒரு பிரச்னை இருந்தது உண்மை தான் ஆனால், இப்படி ஒரு பிரச்னை இருப்பதே யாருக்கும் தெரியாது அதற்கு முன்பே நாங்கள் சரி செய்து விட்டோம்.
இந்த Bug காரணமாகத் தகவல் திருடப்பட்டது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை“
என்று சமாதானப்படுத்தியுள்ளது.
Cambridge Analytica data scandal
ஃபேஸ்புக் “Cambridge Analytica data scandal” காரணமாகப் பெரும் சர்ச்சை நிலவியதால், எங்கே இதை நாம் கூறினால் இரண்டையும் ஒப்பிட்டு நம்மையும் நாறடித்து விடுவார்களோ! என்று வெளியே சொல்லாமலே இருந்துள்ளது.
ஃபேஸ்புக் தனது வாடிக்கையாளர்கள் தகவல்களை விற்று விட்டது மற்றும் மற்ற செயல்களுக்கு உதவியுள்ளது ஆனால், கூகுள் + ல் ஏற்பட்டது Bug. ஃபேஸ்புக் செய்தது போல மோசமான செயல் அல்ல என்றாலும், மறைத்தது தவறு தான்.
கூகுள்+ தளத்தைப் பயன்படுத்தும் 90% பயனாளர்கள் ஐந்து நொடிகளுக்கும் குறைவாகவே பயன்படுத்துகிறார்கள். எனவே, ஆணியே புடுங்க வேண்டாம் என்று தளத்தையே 2019 ஆகஸ்ட் மூடுகிறோம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது.
யாருமே இல்லாத கடைல யாருக்கு டீ ஆத்துறீங்க?!
தமிழ்ப் பதிவர்கள் (Bloggers), Community தவிர்த்து யாரும் கூகுள்+ பயன்படுத்துவதில்லை. எனவே, இதை மூடுவதால், இவர்களைத்தவிர வேறு யாருக்கும் எந்த இழப்பும் இல்லை.
நமக்கு இச்சேவையை நிறுத்தினாலும் அதனுடைய பன்னாட்டு (Corporate) நிறுவன பயனாளர்களுக்கு இச்சேவையைத் தொடரப்போகிறது.
ம்ஹீம்.. கூகுள் + அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் தம் கட்டி இரண்டு கட்டுரைகள் எழுதியது நினைவில் வந்து செல்கிறது.
கூகுள்+ யை யாரும் கண்டு கொள்ளவில்லை என்று, அதில் போட்டோஸ், YouTube யை நுழைத்து அவற்றையும் கொலை செய்து, அனைவரிடமும் திட்டு வாங்கி பின் அவற்றை தனியாக பிரித்ததும், அவை சக்கைப் போடு போட்டது தனிக்கதை.
கூகுள் போல பல சேவைகளுக்கு மூடு விழா நடத்தியது, வேறு ஏந்த நிறுவனமாகவும் இருக்க முடியாது. எத்தனை பேரின் உழைப்பு, சக்தி, பணம் வீண் கூகுள் உட்பட.
Bye Bye கூகுள்+ 🙁 .
கொசுறு 1
ஃபேஸ்புக் செய்த / செய்கிற திருட்டுத்தனங்களாலும், பெற்றோர்கள் இருப்பதாலும், சண்டையாக இருப்பதாலும், பலர் ஃபேஸ்புக் கடையை சாத்தி வருகிறார்களாம், குறிப்பாக இளசுகள்.
அக்கா பையன் கூட “இப்ப இன்ஸ்டாகிராம்ல தான் அதிகம் இருக்கிறேன், ஃபேஸ்புக் எப்பவாவது தான் வருகிறேன்” என்று கூறுகிறான்.
இப்பிரச்னைகளுக்குப் பிறகு ஃபேஸ்புக் Share Price கீழே சென்று கொண்டு இருக்கிறது. இன்னும் சில வருடங்களில் ஃபேஸ்புக்கும் தன் மூச்சை நிறுத்தலாம்.
Orkut, Myspace, Google Buzz, Google+ இந்த வரிசையில் அடுத்தது ஃபேஸ்புக் தான்.
கொசுறு 2
விண்டோஸ் 10 க்கு கடந்த வாரம் மைக்ரோசாஃப்ட் வெளியிட்ட Update யை நிறுவியவர்களுக்கு அதிர்ச்சி! அவர்களுடைய Profile கோப்புகளுடன் காணாமல் போய் விட்டது.
தற்போது மைக்ரோசாஃப்ட் அந்த Update யை நீக்கி விட்டது. ஒருவேளை உங்களுக்கு நேர்ந்து இருந்தால், காரணம் இது தான்.
கிரி, கூகுள் + இதுவரை நான் பயன்படுத்தியது கிடையாது.. நீங்கள் குறிப்பிட்டது போல் எத்தனை பேரின் உழைப்பு, நேரம், சக்தி யோசிக்க முடியவில்லை.. ஆனால் நீங்கள் குறித்தது போல் FB விரைவில் மூடுவிழா இருக்கும் என எனக்கு நம்பிக்கை இல்லை.. பயனாளர்களின் எண்ணிக்கை குறைந்தாலும், ஒருபுறம் 20 வயதிற்கு குறைவான இளைஞர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து தான் செல்கிறது.. உங்கள் அளவிற்கு தொழில்நுட்ப விவரம் தெரியா விடினும், என் பார்வையில் FB வளர்ச்சி மேலும் அதிகரித்து தான் செல்லும் என எண்ணுகிறேன்.. போட்டி நிறுவங்கள் தற்போது இருந்தாலும் அவற்றை எப்படியும் சமாளிப்பார்கள் என்பது என் கருத்து.. பகிர்வுக்கு நன்றி கிரி..
யாசின் ஃபேஸ்புக் வளர்ச்சி இருக்கும் ஆனால், அது முன்பு போல இருக்காது. அனைவரும் இன்ஸ்டாகிராம் க்கு நகர்ந்து கொண்டு இருக்கிறார்கள், அதுவும் ஃபேஸ்புக் குழுமம் தான்.
இங்கே வயதானவர்கள் மட்டுமே சுற்றிக்கொண்டு பேசிக்கொண்டு இருப்பார்கள்.
ஷேர் கீழிறங்கிக்கொண்டு இருக்கிறது.